$user_name="Jeyakumar";

Tuesday, April 11, 2006

விஜயகாந்தின் தேர்தல் அறிக்கையும் விமர்சனங்களும்

இந்த தேர்தலிலுக்காக விஜயகாந்த் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்ப்ட்ட எதையும் அவரால் செய்யமுடியாது. அவை எதுவும் சாத்தியமில்லை என்று பல வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் ஒரு சில கவர்ச்சித் திட்டங்களைத் தவிர்த்து இந்த அறிக்கையில் உள்ள அனேக சலுகைகள் இங்கிலாந்து உட்பட பல வள்ர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளவைதான். நம் அரசு ஏழையாகவும், அரசை நடத்துபவர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் உள்ளதாலேயே நம் நாட்டில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியாமல் உள்ளது. முறையாக வரி வசூலிப்பதன் மூலம் நம் அரசையும் பணக்கார அரசாகவும், நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆட்சியை நல்லாட்சியாகவும் மாற்ற முடியும். இன்னும் சென்னையில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தும் எந்த நகைகடையிலும், மற்றும் பல வர்த்தக நிறுவனங்களிலும் ரசீது (வரியுடன் கூடிய) வழங்கபடுவதில்லை. அதிகாரிகளும், ஆளும் வர்க்கத்தினரும் லஞ்சம் வாங்கிக்கொண்டு இதை கண்டு கொள்வதுமில்லை. முறைப்படி வரி வசூல் செய்து அரசு வருமானத்தை பெருக்கினாலே இதை விட அதிகமான் பயன்களை மக்களுக்கு அரசு செய்து தரலாம்.

5 Comments:

At 12:37 PM, Anonymous Anonymous said...

சொல்வதெல்லாம் சரியே

 
At 2:01 PM, Blogger ஜெயக்குமார் said...

உங்கள் கருத்துக்கு நன்றி,
என்னுடைய மற்ற பதிவுகளையும்(கருத்துக்களையும்) படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 
At 2:55 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் ஜெயகுமார் !வாழ்த்துக்கள்!((எனக்கும் ஒரு போட்டியா எல்லாம் என் நேரம்) சும்மா தமாசு!)

 
At 6:20 PM, Blogger சம்மட்டி said...

//கவர்ச்சித் திட்டங்களைத் தவிர்த்து//

விந்தியாவை விஜயகாந்த் தன் கட்சிக்கு வேண்டாமென்று சொல்ல அவர் அதிமுக விற்கு சென்றதா ?

 
At 10:54 PM, Blogger ஜெயக்குமார் said...

/விந்தியாவை விஜயகாந்த் தன் கட்சிக்கு வேண்டாமென்று சொல்ல அவர் அதிமுக விற்கு சென்றதா ?/

உங்கள் எண்ணம் போலவே உங்கள் எழுத்தும் உள்ளன. நன்றி

 

Post a Comment

<< Home