சன் டிவி-யால் தோற்கப்போகும் திமுக!
இந்த வாரம் திண்னையில் வெளிவந்துள்ள ஒருவரின் கருத்து.
கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவி தி.மு.விற்கு பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போதைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணத்தின் ஆடம்பரத்தை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்திய பெருமை சன் டிவியையே சேரும். ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு 70% க்கு மேல் இது மட்டுமே காரணம். ஆனால், தற்போது சன் டிவியின் வியபார ஒழுங்கிண்மையால், தி.மு.கவிற்கே சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
1. சன் டிவி, தன்னிடம் நாடகம் ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் போடும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானது. அயோக்கியத் தனமானது. மோசடித் தனமானது.
2. சன் டிவி குழுமம் நடத்திய சுமங்கலி கேபிள் நெட்வொர்க் மக்கள் வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தது. பிற சேணல்களைப் பார்க்க விடாமல் செய்தது. அதிக கட்டணம் வசூலித்து வாடிக்கையாளர்களைச் சுரண்டியது.
தாங்கள் மட்டுமே இத்துறையில் ஆதிக்கம் செய்ய வேண்டும். பிற யாரும் தலையெடுக்கக் கூடாது என்ற மனப்பான்மையில் செயல்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸை விட மோசமாக செயல் பட்டார் கலாநிதி மாறன். இதற்கு இவரது தம்பி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அனைத்து உதவிகளும் செய்தார்.
3. செய்திகளில் 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என்ற சொல்லை நீண்ட காலமாகப் பயன்படுத்தினர். தற்போது தான் நிறுத்தி உள்ளனர். சன் டிவிக்கு எதிராக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டம் பாராட்டுக்கு உரியது.
4. தமிழ் நாட்டின் உயிராதாரமான பிரச்சினைகளுக்கு, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதும் கலைஞர், ஜெயலலிதா கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவுக்கு கையெழுத்துப் போட வேண்டாம் என கவர்னரிடம் தன் பேரனுடன் சென்று கேட்டார். தயாநிதி மாறனும், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் இது தொடர்பாகப் பேசுகின்றனர். ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு கட்சியா?
5. தினகரனை, சன் டிவி வாங்கியதே ஒரு முறையற்ற வணிக நடவடிக்கை. இது போன்ற வணிக நடவடிக்கைகள் அமெரிக்காவில் தான் நடைபெறும். பல பத்தாண்டுகளாக, தினத்தந்தி தமிழ் நாட்டில் விற்பனையில் முதலிடம் பெற்று விளங்கியது. நாளிதழான 'தின மலர்' எவ்வளவு முயன்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே தினத்தந்தியை தாண்ட முடிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட தினமலர் நாளிதழால், தினத்தந்தியின் விற்பனையை தாண்ட முடியவில்லை. தற்போது, சன் டிவி நிறுவனத்தில் இருந்து வெளிதவரும் தினகரன், தமிழ் முரசு நாளிதழ்களில் வேலை செய்யும் செய்தியாளர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தினமலரில் இருந்து ஒரே நேரத்தில் வேலையில் இருந்து நின்று சன் டிவியின் பத்திரிக்கைகளில் வேலைக்கு சேர்ந்தவர்கள். இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. அடக்க விலையை விட குறைத்து விற்பது, இலவசப் பொருட்கள் என விற்று பிற நாளிதழ்களை பாதிக்கும் சன் டிவி நிறுவனத்தின் இதழ்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
6. மத்திய அரசின் செய்திகளை வௌதயிடும் போது, தயாநிதி மாறனின் செய்திகளை மட்டுமே வெளியிடுவது, பிற அமைச்சர்களின் செய்திகளை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசின் நலத்திட்டங்களை வௌதயிடாமல் இருப்பது, மாநில அரசைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமே வௌதயிடுவது, திமுகவிலேயே தயாநிதி மாறன், ஸ்டாலின் ஆகியோரை மட்டுமே காட்டுவது, அன்பழகன், துரைமுகன் - போன்ற தலைவர்களை செய்திகளில் காட்டாமல் இருப்பது, கூட்டணிக் கட்சிகளின் செய்திகளைப் புறக்கணிப்பது என பட்டியலிட்டு மாளாது சன் டிவியின் அழிம்புகள்.
9 Comments:
//சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.//
மக்கள் சன் டிவி பார்பது நல்ல பொழுதுபோக்கிற்கு மட்டுமே, அதை புறிந்து கொண்ட சன் டிவி நிறுவணத்தினர் வியாபார நோக்கில் செயல்படுவது அவர்களின் புத்திசாலித்தனமும் கூட். மக்கள் டிவி பார்த்துவிட்டு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடுவார்களா போடமாட்டார்களா என்பது நகைப்புக்கு இடமானதே, சினிமா நடிகர்களுக்கு இருக்கும் தாக்கம் டிவிக்கு கிடையாது.
சன் டிவி மெகா சீரியலுக்கு என்றால், ஜெ ஜெ டிவி அம்மா புகழ்பாடும் காமடிக்கும் தான் டிவி பார்கிறார்கள் அல்லாமல், தங்களுடைய வாக்கு சீட்டில் அவை மூக்கை நுழைப்பதாக பெருவாரியான மக்கள் நினைக்கவில்லை.
- சம்மட்டி
கருத்து கந்தசாமி,
இவைகள் உண்மையோ இல்லையோ இந்தவகை பிரச்சாரம் எடுபட வாய்ப்பு உள்ளது.
//1. சன் டிவி, தன்னிடம் நாடகம் ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் போடும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானது. அயோக்கியத் தனமானது. மோசடித் தனமானது.//
சன் டி.வி. ஒரு வணிக நிறுவனம். அந்த நிறுவனம் தன்னுடன் வியாபாரத் தொடர்பு கொள்ளும் மற்றொரு நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது, அது விரும்பியதுபோன்றுதான் செய்து கொள்ளும். அதன் நிபந்தனைகளுக்கு எந்த நிறுவனம் உடன்படுகிறதோ அந்த நிறுவனத்துடன் மட்டும்தான் ஒப்பந்தங்கள் ஏற்படும். இது சாதாரண ஒரு வணிக நடவடிக்கையே. எந்த ஒரு நிறுவனமும் (சன் டி.வி. மற்றும் அதில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் நிறுவனம் உட்பட) நட்டம் அடைவதை விரும்பமாட்டா.
எனவே இந்த குற்றச்சாட்டு, பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றுவிட்ட ஒரு டி.வி.யில் தங்கள் நிகழ்ச்சிகளை காட்ட முடியவில்லையே (பெரும் இலாபம் அடையவில்லையே) என்று ஆதங்கப்படும் மற்றொரு வியாபாரியின் குற்றச்சாட்டே அன்றி - இதனால் பொதுமக்களுக்கு எந்த வித நட்டமும் இல்லை என்பதே எனது கருத்து.
//2. சன் டிவி குழுமம் நடத்திய சுமங்கலி கேபிள் நெட்வொர்க் மக்கள் வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தது. பிற சேணல்களைப் பார்க்க விடாமல் செய்தது. அதிக கட்டணம் வசூலித்து வாடிக்கையாளர்களைச் சுரண்டியது.தாங்கள் மட்டுமே இத்துறையில் ஆதிக்கம் செய்ய வேண்டும். பிற யாரும் தலையெடுக்கக் கூடாது என்ற மனப்பாண்மையில் செயல்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸை விட மோசமாக செயல் பட்டார் கலாநிதி மாறன். இதற்கு இவரது தம்பி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தன் துறையைப் பயன்படுத்தி அனைத்து உதவிகளும் செய்தார்.//
ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டை அப்படியே கூறியிருக்கிறார்கள். இதுவெல்லாம் வணிக உத்திகளே. சன் குழுமம் சமூகசேவை செய்யவில்லை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.
//3. செய்திகளில் 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என்ற சொல்லை நீண்ட காலமாகப் பயன்படுத்தினர்.//
இந்த விஷயத்தில் எந்த ஒரு ஊடகமும் விதிவிலக்கல்ல. சன் டி.வி.யை மட்டுமே முன்னிறுத்துவது அரசியல் காரணமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
//4. தமிழ் நாட்டின் உயிராதாரமான பிரச்சினைகளுக்கு, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதும் கலைஞர், ஜெயலலிதா கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவுக்கு கையெழுத்துப் போட வேண்டாம் என கவர்னரிடம் தன் பேரனுடன் சென்று கேட்டார். தயாநிதி மாறனும், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் இது தொடர்பாகப் பேசுகின்றனர். ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு கட்சியா?//
இதில் ஓரளவு உண்மை உண்டு என்றாலும் அரசியல் ரீதியிலான முறையிலேயே விமர்சிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியை விமர்சிக்கிறீர்களா? அல்லது சன் டி.வி.யின் செயலை விமர்சிக்கிறீர்களா? தெளிவுபடுத்தவும்.
//5. தினகரனை, சன் டிவி வாங்கியதே ஒரு முறையற்ற வணிக நடவடிக்கை. .....
............அடக்க விலையை விட குறைத்து விற்பது, இலவசப் பொருட்கள் என விற்று பிற நாளிதழ்களை பாதிக்கும் சன் டிவி நிறுவனத்தின் இதழ்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.//
முறையற்ற வணிக நடவடிக்கை என்றால் என்ன என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அதே போன்று விலையை குறைத்து விற்பனையை அதிகரிப்பது என்பதும் வியாபர உத்திகளில் ஒன்றே. மற்ற இதழ்களின் வியாபாரத்தை பாதிக்கிறது என்பதற்காக அதனை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பது.....??????
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய பொருளாதார ஆசிரியர் குமுதம் குறித்து கூறும்போது (அப்பொழுது அதன் விலை 90 பைசா என்று நினைவு), ஒரு வாரம் குமுதம் அச்சாகும் அத்தனை பிரதிகளையும் விற்பனை செய்யாமல் இருந்தாலும், அதற்கு நட்டம் ஒன்றும் இல்லை. அது விளம்பரம் மூலம் தனது அடக்கவிலையை அடைந்துவிடுகிறது என்று கூறியது என் நினைவுக்கு வருகிறது. (இது இப்போது எந்தளவுக்குப் பொருந்தும் என்பது தெரியாது?)
//6. மத்திய அரசின் செய்திகளை வெளியிடும் போது, தயாநிதி மாறனின் செய்திகளை மட்டுமே வெளியிடுவது, பிற அமைச்சர்களின் செய்திகளை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசின் நலத்திட்டங்களை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமே வெளியிடுவது, திமுகவிலேயே தயாநிதி மாறன், ஸ்டாலின் ஆகியோரை மட்டுமே காட்டுவது, அன்பழகன், துரைமுகன் - போன்ற தலைவர்களை செய்திகளில் காட்டாமல் இருப்பது, கூட்டணிக் கட்சிகளின் செய்திகளைப் புறக்கணிப்பது என பட்டியலிட்டு மாளாது சன் டிவியின் அழிம்புகள்.//
இதுவும் அனைத்து ஊடகங்களும் செய்யும் தவறே. நமக்குத் தேவையான அல்லது நமக்குப் பிடித்தமானவர்களின் செய்திகளை மட்டும் தருவது. சன் டி.வி.யைவிட ஜெயா டி.வி. இந்த விஷயத்தில் பலநூறு மடங்கு மோசம் என்பதே எனது கருத்து. சன் டி.வி.யை மட்டுமே இது குறித்து விமர்சனம் செய்வது அறிவுடைமை ஆகாது.
இறுதியாக நான் சன் டி.வி. யிலோ அல்லது தி.மு.க.விலோ ஊதியம் பெறவில்லை; அந்த கட்சிகளில் நான் உறுப்பினரும் இல்லை.
ஜெயலலிதவிற்கு எப்படி பணத்தாசைபிடித்த சசிகலா குடும்பத்தால் அழிவு வரப்போகிறதே அதுபோலத்தான் திமுகவுக்கும் பணப்பேராசை பிடித்த மாறன் குடும்பத்தால் அழிவு வரப்போகிறது நிச்சயம். ஊடகம் வெரும் வியாபாரத்துக்கு மட்டும அல்ல் அப்படி இருந்தால் சுதந்திரப்போராட்டகாலத்தில் இருந்த ஊடகங்கள் உயிருக்கு அஞ்சாது வெள்ளைக்காரனை எதிர்த்து மக்களிடையே புரட்சியை ஏற்படுத்தின.இப்போது உள்ள ஊடகங்கள் அப்படி இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு மக்களுக்கு நல்ல விசயங்களை எடுத்து சொல்வனவாகவும், நடுநிலையாளனாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு.
நீங்கள் சொல்வது எப்படி என்றால் எதிரி பத்து மடங்கு மோசமானவனாக இருந்தால் நான் 20 மடங்கு மோசமானவனாக இருப்பேன் என்பது போல் உள்ளது.
விளம்பரங்களின் தொகை மக்கள் பார்பதை வைத்துதான் கணக்கிடபடுகிறது, அப்படி இருக்கும் பொழுது, விளம்பர நேரங்களையும் விற்று, அதை பார்பவர்களையும் கட்டணம் கட்ட சொல்வது எந்த வகையில் சரி.
தினகரன் பத்திரிக்கையில் வெளி இடப்படும் மத்திய அரசு விளம்பரம் மட்டுமே அவர்களுக்கு பெரும் லாபத்தை சம்பாதித்து குடுக்கும். மற்ற ஊர்களில் எப்படியோ நெல்லையில் பத்திரிக்கை படு மட்டம், பெரிய பெரிய எழுதுகளும் பக்கத்தை அடைக்கும் படங்களும் மட்டுமே உள்ளன. எங்களது ஊரில் சன் டி.வி செய்திகளை 100 ரூபாய் செய்தி என்றும் ஜெயா டி.வியை 200 ரூபாய் செய்தி என்றும் சொல்றாங்க. டி.வில பேசுரதுக்கு நமக்கு குடுக்குற ரூபாய் அது. என்னத்த சொல்ல
Sun Tv is one channel that introduced mega serials concept. Even though it has been a major impact in most of the housewife, it has been difficult to stop people from watching. But one cannot deny the advertising ability or the standards of sun tv. when compared to sun tv, though the programs are good in jaya and there is lots of money available, they are still not able to produce good programs. There can be so many complaints about the establishment of sun tv, like sumangali, but it is fact that sun tv has become a part of all Tamil speaking family.
Sorry for not commenting in Tamil ..
கேபிள் டிவி ஒளிபரப்பு சட்டமுன் வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அந்த குடும்ப அரசியலுக்கு ஒரு மறையாத வடு. உங்கள் டிவி ஒளிபரப்பு தரம் நிறைந்தது, எனில் உங்கள் ஒளிபரப்பை மக்கள் எப்படி வேண்டுமானலும் பார்க்க முயற்சிக்கமாட்டார்களா? ஏன் பயப்படுகின்றீர்கள்.
நீங்கள் அரசியல்வாதி, நீங்கள் மட்டும்தான் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதில்லை, மாற்று அரசு அதனை செய்தாலும் மனதார வரவேற்று ஒரு ஓ போடவேண்டுமே தவிர இப்படி கூப்பாடு போடு கவர்னரை பார்க்க ஓடியிருக்கக்கூடாது.
சரி...8 மணி செய்தியில் வெறும் செய்திகளை மட்டுமே ஒளிபரப்பட்டுமே... ஏன் திமுக கருத்துகளையும், கருணாநிதியின் அறிவிப்புகளையும் மட்டுமே போடுகின்றனர். வேண்டுமென்றால்.. அதற்கு தனியாக ஒரு நேரம் ஒதுக்கி திமுகநேரம் என்று ஒளிபரப்புங்களேன்.
எல்லாம் அரசியல்வியாபாரச் சந்தை இது.
அ.தி.மு.க. ஜெயித்தால் "ஜெயக்குமார் மணியால் வெற்றி பெற்ற அ.தி.மு.க." என்று சொல்லலாமென நினைக்கிறேன்!! :-)
Post a Comment
<< Home