$user_name="Jeyakumar";

Saturday, May 13, 2006

தேர்தல் முடிவுகள் கூறும் பாடங்கள்!

தேர்தல் அறிவிப்பிற்கு முன் அதிமுக ஓரளவுக்கு வெற்றிபெறும் நிலையில் தான் இருந்தது. ஆனால் தேர்தல் நெருங்க, நெருங்க அதன் நிலை கொஞ்சம், கொஞ்சமாக மாறியது. இதற்கு காரணம் முறையான பிரச்சார வியூகம் இல்லாததே!. 1996 - 2001 வரை ஓரளவுக்கு பெரிய தவறுகள் ஏதும் செய்யாமல் ஆட்சி செய்த திமுக-வினால், இப்போது அதிமுக பெற்ற தொகுதிகளை விட குறைவான தொகுதிகளே 2001 தேர்தலில் பெற முடிந்தது என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.

குறிப்பாக பசிக்காக துரத்தும் விலங்குகளை விட, உயிருக்காக பயந்துஓடும் விலங்குகளிடம் வேகமும் ஒரு துடிதுடிப்பும் இருக்கும். இந்த தேர்தலும் அப்படித்தான். ஆட்சிப்பொறுப்பில் இருந்த அதிமுகவால் சரியான முறையில் பிரச்சார வியூகம் அமைத்துச் செயல்படவில்லை. ஆனால் இந்த தேர்தல் திமுக-விற்கு வாழ்வா , சாவா போராட்டமாகத்தான் இருந்தது. எனவேதான் மத்தியில் தனக்கு இருந்த செல்வாக்கையும், மாநிலத்தில் தனக்கு இருந்த ஊடக செல்வாக்கையும் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு பயன்படுத்தி இந்த வெற்றியை பெற்றார்கள் என்றால் அது மிகையாகாது.

சிலேடையாக பேசுவதால் மட்டும் ஓட்டு கிடைத்துவிடாது என்பதை உணர்ந்து கொண்ட கருணாநிதி எல்லோருக்கும் முந்திக்கொண்டு , ஓட்டுப்போடும் பாமர மக்களை கவரும் வகையில் பல இலவசங்களுடன் தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஆனால் எந்த தொலைநோக்குப்பார்வையும் இல்லாமல் அறிவிக்கப்பட்ட இந்த இலவச திட்டங்களால், நம் தமிழகத்தின் பொருளாதாரம் எவ்வாரெல்லாம் பாதிக்கப்படப்போகிறது, இதெல்லாம் சாத்தியமா என்று கேள்வி எழுப்பி, தன் ஆட்சியில் அவர்கள் செய்த பொருளாதார சீர்திருத்தங்களால் தமிழகத்தின் பொருளாதார நிலை எப்படியுள்ளது என்பதைப் பற்றிய சரியான பிரச்சாரம் அதிமுக-விடம் இல்லாமல் போனது.

திமுக அறிவித்த பல சாத்தியமில்லாத, சுயநல நோக்கோடு உள்ள இலவச திட்டங்களை, வைகோ கடுமையாக விமர்சித்துக்கொண்டு இருக்கும் போது, அதற்கு மேலும் வலுச்சேர்க்காமல் , மேலும் பல இலவசங்களை ஜெயலலிதா அறிவித்தது, வைகோ-வை தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளியது. கூட்டணியில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்கின்ற இவ்வேளையில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை ஆதரிக்கும் சூழ்நிலைக்கு வேறுவழியின்றி தள்ளப்பட்டார் வைகோ?. இதனால் மற்ற கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளானார்., அதிமுக தேர்தல் அறிக்கைகள் அணைத்தும் எங்களிடம் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என திமுக-வும் , தேமுதிக-வும் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதாவின் கடைசிக்கட்ட அறிவிப்புகள் வசதியாகப்போய்விட்டது.

தேமுதிக -விற்கு கிடைத்த பல ஓட்டுகள், இந்த தேர்தலில் அதிமுகவிற்கு விழவேண்டிய ஓட்டுகளேயாகும். அவருக்கு வாக்களித்த பாமர மக்கள பலர் பல இதுவரை ஆதிமுக விற்கு வாக்களித்து வந்தவர்களே. கருனாநிதி எதிர்ப்பு அதிமுக -விற்கு சாதகமாகாமல் தேமுதிக-விற்கு சாதகமானதும் இந்த தேர்தலில் அதிமுக-விற்கு ஏற்பட்ட மற்றுமொரு பின்னடைவாகும்.

எம்ஜியார் இருந்தவரை , தமிழக பாமர மக்களிடம் , கருனாநிதி ஒரு துரோகி, நயவஞ்சகர், சூழ்ச்சிக்காரர் என்பது போன்ற ஒரு இமேஜை ஏற்படுத்தி வைத்திருந்தார். அதோடு ஆரம்பத்தில் அவர் கருனாநிதியை எதிர்த்த அளவிற்கு பிற்காலங்களில் அவர் எதிர்க்கவில்லை. மாறாக கருனாநிதி எம்ஜியாரை அவர் சாகும் வரை விமர்சித்துக்கொண்டுதான் இருந்தார். இது மக்களிடையே கருனாநிதிக்கு ஒரு எதிர்மாறான நிலையையே வைத்திருந்தது. ஆனால் இப்போது ஜெயலலிதா அதுபோன்ற ஒரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தவறிவிட்டார்.

ஜெயலலிதா , தன்னுடைய ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி மற்றவர்களை வளரவிடாமல் செய்து கொண்டிருந்ததால், பிரச்சாரத்திற்கு இவரை மட்டுமே இவருடைய கட்சி நம்பவேண்டிய சூழல் இருந்தது. ஆட்சியில் இருந்த போது ஓரளவுக்கு திறமையான அரசு அதிகாரகளை உடன் வைத்திருந்த ஜெயலலிதா, கட்சியில் அப்படி ஒரு கூட்டத்தை வைத்துக்கொள்ளாமல் போனதும் அவர் செய்த மிகப்பெரிய தவறு. தன்னை மிஞ்சி விடுவார்களோ, அல்லதும் துரோகம் செய்து விடுவார்களோ என்கிற பயம் தான் அதற்கு காரணம். ராஜாஜி தன் மேல் வைத்த நம்பிக்கையை பிறர் மேல் வைக்காததால் தான் அவரால் மக்கள் செல்வாக்குமிக்க மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவாக முடியவில்லை. ஆனால் காந்தி தன்னை நம்புவதை விட மற்றவர்களை அதிகம் நம்பினார். அந்த நம்பிக்கைதான் அவர் பின்னால் இந்தியாவே அணிவகுக்க வைத்தது.

இந்த தேர்தலில் திமுக வென்றாலும், அதற்கு இது மலர் கிரீடம் இல்லை. முற்கிரீடம் தான். ஏனென்றால் நம் மக்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை ஒருவருடத்திற்குள்ளாகவே எதிர்பார்ப்பார்கள். ஒரு 10 அல்லது இருபது வருடங்களுக்கு முன் தெர்தல் அறிக்கை என்பது படித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியவகையில் இருந்தது. ஆனால் இவர்கள் தங்களின் ஊடகங்கள் மூலம் பட்டி, தொட்டியெங்கும் அதை பரப்பிவிட்டார்கள், தேர்தல் சமயத்திலேயே கணக்கெடுப்பிலும் ஈடுபட்டுவிட்டார்கள். எனவே மக்கள் இவர்களின் அறிக்கையில் சொன்ன சலுகைகளை மிக விரைவில் எதிர்பார்ப்பார்கள். சலுகைகள நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஆட்சியின் மீதும் கட்சியின் மீதும் மக்களுக்கு நம்பிகை இழக்க வாய்ப்புள்ளது. அப்படி நிறைவேற்றும் பட்சத்தில், இந்த சலுகைகளால் கட்சிக்காரர்கள் மத்தியிலும், அரசு ஊழியர்கள் மத்தியிலும் லஞ்சம் கரைபுரண்டு ஓடும் என்பது மட்டும் நிச்சயம். அதுவும் இந்த ஆட்சிக்கு கெட்டபெயரைத்தான் வாங்கிகொடுக்கப்போகிறது.


இந்த தேர்தலில் மதிமுக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும். அரசியல் ரீதியாக இது அவர்களுக்கு கிடைத்த வெற்றிதான். ஏனென்றால் அதிமுக வென்றாலும், சில மாதங்களிலேயே மதிமுக எதிர்கட்சிகளின் வரிசையில் அமரக்கூடிய சூழ்நிலைதான் உருவாகும். இது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்றுதான். அப்படி நடக்கும் பட்சத்தில் ஒரு எதிர்கட்சியாக திமுக-வின் ஓசை இருக்கும் அளவிற்கு மதிமுக-வின் ஓசை இருக்காது. எதற்கெடுத்தாலும் பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான கருனாநிதியுடன் கூடி முடிவெடுக்கக் கூடிய சூழ்நிலைதான் உருவாகும். அது மதிமுக-வின் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இப்போது திமுக-விற்கு எதிர்கட்சியாக அமரப்போகும் இவர்கள், அதிமுக-வை விட ஒரு எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட முடியும். அதனால் தங்களுடைய நிலையை தமிழகத்தில் வலுப்படுத்திக்கொள்ள முடியும். எனவே அரசியில் ரீதியாகப்பார்த்தால் இது அவர்களுக்கு வெற்றிதான்.

தேமுதிக-விற்கு மக்களிடைய உள்ள ஆதரவு தமிழகத்தில் கழகங்களின் ஆட்சி மேல் மக்களுக்கு உண்டான வெறுப்பையே காட்டுகிறது. இந்த பலத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றால், அக்கட்சி உள்ளூர் பிரச்சனைகளுக்கு அக்கட்சி முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து போராடவேண்டும். கட்சியை தொய்வில்லாமல் கொண்டு செல்ல மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து போராட திட்டங்களை வகுக்கவேண்டும். ஊடகங்களிடம் நல்ல உறவு வைத்துக்கொள்வது மிக அவசியம். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ள தலைவர்களுக்கும், இரணடாம்கட்ட தலைவர்களுக்கும் மக்களிடையே நல்ல அறிமுகம் வேண்டும். இதை விடுத்து தேர்தலுக்கு தேர்தல் மட்டும் ஓசை எழுப்பிக்கொண்டிருந்தால், விஜய டி ராஜேந்தரின் நிலைதான் தேமுதிக-விற்கும் ஏற்படும்.

28 Comments:

At 3:29 AM, Blogger ராபின் ஹூட் said...

//எம்ஜியார் இருந்தவரை , தமிழக பாமர மக்களிடம் , கருனாநிதி ஒரு துரோகி, நயவஞ்சகர், சூழ்ச்சிக்காரர் என்பது போன்ற ஒரு இமேஜை ஏற்படுத்தி வைத்திருந்தார்.//
மிகச் சரியான வார்த்தைகள். கருணாநிதி துரோகி தான்.

 
At 11:51 AM, Anonymous Anonymous said...

Ungal vayutril eriyum neerupin poohaiyai ungaludaya intha pathivinmulam enal parka mudihirathu

better luck next time ....

 
At 12:04 PM, Blogger ஜெயக்குமார் said...

//Ungal vayutril eriyum neerupin poohaiyai ungaludaya intha pathivinmulam enal parka mudihirathu//

அடுத்தவர்களின் வயிற்றில் எரியும் நெருப்பில் சோறு சமைத்து சாப்பிடும் கும்பல் தான் இப்போது அறியனை ஏறியிருக்கிறது. எந்த தொலைநோக்குப்பார்வையும் இல்லாத உங்களைப்போன்றோர் வேண்டுமென்றால் இந்த இலவச திட்டங்களை ஆதரிக்கலாம். தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டும் படுகுழியில் தள்ளப்படப்போகிறது.

 
At 5:01 PM, Anonymous Anonymous said...

EX CM must clean her hands and Mouth before criticize other politicians. Her CRITICISM: KURANKIN KAIYIL POOMALI : is a very ugly Remark . she did not learn anything from History. Voters must teach her 'What is civilitiy and Politeness.

 
At 10:59 PM, Blogger குழலி / Kuzhali said...

//மாநிலத்தில் தனக்கு இருந்த ஊடக செல்வாக்கையும் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ
//
திமுகவிற்கு இந்த தேர்தலில் ஊடக செல்வாக்கா?? ம்ம்...

//எம்ஜியார் இருந்தவரை , தமிழக பாமர மக்களிடம் , கருனாநிதி ஒரு துரோகி, நயவஞ்சகர், சூழ்ச்சிக்காரர் என்பது போன்ற ஒரு இமேஜை ஏற்படுத்தி வைத்திருந்தார். அதோடு ஆரம்பத்தில் அவர் கருனாநிதியை எதிர்த்த அளவிற்கு பிற்காலங்களில் அவர் எதிர்க்கவில்லை. மாறாக கருனாநிதி எம்ஜியாரை அவர் சாகும் வரை விமர்சித்துக்கொண்டுதான் இருந்தார். இது மக்களிடையே கருனாநிதிக்கு ஒரு எதிர்மாறான நிலையையே வைத்திருந்தது.
//
ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன் எனக்கு தெரிந்து அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சி 89,2001 இரண்டிலும் நன்றாகவே இருந்தது, மேலும் எந்த பிரச்சினையிலும் அகங்காரத்தோடு அணுகாமல் ஓரளவு நிதானத்தோடு தான் கலைஞர் அணுகுகிறார் பிறகு ஏன் நல்ல ஆட்சி செய்யும் கலைஞர், தீயது செய்யாத ஜெயலலிதா யாரை தேர்ந்தெடுப்பீர் என்றால் மக்கள் ஜெயலலிதா பக்கம் சாய்வார்கள் அது ஏன் என அவரிடம் கேட்டேன், நீங்கள் கூறிய இதே இதே பதிலை கூறினார் அவர், அவர் ஒரு அதிமுக அனுதாபி என்பது வேறு விடயம்

 
At 12:19 AM, Anonymous Anonymous said...

--தொலைநோக்குப்பார்வையும் இல்லாத உங்களைப்போன்றோர் வேண்டுமென்றால் இந்த இலவச திட்டங்களை ஆதரிக்கலாம்-

Thanga thazhi...

computer...

cycle...

ithu ellam dinamalar la pakalaya samie...

பார்வைye illatha mathiri pesathinga

 
At 12:55 AM, Blogger ஜெயக்குமார் said...

//திமுகவிற்கு இந்த தேர்தலில் ஊடக செல்வாக்கா?? ம்ம்...//

சன் டிவி,கே டிவி, சன் நியூஸ், தமிழ் முரசு, தினகரன், முரசொலி, ஆனந்தவிகடன், நக்கீரன் இதெல்லாம் உங்கள் பார்வையில் ஊடகம் இல்லையென்றால் அதற்கு நான் ஒன்றும் சொல்லமுடியாது.

 
At 12:57 AM, Blogger ஜெயக்குமார் said...

//Thanga thazhi...

computer...

cycle...

ithu ellam dinamalar la pakalaya samie...

பார்வைye illatha mathiri pesathinga//

இதற்கு பதில் என்னுடைய பதிவிலேயே இருக்கிறது.

//திமுக அறிவித்த பல சாத்தியமில்லாத, சுயநல நோக்கோடு உள்ள இலவச திட்டங்களை, வைகோ கடுமையாக விமர்சித்துக்கொண்டு இருக்கும் போது, அதற்கு மேலும் வலுச்சேர்க்காமல் , மேலும் பல இலவசங்களை ஜெயலலிதா அறிவித்தது, வைகோ-வை தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளியது. கூட்டணியில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்கின்ற இவ்வேளையில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை ஆதரிக்கும் சூழ்நிலைக்கு வேறுவழியின்றி தள்ளப்பட்டார் வைகோ?. இதனால் மற்ற கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளானார்., அதிமுக தேர்தல் அறிக்கைகள் அணைத்தும் எங்களிடம் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என திமுக-வும் , தேமுதிக-வும் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதாவின் கடைசிக்கட்ட அறிவிப்புகள் வசதியாகப்போய்விட்டது.//

 
At 3:45 AM, Blogger பிரதீப் said...

ஸோ,
இலவசங்களை அறிவித்து மட்டுமே திமுக ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்கிறீர்கள். பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் இரண்டு கழகங்களும் வேண்டாம் என்று புதுமையைத் தேடிக் கொண்டிருந்த போது தேமுதிக வந்ததுதான் அதன் வெற்றி என்கிறார்கள்! சரி, உங்கள் பார்வை அப்படி!

பைதிவே, இலவசங்களை ஆரம்பித்து வைத்தது எந்த ஆட்சி, இன்றைக்கும் எம்ஜியார் உயிரோடு இருப்பதாகப் பல உள் கிராமத்து மக்கள் நம்பிக் கொண்டு இருப்பதற்கு என்ன காரணம் என்பதையெல்லாம் கொஞ்சம் படித்து, யோசித்துப் பாருங்களேன். அது வரையில் உங்கள் பார்வை இப்படித்தான் இருக்கும்.

ஜெயலலிதா என்ற அகங்காரத்தை, வைகோ என்ற துரோகத்தை ஒழிக்க ஊடகங்களைப் பயன் படுத்தினர் என்பதும் சரிதான். ஆனால் தினமலர், தினமணி, தினபூமி, குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர் (கடைசியில் மாறியது ஏனோ?) - இதெல்லாம் உங்கள் பார்வையில் ஊடகங்களாகவே தெரியாதோ... கேட்டால் எல்லாவற்றையும் நானே சொல்ல வேண்டுமா என்பீர்கள். இந்தப் பாரபட்சத்தால்தான் உங்கள் பதிவைப் படிக்கும் நடுநிலையாளர்கள் கூட அதிமுக எதிர்ப்பையோ அல்லது திமுக ஆதரவையோ கைக்கொள்கிறார்கள்.

கீழ்க்காணும் பதிவில் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி.

http://pradeepkt.blogspot.com/2006/05/blog-post_11.html

 
At 6:59 AM, Blogger ஜெயக்குமார் said...

//பைதிவே, இலவசங்களை ஆரம்பித்து வைத்தது எந்த ஆட்சி, இன்றைக்கும் எம்ஜியார் உயிரோடு இருப்பதாகப் பல உள் கிராமத்து மக்கள் நம்பிக் கொண்டு இருப்பதற்கு என்ன காரணம் என்பதையெல்லாம் கொஞ்சம் படித்து, யோசித்துப் பாருங்களேன். அது வரையில் உங்கள் பார்வை இப்படித்தான் இருக்கும்.//

மிக அவசியமான இலவசங்கள், அது தேவைப்ப்டுகின்ற நேரத்தில் கொடுப்பது மிக அவசியம். காமராஜரின் இலவச சத்துணவுத்திட்டமும் அது போன்றுதான். ஆனால் இந்த தேர்தலில் அறிவிக்கப்பட்டது போன்ற அனாவாசியமான சமாச்சாரங்கள் நம் பொருளாதாரத்தையே பாலாக்கிவிடும். இதில் வேடிக்கை என்னவென்றால் , நம் பொருளாதார மேதைகளும் இதை ஆதரித்ததுதான். இதை நடைமுறைப்படுத்தும்போது தான் அவர்கள் சிக்கலை சந்திக்கவேண்டிவரும். "சொல்லுதல் யார்க்கும் அரிய" என்று ஆரம்பிக்கும் குறள் இதற்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.

நம்மவர்கள் போலியான கவர்ச்சிக்கு அடிமையானது பற்றிய என்னுடைய பதிவை நீங்கள் இங்கு கானலாம்.

http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post_11.html

ஜெயலலிதாவிடம் உள்ள அடக்கியாளும் திறமையை ஆவர் ஆக்கபூர்வமான முறையில் செயல்படுத்துவாரேயானால் அவரால் எல்லோரும் போற்றக்கூடிய நல்லாட்சியைக் கொடுக்க முடியும். ஆனால் அவர் அரசியல் ரீதியாக நல்ல ஆலோசனை சொல்பவர்களை உடன் வைத்திருப்பதில்லை. அதோடு மட்டுமல்லாமல் தன்மீது அவருக்குள்ள அதிகப்படியான நம்பிக்கையும், மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையின்மையுமே அவரிடம் உள்ள பலகீனங்கள். இதை அவர் ஆட்சி செய்த விதத்தில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். தன் அமைச்சரவையில் இருந்தவர்களைக்கூட அவர் முழுமையாக நம்பவில்லை.


இங்கே நீங்கள் வைகோ-வை பற்றி குறிப்பிட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் துரோகியென்றால் , தன் மகனின் எதிர்காலத்திற்காக, தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக அவரை கொலைக்குற்றம் சுமத்தி கட்சியை விட்டு வெளியேற்றிய கருணாநிதியை எவ்வாரு சொல்வது. அவரை கட்சியை விட்டு வெளியேற்றிய கருணாநிதி, அவர் சிறையில் இருந்த போது அவர்மீது இருந்த அனுதாப அலையை பயன்படுத்திக்கொள்ளவும், மதிமுக ஓட்டுகளுக்காகவும் மத்தியில் தேர்தல் நடக்கும் சமயத்தில் அவருடன் ஒட்டிக்கொண்டு அவரைக்காப்பாற்றுவது போல நாடகம் ஆடினார். அன்று பல கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்ததால் தான் மத்தியில் இவர் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் உருவானது.

இப்போதும் கூட பல தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்த கருணாநிதியால் தொகுதிக்கு சராசரியாக 2000, 3000 ஓட்டுகள் தானே கூடுதலாக பெற முடிந்தது.

 
At 7:49 AM, Blogger பிரதீப் said...

ஜெ. ஒரு நல்ல நிர்வாகி என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. இவை இருப்பதால்தான் இக்கட்டான சூழ்நிலைகளான சுனாமி, வெள்ளம் போன்றவற்றில் பிரமாதமான பணியாற்றியது. ஆனால் தொழில் துறை மற்றும் எதிர்காலத்துக்கான வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் அவரது ஐந்தாண்டு கால ஆட்சியில் இல்லை என்பதையும் குறிப்பிடுகிறேன். போன ஆட்சியில் கூட தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் காவல் நிலையம் போன்ற நல்ல திட்டங்கள் இருந்தன.

நான் முக்கியமாக எதிர்ப்பது அவரது தனிமனித குணங்களான எதேச்சாதிகாரம், தன்னம்பிக்கையை மீறிய ஆணவம் இவற்றைத்தான்.

இலவசங்கள் ஒரு காரணமாக இருந்திருக்கலாமே தவிர அவற்றை வைத்து மட்டுமே திமுக வெற்றி பெற்றது போன்ற ஒரு தொனி உங்கள் பதிவில் இருந்தது. அதை எதிர்க்கிறேன். மற்றபடி கூட்டணி பலம் என்பது தமிழகத்தில் இப்போது எந்தக் கட்சிக்குமே தேவைதான்.

அரசியல் சாக்கடையில் அனைவருமே கேவலம்தான். ஆனால் கடைசி நிமிடம் வரை வைகோ நடத்திய அந்த அற்புத நாடகத்தை ஒப்பிடும் போது வேறு எதுவுமே பக்கத்தில் வராது. அத்தோடு வைகோவைப் போய்ப் பார்த்ததும் ஆதரவு தெரிவித்ததுமே நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டுதான் என்று ஒரு அபாண்டத்தை வைகோ சொன்னதே அவருக்கே பெரும் பின்னடைவாக அமைந்தது.

////இப்போதும் கூட பல தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்த கருணாநிதியால் தொகுதிக்கு சராசரியாக 2000, 3000 ஓட்டுகள் தானே கூடுதலாக பெற முடிந்தது. ////
இது எனக்கு உண்மையென்று தோன்றவில்லை. தேர்தல் கமிஷனின் தளத்தில் இன்னும் ஒரு ஒட்டுமொத்த அறிவிப்பு வெளியாகவில்லை. தனித்தனியாகத் தொகுதிகளின் நிலவரத்தைப் பார்த்தபோது எனக்கு அப்படித் தோன்றவில்லை. எதற்கும் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

 
At 7:56 AM, Blogger பிரதீப் said...

இன்னொரு விஷயம்

மாநிலத்திலேயே அதிக வாக்கு (45074)
வித்தியாசத்தில் ஜெயித்தவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு. ஜான் ஜோசப் (விளவங்கோடு)

மாநிலத்திலேயே குறைந்த வாக்கு (14) வித்தியாசத்தில் ஜெயித்தவர் அதிமுகவைச் சேர்ந்த திரு. சின்னசாமி (ஐ.என்.டி.யூ.சி - சிங்காநல்லூர்)

கடந்த 2001 தேர்தலில் 140ல் இருந்து இப்போது 182 தொகுதியில் போட்டியிட்டு வெறும் 1.**% அதிகம் ஓட்டுகள் பெற்றுவிட்டு அதிமுகதான் தில்லாலங்கடி என்பது போன்ற திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தில் தயவு செய்து நீங்களும் விழுந்து விடாதீர்கள்.

 
At 8:11 AM, Anonymous Anonymous said...

அடுத்த முதல்வர் ஸ்டாலின் தனது கோட்டையில் சுமார் 2000 ஓட்டுகள் வித்தியாத்தில் தானே வென்றுள்ளார். ஸ்டாலினின் மகன் முதல்வராக வந்தால் கூட இரண்டாம் இடத்தில் இருக்கப்போகும் அன்பழகன் கூட தனது கோட்டையில் 450 ஓட்டுகள் வித்தியாத்தில் தானே வென்றார். இது சென்னை மக்கள் திமுக-வின் மீதான நம்பிக்கையின்மையைத்தானே காட்டுகிறது.

 
At 1:07 AM, Anonymous Anonymous said...

இலவசங்கள், அதனால் பயனடைவோரின் வாழ்வில் ஒளி ஏற்றுமானால். அதெல்லாம் அவசியமே. காமராஜர் செய்ததும் அதுதான். இந்த கலர் டிவி இலவசத்தாலும், அது போன்று மக்களிடையே சோம்பேரித்தனைத்தை வரவழைக்கும் இலவசங்களாலும்.நம் பொருளாதாரமும் , சமூகமும் தான் அழியுமே தவர வேறெந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை

 
At 1:10 AM, Blogger ஜெயக்குமார் said...

அணானி, உங்களின் கருத்துக்கு நன்றி!

இவற்றை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். அல்லது புரிய வைக்கிற நல்ல தலைவர்கள் வேண்டும்.

 
At 2:00 AM, Blogger மாயவரத்தான்... said...

எத்தனை முறை தோற்றாலும் நான் அதிமுக விசுவாசிதான்.

எத்தனை செருப்புகள் வைத்திருந்தாலும் கோடிகணக்கான மதிப்புள்ள நகைகளையே வைத்திருந்தாலும் என்றைக்கும் எங்கள் அம்மா ஜெயலலிதாதான். இதனை மாற்ற யாராலும் முடியாது!

 
At 4:57 AM, Blogger ஜெயக்குமார் said...

மாயவரத்தான், என்ன ஆச்சு உங்களுக்கு?

 
At 5:05 AM, Anonymous Anonymous said...

jeyakumar, there is a poli in "Mayavarathaan" name.

 
At 5:12 AM, Blogger பிரதீப் said...

அதாங்க...
போலி மாயவரத்தான் மாதிரிதான் தெரியுது. அவர் இவ்வளவு வெளிப்படையா எல்லாம் பேச மாட்டாரு - ச்ச்ச்ச்சும்மா லுலுலுவாயிக்கு :)

 
At 5:20 AM, Blogger ஜெயக்குமார் said...

போலிகள்,

இந்த உலகில், ஒவ்வொன்றும் தனித்தனியாக அவற்றிற்குரிய தனித்தன்மையுடன் இருக்கும் போது, மனிதன் மட்டும் ஏன் இப்படி முதுகெலும்பிருந்தும் புழுக்களாக அழைகின்றான்.

ஒரு செடியில் இருக்கும் இலைகளில் கூட ஒரே மாதி இரண்டு இலைகள் இருப்பதில்லை. இருக்க முயல்வதும் இல்லை.

ஒருவரின் பெயரில், அநாகரிகமான செயல்களை மற்றொருவர் செய்வது, ஒரு காமனின் பார்வையில் தன் தாயைப்பார்ப்பது போன்றதாகும். தவறு செய்தவர்கள் , அதை திருத்திக்கொளவது நல்லது. இல்லையேல் அவர்களின் மனச்சாட்சியே அவர்களை சிலநாட்களில் உயிரற்ற ஜடங்களாக ஆக்கிவிடும்.

 
At 2:43 AM, Blogger லக்கிலுக் said...

ஹலோ கருத்து கந்தசாமி,

தோத்துப் போன பிறகும் தில்லாலங்கடி வேலை காட்டும் நீங்கள் ரபி பெர்னாட்டுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல..... வாழ்த்துக்கள்!!!!

 
At 3:22 AM, Blogger ஜெயக்குமார் said...

/ ஹலோ கருத்து கந்தசாமி,

தோத்துப் போன பிறகும் தில்லாலங்கடி வேலை காட்டும் நீங்கள் ரபி பெர்னாட்டுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல..... வாழ்த்துக்கள்!!!!//

மூன்று தேசிய கட்சிகள், நாலைந்து மாநிலக்கட்சிகள் என்று மெகா கூட்டணியுடன் களமிறங்கிய திமுக வால் தனிப்பெரும்பாண்மை கூடப்பெறமுடியவில்லை. சென்னையிலேயே அவர்களால் வெற்றிபெறமுடியவில்லை. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு தன் பேரனுக்கு வேறு தொகுதி பார்க்கும் நிலையில் கலைஞர் உள்ளார். இதில் உங்களின் ஆட்டத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை.

திமுக கூட்டணி வாங்கியுள்ள ஓட்டுகளில், கூட்டணி ஓட்டுகளான சுமார் 15% சதவீதத்தை எடுத்துவிட்டு திமுக-வின் ஓட்டுசதவீத்த்தைப்பார்த்தால் திமுக-வின் பலம் உங்களுக்கு தெரியும்.

 
At 6:18 AM, Blogger பிரதீப் said...

முதல்லயே சொல்லிடுறேன். கூட்டணி இல்லாம தமிழ்நாட்டுல எந்தக் கட்சியும் பெருவெற்றி பெற முடியாது. இதெல்லாம் தெரிஞ்சுதானே, எங்க வூட்டுக் கதவு தொறந்தே கெடக்குன்னு மம்மி (நன்றி: தரண்) அறிக்கை விட்டாங்க. மதிமுகவின் இரண்டாம் நிலைத் தலைவர்களை மடக்க வேண்டிய விதத்தில் மடக்கிக் கூட்டணிக்கு ஒத்துக்க வச்சாங்க. திமுகவால் அதிகம் கண்டுகொள்ளப் படாத வி.சி.யையும் கூட்டணியில சேத்துக்கிட்டாங்க.

ஆனா, ஏய்யா இன்னும் இந்த பெர்செண்டேஜ் கணக்கை வைத்து பேண்டேஜ் போட்டுக்கறீங்க? அதான் புரியலை!

அதிமுகவுல ஜெயா டிவியில எல்லாம் அதிமுகதான் பெரும்பான்மையா ஜெயிச்சுருக்குன்னு சொல்றாங்களேன்னு நானும் வேலை மெனக்கெட்டு அத்தனை தொகுதி முடிவுகளையும் ஒரு எக்செல் ஷீட்டுல போட்டுப் பாத்தேன்.

இதில பாருங்க. வெற்றி வித்தியாசம் சராசரி அளவில்

திமுக - 12945
பாமக - 10262
காங்கிரஸ் - 9993
இ.கம்யூ - 10518
மா.கம்யூ - 13766 (இதில் விளவங்கோட்டில் 45000+ல் வெற்றி பெற்றதும் அடக்கம்)

அதிமுக - 6434
மதிமுக - 6022
வி.சி. - 10164


வேணுமின்னா இன்னும் அவங்க ஒவ்வொரு தொகுதியிலும் வாங்கிய ஓட்டு சதவிகிதம் அத்தோட சராசரி எல்லாத்தையும் வச்சுருக்குற எக்செல் ஷீட்டுல போட்டுத் தரேன்.

தோல்வி வருவது சகஜம். அதை ஒத்துக்கிறதுல அதிமுக தொண்டர்களுக்கும் தலைவிக்கும் கஷ்டம் இருக்குன்னா நியாயம். அவங்கதான் ஒட்டுமொத்த வாக்குகளையும் வச்சு ஜல்லியடிக்கிறாங்க. நீங்களுமா அப்படி?

 
At 3:52 PM, Blogger ஜெயக்குமார் said...

பிரதீப் ,

உங்கள் புள்ளிவிவரங்களுக்கு மிக்க நன்றி.

கூட்டணிகள் எப்போது வேண்டுமானாலும் மாறும். தனிப்பட்ட செல்வாக்கு என்பது அப்படியல்ல. திமுக-விற்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்குமென்றால், அல்லது அவர்களின் கூட்டணி பலம் என்றால். அவர்களால் ஏன் தனிப்பெறும்பான்மை பெற முடியவில்லை?

தொகுதிக்கு தொகுதி வெற்றி மாறியுள்ளதெ?

அப்படியானால் மக்கள் தொகுதிப்பிரச்சனையை வைத்து வாக்களித்தார்களா?.
அல்லது
கட்சிபார்க்காமல் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் தகுதியை வைத்து வாக்களித்தார்களா?.

அப்படியானால் , ஸ்டாலின் 2000 கூடுதலாக ஓட்டு வாங்கியதால், அவர் தகுதி குறைவானவரா?

கம்யூனிஸ்ட் வேட்பாளர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால் அவருக்கு முதல்வர் பதவிதான் கொடுத்துவிடப்போகிறார்களா?

சதவீத கணக்கை நாம் புறந்தள்ளிவிட முடியாது. திமுக கூட்டணியில், மெகா கூட்டணிக்கட்சியினரின் ( காங்கிரஸ், பாமாக, இரண்டு கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக், கண்ணப்பன் கட்சி, etc..) ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் குறைந்தது சுமார் 15லிருந்து 18 சதவீதமாவது இருக்கும். இதை திமுக-வினர் இல்லையென்று சொல்ல முடியாது. அப்படியானால் திமுக-வினரின் வாக்கு சதவீதத்தை நீங்களே கணக்கு பண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த தேர்தலில் பலர் கூறியது மாதிரி நடுநிலையாளர்கள் வாக்கு திமுக கூட்டணிக்கு போயிருந்தாலும் கூட திமுக -வால் தனிப்பெறும்பான்மை பெற்றிருக்க முடியும். போட்டியிட்ட தொகுதிகள் அடிப்படையில் தனிப்பட்ட ஓட்டு சதவீதக்கணக்கை யாரும் பார்க்ககூடாது. கூட்டணி சதவீதத்தில் இருந்து உத்தேசமாக்த்தான் கணிக்க முடியும்.

 
At 3:41 AM, Blogger லக்கிலுக் said...

கருத்து கந்தசாமி....

திமுக பெரும்பான்மை பெறாவிட்டாலும் அரியணை ஏறி இருக்கிறது....

அதிமுக 182 தொகுதிகளில் போட்டியிட்டு 61 தொகுதிகள் மட்டுமே பெற்றிருக்கிறது.... திமுகவோ 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது....

எட்டாவது பாஸ் தான் பெருசு, எஸ்.எஸ்.எல்.சி பெயிலு சின்னது என்று செந்தில் கவுண்டமணியிடம் வாதாடுவது போல வாதிட்டு வருகிறீர்கள்....

மிக பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் நன்றாக முன்னேறி இருக்கிறீர்கள்... சந்தோசம்.... ஆனாலும் இதே நிலையை மற்ற தமிழர்களும் அடைய வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.... கருணாநிதி எதிர்ப்பு என்ற சாக்லேட்டைக் காட்டி உங்களை கடைசியில் திராவிட சமுதாய விரோதியாக சில நயவஞ்சகர்கள் மாற்றி விட்டனரோ என்று அஞ்சுகிறேன்.....

 
At 5:05 AM, Blogger ஜெயக்குமார் said...

//அதிமுக 182 தொகுதிகளில் போட்டியிட்டு 61 தொகுதிகள் மட்டுமே பெற்றிருக்கிறது.... திமுகவோ 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது....//

போட்டியிட்ட தொகுதிகளின் கணக்கைவிட கூட்டணி வாக்குசதவீதம், கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகள்பெற்ற வாக்குசதவீதம் ஆகியவற்றை வைத்துத்தான்ர் பார்க்கவேண்டும், நடுநிலையாளர்களாக உள்ள 5 - 10 சதவீததினரின் ஓட்டுகள் தவிர கட்சிஓட்டுகள் அப்படியே அந்த கட்சிக்குதான் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

//கருணாநிதி எதிர்ப்பு என்ற சாக்லேட்டைக் காட்டி உங்களை கடைசியில் திராவிட சமுதாய விரோதியாக சில நயவஞ்சகர்கள் மாற்றி விட்டனரோ என்று அஞ்சுகிறேன்.....//
கருனாநிதிதான் கடைந்தெடுத்த திராவிட விரோதி , அதுவும் கூட இருந்தே குழி பரிக்கும் விரோதி என்பது உங்களுக்கு தெரியாவிடில் அதற்கு நான் என்ன செய்யமுடியும். சொல்புத்தி வேண்டும் அல்லது சுய புத்தி வேண்டும். கருனாநிதி எப்படி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஆனார். ஆனால் மற்ற திராவிடர்களின், ஏன் அவர் கட்சியில் உள்ள தொண்டர்களின் நிலை என்ன என்று சிறிது யோசித்தீர்களானால் உங்களுக்கும் புரியும். போலியான மாயைக்கு அடிமையாகிவிட்ட உங்களை நினைத்து வருத்தப்படுவதை தவிர வேறுவழியில்லை.

 
At 1:00 AM, Blogger லக்கிலுக் said...

////கருனாநிதி எப்படி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஆனார்.////

உளறுவது என்று வந்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் உளறலாம்....

இந்த வார வீக் பத்திரிகையில் படித்தேன்.... பணக்கார இந்தியர்கள் வரிசையில் அசிம் பிரேம்ஜி-49,500 கோடி, முகேஷ் அம்பானி-31,500 கோடி, அனில் அம்பானி-24,750 கோடி, சுனில் மிட்டல்-22,050 கோடி, குமார் மங்கலம் பிர்லா-19,800 கோடி, துல்சி டண்டி-16,650 கோடி, பல்லூஞ்சி மிஸ்ட்ரி-14,850 கோடி கோடி என்று வெளியிட்டிருக்கிறார்கள்.... அந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் கூட கருணாநிதி பெயரோ அல்லது மாறன் பெயரோ இல்லை.... நீங்கள் பாட்டுக்கு வைகோ மாதிரி வாய்க்கு வந்தபடி ஆசியாவில் முதல் பணக்காரார், ஐரோப்பாவில் ஆறாவது பணக்காரர் என்றெல்லாம் ரீல் விட்டால் உங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை குறையும் என்பது என் எண்ணம்.... நான் சொன்னது தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்....

 
At 1:14 AM, Blogger ஜெயக்குமார் said...

//உளறுவது என்று வந்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் உளறலாம்..../

சன் டிவி-யின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 10,000 கோடி, அதில் 90 சதவீத பங்குகள் அவர்கள் குடும்பத்தினரிடம் தான் உள்ளது. அப்படியானால் அவர்களின் மற்ற சொந்த மற்றும் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவற்றை வைத்து கணக்கிட்டுப்பாருங்கள். நீங்கள் குறிப்பிட்ட பணக்காரர்கள் எல்லாம், அவர்களின் தனிப்பட்ட சொத்துகளை வைத்து கணக்கிடப்பட்டவர்கள். குடும்ப சொத்துக்களை அல்ல. இதில் தான் கருணாநிதி, மாறன் குடும்பத்தின் தந்திரங்களை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். பெரும்பாலான சொத்துக்கள் குடும்பத்தில் உள்ள பலபேரின் பெயர்களில் உள்ளன.
இந்த விசயத்தில் உங்களில் அறியாமையை நினைத்து வருந்துகிறேன்.

 

Post a Comment

<< Home