$user_name="Jeyakumar";

Monday, September 14, 2009

ராகுல், விஜயகாந்த், தா. பாண்டியன் மற்றும் நதி நீர் இணைப்பு

மனிதன் இயற்கையோடு இயைந்து வாழும் வரைதான் அவனுக்கு இயற்கையின் இயல்பான நன்மை கிடைக்கும். இயற்கையை மாற்ற அல்லது கட்டுப்படுத்த நினைத்தால் அதனால் அழிவுதான் நேரும் என்பது பல வல்லுனர்கள் பல ஆய்வுக்கு பின் கண்ட உண்மை.

இதற்கு இன்று வறண்டு கிடக்கும் தமிழக நதிகளே சாட்சி. ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டியதால் இன்று பல ஆறுகள் செத்துவிட்டன என்பதை நாம் கண்கூடாக காணலாம். ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளால் பல ஆறுகள் நீர்வரத்து இன்றி இன்று சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளாகவும், மணல் திருட்டால் அதன் தன்மையை இழந்து சாக்கடைகளாகவும், புல் பூண்டுடன் புதர்களாகவும் காட்சியளிக்கின்றன. நம் அடுத்த தலைமுறைகளில் இந்த ஆறுகள் இருக்குமா எனப்து சந்தேகமே. ஒவ்வொரு பெரிய ஊர்களிலும் தண்ணீரைத்தேக்கி வைக்க கண்மாய்கள் இருக்கும் போது தடுப்பணைகள் எதற்கு. இப்போது உள்ள நீர்வரத்து, அதற்குரிய தேவைகளாலும் தண்ணீர் கடலுக்குள் சென்று வீணாக வாய்ப்பே இல்லை. இன்று நீர்வரத்து இல்லாததால் பல கண்மாய்கள் மேடுகளாகவும், கருவேலங்காடுகளாகவும் இருக்கின்றன. அதனால் அதிகப்படியான வெள்ளம் வரும் போது அது உடைந்து ஊருக்குள் வந்து அழிவை ஏற்படுத்துகின்றன.

நதிகளை இனைப்பாதால் இப்போது உருப்படியாக ஓடிக்கொண்டிருக்கும் நதிகளும் செத்துவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவ்வாரு இணைக்கும் போது அது பல மாநிலங்களின் வழியேதான் அது சாத்தியமாகும் . அவ்வாரு வரும்போது ஒவ்வொரு மாநிலமும் அதற்கு உரிமைகோரும், தேவையற்ற சண்டைகள் வந்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விழைவிக்கும் என்பதையும் நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.

5 Comments:

At 1:22 AM, Anonymous Anonymous said...

தமிழக தலைவர்களுக்கு தொலைநோக்குப்பார்வை என்பது தொலைந்து போன ஒன்று. பொதுநல அரசியல் போய் ஓட்டு அரசியல் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

மக்களுக்கு நல்லது செய்கிறோம் பேர்வழி என்று அழிவை செய்துகொண்டிருக்கிறார்கள்.

மக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் நாளைய தலைமுறைக்கு நாம் விட்டுச்சென்ற கழிவுகள் மட்டும் தான் இருக்கும்.

 
At 1:28 AM, Anonymous Anonymous said...

> ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டியதால் இன்று பல ஆறுகள்
> செத்துவிட்டன என்பதை நாம் கண்கூடாக காணலாம்.

Where did you learn this? These check dams are vital to store water during rain fall, which increases the ground water levels in that area. These are not the reasons for a river death. But taking up sand from the river beds is

 
At 2:22 AM, Blogger ஜெயக்குமார் said...

//Where did you learn this? These check dams are vital to store water during rain fall, which increases the ground water levels in that area. These are not the reasons for a river death. But taking up sand from the river beds is//

நீங்கள் சொல்வது போல அணைக்கட்டுப்பகுதிகளில் மட்டும் வேண்டுமானால் நிலத்தடி நீர் அதிகரிக்கலாம். ஆனால் கண்மாய்களில் சேகரிப்பாதால் ஆற்று வளமும் கெடாது, கண்மாய்களும் பாதுகாக்கப்படும். அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.

அணைக்கட்டுகளில் நீரைத்தேக்குவதால் வெள்ள காலங்களில் மொத்தமாக திறந்து விடுவதால் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. ஏற்கனவே மேடாகி கிடங்கும் ஆறுகளாலும், கண்மாய்களாலும் நதி நீர் கடலுக்கு செல்லாம ஊரை அழிக்கிறது. தொடர்ந்து சிறிதளவு நீர் ஓடினாலும் நதிகள் பாதுகாப்பாக இருக்கும்.

 
At 9:29 AM, Blogger Chittoor Murugesan said...

நதிகளை இணைத்துவிட்டால் எல்லா நதிகளிலும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். ( நீர் வழி போக்குவரத்து) இன்று போல் தண்ணீரை தேக்கிவைக்கும் நிலை இராது. மேலும் கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலானால் குறைந்த தண்ணீரிலேயே விவசாயம் செய்யலாம். முழுவிவரங்களுக்கு கீழ் காணும் சுட்டியை க்ளிக்கவும்

http://kavithai07.blogspot.com/2009/10/blog-post_26.html

 
At 9:35 AM, Blogger ஜெயக்குமார் said...

//நதிகளை இணைத்துவிட்டால் எல்லா நதிகளிலும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும்.//

இது சாத்தியமாவதற்கு ஒரு தியரி சொல்லுங்களேன்?!

 

Post a Comment

<< Home