$user_name="Jeyakumar";

Monday, January 07, 2008

கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஒரு அவமான சின்னம்!

கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் ஆட்டம் என்பதெல்லாம் இப்போது பழங்கதையாகிவிட்டது என்ற தோற்றத்தை இந்திய ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான
கடைசி ஆட்டம் நிருபித்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

அம்பயர்களில் மோசமான தீர்ப்புகள் தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்றாலும், ஆஸ்திரேலிய வீரர்களின் விளையாட்டிற்கான உண்மையான
மனப்பக்குவமின்மை தான் மிக முக்கியமான காரணம் என்று என்னால் சொல்ல முடியும். ஒரு காலத்தில் தான் ஆட்டமிழந்தது உண்மை என்று தெரிந்தால் உடனே
ஆடுகளத்தைவிட்டு வெளியேரும் கில்கிறிஸ்ட் கூட இந்த போட்டியில் சிறுபிள்ளைத்தனமாக் நடந்து கொண்டார்.

முதல் இன்னிங்ஸில் சைமண்ட்ஸ் அடிக்க முயன்று மட்டையில் பட்டு அதை தோனி பிடித்தவுடன் உண்மையான ஜெண்டில்மேனாக இருந்திருந்தால், அவர் உடனே
அம்பயரின் தீர்ப்புக்கு காத்திராமல் வெளியேறி இருக்கவேண்டும் ஆனால் அவ்வாரு செய்யவில்லை, அம்பயரும் அவுட் கொடுக்கவில்லை(அந்த சத்தம் (நிக்) மைதானத்திற்கு அருகில் இருந்த தெறுவில் சென்றவர்களுக்கு கூட கேட்டதாம்).
அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் கும்ளே பந்தை கிளார்க் அடிக்க முற்பட்டு அது மட்டையில் பட்டு ட்ராவிட் அழகாக அதை பிடித்தார், இதை பார்த்த எவருக்கும் தெரியும் அவர் ஆட்டமிழந்துவிட்டார் என்று, ஆனால் கிளார்க் வெளியே செல்லாமல்
அம்பயரின் தீர்ப்புக்காக (ஒருவேளை சைமண்ட்ஸுக்கு சொன்னது போல அவுட் இல்லை என்று சொல்லுவாரோ என்று) காத்திருந்தார். ஆனால் இந்தியர்கள் மட்டும் உடனே செல்லவேண்டும்
இல்லையெனில் அவர்கள் ஜெண்டில்மேன் இல்லை அல்லது அம்பயர்களை அவமதிக்கின்றனர் என்று கூறுவர். இதே கிளார்க் கங்கூலி அடித்த பந்தை தரையில் பட்டு பிடித்துவிட்டு அது அவுட் என்று
வாதாடினார்(இதை 5-ஆவது அம்பயர் பாண்டிங் உறுதி செய்தார்). இவர்தான் நாளைய ஆஸ்திரேலிய கேப்டனாம்(நல்ல தேர்வு). ஜெண்டில்மேன் கில்கிறிஸ்ட் கூட ட்ராவிடின் கால்காப்பில் பட்டு வந்த பந்தை பிடித்துவிட்டு அதற்கு அம்பயரிடம் அவுட் கோரினார்.
அன்றைய தினம் ஆனேகமாக அவர்கள் வீசிய எல்லா பந்துகளுக்கும் அவர்கள் அவுட் கோரினர் என்று தான் சொல்லவேண்டும். இதையே இந்தியர்களோ அல்லது மற்ற ஆசிய நாட்டு வீரர்களோ செய்திருந்தால்
"ஒவர் அப்பீல்" என்று கூறி அவர்களுக்கு அம்பயர்கள் தண்டனை வாங்கி கொடுத்திருப்பர். இதெல்லாம் போதாதென்று மனதளவில் இந்தியர்களை தாக்க ஹர்பஜன் மீது இனவேறி புகார் கொடுத்தனர். சாட்சியே இல்லாத அந்த குற்றச்சாட்டிற்கு அவருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடை.
இந்த தொடரில் ஹர்பஜன் பந்தில் மூன்று முறை குறைந்த ஓட்டங்களுக்கு பாண்டிங் ஆட்டமிழந்துள்ளார் என்பதையும் இங்கே நாம் மனதில் கொள்ளவேண்டும்.
இதெல்லாம் எதற்காக தொடர்ந்து 16 முறை வென்று சாதனை செய்யவேண்டும் என்பதற்காக. ஆனால் இதுபோன்ற அவர்களில் முயற்சிகள் அவர்களுக்கு அவமானத்தியே தேடித்தரும் என்பது மட்டும் நிச்சயம்.

உலகில் கிரிக்கெட்டிற்கு அதிக மதிப்பும் வருமானமும் பெற்றுத்தரும் இந்தியா இனியும் சும்மா உட்காந்திராமல், ஆஸ்திரேலியர்களில் கொட்டத்தை அடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்





0 Comments:

Post a Comment

<< Home