$user_name="Jeyakumar";

Thursday, June 01, 2006

போலிகளும் , பறிபோகும் நம்பகத்தன்மையும்!..

என் பெயரில் ஆயிரம் பேர் எழுதினாலும், அதனால் நான் என்னுடைய அடையாளத்தை இழந்திவிடப்போவதில்லை. ஆனால் என் பெயரில் உள்ள போலி அவர்கள், நான் ஏற்கனவே பயன்படுத்திய என்னுடைய புகைப்படத்தை தன் பதிவில் வெளியிட்டு, மிகவும் தரக்குறைவான வகையில் பதிவுகளை எழுதியுள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகள், தமிழ் மணத்தில் மீதுள்ள வலைப்பதிவாளர்களின் நம்பிக்கையை இழக்கச்செய்யும். நாளை யாரும் தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட விரும்பமாட்டர். இன்று எனக்கு நிகழ்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். இது போன்ற நிகழ்வு ஏற்கனவே நடந்துள்ளதை எனக்கு அறிவுறுத்தி என் நண்பர் ஒருவர் தான் என்னுடைய புகைப்படத்தை நீக்கச்சொன்னார். நான் சில நாட்களுக்கு முன் தான் என்னுடைய புகைப்படத்தை என்னுடைய blog-ல் இருந்து நீக்கினேன்.

ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். அவற்றை பரிமாரிக்கொள்வதற்கும், விவாதிப்பதற்கு மட்டுமே இது போன்ற வலைத்தளங்கள் உதவுகின்றன. ஆனால் இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் தொடருமானால். யாரும் தங்களின் கருத்தை சுதந்திரமாக வெளியிடும் நிலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

7 Comments:

At 9:43 AM, Blogger Unknown said...

ஜெயக்குமார், இது உங்களுக்கு தனிமடல். உங்களைப்போலவே போலி தன்னை காட்டிக்கொள்ள முற்படுவதால், அவருடைய பின்னூட்டங்கள் உங்களுடையதாக நினைக்கப்பட்டு வெளியிடப்பட வாய்ப்புண்டு. வலைப்பதிவர்கள் என் 'மட்டுறுத்தல் நண்பன்' செயலியின் ஆலோசனை சேவையை பயன்படுத்தினால், நம்பர் எல்லாம் சோதிக்காமல் எளிதில் போலி பின்னூட்டங்களை கண்டுகொள்ளலாம். நீங்கள் இதை சோதித்து பார்த்து வலைப்பதிவர்களையும் பயன்படுத்த ஊக்குவியுங்கள். நன்றி.

அன்புடன்,
ரமணி.

 
At 11:29 AM, Blogger ஜெயக்குமார் said...

திரு ரமணி அவர்களே,

உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி.
நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.

ஜெயக்குமார்.

 
At 10:08 PM, Anonymous Anonymous said...

ஒரிஜினல்களே தங்கள் பெயரில் போலிகளை உருவாக்கி அல்ப விளம்பரம் தேடும் கலாச்சாரம் தமிழ்மணத்தில் உருவாகி இருக்கிறது.

 
At 11:26 PM, Blogger ஜெயக்குமார் said...

//இது தகவலுக்கு மட்டுமே. உங்கள் எதிரி யார் என்று சிந்தித்து அதன்பின்பு கண்டுபிடியுங்கள். அவரே உண்மையான போலியாக இருப்பார்.//

எனக்கு இருவரின் மேல் சந்தேகம் உள்ளது. அவர்கள் எழுதும் முறையை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன். இதுவரை அவர்கள் பெரிய அளவில் எதுவும் போலி பதிவில் எழுதவில்லை. என்னிடம் தங்கள் முகம் காட்டி நேரடியாக மோத தைரியம் இல்லாத கோழைகள், இவ்வாரு செய்கின்றனர். அவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

 
At 3:34 AM, Anonymous Anonymous said...

ஜெயக்குமார். மேலே இருக்கும் போலி டோண்டு பின்னூட்டத்தை ஏன் விட்டுவைத்திருக்கிறீர்கள்? அதில் சொல்லியிருக்கும் செய்தி வேண்டுமென்றால் அதனை அனானிமஸ் பின்னூட்டமாக இட்டு வைத்துக் கொள்ளுங்கள். அந்த போலி டோண்டு பின்னூட்டத்தை விட்டு வைத்தீர்களானால் அந்த பெயர் லிங்க் மூலம் அந்த அசிங்கப் பதிவுகளுக்கு போகமுடிகிறது.

 
At 3:35 AM, Anonymous Anonymous said...

இன்னொன்றும் சொல்ல விருப்பம். அந்த பின்னூட்டம் போலி டோண்டுவிடம் இருந்து தான் வரவேண்டும் என்று இல்லை. நீங்கள் அதர் ஆப்சனை வைத்துள்ளதால் அந்த பெயரையும் வலைப்பக்கத்தையும் போட்டு யார் வேண்டுமானாலும் போலி டோண்டு போல் பின்னூட்டம் இட்டிருக்கலாம். உங்களை குழப்ப.

 
At 4:36 AM, Blogger ஜெயக்குமார் said...

//நீங்கள் அதர் ஆப்சனை வைத்துள்ளதால் //

நான் நேற்று முன் தினம் தான், இந்த அதர் ஆப்சனை நீக்கினேன். இதற்கு முன்னர் அணானிமஸாக வந்து என்னை திட்டிக்கொண்டிருந்தவருக்கு, தொடர்ந்து என்னைத்திட்ட வேறு வழியில்லாமல் போலி தளம் உருவாக்கவேண்டி அவசியம் ஏற்பட்டுவிட்டது.

தமிழ் மணத்தில், ஆங்கிலப்பெயர்களுடன், தமிழர்களின் பாதுகாவலர்கள் போல வேசமிட்டு திரியும் இரு நயவஞசகர்களின் வேலையாக இது இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.

நான் என்னுடைய பதிவுகளில் , கருணாநிதியையும், அவரது குடும்ப அரசியல் மற்றும் குடும்ப ஊடங்களை பற்றி அதிகமாக விமர்சிக்கிறேன். அதற்கு என்னிடம் சில காரணங்கள் உள்ளன. நான் ஒட்டு மொத்த திமுக-வையும் விமர்சித்ததில்லை. திமுக விலும் பி.டி.ஆர் போல சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அவர்கள் யாரையும் விமர்சிப்பதில்லை. போலியான கவர்ச்சி காட்டி மக்களை ஏமாற்றுபவர்களைத்தான் விமர்சித்துள்ளேன். ஜெயலலிதாவின் தவறான அனுகுமுறையையும் விமர்சித்துள்ளேன்.

தமது சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்தாமல் மற்ற சமூகத்தினரை திட்டுவதிலேயே தன்னுடைய காலத்தை வீனாக்கிக்கொண்டிருப்பவர்களைப் பற்றியும் விமர்சித்துள்ளேன்.

போலி குறிப்பிடுவது போல நான் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் இல்லை, கண்மூடித்தனமாக எதிர்க்கவும் இல்லை.

போலிக்கு நான் கூறுவது என்னவென்றால். இந்த உலகில் ஒவ்வொன்றும் Unique. ஒன்றைபோல ஒன்று இல்லை. உதாரணமாக ஒரு மரத்தில் இருக்கும் இலைகள் கூட ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. மனிதர்கள் மட்டும் ஏன் அவ்வாறு இருக்க முயலவேண்டும்?. இதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?. அதனால் நீங்கள் அடையபோகும் லாபம்தான் என்ன?

 

Post a Comment

<< Home