$user_name="Jeyakumar";

Monday, May 15, 2006

அரசு பள்ளிகளில் இந்தி மொழியின் அவசியம்!

நேற்று தரன் அவர்கள் தன்னுடைய பதிவில், "கலைஞர், அண்ணா தடுத்ததால் தான் இவர்களால் இந்தி படிக்கமுடியாமல் போய்விட்டதா? அவர்கள் இந்தி கட்டாயமாவதைத்தான் எதிர்த்தார்கள். இவர்களுக்கு இந்தி படிக்கவேண்டும் என்றால் தனியாக படித்துக்கொள்ளலாமே!" என்று தெரிவித்திருந்தார். அதை பலர் வரவேற்றும் இருந்தனர். ஆனால் இது இவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

இந்தியாவைத்தவிர மற்ற மாநிலங்களில், பள்ளிகளில் தாய்மொழியோடு ஒரு தேசிய மொழியும், சர்வதேச தொடர்பு மொழியாக ஆங்கிலமும், கற்றுக்கொடுக்கப்படுகிறது. மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்வதற்கே!. வேற்று மொழியில் உள்ள நல்ல விசயங்கள் நமக்கு தெரியவேண்டுமானால் அந்த மொழியை கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. நல்ல தகவல்களை ( information sharing) பரிமாரிக்கொள்வதில் இது மிகவும் அவசியமாகிறது. நமது ஊரிலேயே தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள், வேற்று மொழியாக ஆங்கிலத்தை மட்டுமே கற்றுக்கொள்கின்றனர். ஆனால் பேசிப்பழகாததால் , தேவைப்படும் நேரத்தில் அவர்களால் அதை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

தரன் சொல்லுவது போல "பள்ளிகளில் இந்தி இல்லையென்றால் என்ன நீங்களே கற்றுக்கொள்ளுங்களேன்!" என்பது சொல்லுவதற்கு வேண்டுமானால் நன்றாக , நியாயமாக இருக்கலாம். ஆனால் எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது.

தரன் தனது பதிவில் டைடல் பார்க்கையும் , பெங்களூரையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டார். தொழில் என்பது தகவல் தொழிநுட்பம் மட்டும் அல்ல என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாமமில்லை.

இன்று அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லுபவர்களில் 70 சதவீததிற்கு மேற்பட்டவர்கள் கிராமத்தில் இருந்து செல்பவர்கள்தான். அவர்களில் பலர், பள்ளி இறுதி வகுப்புவரை கூடப்படிக்காதவர்கள், சிலர் ITI மற்றும் diploma படித்தவர்கள். அவர்கள் கிராமங்களில் படிக்கும் போது தமிழ்தவிர மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அப்படிப்பட்டவர்கள் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் போது அந்த நாட்டவர்களுடன் சரிவர தொடர்பு கொள்ளமுடியாமல் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது மிகவும் வேதனைக்குறியது. அங்கு சென்று பார்க்கும் போது தான் மற்ற மொழிகளை கற்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு தெரிகிறது. திறமையிருந்தும் கூட அவர்களால் அதை வெளிக்காட்ட முடியாமல் கீழ்மட்ட அளவிலேயே பெரும்பகுதி நாட்களை கழிக்கவேண்டியதாயுள்ளது.

இந்தி, ஆங்கிலத்தை விட மிக எளிதான மொழிதான். பள்ளியில் படிக்கும் போதே அதை ஒரு மொழியாக கற்றிருந்தால் அது அவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்திருக்கும். கிராமத்தில் இருப்பவர்களுக்கும், நகரத்தில் உள்ள வசதியற்றவருக்கும் அரசு பள்ளிகளில் கிடைக்கும் இலவச கல்விதான் அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவது. அங்கு இது போன்ற வாய்ப்புகளை தடை செய்வது மிக ஒரு சமுதாய அழிவிற்கு அடிக்கல் நாட்டுவது போன்றதாகும். என்வே தான் அரசு பள்ளிகளில் இந்தி போன்ற ஒரு தேசிய மொழியை, ஒரு மொழியாக கற்றுக்கொள்ளவேண்டியது மிக அவசியமாகிறது.

தமிழகத்தில் படிக்கும் அணைவருக்கு இங்கேயே வேலை கிடைத்துவிடப்போவதில்லை. வேலை கிடைக்காத எல்லோருக்கும் வெளிநாட்டு வேலையும் கிடைத்துவிடப்போவதில்லை. இங்கு படிக்கும் சில் தொழில்கல்வி படிப்புகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அங்கு வேலைக்கு செல்லும் பலர் அவர்களோடு சரிவர கலந்துரையாட முடியாமல் அவதிப்படுறார்கள். அவர்களின் வேதனை அனுபவித்தால் தான் தெரியும். தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் கூட மற்ற வீரர்களுடன் சரிவரப்பழக முடியாமல், மந்தையில் இருந்து பிரிந்த ஆடுபோல இருக்கவேண்டியுள்ளது. இதை சில வீரர்களுடைய பேட்டியில் இருந்தே நீங்கள் அறிந்துகொள்ளலாம். மத்திய அரசுப்பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கும் செல்லும் நம் மக்களின் நிலையும் இதுதான். மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு நம்மைப்போன்ற ஆங்கில் அறிவு இல்லையென்றாலும், தேசிய மொழி தெரிந்திருப்பதால், திறமையிருந்தும் நம்மவர்களால் அவர்களுடன் போட்டிபோட முடிவதில்லை.


பல வெளிநாடுகளில் வாழும் நாம் மக்கள் (இந்தியர்கள்) தங்களுக்குள்ளாக ஆங்கிலத்தில் பேசினால் அவர்களில் ஒருவர் நிச்சயமாக தமிழனாகத்தான் இருக்க முடியும் என்ற நிலை உள்ளது வெட்கக்கேடான விசயம்தான். இதெற்கெல்லாம் காரணம் தாய் மொழியாம் நம் அழகு தமிழை வளர்ப்பதாக கூறி, நம்மை ஆண்டவர்களின் மொழி வெறியும். அதைவைத்து அவர்கள் செய்த அரசியலும் தான்.

தமிழை வளர்க்க பல வழிகள் உள்ளன. ஆனால் இவர்களின் போராட்டம் தமிழை வளர்ப்பதை விட வேற்று மொழிகள் மீதான வெருப்பை வளர்ப்பதாகவே இருந்தன என்றால் அது மிகையாகாது. இவர்களின் போராட்டங்களால், வேற்றுமொழிகளின் மீதும், அந்த மொழி பேசுபவர்களின் மீதும் ஒருவித வெருப்பு ஏற்பட்டதே தவிர நம் தாய்மொழி ஒன்றும் பெரிதாக வளர்ந்துவிடவில்லை. இன்னும் தமிழ்நாட்டில் பல பள்ளிகளின் வாளாகங்களில் தமிழ் தடைசெய்யப்பட்ட மொழியாகத்தான் இருக்கிறது. நான் ஏற்கனவே என்னுடைய பதிவில் கூறியுள்ளது போல "உங்கள் வெற்றியானது மற்றவர்களின் தோல்வி மட்டும் அல்ல. ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக ஓடி வெற்றிபெறவேண்டிமேயன்றி முன்னால் ஓடுபவர்களின் கால்களுக்கு இடையில் கம்பை விட்டு அவர்களை கீழெ விழச்செய்து நீங்கள் வெற்றிபெறக்கூடது. நம் அழகு தமிழை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு விஞ்ஞானப்பூர்வமாக சிந்தித்து திட்டங்களை வகுத்து, அதன் அருமையை ஒவ்வொரு தமிழனும் உணரும்படி செயல்படவேண்டுமே தவிர மற்றவர்களை குறைகூறிக்கொண்டும் மற்ற மொழிகளை குறைகூறிக்கொண்டும் இருக்கக்கூடாது."






43 Comments:

At 5:06 PM, Blogger நந்தன் | Nandhan said...

கொட்டை எழுத்துல போட்டிருக்க கடைசி பத்திக்கு ஒரு பாராட்டு.

ஆனா மத்ததெல்லாம் இடிக்குதே...
//இலவச கல்விதான் அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவது// ஆங்கிலமே கத்து கொடுத்து இண்டர்நெஷ்னல் லெவல்ல உயர்த்தலாமே...ஏன் இந்தி?

//பல வெளிநாடுகளில் வாழும் நாம் மக்கள் (இந்தியர்கள்) தங்களுக்குள்ளாக ஆங்கிலத்தில் பேசினால் அவர்களில் ஒருவர் நிச்சயமாக தமிழனாகத்தான் இருக்க முடியும் என்ற நிலை உள்ளது வெட்கக்கேடான விசயம்தான்.// என்று சொல்லிவிட்டு
//மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்வதற்கே!. //
என்றும் வாதம் செயறீங்க...அப்போ முதல் கருத்தை ஏன் எமோஷனலா பாக்கறீங்க? ஏதோ ஒரு மொழியில பேசி தொடர்பு கொண்டார்களா அதோட முடிந்தது கதை!

மன்னிக்கவும் இது போல நிறைய அபத்தமான வாதங்கள் இருக்கு. அரசியல் வாதிகளைப் போல
எதிர்கனுமேன்னு எதிர்க்காதீங்க, :)

 
At 5:20 PM, Anonymous Anonymous said...

nachunnu soneenga Jayakumar... kaasu kuduthu thaniyaar palliyil hindi paditha jenmangalluku uriakkira maathiri..

 
At 5:31 PM, Blogger Unknown said...

இந்த கருத்துகளை என்னால் ஏற்க முடியவில்லை.

இந்தி முதலில் தேசிய மொழியே கிடையாது.அது அரசு அலுவல் மொழி.இந்தி ஆங்கிலம் ஆகிய இரண்டுமே அரசு அலுவல் மொழிகள்,அவ்வளவுதான்.

அரசுபள்ளி மாணவர்கள் அனைத்து துறையிலும் பின் தங்கியுள்ளனர்.இந்த லட்சணத்தில் இன்னொரு மொழியை அவர்கள் மீது திணிப்பதற்கு என்ன அவசியம்?இந்தி,தமிழ்,ஆங்கிலம் என எத்தனை மொழிகளை கற்றுகொண்டு அதன் பின் அவர்கள் கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு என படிப்பது?

ஒவ்வொரு அரசு பள்ளியிலும் இந்தி டீச்சர் இருக்கிறார்.விருப்பம் இருந்திருந்தால் மாணவர்கள் விருப்பப்பாடமாக அதை எடுத்து படிப்பதை யார் தடுத்தது?இந்தி இருந்தும் படிக்க விருப்பமில்லாத மாணவர்களை கட்டாயப்படுத்தி இந்தி படிக்க சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

வளைகுடா போனால் அரபி படிக்கட்டும்.ஸ்பெயினுக்கு போனால் ஸ்பானிஷ் கற்கட்டும்.மலாய் போனால் மலாய் கற்கட்டும்.அதெல்லாம் அவரவர் தேர்வு,அவரவர் விருப்பம்.சென்னயிலும்,பெங்களூரிலும் வேலை செய்ய வரும் வடநாடவர்கள் சாகும் வரை தமிழும்,கன்னடமும் கற்பதில்லை.அதற்கு பதில் நம்மை இந்தி கற்க சொல்லுகிறான்.நாம் மட்டும் ஏன் அவர்கள் மொழியை கற்க வேண்டும்?

கட்டாயப்படுத்தி எம்மொழியையும் மாணவர்கள் மீது திணித்தல் கூடாது.அதன் பெயர் மொழிவெறி.இந்திய கிரிக்கட் அணியில் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும்.கிரிகெட்டே முதலில் ஆங்கிலேயனின் விளையாட்டு தான்.

 
At 5:55 PM, Anonymous Anonymous said...

ஸ்கூலில் இடம் இல்லையென்றால் என்ன டுடோரியல் காலேஜில் சேருங்கள் என்று உளறுவதைப் போல இருக்கிறது அந்த லாஜிக்.

அப்புறம் எதற்காக நம்ம வரிப்பணத்தில் ஸ்கூல், காலேஜ் நடத்துகிறார்களாம்?

வேலை மெனக்கெட்டு லூசுத் தனமான பதிவுகளுக்கு பதில் போடும் உங்களை சொல்லணும்.

 
At 6:15 PM, Blogger கோவி.கண்ணன் said...

//விஞ்ஞானப்பூர்வமாக சிந்தித்து திட்டங்களை வகுத்து அதன் அருமையை ஒவ்வொரு தமிழனும் உணரும்படி செயல்படவேண்டுமே//
..ம் விஞ்ஞானப் படி சிந்திக்க வேண்டுமென்றால் தமிழனாக பிறந்து தமிழை தாழ்த்தும் மூதேவிகளைத்தான் முதலில் ஒழிக்க வேண்டும்

 
At 6:30 PM, Blogger Machi said...

//இன்று அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லுபவர்களில் 70 சதவீததிற்கு மேற்பட்டவர்கள் கிராமத்தில் இருந்து செல்பவர்கள்தான். அவர்களில் பலர், பள்ளி இறுதி வகுப்புவரை கூடப்படிக்காதவர்கள், சிலர் ITI மற்றும் diploma படித்தவர்கள். அவர்கள் கிராமங்களில் படிக்கும் போது தமிழ்தவிர மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அப்படிப்பட்டவர்கள் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் போது அந்த நாட்டவர்களுடன் சரிவர தொடர்பு கொள்ளமுடியாமல் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது மிகவும் வேதனைக்குறியது. அங்கு சென்று பார்க்கும் போது தான் மற்ற மொழிகளை கற்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு தெரிகிறது.//

சரியா சொன்னீங்க. இங்க அரபு மொழி சொல்லிக்கொடுத்தா உதவியா இருக்கும்.

நம்ம பள்ளிகளில் பல மொழிகளை சொல்லிக்கொடுக்கனும். சீனம், ஜப்பானிய, கொரிய மொழி, ஸ்பானிஸ், பிரெஞ், ஜெர்மன், போன்ற மொழிகளையும் சொல்லிக்கொடுத்தா உதவியா இருக்கும். கட்டாய பாடமாக இல்லாமல் விருப்பபாடமா வைக்கலாம்.

 
At 11:27 PM, Blogger ஜெயக்குமார் said...

//ஒவ்வொரு அரசு பள்ளியிலும் இந்தி டீச்சர் இருக்கிறார்.விருப்பம் இருந்திருந்தால் மாணவர்கள் விருப்பப்பாடமாக அதை எடுத்து படிப்பதை யார் தடுத்தது?இந்தி இருந்தும் படிக்க விருப்பமில்லாத மாணவர்களை கட்டாயப்படுத்தி இந்தி படிக்க சொல்ல வேண்டிய அவசியம் என்ன?//

எங்க கிராமத்தில இருக்கிர பள்ளிகளில் இந்தி டீச்சரெல்லாம் கிடையாதுப்பா!.
இந்தி படிக்கனும்னா, பக்கத்திலுல்ல சிறிய நகரத்திலுள்ள அக்ரஹாரத்திற்கு தான் செல்லவேண்டும்.

 
At 11:31 PM, Blogger ஜெயக்குமார் said...

//இந்தி முதலில் தேசிய மொழியே கிடையாது.அது அரசு அலுவல் மொழி.இந்தி ஆங்கிலம் ஆகிய இரண்டுமே அரசு அலுவல் மொழிகள்,அவ்வளவுதான்.//


என்ன இது காமடியா இருக்கு!. இந்தி இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் பரவலாக பேசக்கூடிய மொழிதானே. மாநிலங்களுக்கிடையே தொடர்புகொள்ள இதைத்தானே பயன்படுத்துகிறார்கள்.

//.இந்திய கிரிக்கட் அணியில் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும்.கிரிகெட்டே முதலில் ஆங்கிலேயனின் விளையாட்டு தான்.//

விளையாட்டென்றால் அது கிரிக்கெட் மட்டுமே. மதுரை மீனாட்சி கல்லூரி மாணவி தேசிய அளவில் கபடிப்போட்டிக்கும் சென்றுவந்த பிறகு மிக வருத்தப்பட்டு அளித்த பேட்டியைப்பார்த்துத்தான் இதை கூறினேன்.

 
At 11:39 PM, Blogger ரவி said...

ARUMAYAANA PATHIVU..

 
At 11:42 PM, Blogger ஜெயக்குமார் said...

நந்தன், நீங்கள் நட்சத்திர எழுத்தாளராக இருக்கலாம், ஆனால் உங்கள் வாதமும், புரிந்துகொள்ளும் திறனும் படு அபத்தமாக இருக்கிறது.

மொழி தொடர்புகொள்ளத்தான். அதோடு ஆனால் இரு இந்தியர்கள் பேசிக்கொள்ளும் போது அவர்கள் தங்களின் தேசிய மொழியில் பேசிக்கொள்வதையே மற்ற நாட்டவர்கள் எதிர்பார்ப்பார்கள். லண்டனில் உள்ள இரு ஜப்பானியர்கள் பேசிக்கொண்டால், இரண்டு இத்தாலியர்கள் பேசிக்கொண்டால் அவர்கள் ஆங்கிலம் தெரிந்தாலும், தங்கள் தாய்மொழியிலோ அல்லது தேசிய மொழியிலோ தான் பேசிக்கொள்கிறார்கள். ஒரு ஆந்திரா காரனும், மும்பைகாரனும் எங்கள் அலுவலகத்தில் பேசிக்கொள்ளும் போது இந்தியில் பேசுகிறார்கள். ஆனால் என்னால் அவர்களிடன் ஆங்கிலத்தில் தானே பேசமுடிகிறது. இதைப்பார்க்கும் சிலர், நீங்கள் ஸ்ரீலங்கனா? என்றுதான் கேட்கின்றனர்.

//ஆனா மத்ததெல்லாம் இடிக்குதே...
//இலவச கல்விதான் அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவது// ஆங்கிலமே கத்து கொடுத்து இண்டர்நெஷ்னல் லெவல்ல உயர்த்தலாமே...ஏன் இந்தி?//


படித்த எல்லோருக்கும் வெளிநாட்டில் வேலை கிடைத்துவிடவதில்லை. பலர் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டியுள்ளது என்பதை என் பதிவில் தெளிவுபடுத்தி இருந்தேன். நம் மாநிலத்தை தவிர வெளி மாநிலத்தில் உள்ள பலருக்கு இந்தி தெரிந்திருக்கிறது. அதனால் தான் இந்தியின் அவசியத்தை நான் இங்கு கூறியுள்ளேன்

 
At 11:46 PM, Blogger Unknown said...

எங்க கிராமத்தில இருக்கிர பள்ளிகளில் இந்தி டீச்சரெல்லாம் கிடையாதுப்பா!.
இந்தி படிக்கனும்னா, பக்கத்திலுல்ல சிறிய நகரத்திலுள்ள அக்ரஹாரத்திற்கு தான் செல்லவேண்டும்.////

இந்தியை விருப்பபாடமாக அனைத்து பள்ளிகளீலும் அறிமுகப்படுத்தலாம்.கட்டயப்பாடமாக அறிமுகப்படுத்துவதை விட மிகவும் குறைந்த செலவே ஆகும்

//என்ன இது காமடியா இருக்கு!. இந்தி இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் பரவலாக பேசக்கூடிய மொழிதானே. மாநிலங்களுக்கிடையே தொடர்புகொள்ள இதைத்தானே பயன்படுத்துகிறார்கள்.//

நீங்கள் சொன்னது "இந்தி தேசிய மொழி" என்பது.அது தப்பு என்பதற்காக த்தான் இதை சொன்னேன்.

இந்தியாவில் பரவலாக ஆங்கிலமும் பேசப்படுகிறது.வணிகத்துறையில்,தனியார் துறையில் அனைத்து தொடர்புகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன.மாநிலங்கள் ஆங்கிலத்திலும் தொடர்பு கொள்ளலாம்.குடி முழுகிப்போகாது.

தமிழன் இந்தி,தமிழ்,ஆங்கில என 3 மொழிகள் கற்பான்.வடநாட்டான் இந்தி மட்டும் கற்றுக்கொண்டு தமிழன் அவனிடம் இந்தியில் பேச வேண்டும் என எதிர்பார்ப்பான்.நல்ல நியாயமையா இது.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தாய்மொழியையும்,ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுப்பது மும்மொழிகளை கற்றுக்கொடுப்பதை விட சிக்கனமானது.அறிவுபூர்வமானது

 
At 11:47 PM, Blogger ஜெயக்குமார் said...

// சரியா சொன்னீங்க. இங்க அரபு மொழி சொல்லிக்கொடுத்தா உதவியா இருக்கும்.
//

குறும்பன், உங்களின் குறும்பு கொஞ்சம் வெவஸ்தை கெட்ட குறும்பாக உள்ளது. அரபு நாடுகளில் இந்தி மொழியும் ஒரு தொடர்பு மொழியாக உள்ளது.

நீங்கள் கூறியுள்ள சீனா, ஜப்பான், ஜெர்மனுக்கெல்லாம், நம்து கிராமத்து தமிழர்கள் அதிக அளவில் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் அங்கு ஆங்கிலத்தை வத்து ஓரளவுக்கு சமாளிக்கலாம். வெளிமாநிலங்களுக்கு சென்றால் நீ என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர் இந்தியில் தான் பதில் சொல்லுவான்.

 
At 11:50 PM, Blogger Unknown said...

லண்டனில் உள்ள இரு ஜப்பானியர்கள் பேசிக்கொண்டால், இரண்டு இத்தாலியர்கள் பேசிக்கொண்டால் அவர்கள் ஆங்கிலம் தெரிந்தாலும், தங்கள் தாய்மொழியிலோ அல்லது தேசிய மொழியிலோ தான் பேசிக்கொள்கிறார்கள். ஒரு ஆந்திரா காரனும், மும்பைகாரனும் எங்கள் அலுவலகத்தில் பேசிக்கொள்ளும் போது இந்தியில் பேசுகிறார்கள். ஆனால் என்னால் அவர்களிடன் ஆங்கிலத்தில் தானே பேசமுடிகிறது. இதைப்பார்க்கும் சிலர், நீங்கள் ஸ்ரீலங்கனா? என்றுதான் கேட்கின்றனர்.///

ஜப்பானிலும்,இத்தாலியிலும் இருப்பது ஒரே மொழி.அவன்கள் ஒரே மொழியில் பேசிக்கொள்வதில் என்ன அதிசயம்?

இந்தியா நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கொண்ட நாடு.இங்கு அதை எதிர்பார்ப்பது மிகவும் தப்பு.

 
At 11:51 PM, Blogger ஜெயக்குமார் said...

//
இந்தியாவில் பரவலாக ஆங்கிலமும் பேசப்படுகிறது.வணிகத்துறையில்,தனியார் துறையில் அனைத்து தொடர்புகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன.மாநிலங்கள் ஆங்கிலத்திலும் தொடர்பு கொள்ளலாம்.குடி முழுகிப்போகாது.//

அலுவலங்கள் மட்டுமே உலகம் அல்ல!. அலுவலங்களில் கூட அணைத்து அலுவலகங்களிலும் ஆங்கிலம் தொடர்பு மொழியல்ல. அப்படியே இருந்தாலும் அது உயர்மட்டத்தில் மட்டுமே உள்ளது.

 
At 11:52 PM, Blogger Unknown said...

வெளிமாநிலங்களுக்கு சென்றால் நீ என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர் இந்தியில் தான் பதில் சொல்லுவான். //


வடநாட்டானின் இந்த திமிருக்கு ஆப்படிக்கத்தான் இந்தியை எதிர்ப்பது.

 
At 11:54 PM, Blogger ஜெயக்குமார் said...

//இந்தியா நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கொண்ட நாடு.இங்கு அதை எதிர்பார்ப்பது மிகவும் தப்பு//

அதனால்தான் தேசிய மொழியாக் ஒன்றைக் கற்றுக்கொள்வது நல்லது. ஆங்கிலத்தில் அணைவரும் புலமை பெறுவது என்பது இயலாத காரியம். கல்லூரியில் படித்தவர்கள் கூட பேசும் போது சிரமப்படவேண்டியுள்ளது.

 
At 11:55 PM, Blogger Unknown said...

அலுவலங்கள் மட்டுமே உலகம் அல்ல!. அலுவலங்களில் கூட அணைத்து அலுவலகங்களிலும் ஆங்கிலம் தொடர்பு மொழியல்ல. அப்படியே இருந்தாலும் அது உயர்மட்டத்தில் மட்டுமே உள்ளது.//


நூற்றுக்கு 99% தனியார் அலுவலகங்களில் ஆங்கிலம் தான் தொடர்பு மொழி(பீகார் காட்டான்களின் கம்பனிகளை தவிர்த்து).இமெயில்,டெண்டர்,நோட்டிஸ்,என அனைத்தும் ஆங்கில மயம்தான்.பெரும்பாலும் வடநாட்டுக்கு போவோர் பிஸினஸ் விஷயமாகத்தான் போவார்கள்.இப்படி ஆங்கிலம் தொடர்பு மொழியாக ஏற்கனவே இருக்க புதிதாக இந்தி எதற்கு?

அனைத்து மட்டத்திலும் ஆங்கிலத்தையே பரப்புவோம்.இந்தியை அல்ல

 
At 11:56 PM, Blogger Unknown said...

அதனால்தான் தேசிய மொழியாக் ஒன்றைக் கற்றுக்கொள்வது நல்லது. ஆங்கிலத்தில் அணைவரும் புலமை பெறுவது என்பது இயலாத காரியம். கல்லூரியில் படித்தவர்கள் கூட பேசும் போது சிரமப்படவேண்டியுள்ளது///

அந்த தேசிய மொழி ஆங்கிலமாகத்தான் இருக்க வேண்டும்.,ஆங்கிலமே கற்க திருகுதாளம் போடுபவன் கூட இந்தியும் கற்க வேண்டும் என்றால் செத்தே போவான்.இந்தி கற்பதை விட ஆங்கிலம் கற்பது எளிதுதான்

 
At 12:10 AM, Blogger ஜெயக்குமார் said...

//வடநாட்டானின் இந்த திமிருக்கு ஆப்படிக்கத்தான் இந்தியை எதிர்ப்பது.//

இந்த விரோதத்தை வளர்த்ததுதான், கருனாநிதியின் வெற்றி!.

ஒரு மொழியை கற்றுக்கொள்வது கூடுதல் தகுதி. இந்தி படிப்பதனால், நீ தமிழுக்கு துரோகம் இழைப்பதாக நீங்கள் கருதினால், அதில் குற்றம் உங்களிடம் தான் உள்ளது

 
At 12:46 AM, Blogger Muse (# 01429798200730556938) said...

ஹிந்தியை பாடத்திட்டமாகப் படிக்கும் பல மாநிலங்களில் அவர்களின் தாய் மொழி, நம் தாய் மொழியைவிட வலுவாகவுள்ளது. யாம் வசித்துவரும் கன்னட தேசத்தில் மொழிப்பற்று அரசியல்வாதிகளால் அல்ல, பொது மக்களாலேயே வளர்ச்சி பெற்று ஒரு சமூக பண்பாக உள்ளது. ஆனால் இங்கு வாழும் மக்கள் பிற மொழிகளையும் பேசுகிறார்கள். தமிழ் மீடியங்களாகவுள்ள பள்ளிகள் உள்ளன.

இந்தியாவை வேறு ஒரு நாடாகக் கருதும் வட கிழக்கு மாநில மக்கள்கூட ஹிந்தியில் பேசுகிறார்கள்.

ஹிந்தி கற்றதால் தாய் மொழி வளர்ச்சியானது பாதிக்கப்படவில்லை. நன்கு வளர்ந்துள்ளது. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு போல் இது ஒரு திராவிடப் புளுகு.

ராமசாமி நாயக்கரால்தான் தமிழகத்திலே ஜாதி வெறி குறைந்தது என்று ஒரு புளுகு இருக்கிறது. உண்மையில் ராமசாமி நாயக்கரின் தொடர்பு இல்லாத மாநிலங்களில்தான் ஜாதி வெறி குறைந்து காணப்படுகிறது. மனிதருக்கு மனிதர்கள் மலத்தை புகட்டுவதில்லை.

ஒரு மலையாளிக்கு, இன்னொரு மலையாளிதான் முக்கியம். ஆனால் தமிழனுக்கு மற்றொரு தமிழனின் ஜாதிதான் முக்கியம். திராவிடத்தின் விளைவு இது.

 
At 1:05 AM, Anonymous Anonymous said...

//விட்டது சிகப்பு, மாயவரத்தான், கால்கரி சிவா போன்ற அறிவு விழிப்புணர்வுள்ளவர்கள், பதுங்கி வரும் அது போன்ற ஆரிய அலர்ஜிகளை ரவுண்டு கட்டி ரிவிட் அடிப்பது போல நீங்களும் கலக்க வாழ்த்துக்கள்!//

விழிப்புணர்வு உள்ளவர்களா? ஹெஹ்ஹேஹ்ஹே,,,, சிரிப்பு வருது சிரிப்பு வருது.... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!

 
At 1:16 AM, Blogger ஜெயக்குமார் said...

//நூற்றுக்கு 99% தனியார் அலுவலகங்களில் ஆங்கிலம் தான் தொடர்பு மொழி(பீகார் காட்டான்களின் கம்பனிகளை தவிர்த்து).இமெயில்,டெண்டர்,நோட்டிஸ்,என அனைத்தும் ஆங்கில மயம்தான்.பெரும்பாலும் வடநாட்டுக்கு போவோர் பிஸினஸ் விஷயமாகத்தான் போவார்கள்.இப்படி ஆங்கிலம் தொடர்பு மொழியாக ஏற்கனவே இருக்க புதிதாக இந்தி எதற்கு?//

பேச்சு வழக்கு எந்த மொழியில் அதிகம் உள்ளது. டாட்டா நிறுவனத்தில் மேலதிகாரியாக பணியாற்றும் என்னுடைய தம்பியால், அவருக்கு கீழே பணியாற்றுபவர்களிடன் இந்தியில் பேசித்தான் வேலை வாங்க வேண்டியுள்ளது. ஏன் இங்கு பணியாற்றும் பல வெளிமாநில ஆட்சிப்பணியாளர்கள், ஊழியர்களிடமும் மக்களிடம் தொடர்புகொள்வதற்காகவே தமிழ் கற்றுக்கொள்வதில்லையா?. ஆங்கில் அறிவு அதிகமுள்ள?! நமது மாநிலங்களிலேயே இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களில் நிலை எப்படி இருக்கும்.

தொடர்புகளில் எழுத்து, பேச்சு, கேட்குதல், பார்த்தல், சைகை செய்தல் என பல வகை உண்டு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

 
At 1:21 AM, Blogger ஜெயக்குமார் said...

//விழிப்புணர்வு உள்ளவர்களா? ஹெஹ்ஹேஹ்ஹே,,,, சிரிப்பு வருது சிரிப்பு வருது.... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!//

முனுசாமி,
சக மனிதனைப்பார்த்து சிரிக்கும் உங்களைப் பார்த்து, தங்கள் மனதுக்குள் சிரிக்க பல விலங்குகள் காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் பார்வையில் விழியை திறந்து வைத்து கண்ட அசிங்கங்களைப் பார்ப்பதுதான் விழிப்புணர்வா?

 
At 1:53 AM, Blogger நந்தன் | Nandhan said...

ஜெயக்குமார் மிக்க நன்றி ;) நட்சத்திர எழுத்துக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைங்க.

நீங்க கொஞ்சம் கொழம்பி போயிருக்கீங்க. தேவை இருக்கறவுங்க கத்துக்கட்டுமே என்பது தான் என் வாதம்...

//மற்ற நாட்டவர்கள் எதிர்பார்ப்பார்கள்// பாருங்க யார் யாரோ 'தப்பா' நினைச்சு பாங்க என்ற உங்களின் பய்த்துக்காக என்பதற்காக ஒரு மொழிய கட்டாயமாக்க சொல்றீங்க. இதுல அபத்தமே இல்லைங்க ;)
இத்தாலியோ, சீனாவோ இந்தியாவைப் போல பன் மொழிக் கொண்ட நாடில்லை என்பது நீங்கள் அறியாததா? அப்ப எப்படி இது போல ஒரு கம்பாரிஸன்?
இன்னைக்கு இந்தியாவில இருக்க எல்லாரும் இந்தி பேசனும்பீங்க, நாளைக்கு இந்தியா இந்து நாடும்பீங்க..'
அய்யா மொழியும், மதத்தை போலங்க யாரும் யார் மேலையும் தினிக்க கூடாதுங்க.
வெலைக்கு தேவைன்னா தானா கத்துப்பாங்க.

 
At 2:22 AM, Blogger ஜெயக்குமார் said...

//நீங்க கொஞ்சம் கொழம்பி போயிருக்கீங்க. தேவை இருக்கறவுங்க கத்துக்கட்டுமே என்பது தான் என் வாதம்...
//

குழம்பிப்போயிருப்பது நானல்ல நீங்கள் தான். விருப்பபடுபவர்கள் கற்றுக்கொள்ளட்டுமே என்றால், கற்றுக்கொள்ள அவர்களுக்கு வசதி இருக்கவேண்டு்மே. மதிய உணவு குடுத்தாலாவது பள்ளிக்கு வரமாட்டார்களா என்ற காமராஜரின் சிந்தனை போன்றதுதான் இதுவும்.

நீங்கள் குறிப்பிட்ட சீனா, இத்தாலி போன்ற வளரும் நாடுகளில் தொடர்பு மொழியாக ஒரே ஒரு மொழி இருப்பது அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?
மாநிலங்களிக்கிடையேயான வர்த்தகத்திற்கு தேசிய அளவிலான ஒரு மொழி மிகவும் அவசியம் என்பதை முதலில் நாம் உணரவேண்டும். வர்த்தகம் செய்யும் அனைவரும் மெத்தப்படித்தவர்கள் அல்ல. நமக்கிடையேயான வர்த்தகம் வளரும்போது அது தேசிய அளவிலான பொருளாதார முன்னேற்றதிற்கு வழிவகுக்கும்.

 
At 2:52 AM, Blogger ஜெயக்குமார் said...

நந்தன்,

இந்த பதிவின் தலைப்பிலேயே மிகத்தெளிவாக நான் குறிப்பிட்டுள்ளேன். அரசு பள்ளிகளில் இந்தியின் அவசியத்தை. அரசு பள்ளியில் படிப்பவர்கள், கிராமத்தினரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களும் தான். அவர்களுக்கு இந்தி படிக்க ஆசை இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் இல்லாததே அவர்களால் இந்த மொழியை கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இன்று பிழைப்பு தேடி அரபு நாடுகள் மற்றும் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களிலும் கடைகள், விடுதி போன்ற பல இடங்களில் வேலைக்கு செல்பவர்கள் இவர்களைப்போன்றவர்கள் தான். இவர்களால் மற்றவர்களுடன் சரியாக பேசமுடியாததால் மிகவும் கீழ்மட்ட வேலைகளையே செய்யப்பணிக்கப்படுகிறார்கள். உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்த கட்டுரையில் கூறப்பட்ட விசயங்களைக் கூட புரிந்துகொள்ள முடியாத நீங்கள் எப்படி மக்களின் மனநிலை அறிந்த இயக்குனராக போகிறீர்களோ?

 
At 4:46 AM, Blogger நந்தன் | Nandhan said...

//இந்த கட்டுரையில் கூறப்பட்ட விசயங்களைக் கூட புரிந்துகொள்ள முடியாத நீங்கள் எப்படி மக்களின் மனநிலை அறிந்த இயக்குனராக போகிறீர்களோ?//

வாதத்தை வாதத்தால் எதிர்க் கொள்ளுங்கள். ஹூம் இனிமேல் உங்களிடம் வாதிட்டால், படிப்பவர்க்ள் என்னையும் முட்டாளாய் கருத வாய்ப்புண்டு.

 
At 6:23 AM, Blogger ஜெயக்குமார் said...

// இது போல நிறைய அபத்தமான வாதங்கள் இருக்கு. அரசியல் வாதிகளைப் போல எதிர்கனுமேன்னு எதிர்க்காதீங்க//

//நீங்க கொஞ்சம் கொழம்பி போயிருக்கீங்க.//

இது போன்ற வாதங்களை ஆரம்பித்துவைத்தவர் நீங்கள் தான். வாதங்களை சரியான கருத்துக்களுடன் அல்லது புள்ளிவிவரங்களுடன் எடுத்துவைத்தால், விவாதிக்க நன்றாக இருக்கும் அதைவிடுத்து, பதிவை சரியாக புரிந்து கொள்ளமுடியாமல் , தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிவிடுகிற உங்களிடம், உங்களின் வாதம் போன்றுதான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. உங்களை பற்றிய சுயவிமர்சனத்திற்கு(படிப்பவர்க்ள் என்னையும் முட்டாளாய் கருத வாய்ப்புண்டு) நன்றி!.

 
At 6:37 AM, Blogger ரவி said...

இந்த பதிவினை வன்மையாக (!!) வரவேற்க்கிறேன்..

குச்சு குச்சு ஹோத்தா ஹே..!!!

ரவி..

 
At 7:37 AM, Blogger Jeyapalan said...

இந்தியைத் தமிழர் யாவரும் கற்றுக் கொள்வதில் ஒரு பொருளாதாரக் கேடும் உண்டு. உதாரணம், திரைப் படத் துறை. இந்தி புரியாமலே, இந்திப் படம் பார்ப்பது பலருக்குப் பிடிக்கிறது. காரணம், மிகுந்த செலவில் நல்ல தொழில் நுட்பத்துடன் எங்கள் கலாச்சாரத்துடன் (~=)இருக்கும் படங்கள் என்பதால். இந்தியும் புரிந்து விடும் போது, தமிழ்ப் பட விருப்புக் குறைந்து விடும். இந்திப் படவுலகம் போல் தமிழ்ப் படவுலகமும் செலவு செய்து படமெடுக்க முடியாது. தமிழ்ப் படத்துறை படுத்து விடும். தொழில் வாய்ப்புப் போய்விடும், எங்கள் அடையாளங்களின் கலை வடிவங்கள் காணாமல் போய் விடும். இது போலவே இதர விடயங்களும்.

இந்தியில் ரயில் நிலையப் பெயர்ப் பலகை தமிழகத்தில் இருப்பதே அபத்தம். குக்கிராமப் புகை வண்டி நிலையத்தில் கூட இந்தி!!!!!, சிரிப்பதா அழுவதா?

 
At 8:22 AM, Anonymous Anonymous said...

திரும்பத் திரும்ப இந்தி தேசிய மொழி என்று உளறிக்கொண்டிருப்பது அபத்தம்.
ஐயா ஜெயக்குமார், இன்றைய நிலையில் நாட்டுக்கொரு மொழி தேவையென்று சொல்வது என்ன நியாயம்? ஆங்கிலம் இல்லாமல் இந்தி படிக்கத் தயாரா?
வெளிநாட்டானைத் தொடர்பு கொள்ள ஆங்கிலம், உள்நாட்டானைத் தொடர்பு கொள்ள இந்தி என்று படிக்கப்போகிறீர்களா? அப்படியே இந்தியாவைப் பிராந்தியங்களாப் பிரித்து, தென்னிந்தியாவுக்குள் தொடர்பு கொள்ள இன்னொரு மொழியைப் பயிலுங்கள். இப்படியே பயின்றுகொண்டிருங்கள்.

இரண்டு இந்தியர்கள் கட்டாயம் இந்தியில்தான் பேசவேண்டுமென்பது ஒரு மூளைச்சலவைதான். இதைப்பார்த்து யார் சிரிக்கிறார்கள்? வெளிநாட்டான் சிரிக்கிறானா? நீங்கள் தான் சிரிக்கிறீர்கள். தமிழர்கள் த்மிழில் கதைத்தாலும் நாங்கள்தான் சிரிக்கிறோம். இந்தியர்கள் ஆங்கிலத்தில் கதைத்தாலும் நாங்கள்தான் சிரிக்கிறோம். இதற்கும் மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்று சப்பைக்கட்டு வேறு.

சரி, முதன்மைக் கேள்விக்கு வருவோம்.
நீங்கள் ஒருசிலர் மட்டும் படிப்பதற்காக எதற்காக எல்லாத் தமிழர்களினதும் தலையில் இந்தியைத் திணிக்க வேண்டும். இதற்குப் பதில் சொல்லுங்கள். நானேன் விருப்பமில்லாமல் அன்னியனின் மொழியைப் படிக்க வேண்டும்?
இப்போது உங்களைப் போல் கூச்சல் போடுபவர்கள் யாருக்கும் இந்திமேல் பாசமுமில்லை, இந்தி படிக்க வேண்டிய ஆர்வமுமில்லை. பாடசாலையில் இந்தி படிப்பித்திருந்ால் நீங்கள் சித்தியடைந்திருக்கப் போவதுமில்லை. உங்கள் பலவீனத்தையும் இயலாமையும் அரசியற் காழ்ப்புணர்வையும் கொட்டத்தான் இப்படிப் பதிவுகள்.

எந்த வடநாட்டான் தமிழ்படித்துவிட்டு வந்து தென்னகத்தில் வேலை செய்கிறான்? அல்லது எந்த வெள்ளைக்காரன் இந்தி படித்துவிட்டு வந்து இந்தியாவில் நிறுவனம் நடத்துகிறான்? இங்கிலாந்தில் இந்தியனோடு பேச எதற்கு இந்தி தேவை?

 
At 9:07 AM, Blogger Unknown said...

அன்பின் ஜெயகுமார்

கலைஞர்,அரசியல் இவற்றை விட்டுவிடுவோம்.இந்தெ ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

1.இந்தி படிக்க விருப்பமில்லாத மாணவனை கட்டாயப்படுத்தி இந்தி படிக்க சொல்ல வேண்டுமா?

 
At 3:36 PM, Blogger ஜெயக்குமார் said...

//.இந்தி படிக்க விருப்பமில்லாத மாணவனை கட்டாயப்படுத்தி இந்தி படிக்க சொல்ல வேண்டுமா?//

ஜயா, நான் படித்தது சுமார் 100 வீடுகள் உள்ள கிராமத்து பள்ளியில் தான். என்னோட படித்த பலருக்கு ஆங்கிலம் படிக்கவும்தான் பிடிக்கவில்லை. அப்படிப்பட்ட மாணவனை கட்டாயப்படுத்தித்தான் படிக்கவைத்தனர் அசிரியர்கள். "வெள்ளைகாரன் போனாலும் அவிங்க மொழிய விடமாட்டாங்கிராங்கடா!" என்று அதை படிக்க கஷ்டப்பட்டு, ஆங்கிலத்தால் மட்டுமே பள்ளி இறுதித்தேர்வில் தேறமுடியாமல் பல நண்பர்கள் இன்னும் அதே ஊரில் கூலித்தொழில் செய்துகொண்டிருக்கிறார்கள். சில நண்பர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வேலை செய்து பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். வேலை நிமித்தமாக ஊரை விட்டு செல்பவர்களில் 20 சதவீதம் தன் வருவாயை பெருக்க சென்றால் 80 சதிவீதம் அன்றாட பிழைப்பு நடத்தவும், உள்ளூரில் உள்ள குடும்பத்தை பாதுகாக்கவும் தான் செல்கின்றனர். அவர்களிடம் போய் அங்கு செல்வதற்கு முன் இந்த மொழியை படித்து செல்லுங்கள் என்றேல்லாம் கூறமுடியாது.

// திரும்பத் திரும்ப இந்தி தேசிய மொழி என்று உளறிக்கொண்டிருப்பது அபத்தம்.
ஐயா ஜெயக்குமார், இன்றைய நிலையில் நாட்டுக்கொரு மொழி தேவையென்று சொல்வது என்ன நியாயம்? ஆங்கிலம் இல்லாமல் இந்தி படிக்கத் தயாரா?
வெளிநாட்டானைத் தொடர்பு கொள்ள ஆங்கிலம், உள்நாட்டானைத் தொடர்பு கொள்ள இந்தி என்று படிக்கப்போகிறீர்களா? அப்படியே இந்தியாவைப் பிராந்தியங்களாப் பிரித்து, தென்னிந்தியாவுக்குள் தொடர்பு கொள்ள இன்னொரு மொழியைப் பயிலுங்கள். இப்படியே பயின்றுகொண்டிருங்கள்.
//

மார்க்கனின் இந்த பதிலைபாருங்கள். தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்தி பேசவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அப்படிப்பட்ட மொழியை தேசிய மொழி என்று சொல்லாமல் வேறு எப்படி கூறுவது. ஒரு ஆந்திராக்காரனிடமோ, மலையாளியிடமோ அவர்களின் தாய்மொழிலும் பேசலாம், இந்தியிலும் பேசலாம். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கப்போகிறது. இந்தி எளிமையாக இருப்பதால் அவர்களால் எளிதாக கற்றுக்கொள்ள முடிகிறது.

//பாடசாலையில் இந்தி படிப்பித்திருந்ால் நீங்கள் சித்தியடைந்திருக்கப் போவதுமில்லை. உங்கள் பலவீனத்தையும் இயலாமையும் அரசியற் காழ்ப்புணர்வையும் கொட்டத்தான் இப்படிப் பதிவுகள்.//

இயலாமை தான். உள்ளூரில் தொழில் செய்பவர்களுக்கு வேண்டுமானால் இந்த இயலாமை இல்லாமலிருக்கலாம். ஆனால் வெளியூரில் மொழி தெரியாமல் இதை அனுபவித்தவர்களுக்கு, அனுபவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்.

இன்று கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள் முதல் இரண்டு முட்டை என்று கருணாநிதி அறிவித்துள்ளார். இவர் யார்?
மதிய உணவுத்திட்டம் ஆரம்பித்தபோது அதனை எதிர்த்தவர். இன்று காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று கூறும் இவர்கள் தான் அவருடைய ஆட்சிகாலத்தில் இந்தி மொழி தினிக்கப்படுவதாக கூறி அவரின் பொற்கால ஆட்சியை அகற்றியவர்கள்.

இந்தியாவின் மற்ற மாநில மக்கள் இந்தி கற்றதால், அவர்களின் தாய்மொழி அழிந்துவிடவில்லை. இரு மலையாளிகள் ஒன்று கூடினால் ஓரளவுக்கு ஆங்கில கலப்பு இல்லாமல் மலையாளத்தில் பேசுகின்றனர், இரண்டு தெலுங்கர்கள் சந்தித்தால் சுந்தர தெலுங்கில் பேசிக்கொள்கிறார்கள், ஆனால் இரண்டு தமிழர்கள் சந்தித்தால், தமிழிங்லீஸில் தானே பேசிக்கொள்கிறோம். இதுதான் கருனாநிதியின் சாதனை. இந்தி கற்பதை தினிப்பு என்று ஏன் கருதவேண்டும். அதை ஒரு கூடுதல் தகுதியாக ஏன் கொள்ளக்கூடாது. இந்தி கற்பதனால் ஏற்படும் பலன்களும், அது கற்காமல் போனதால் ஏற்பட்டுள்ள இழப்புகளைப்பற்றித்தான் இந்த பதிவில் கூறி இருந்தேன். இந்தி வசதியானவர்களுக்கு மட்டும் அல்ல எல்லோரும் படித்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் தான், அரசு பள்ளிகளில் அதை கற்பிப்பதன் அவசியத்தை சொன்னேன். இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில் அதுபோல ஏன் வசதி செய்து தரக்கூடாது.

வடநாட்டான், தமிழ்படித்தானா? என்று கேட்பதேல்லாம் முட்டாள்தனம். அவர்களுக்கு தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களுக்கு செல்ல அந்த மாநில மொழிகளைக் கற்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உனக்கு அப்படியா?

இன்று இந்தி மொழி உலக அளவில் பரவியுள்ளது. லண்டனில், இந்தியர்கள் என்று பார்த்தால் குஜராத்திகளும், பாஞ்சாபியரும்தான் அதிகம். அவர்களில் 90 சதிவீதம் பேர் இந்தி தெரிந்து வைத்துள்ளனர். வங்கி வேலைக்கும், மற்ற மக்கள் தொடர்பான வேலைக்கும் இந்தி இங்கு கூடுதல் தகுதியாக கருதப்படுகிறது. இந்தி மட்டுமே தெரிந்த ஒருவனால் இங்கு வந்து சம்பாதித்து வாழ்க்கை நடத்திவிடலாம். எங்கு சென்றாலும் ஒரு இந்தி தெரிந்தவன் இருப்பான். கவுன்சிலின் அனைத்து வெளியீடுகளிலும் இப்போது இந்தியிலும், இலங்கை தமிழர்களின் புண்ணியத்தால் தமிழிலும் வருகிறது. ஆப்கானித்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்கள் கூட நம்மை முதலில் பார்க்கும் போது இந்தியரென்று தெரிந்தால் இந்தியில் பேசமுனைகின்றனர். எனவே இந்தியை ஒரு தினிப்பாக கருதாமல், அதை ஒரு தேவையான தொடர்பு மொழியாக கருதுங்கள்.

 
At 3:45 PM, Blogger Unknown said...

என்னோட படித்த பலருக்கு ஆங்கிலம் படிக்கவும்தான் பிடிக்கவில்லை. அப்படிப்பட்ட மாணவனை கட்டாயப்படுத்தித்தான் படிக்கவைத்தனர் அசிரியர்கள். "வெள்ளைகாரன் போனாலும் அவிங்க மொழிய விடமாட்டாங்கிராங்கடா!" என்று அதை படிக்க கஷ்டப்பட்டு, ஆங்கிலத்தால் மட்டுமே பள்ளி இறுதித்தேர்வில் தேறமுடியாமல் பல நண்பர்கள் இன்னும் அதே ஊரில் கூலித்தொழில் செய்துகொண்டிருக்கிறார்கள். //

ஆங்கிலம் வேறு இந்தி வேறு ஜெயகுமார்.ஆங்கிலம் படிக்காமல் தற்போது கல்வியே கிடையாது என்று ஆகிவிட்ட பின் ஆங்கிலத்தை கட்டாயமாக கொடுத்தே ஆகவேண்டும்.தமிழில் உயர்கல்வி கிடையாது ஆங்கிலத்தில் தான் உள்ளது எனும்போது ஆங்கில கட்டாயம் தேவை.ஆங்கில படிக்காமல் கம்ப்யூட்டர்,விஞ்ஞானம் போன்றவற்றை கற்க இயலாது

இந்தி அப்படி அல்ல.இந்தி படிக்கமலேயே கணிதம்,விஞ்ஞானம் ஆகியவற்றை கற்க இயலும்.இந்த ஒப்புவமையே தப்பு.

நீங்கள் சொன்னபடி ஆங்கிலமே கற்க முடியாமல் பள்ளிபடிப்பை நிறுத்திய மாணவர்களை கூடுதலாக இந்தியும் கற்க சொன்னால் அவரக்ள் நிலை என்ன?இன்னும் எத்தனை பேர் பள்ளி படிப்பை விடுவார்கள்?

இந்தியை விருப்பப்பாடமாக கொடுங்கள்.விரும்பியோர் படிக்கட்டும்.விரும்பாதோர் மீது அதை ஏன் திணிக்க வேண்டும்?

திணித்தலை தான் எதிர்க்கிறேன்.இந்தி கற்பதை அல்ல.

 
At 4:03 PM, Blogger ஜெயக்குமார் said...

This comment has been removed by a blog administrator.

 
At 4:22 PM, Blogger ஜெயக்குமார் said...

செல்வன் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிரேன். ஆங்கிலம் நமக்கு மிக அவசியமான் மொழிதான். அறிவியல் தொழில்நுட்பவிசயங்களை அறிந்துகொள்ளவும், சர்வதேச தொடர்புக்கும் ஆங்கிலம் மிக அவசியம் தான். இதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.
நம் நாடு வல்லரசாகாக வேண்டுமென்றால், இந்த மொழி இன வேறுபாடுகள் முதலில் களையப்பட வேண்டும். ஆங்கில தேசியமொழியாக சாத்தியக்கூறுகள் மிக குறைவு.

எனக்கு தெரிந்தவரை, இந்தி கற்றுக்கொண்டவர்களிடன் கேட்ட வகையில் ஆங்கிலத்தை விட இந்தி மிக எளிமையான மொழிதான். தமிழைப்போல எப்படி எழுதுகிறீர்களோ, அப்படியே படிப்பீர்கள். ஆங்கிலம் போல வார்த்தைகளுக்கு தகுந்த மாதிரி உச்சரிப்பு மாறுவதில்லை.

வசதியின்மை காரணமாக பள்ளிப்படிபை பாதியிலேயே நிறுத்துபவர்களுக்கும், வெளிமாநில, மற்றும் வெளி நாடு செல்வோருக்கும் அவர்கள் கற்ற அரைகுறை ஆங்கிலத்தைவிட இந்தி ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசு பள்ளிகளில் கூட விருப்ப மாணவர்கள் அதை கற்க வழி செய்யலாம். அதை விடுத்து மு.க போல தமிழை காப்பதாக கூறி ஒரு தலைமுறைக்கே தடைவிதிப்பது மடமையாகும்.

கல்வியைக் கொடுக்க அழைப்பதற்கே மதிய உணவுகொடுத்து அழைக்க வேண்டிய சூழலில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற விசயங்கள் தனியாக டியூசன் வைத்தா கற்றுக்கொள்ளமுடியும்.

நான் மதுரை தியாகராஜர் கல்லூரியில் படிக்கும் போது. முதல் நான்கு பருவங்களில் Fundamental course என்று ஒன்று உண்டு. ஆதாவது ஒரு துறை மாணவர்கள், அவர்கள் படிக்காத மற்ற துறைகளைப்பற்றியும் ஓரளவுக்கு தெரிந்து வைத்திறுக்க வேண்டும் என்பதற்காக அது நடத்தப்படுகிறது. உதாரணமாக இயற்பியல் மாணவர்களுக்கு, வணிகம், பொருளாதாரம்,மேலான்மை மற்றும் உயிரியல் போன்றவை ஓவ்வொரு பருவத்திலும் பாடங்களாக இருக்கும். இதில் நீங்கள் தேர்ச்சிபெற்றால் தான் பட்டம் முடித்த சான்றிதள் உங்களுக்கு கிடைக்கும்.படிக்கும் போது அதன் அருமை தெரியாவிட்டாலும் வாழ்வின் சில சந்தர்ப்பங்களில் அது மிகவும் உதவியாக இருந்தது.

நம் தமிழினம் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய இனம். அதனால் தான், இது போன்ற மொழிவெறி, சாதி வெறி உணர்வுகளை நம்மவர் மத்தியில் மிக எளிதாக வார்த்தை ஜாலங்களுடன் தூண்டிவிட்டு சில அரசியல்வாதிகள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 
At 5:49 PM, Blogger வவ்வால் said...

ம்ம் இந்த விவாதம் முடிவற்றது .. சிந்துபாத்தின் கன்னித்தீவிற்கு கூட முடிவுண்டு!.ஹிந்தி தேவையா இல்லையாவிற்கு முடிவே இல்லை! அரசு பள்ளிகளில் ஹிந்தி தேவையா என்று ஒரு வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேட்டது இந்த கேள்விக்கு விடை தெரிந்தும் கூறாவிட்டால் உன் தலை சுக்கு,இஞ்ஜி நூறாக வெடித்து மாண்டு போவாய் என்றது.விக்கிரமாதித்தன் என்ன விடை பகன்றான்! தலை தப்பியதா? விடை தெரிந்தால் யாரேனும் கூறுங்களேன்!

 
At 6:17 PM, Blogger வவ்வால் said...

//இந்தியாவை வேறு ஒரு நாடாகக் கருதும் வட கிழக்கு மாநில மக்கள்கூட ஹிந்தியில் பேசுகிறார்கள். //

வட கிழக்கு மாநிலங்களில் ஹிந்தி தான் பேசுகிறார்கள் மியுஸ் என்று ஒருவர் சொல்லியுள்ளார்,அப்பிராந்தியங்களில் சொற்ப எண்ணிக்கைலேயே ஹிந்திப் பேசப்படுகிறது. நாகாலாந்தில் ஆட்சி மொழியே ஆங்கிலம் தான் என்பதை அறிவாரா?மகாராஷ்ட்ராவில் மராத்தியர்கே மகாராஷ்ட்ரா என்று ஹிந்திக்கு எதிராக குரல் ஒலிப்பதை அறிவாரா?

செம்மொழியாக அறிவிக்கப்பட்டு விட்ட தமிழை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல முயலாமல் வீண் வாதம் ஏன்?இந்திய மொழிகளிலே ஹிந்திக்கு முன்பாக இணையத்தில் உலா வந்த மொழி தமிழே!

ஹிந்திக்கு தனி எழுத்து வடிவம் கூட கிடையாது தேவநகரி எழுத்து வடிவம் தான்.தமிழ் 2000 வருடங்களுக்கு மேலாக வளமையுடன் தனி எழுத்து வடிவம் பெற்று உள்ளது.ஜெர்மனிலிருந்து வந்த மாக்ஸ் முல்லர், இத்தாலியிருந்து வந்த வீரமா முனிவர்,இங்கிலாந்திலிருந்து வந்த ஜி.யு.போப்(இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று தன் கல்லறையில் பொறித்தவர்) போன்றோர்க்கு எல்லாம் தமிழின் பெருமை தெரிகிறது.இந்த மக்களுக்கு என்று தெறியுமோ?
பின்னோக்கிப் பார்ப்பதை விட்டு முன்னோக்கி செல்ல வாருங்கள்,அல்லது வழி விட்டு விலகி செல்லுங்கள்.

 
At 9:22 PM, Blogger Machi said...

//குறும்பன், உங்களின் குறும்பு கொஞ்சம் வெவஸ்தை கெட்ட குறும்பாக உள்ளது. அரபு நாடுகளில் இந்தி மொழியும் ஒரு தொடர்பு மொழியாக உள்ளது.
//

அரபு நாடுகளில் இந்தி தொடர்பு மொழின்னு ஒருத்தர் கூட சொல்லலிங்க. அரபு நாடுகளில் மலையாளம் தெரிந்தா போதும்ன்னு சிலர் சொல்ல கேள்வி. உங்களால் புது செய்தி அறிந்தேன்.
எல்லா அரபு நாட்டுக்காரர்களும் இந்தி பேசுவார்களா? சரி அங்க வேலைக்கு வரும் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை நாட்டு & ஆப்ரிக்கா கண்ட மக்கள் இந்தியில பேசுனா புரிஞ்சுக்குவாங்களா? விளக்கினா தெரிஞ்சுக்கிறோம்.

அப்புறம் "வெவஸ்தை கெட்ட" இந்த மாதிரியான சொற்களை பயன்படுத்தாதீர்கள். அதுவும் இந்த இடத்தில் பயன் படுத்தியது தவறு.

 
At 1:24 AM, Blogger ஜெயக்குமார் said...

//அரபு நாடுகளில் இந்தி தொடர்பு மொழின்னு ஒருத்தர் கூட சொல்லலிங்க. //
இதை நீங்கள் அங்கு போய்வந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என பலரின் கூற்றைத்தான் நான் இங்கு குறிப்பிட்டேன். ஏன் இந்தியாவரும் போது கூட அரபு நாடுகள் வழியாக வரும்போது, விமானநிலையங்களில் உள்ள கடைகளில் இந்தியிலும் தான் பேசுகிறார்கள்.

 
At 1:27 AM, Blogger ஜெயக்குமார் said...

//செம்மொழியாக அறிவிக்கப்பட்டு விட்ட தமிழை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல முயலாமல் வீண் வாதம் ஏன்?இந்திய மொழிகளிலே ஹிந்திக்கு முன்பாக இணையத்தில் உலா வந்த மொழி தமிழே!//

இந்தியைவிட தமிழ் அழகான, தரமான, செழுமையான மொழிதான், ஆனால் இப்போதைய சூழ்நிலையில் அதை நீங்கள் தலைகீழாக நின்றாலும், இந்தியா முழுக்க எடுத்துச்செல்ல முடியாது. ஏற்கனவே பரவலாக பேசப்படும் மொழியை கற்றுக்கொள்ளவேண்டியது அவசியம்.

 
At 3:34 AM, Blogger லக்கிலுக் said...

ஒரு பின்னூட்டம் வந்தாலே அதற்கு 4 பின்னூட்டங்களில் பதில் சொல்லும் ஜெயக்குமாரின் டெக்னிக் டக்கர்!!!

 
At 1:22 AM, Anonymous Anonymous said...

அவசியம் என்றும் இல்லை!
தமிழகத்தை விட்டு வெளியே போகும் மாணவர்களின் எண்ணிக்கை 5% இருக்கலாம், மீதி 95% மாணவர்கள் தமிழகத்திலேயே தங்கள் பிழைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
அந்த 5% மக்களுக்காக 95% மக்கள் ஏனய்யா இந்தி படிக்கவேண்டும்.
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், ஹிந்தியை தேசிய மொழியாக அறிவிக்க நினைத்தது.... நீங்கள் நினைப்பது போல் தமிழர்களுக்கும் பிற ஹிந்தி அல்லாத மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பை பெருக்க அல்ல..... ஹிந்தி மாநில மக்களுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்த...

பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் மனிதனால் எதையும் செய்ய முடியும், ஏன் மிருகங்களின் பாஷை கூட அவனால் புரிந்து கொள்ள முடியும். எ.கா யானைப்பாகன்.
ஆக இந்தி தெரிந்தால் தான் நம் வாழ்க்கை தரம் உயரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

பலர் 1960க்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை ஏதோ மிகத்தவறானதாக பார்கின்றனர்

என் சொந்தக்கருத்து என்னவென்றால் அந்த போராட்டத்தால் தமிழகம் இழந்ததைவிட பெற்றதுதான் அதிகம்

எதை இழந்தோம் என நினைக்கிறீர்கள்? மிஞ்சி மிஞ்சி போனால் பல தமிழருக்கு இந்தி தெரியவில்லை அவ்வளவுதானே,

ஆனால் பெற்றது என பார்த்தால்

1. நாம் நம் தமிழ் திரை உலகை இந்தி திரை உலகத்திடமிருந்து காத்துள்ளோம். இன்றும் தமிழ் சினிமாவில் நடிப்பதை இந்தி நடிகர்கள் பெருமையாக கருதுகின்றனர், ஒரு பெஙாலி மொழிப்படத்திலோ, ஓரிய மொழிப்படத்திலோ நடிக்க அந்த மாநிலத்தவர் கூட விரும்ப மாட்டார்கள். காரணம் அவர்கள் தம் தனித்துவத்தை இந்தியிடம் இழந்துவிட்டார்கள்.

2. நம் தமிழ் பத்திரிக்கை உலகை, இலக்கியத்தை , ஊடகத்தை காத்துள்ளோம். இல்லாவிட்டால் இன்று ஆஜ் தக்கும், ஜீ டி.வியும்தான் தமிழர்களின் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும், தமிழ் தொலைக்காட்சிகள் ஒன்று கூட வளர்ந்திருக்காது. நம் பணம் டில்லிக்குதான் போகும் தமிழர்களின் ஊடகங்கள் நசிந்து போயிருக்கும். கலை இலக்கியம் புதினம் எல்லாவற்றிற்கும் இந்த நிலை வந்திருக்கும்

3. அதையெல்லாம் விடுங்கள், இந்தி நுழையயாததால்தான், பலர் ஆங்கிலம் கற்றே ஆக வேண்டிய சூழ்நிலை உருவானது. இன்று தமிழர்கள் கணிணி துறையில் மிளிர அவர்களின் ஆங்கில அறிவு ஒரு முக்கிய காரணம். இன்றும் அந்திராவில் தெலங்கானா பகுதியில் உள்ளவர்களுக்கு இந்தி நன்றாக தெரியும், ஆங்கிலம் சரியாக வராது. அவர்கள் கணிணி துறையில் ராயலசீமா, கிழக்கு ஆந்திரா மக்களை விட பின் தங்கியுள்ளனர். கிழக்கு ஆந்திரா, ராயலசீமாவில் இந்தி தெலங்கான அளவிற்கு இல்லாததால் இந்த வேறுபாடு

4. முக்கியமாக இந்தியை நாம் தடுத்ததால் தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் குறைத்துள்ளோம். அதனால் என்ன என பலர் கேட்கலாம். தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால், இப்போது செய்வதைப்போல மத்திய அரசை மிரட்டி காரியம் சாதிக்க முடியாது. டில்லிதான் மாநிலை அரசை மிரட்டும். நம் பக்கத்தில் இருக்கும் கேரளா ஒரு நல்ல உதாரணம். அவர்களால் பலமுறை மத்திய அரசில் ஒரு மந்திரியை கூட பெற முடியவில்லை, மிரட்டவும் முடியவில்லை, அதனால் நன்மையும் இல்லை. நாம் ஆயிரம்தான் திமுக, அதிமுக வை குறை கூறினாலும். அவர்கள் மத்திய அரசை மிரட்டி மிரட்டி பலவற்றை சாதித்துள்ளனர் என்பதை மறுக்கவே முடியாது. இதுவே தமிழத்தில் காங் ஆட்சி இருந்திருந்தால், சோனியாவின் தாவணியில் அது ஓட்டிக்கொண்டிருக்கும்.

ஏன் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மனம் வைத்தால்தான் தில்லியில் ஒன்று நடக்கும் என்ற நிலை கூட இருந்துள்ளது.

இப்படி எல்லாவிதத்திலும் இந்தி எதிர்ப்பினால் தமிழகம் பெற்றது நன்மையைதான், தீமைகள் வெகு வெகு சிலவே

 

Post a Comment

<< Home