$user_name="Jeyakumar";

Saturday, May 27, 2006

இன்னா செய்தாரை ஒறுத்தல் .....

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்திற்கு கொடுமை இழைத்தது என்பதற்காக, இந்த தலைமுறையை சேர்ந்த அந்த சமுதாயங்கள் ஒன்றை ஒன்று தூற்றிக்கொள்வது ஆரோக்கியமான விசயம் அல்ல. அதற்காக அந்த சமுதாயத்தினர் செய்த கொடுமைகள் இல்லை என்று ஆகிவிடாது. அது வரலாற்றில் அந்த சமுதாயத்தின் மீதான ஒரு கலங்கமாக என்றும் இருக்கும்.

உதாரணமாக ஜப்பான் மீது அணுகுண்டு வீசித்தாக்குதல் நடத்தி அதன் பொருளாதாரத்தையே சீரழித்தது அமெரிக்கா. அதற்காக அமெரிக்காவை குறை சொல்லிக்கொண்டிராமல், மற்ற நாடுகளிடமும் அதிகம் கையேந்தாமல் தன் சுய உழைப்பை கொண்டு அந்த நாடு இன்று பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இன்று பல ஜப்பானியர்கள் அமெரிக்காவிலும், பல அமெரிக்கர்கள் ஜப்பானிலும் வேலை செய்துகொண்டு சகஜமாக பழகிகொண்டுதான் இருக்கிறார்கள். குண்டு வெடித்த நாளன்று ஜப்பானியர்களின் நினைவஞ்சலிகள், அமெரிக்கர்களின் மனங்களில் ஒருவித கணத்தை, தாக்கத்தை ஏற்படுத்தும்.


அதே போல நம் தேசத்தை நாளைய உலகிற்கு எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜிவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலைசெய்தனர். நாளை அவர்கள் தனி நாடு அமைத்தாலும் அவர்கள் ராஜிவ் காந்தியை கொன்ற அந்த நிகழ்வு மட்டும் மாறவே மாறது. அது ஒரு அழியாத வரலாற்று வடுவாகத்தான் இருந்துகொண்டுதான் இருக்கும். அதற்காக அடுத்த தலைமுறைகள் பலிவாங்க நினைத்தால் அது முட்டாள்தனம்.

கமல் தேவர்மகன் படத்தில் சொல்ல முற்பட்ட கதை கூட இதுதான். ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கொல்வது, அடுத்த தலைமுறை அதற்கு பலி தீர்ப்பது. பிறகு நீதிமன்றத்திற்கும், வழக்கரிஞர்களுக்கும் இவர்கள் விவசாயத்தில் சம்பாதித்ததையெல்லாம் கொண்டுசென்று கொட்டுவது என்று தான் ஒருகாலத்தில் தென்மாவட்டங்களில் சில சமூகங்கள் இருந்தன. இன்றைய படித்த தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதை உணரத்தொடங்கியுள்ளது.
ஆனால் சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக மீண்டும் அவர்களை திசை திருப்ப முயன்று கொண்டிருக்கின்றன. அதே போலத்தான் சில வலைப்பதிவாளர்களும், மற்ற சாதிக்காரர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் மேல் தங்களின் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கிய்மான விசயம் அல்ல. இதனால் பிரிவினை மேலும் அதிகமாகுமே தவிர குறையாது.

எதற்கெடுத்தாலும் கைபர், பொலன் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததை கூறிக்கொண்டிருப்பது நல்லவிசயமல்ல. அவர்கள் செய்ததற்கு இப்போது உள்ள மக்கள் என்ன செய்யமுடியும். வேற்றுமைகளை குறைக்க என்ன வழி என்பதைப்பற்றிய விவாதம் தான் இருக்கவேண்டுமே தவிர, மற்றவர்களை குறைகூறுவதாக விவாதங்கள் அமையக்கூடாது. இதை
நாகரீகமாக எதிர்த்தால், உடனே தனி மனித தாக்குதல்களுக்கு தயாராகிவிடுகிறார்கள். அந்த சமயத்தில் நம்முடைய உணர்ச்சிகளும் சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. சில சமயங்களில் அவ்வாரு நடந்ததற்காக நம்மை நினைத்து வேதனைப்படத்தான் முடிகிறது.

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்."

குறள் படிக்கமட்டும் அல்ல, அது காட்டும் நெறிமுறைகளின் படி வாழ்ந்துகாட்டவும்தான். குறளோவியம் எழுதியவர்களுக்கு இது தகுமோ இல்லையோ, ஆனால் மனிதத்தன்மையுள்ள ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய விசயம்.


21 Comments:

At 3:54 AM, Anonymous Anonymous said...

சூப்பர் ஜெயக்குமார். இந்த திருட்டுமுக வெறிநாய்களுக்கு நல்லதே மண்டையில் ஏறாது. யாரோ நாலு ரவுடிப்பசங்க அடிச்சிக்கிட்டதுக்கு இந்தப்பசங்க நியோவும், லக்கியும் (தமிழ் மொழிப்போராட்ட வீரனுங்க வெச்சுக்கிட்ட பேரைப்பாரு) என்னா பில்டப் கொடுத்து பிலிம் காட்டறாங்க பாருங்க. இதில குற்றப்பரம்பரையின்னு எங்க சனங்க சரித்திரம் தெரியாம சாதிய சொல்லி வேற தாக்குதல். தூத்தெறி..

மேலே நீங்க அறிவுபூர்வமா எழுதினதயே பெருந்தலைவர் ஜீவா அன்னிக்கே சொல்லியிருக்காரு பாருங்க. திண்ணையில சுட்டது.

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி ப.ஜீவானந்தம்

1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் ஜீவா அவர்கள் பேசியது:

தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன்.

பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர் ' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன.

இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.

ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.

ஜாதியமுறையை விரும்பாத, ஜாதியமுறையை எதிர்க்கிற, தம்மைப் பொறுத்த முறையில் ஜாதியமுறையை ஒழித்துவிட்ட எல்லாப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்தப் பெரும்பணியை ஆற்றுவதற்கு ஜனநாயக ரீதியான சமாதானமான மனமாற்றும் முறைகள் மிகச்சிறந்த முறை என்பதையும் பலாத்காரமுறை தகுந்தமுறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதிய தீய பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக்கட்டி விடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி இந்தச் சிலரின் பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.

இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா 'காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'இந்துமதம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும் ' என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.

(சிரிப்பு)


நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார்.

நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.

(சிரிப்பு)

இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.

அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.

இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.

காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது.

சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா ?

(ஒரே சிரிப்பு)

காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா ?

(சிரிப்பு)

நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம் ?

(சிரிப்பு)

குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா ? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா ?

(சிரிப்பு)

ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா ?

(சிரிப்பு)

பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா ? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா ? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா ? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா ? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா ?

எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக் கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்தப் பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரிகச் செயல்கள் அல்ல, அநாகரிகச் செயல்கள் என்கிறோம். நிதானமான செயல்கள் அல்ல, வெறித்தனமான செயல்கள் என்கிறோம்.

எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால் .. என்று வைத்துக் கொள்வோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும். (சிரிப்பு)


இதிலிருந்து வெட்டுப்பழி, குத்துப்பழிக்கு வழிபிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு - இந்த அநாகரிகப் போக்கு அனுமதிக்கப்படத் தக்கதுதானா ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

குறிப்பிட்ட ஒரு ஜாதியை தனிமைப்படுத்தி, அநாகரிகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.

இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.

ஆகவே ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் - இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரங்கெட்ட செயலாகும்.

(நூல்: மேடையில் ஜீவா)

திண்ணையில் விஸ்வாமித்ரா

Copyright:Thinnai.com

 
At 4:31 AM, Blogger ஜெயக்குமார் said...

//நீங்க பேரச்சொல்லவே பயந்துகிட்டு முட்டுச் சந்துக்கு பின்னால ஓளிஞ்சி நிக்கறீகங்கறத மறந்துட்டு கருத்துச் சொல்றியளே!...வெளிய வந்து தைரியமா எதிர்கருத்து சொல்லுங்கன்னா...//

இங்கு நீங்கள் குறிப்பிட்ட ஒருவர்கூடத்தான் பெயர் மற்றும் இமெயில் முகவரியை வெளியிடாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறார். யார் கூறினார் என்று பார்க்காதீர்கள். என்ன கூறியுள்ளார் என்பதை மட்டும் பாருங்கள்.

சில ஆயிரம் வெள்ளைக்காரனால், பல கோடி இந்தியர்களை எப்படி அடிமையாக்க முடிந்தது?.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வந்த சில சில ஆயிரம் மக்களால், பல லட்சம் மக்களை எப்படி பிரிக்க முடிந்தது?.

முதலில் நமக்குள் ஒற்றுமை தேவை. அடுத்தவனை குறை சொல்லுவது, காட்டிக்கொடுப்பது என பல குறைகள் நம்மிடம் உள்ளன. அவற்றை அகற்ற என்ன செய்யவேண்டும் என்று விவாதியுங்கள். கும்முவதெல்லாம் பிறகு வைத்துக்கொள்ளலாம்.

 
At 5:33 AM, Blogger Radha N said...

சரியாய்ச் சொன்னீங்க ஜெயக்குமார். யார் சொன்னா ர்கள் என்பது முக்கியமல்ல, என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம்.

அவர்கள் இருவரும் சட்டசபை நிகழ்வை ரொ ம்ம்ம்ம்பபபபபப அனுபவம் போல எழுதியி ருந்தார்கள். நான்கூட தொலைக்காட்சியில் கண்டேன். நெருப்பு பற்றி எரிய முதலில் தேவை, சிறிய தீப்பொறி, அந்த தீப்பொறி வந்தது ஆளும்கட்சிப்பக்கமிருந்து, அதை மறந்துவிட்டு பேசுகிறார்கள். இவர்கள் தீக்குச்சியைப் பொருத்தி போட்டிருக்காவிட்டால், அந்த நிகழ்விற்கே வாய்ப்பில்லா மல் போயிருக்கலாம்!

மேலும் கருணாநிதி, அவர் அடிக்க ஓடிவந்தார் என்றார். அவர் சபையில் நிகழ்வின் போது அவரும், பேராசிரியரும், ஸ்டாலினும் எந்தஒரு எக்ஸ்பிரசனும் காட்டாமல் அமைதியாவே இருந்தார்கள். உதாரணத்துக்கு நான் உஙகளை அடிக்க வந்தால் நிச்சயம் நீங்கள் தடுக்க முயல்வ ଡ଼'அ3ர்கள், முகம் குறைந்தபட்சம் கலவரப்படும், இது உளவியல் உண்மை.

 
At 5:35 AM, Blogger நாகை சிவா said...

நல்ல பதிவு ஜெயகுமார். உங்களின் பெருபாலன கருத்துகளுடன் ஒத்து போகின்றேன்.
//குண்டு வெடித்த நாளன்று ஜப்பானியர்களின் நினைவஞ்சலிகள், அமெரிக்கர்களின் மனங்களில் ஒருவித கணத்தை, தாக்கத்தை ஏற்படுத்தும்.//

I always believe in the words,
"Forgive But Never Forget"

 
At 6:01 AM, Anonymous Anonymous said...

>>பேராசிரியரும், ஸ்டாலினும் எந்தஒரு எக்ஸ்பிரசனும் காட்டாமல் அமைதியாவே இருந்தார்கள்.>>

சரியான பாயிண்டை சொன்னீங்க நாகு. அது மட்டுமில்ல. படுகாயம் அடைந்தார் ஞானசேகரன்ன்னு சண்டிடிவியில மாத்தி மாத்திச் சொல்றானுங்க. ஆனா அந்த மனுசன் சிரிச்சுக்கிட்டே வெளிய வந்து நிருபங்க கேட்டா காயத்த தேடறாரு. ஒரு தடவை இதைக் காட்டிட்டு உசாரா திரும்ப இதக் காட்டல. ஒரு பொம்பளைய நியாயமா எதிர்த்து நிக்க முடியாத ரவுடிங்க இவங்க.

 
At 6:51 AM, Blogger ஜெயக்குமார் said...

/சட்டை வேட்டியை கிழித்துக் கொண்டு வந்து தெருவில் வந்து நின்று கதற வேண்டுமென இடப்பட்ட உத்தரவை நிறைவேற்ற முடியாமல் போன உங்களின்(!) ஆதங்கமும் ஆத்திரமும்தான் உங்களை இப்படி பேசவைக்கிறது என்பேன்.//

இங்கே கவனிக்கவேண்டியது என்னவென்றால். அவ்வாரு செய்தது திமுக-வினர் தான். இதற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியது சன் டிவி தான். மக்களுக்கு நன்கு அறிமுகமான, அதுவும் ஆளும் கட்சி ஊடகங்கள் தங்கள் கழுகுக்கண்களால் கவனித்திக்கொண்டிருக்கும் போது முதல்வரை அடிக்க எதிக்கட்சியினர் முற்படுவது தற்கொலைக்குக்ச் சமம். யாரும் அது போன்று நடந்து தங்கள் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்க மாட்டார்கள்.

கலைஞர் கைது செய்யப்பட்ட போது கூட அவர் அமைதியாக ஆடை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார். ஆனால் இந்த இழுபறி கலேபரங்கள் வந்தது, மாறன் குடும்பம் மற்றும் சன் டிவியினர் வந்த பிறகுதான்.

சன் டிவி குழுமத்தினர் தொடர்ந்து தவறான தகவல்களையே மக்களுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். இது போன்று ஆளும் கட்சி ஊடகங்கள் செயல்படுவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

 
At 6:55 AM, Anonymous Anonymous said...

மக்களுக்கு நன்கு அறிமுகமான, அதுவும் ஆளும் கட்சி ஊடகங்கள் தங்கள் கழுகுக்கண்களால் கவனித்திக்கொண்டிருக்கும் போது முதல்வரை அடிக்க எதிக்கட்சியினர் முற்படுவது தற்கொலைக்குக்ச் சமம். யாரும் அது போன்று நடந்து தங்கள் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்க மாட்டார்கள்.

அது! அப்டிப்போடு! சபாஷ் நண்பா!

 
At 7:05 AM, Anonymous Anonymous said...

//
கலைஞர் கைது செய்யப்பட்ட போது கூட அவர் அமைதியாக ஆடை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார். ஆனால் இந்த இழுபறி கலேபரங்கள் வந்தது, மாறன் குடும்பம் மற்றும் சன் டிவியினர் வந்த பிறகுதான்.//

காவல் துறையினருக்கு நல்ல ஒத்துழைப்புக்கொடுத்துக்கொண்டிருந்த கலைஞரை, மத்திய அமைச்சர் என்கிற அதிகார தோரனையில் மிரட்டி அவர்களின் நடவடிக்கையை தடுத்த காரணத்தினாலயே, அந்த இழுபறி சம்பவம் நடந்தது. இதை மேலும் மிகைப்படுத்தி அனுதாப அலை தேட முயன்றது சன் டிவியும், மாறன் குடும்பமும் தான்.

 
At 11:36 PM, Anonymous Anonymous said...

ஏண்டா மக்க்கா,
எங்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் இந்த ஆட்டமா?
அன்றைக்கே உங்கள் குடுமியைப் பிடித்து இமயமலைக்கு அந்தப்பக்கம் வீசியிருந்தால்
உங்கள் திமிர் இந்தளவிற்கு வந்திருக்காது.
நாங்கள் போட்ட பிச்சையில் வாழ்கின்றபோதே இந்த பொச்சரிப்பா?

மற்ற மாநிலங்களில் "பிரா"மணத்தின் வாசனை தூக்கலாக இருப்பதினால் பெரும்பாலான பிராமணர்கள் தமிழ்நாட்டிலிருந்து ஓடிப்போய்விட்டார்கள்.
மீதி இருப்பவர்களும் பூணூலைச் சுருட்டிகொண்டு ஓடிய பின் தான் தமிழ்நாட்டிற்குப் பொற்காலம்.
அதுவரையில் காயடிக்கப்பட்ட நாய்களை(பிராமணர்களை) கல்லெறிவதுதான் எங்கள் வேலை.

 
At 12:48 AM, Blogger ஜெயக்குமார் said...

//அதுவரையில் காயடிக்கப்பட்ட நாய்களை(பிராமணர்களை) கல்லெறிவதுதான் எங்கள் வேலை.//

நாய்கள் நன்றியுள்ளவை. ஆனால் உங்களைப்போன்ற "ஓ"நாய்கள்?

//அன்றைக்கே உங்கள் குடுமியைப் பிடித்து இமயமலைக்கு அந்தப்பக்கம் வீசியிருந்தால்
உங்கள் திமிர் இந்தளவிற்கு வந்திருக்காது.//

உங்கள் பாட்டன், பூட்டனுக்கு இருந்த பெருந்தன்மை உங்களுக்கு இல்லையே?

 
At 3:01 PM, Anonymous Anonymous said...

மற்ற மாநிலங்களில் "பிரா"மணத்தின் வாசனை தூக்கலாக இருப்பதினால் பெரும்பாலான பிராமணர்கள் தமிழ்நாட்டிலிருந்து ஓடிப்போய்விட்டார்கள்.//

உங்களுக்கு எப்படி பிரா மணம் தூக்கலாக இருப்பது தெரிந்தது?மாநிலம் மாநிலமாக போய் முகர்ந்து பார்த்து கண்டுபிடித்தீர்களாகும்?


//அதுவரையில் காயடிக்கப்பட்ட நாய்களை கல்லெறிவதுதான் எங்கள் வேலை.//


நாய்க்கு காயடிக்கும் வேலையையா செய்து கொண்டிருக்கிறீர்கள்?இந்த வேலைக்கு சம்பளம் குறைவு என்று கேள்விப்பட்டுள்ளேனே?சரி..சரி..ஏதோ ஒழுக்கமாக வேலை செய்து சம்பளம் வாங்கவும்.

 
At 4:25 PM, Blogger ஜெயக்குமார் said...

//எனது கடைசிப் பதிவில் இது பற்றிய ஆதங்கத்தை பதிப்பித்திருக்கிறேன்.//

உங்களுடைய பதிவிற்கு, உங்கள் பதிவிலேயே பிண்ணூட்டம் இட்டுவிட்டேன்.

சிலர் கலைஞரின் மீதான தாக்குதல் என்று சட்டமன்றத்தில் நடந்த பிரச்சனையை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் இதுபோன்ற செயல்கள் நடப்பது மக்களுக்கு அம்மன்றத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச்செய்யும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

ஆனால் அதிமுக ஆட்சியின் போது திமுக தலைவர் போகாததற்கு இது தான் அவரை தாக்கிவிடுவார்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்துவதுதான் ஏன் என்று விளங்கவில்லை. அப்படியே வைத்துக்கொண்டாலும், கலைஞர் உயிருக்கு பயந்த தலைவரா?

உயிருக்கு பயந்தவர் எப்படி தலைவனாக இருக்க முடியும். தலைவனுக்கு இலக்கனம் தன் தொண்டர்களுக்கு முன்னோடியாக இருப்பது தான். சிறந்த தலைவனுக்கு அலெக்ஸாண்டரை எதற்கு உதாரணத்திற்கு சொல்கிறோம். போரில் வீரர்களை முன்னால் செல்லவிட்டு பின்னால் சென்று தாக்கியதாலா?

அப்படியே கலைஞரை அதிமுக-வின் தாக்கினாலும் அது அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு அவப்பெயரைத்தான் ஏற்படுத்துமே தவிர, நற்பெயரை அல்ல. அது அவர்களைப் பொருத்தவரையில் தற்கொலை செய்வது போலத்தான்.

அதிமுக-வில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் மக்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரவுடிகள் என்றால், திமுக-வில் அந்த எண்ணிக்கை அதிகமாக தானே உள்ளது. இவ்வாரு நீங்கள் கூறுவது ஓட்டுப்போட்ட மக்களை அவமதிப்பது போன்றதாகும்.

கவர்னர் உரையின் போது தங்கள் ஆட்சியின் திட்டங்களை பற்றி விளக்கி சொல்லாமல், சென்ற ஆட்சியில் நடந்தவைகளைபப்ற்றி குறை கூறிப் பேசியதே இந்த பிரச்சனைக்கு காரணம் என்று சில செய்திகள் கூறுகின்றன. இது ஏன் திமுக மற்றும் காங்கிரஸினரின் திட்டமிட்ட சதி என்று கூறக்கூடாது.

சதி செய்பவர்கள் எல்லா கட்சியிலும், எல்லா சாதியிலும் தான் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் மற்றவர்களை குறைகூறி சண்டை போடுவதை விட அவர்கள் தங்கள் குற்றங்களை உணரச்செய்வதே அது போன்ற சதிகள் பிற்காலத்தில் நடக்காமல் இருக்க செய்யும்.

 
At 1:29 AM, Blogger ஜெயக்குமார் said...

இந்த பதிவிற்கு வந்த பல பிண்ணூட்டங்கள், வெளியிட முடியாத அளவிற்கு கேவலமானதாக இருந்தது. நிச்சயமாக அது போலி டோண்டுவினுடையது அல்ல. தமிழ் மணத்தில் சாதி வெறியை வளர்க்கும் சில வீணர்களுடையது என்பது மட்டும் விளங்குகிறது.

சக மனிதனை மதிக்கத்தெரியாத இவர்களை போன்றவர்களை அடையாளம் கண்டுகொள்வது மிக எளிது. அவர்களின் பதிவுகளைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

இப்படிப் பட்ட பிண்ணூட்டங்கள் அவர்களை அவர்களே தரம் தாழ்த்திக்கொள்கிற மாதிரிதான்.

 
At 1:53 AM, Anonymous Anonymous said...

இது போன்ற பிண்ணூட்டங்களும், பார்ப்பணப் பட்டங்களும், திமுக-வின் செயல்பாடுகளையும் அல்லது கருணாநிதியை விமர்சிக்கும் போது தான் அதிகமாக வருகிறது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், யார் ரவுடிகள், ஜாதி வெறியர்கள் என்று?

 
At 4:31 AM, Anonymous Anonymous said...

பார்ப்பன நாய்கள் காயடிக்கப்பட்ட பின்பும் கூட பாப்பாத்திக்கு ஆதரவாக விஷத்தைக் கக்குவது கண்டிக்கத்தக்கது

 
At 5:54 AM, Anonymous Anonymous said...

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

இந்திர குமாரி வாழ்க
சேடப்பட்டி முத்தையா வாழ்க

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

ஆட்சியில் பங்கு வேண்டும் அல்லது வேட்டி உருவப்படும்.

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

எல்லோரும் மனைவி - துணைவி வைத்து தமிழர் பண்பாடு காக்க வேண்டும். இரு பெண்டாட்டி இல்லாதவன் தமிழன் அல்ல.

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

இந்தி தெரிந்தால் மட்டுமே, அவன் சுத்த தமிழனாக இருந்தாலும் மந்தியாக முடியும்... உதாரணம் தயாநிதி

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

இந்தி தெரியாமல் இருந்தால் மட்டுமே, அவன் சுத்த தமிழனாக இருந்தாலும் மந்தியாக முடியும்... உதாரணம் ஸ்டாலின்

கோ சி மணி கோவிலுக்கு போனதற்கு விளக்கம் சொல்லவேண்டும். தலைவர் குடும்பமே கோவிலுக்கு போனதற்கு எல்லோரும் வாய மூடி கொள்ளவேண்டும்.

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

 
At 6:05 AM, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உங்களுடைய கருத்துக்களுடன் அப்படியே நான் ஒத்துப் போகிறேன். ஆனால் பல நூற்றாண்டுகளாக தவறு செய்த இனம் இன்னும் தன்னுடைய தவறுகளை உணர்ந்தாக எனக்கு தெரியவில்லை. இன்னும் பிராமிணர் என்றால் பிரம்மன் தலையில் இருந்து தோன்றியவர்கள் அவர்களை எல்லோரையும்விட உயர்ந்தவர்கள் என்று பலர் பேசித் திரிகிறார்கள். அது மிகவும் தவறான அணுகுமுறை இருப்பினும் இவர்களை ஒதுக்கிவிட்டு போய் கொண்டிருப்பதே சரியான அணுகுமுறை என்பதை நாம் உணர வேண்டும்.

 
At 7:55 AM, Blogger ஜெயக்குமார் said...

//ஆனால் பல நூற்றாண்டுகளாக தவறு செய்த இனம் இன்னும் தன்னுடைய தவறுகளை உணர்ந்தாக எனக்கு தெரியவில்லை.//

நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும், அவர்கள் மட்டுமா அப்படி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் கூட சிலர் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒரு புழுவைப்போல நடத்துவதில்லையா?. கிராமங்களில் போய்ப்பார்த்தால் உங்களுக்கு விளங்கும்.

இது எல்லா சமூகங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது தவறு என அவர்களை உணரச்செய்யவேண்டும். அதைவிட்டு அவர்களை திட்டிக்கொண்டிருந்தால், வன்மம் வளருமே தவிர குறையாது என்பதைத்தான் நான் இங்கு கூறியுள்ளேன்.

 
At 7:56 AM, Blogger ஜெயக்குமார் said...

//ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!//

சன் டிவியில் உங்களுக்கு ஒரு வேலை காத்துக்கொண்டிருக்கிறது. சீக்கிரம் முயன்றால், நிச்சயம் கிடைக்கும்.

 
At 12:11 PM, Blogger சீனு said...

ஜெயக்குமார்,
உங்க கருத்துக்களோடு நான் ஒத்துப் போகிறேன். 2000 ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினை ஒரே நாளில் ஓய்ந்து போகாது. சற்றே காலம் பிடிக்கும். இப்பொழுது தான் வெளிச்சத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கோம். இனி தான் அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும். வழியில் பிரச்சினைகளை களைய வேண்டும். பின் வெளிச்சத்தை அடைய வேண்டும்.
இன்னைக்கு நாம் ஒரு செடி நட்டால், நாளை நம் சந்ததிகள் அந்த மரத்தில் இருந்து பழம் சாப்பிட முடியும். நான் சாப்பிடவில்லை என்பதற்காக செடி நட வேண்டாம் என்று சொல்ல முடியுமா? வருங்காலத்தில் நல்லதே நடக்க வேண்டும் என்று எண்ணி நடப்போம். வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் உலகம்.

 
At 12:04 AM, Blogger ஜெயக்குமார் said...

சீனு,

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!.

 

Post a Comment

<< Home