இந்தியர்களின் அறியாமைக்குப் பலியான ஒரு ஆங்கிலேயர்!
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் முடியப்போகும் தருவாயிலும், நம் மக்கள் அறியாமை எனும் மாயப் பேயிலிருந்து வெளிவராமல் இருப்பதற்கு இது ஒரு உதாரணம்.
சென்ற ஆண்டின் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஒரு ப்ரிட்டிஷ்காரர் நம் மக்களின் அறியாமைக்கு பலியாகியுள்ளார். இங்கிலாந்தில் ஷெல்ட்காம் பகுதியில் வசிக்கும் ஸ்டீபன் என்கிற 40 வயதுக்காரர் கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் சுற்றுபயணம் செய்த அவர் மும்பைக்கு தென்கிழக்கு பகுதியில் உள்ள ரொகா என்னும் கிராமப்பகுதியில் செல்லும் போது, இரவு நேரம் வழி தெரியாமல் அங்கிருக்கும் ஒரு வீட்டின் கதவை தட்டியிருக்கிறார். கதவைத்திறந்த பெண்மணி வெளிநாட்டவரைக்கண்டதும் கூச்சல் போட ,அவர் எவ்வளவோ சொல்லியும் புரியாத அந்த கிராம மக்கள் அவரை பிரம்பால் அடித்து அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் போட்டுவிட்டனர். எந்த பாவமும் அறியாத அந்த மனிதர் பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.
இதுபற்றி அவரின் தந்தை திரு கரோல் பெண்ணட் "தவறான நேரத்தில், தவறான இடத்திற்கு சென்றது என் மகனின் உயிர்போக காரணமாகி விட்டது" என்று கூறியுள்ளார்.
உலகமயமாக்கம், தகவல் தொடர்பு புரட்சி என்று பல நிகழ்வுகள் வந்து கொண்டிருக்கும் நம் நாட்டில் இது போன்ற அறியாமை நிறைந்த மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?!.
3 Comments:
எவனாவது மதம் மாத்த வந்தவன்னு நெனச்சு மாத்தீருப்பாங்க , பாவம் .
//உலகமயமாக்கம், தகவல் தொடர்பு புரட்சி என்று பல நிகழ்வுகள் வந்து கொண்டிருக்கும் நம் நாட்டில் இது போன்ற அறியாமை நிறைந்த மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?!.//
ஐயையையைய...எதுக்கெடுத்தாலும் 'அரட்டை அரங்கம்' மாதிரி இந்த பாயின்டுக்கே வந்துடராங்கப்பா.
//ஐயையையைய...எதுக்கெடுத்தாலும் 'அரட்டை அரங்கம்' மாதிரி இந்த பாயின்டுக்கே வந்துடராங்கப்பா.//
"நான் தான் சார்" நிகழ்ச்சியில் சொல்லும் எல்லா விசயங்களையும் புறக்கணிக்க முடியாதே சீனு.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் அதை சென்றடையும்(Target audience) ரசிகர்களின் தரத்திற்கேற்ப, ரசனைகேற்பத்தானே தயாரிக்கப்படுகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகிறது என்பதிற்காக கலாநிதி மாறன் அதை ரசித்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
Post a Comment
<< Home