$user_name="Jeyakumar";

Saturday, May 20, 2006

செருப்புகள் பலவிதம்!

நம்மில் பலர், மற்றவர்களை திட்டுவதற்கு, நம்மைத்தாங்கும், தான் கஷ்டப்பட்டு நம்முடைய நலனைக் காப்பாற்றும் செருப்பை பயன்படுத்துவோம். "செருப்பால அடிப்பேன்!" என்று பிள்ளைகளை திட்டுபவர்கள், "உங்களையெல்லாம் காப்பாத்த செருப்பா தேய்ஞ்சோமடா!" என்றும் கூறுவார்கள். நம்மைக்காக்கும் செருப்புகள் கேவலமானவையா என்றால், நிச்சயமாக இல்லை. சாக்கடை என்ற ஒரு வடிகால் இல்லையென்றால் ஊர் நாறிவிடும். நீங்கள் கேவலமாக நினைக்கும் உபாதை உங்கள் உடலில் இருந்து இரண்டு, மூன்று நாட்கள் வெளியேரவில்லையென்றால் உங்கள் உடம்பு என்னாகும் என்று நான் சொல்லத்தேவையில்லை. அப்படியானால் உலகில் கேவலமான விசயம் எது என்றால் ?, அட அது நம்ம மானிட ஜென்மம் தான். நமக்கு உதவும் மற்றவற்றை கேவலமாக நினைக்கும் நாம் தான் கேவலம்.

சரி விசயத்திற்கு வருவோம். கால்ல போடுற செருப்புக்கு இவ்வளவு செலவு செய்யனுமா?. தங்கத்தில செருப்பு செய்தாலும் அதை வீட்டுக்குள்ள போட்டு நடக்கமுடியுமா? என்றெல்லாம், நம்மால் நினைக்க்கப்படும் இந்த செருப்புக்கு மரியாதை கொடுத்து வித,விதமாக தயாரிக்கப்பட்டுள்ள செருப்புகளைப்பாருங்கள். ஹலோ! ஹலோ! கொஞ்சம் பொருங்கள், நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. சத்தியமா இது ஜெயலலிதாவின் செருப்புகள் இல்லீங்க!

ஒரு நண்பர் இமெயில் மூலம் எனக்கு வெறும் படமாக மட்டும் அனுப்பியவை!.


































மன்னிக்கவும், சொல்ல மறந்துட்டேன். இது லேடிஸ் ஸ்பெஷல்!.

23 Comments:

At 12:03 PM, Blogger Unknown said...

இதெல்லாம் என்ன விலை இருக்கும்?மாச சம்பளக்காரனுக்கு கட்டுபடி ஆகுமா?

 
At 12:13 PM, Blogger ஜெயக்குமார் said...

விலையெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்யும் மாசச்சம்பளக்காரர்களுக்கு கட்டுபடியாகும் என்றுதான் நினைக்கிறேன்.

 
At 12:17 PM, Blogger வெற்றி said...

நல்ல பதிவு.
கனடாவில் ரொரன்ரோ நகரில் காலணி நூதனசாலை[Museum] ஒன்று உள்ளது.
அங்கே பழைய காலத்தில் பாவனையில் இருந்த காலணிகள் பல கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

//அது நம்ம மானிட ஜென்மம் தான். நமக்கு உதவும் மற்றவற்றை கேவலமாக நினைக்கும் நாம் தன் கேவலம்.//

நூற்றுக்கு நூறு உண்மை.

 
At 1:04 PM, Blogger மாதங்கி said...

புதிய செருப்பைப் போட்டுக்கொள்ளும் முன் பழைய செருப்பைப் பார்த்து ( அது எவ்வளவு நைந்துபோனதாய் இருந்தாலும் ) ' என் செருப்பே, இவ்வளவு நாட்கள் எனக்காக உழைத்தாய், மிக்க நன்றி ' என்று சொல்ல வேண்டும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.

 
At 12:26 AM, Blogger Amar said...

Ladies Special

நினைச்சேன்! எனய்யா இந்த பாவபட்ட ஆன் பிள்ளைகளை பார்த்தால் மட்டும் நல்ல செருப்பு போடுறவங்க மாதிரி தெரியாதா?


ச்சே! :)

 
At 1:39 AM, Blogger ஜெயக்குமார் said...

//நினைச்சேன்! எனய்யா இந்த பாவபட்ட ஆன் பிள்ளைகளை பார்த்தால் மட்டும் நல்ல செருப்பு போடுறவங்க மாதிரி தெரியாதா?
//

ஆடை, அலங்காரம் என்று வந்துவிட்டால், பெண்களை விட நமக்கு options குறைவுதான். எனவே மனசை தேத்திக்குங்க சார்!.

 
At 7:56 AM, Blogger கோவி.கண்ணன் said...

குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் தான் குட்டுபடவேண்டும் என்று சொல்வார்கள். செருப்பால் அடிவாங்கினாலும் இந்த மாதிரி செருப்புகளால் ... என்று சொல்லத் தோன்...

 
At 11:22 PM, Blogger ஜெயக்குமார் said...

//செருப்பால் அடிவாங்கினாலும் இந்த மாதிரி செருப்புகளால் ... என்று சொல்லத் தோன்...//


லேடிஸ் செருப்பால அடிவாங்கிறதுல, உங்களுக்கு அப்படி ஒரு சந்தோசமா?

Just Kidding

 
At 11:47 PM, Blogger பிரதீப் said...

ஊசி மாதிரி ஹீல்ஸ் வச்சு செருப்புப் போட்டுக்கிட்டு எப்படித்தான் நடக்குறாகளோ...

இதை நம்ம வலைப்பதிவாளர்களின் மனைவிமார் பார்த்தால் ஆண்களிடமிருந்து உங்களுக்குத்தான் சாபங்கள் வந்து சேரும்.

 
At 1:50 AM, Blogger ஜெயக்குமார் said...

//இதை நம்ம வலைப்பதிவாளர்களின் மனைவிமார் பார்த்தால் ஆண்களிடமிருந்து உங்களுக்குத்தான் சாபங்கள் வந்து சேரும்.//

பெண் பாவம் பொல்லாததுன்னு தான் கேள்விப்பட்டுள்ளேன். அதுனால ஹிஹிஹி...

 
At 2:14 AM, Blogger மாயவரத்தான் said...

போன தபா ஜெயலலிதா வூட்டுல இர்ந்திச்சின்னு சன் டி.வி.யிலே காட்டினாங்களே.. அதா இது?!

 
At 2:14 AM, Blogger தயா said...

செருப்புக்கு கீழ் இருக்கும் இடத்தில் (அந்த குதிங்கால் உயரத்திற்காக) ஒரு ஐபாட் வைத்துவிட்டால் பாட்டுக்கேட்கலாமே! ஒரு ஜிப்பர் வைத்துவிட்டால் ஹாண்ட்பேக்கில் கொண்டு செல்லும் பாதிப்பொருள்களை அடக்கி விடலாம். :)

 
At 3:00 AM, Blogger கசி said...

ஜெயா வீட்டில் போலீஸ் கண்டுபிடிச்சப்ப நீ ஒன்னுமே சொல்லலை?

 
At 3:35 AM, Blogger லக்கிலுக் said...

இதை விட சூப்பரான செருப்புகளை எல்லாம் நாங்க 96லேயே பாத்துட்டோம்... ஒரு ஜதையா ரெண்டு ஜதையா ஆயிரம் ஜதையாச்சே.....

 
At 3:51 AM, Blogger வீ. எம் said...

romba seruppana..aiyoo sirappana padhivu :)

 
At 4:04 AM, Blogger ஜெயக்குமார் said...

// இதை விட சூப்பரான செருப்புகளை எல்லாம் நாங்க 96லேயே பாத்துட்டோம்... ஒரு ஜதையா ரெண்டு ஜதையா ஆயிரம் ஜதையாச்சே.....//

எங்கே? சன் டிவியிலா?

திமுக ஆட்சியில் அவர்களுக்கு, அடுத்தவர்கள் படுக்கை அறையென்ன!, கழிப்பறைக்கே சென்று படம் எடுக்க அனுமதியுள்ளதே?

 
At 4:15 AM, Blogger பிரதீப் said...

///திமுக ஆட்சியில் அவர்களுக்கு, அடுத்தவர்கள் படுக்கை அறையென்ன!, கழிப்பறைக்கே சென்று படம் எடுக்க அனுமதியுள்ளதே? ////

என்ன ஜெயக்குமாரு,
அதிமுக ஆட்சியிலயும் இன்னொருத்தர் படுக்கை அறைக்கு போலீசோடயே போயி படம் புடிச்சாங்களே...

அதை மறந்துட்டீங்க...

 
At 4:24 AM, Blogger ஜெயக்குமார் said...

This comment has been removed by a blog administrator.

 
At 4:31 AM, Blogger ஜெயக்குமார் said...

//என்ன ஜெயக்குமாரு,
அதிமுக ஆட்சியிலயும் இன்னொருத்தர் படுக்கை அறைக்கு போலீசோடயே போயி படம் புடிச்சாங்களே...
//

அவங்க தாத்தா வீட்டுக்குள்ள படம் எடுக்க யாரோட அனுமதியும் தேவையில்லீங்க!.
அவங்க தாத்தாவுக்கு இவங்க டப்பிங் குடுத்தாலும்,இது என்னோட வாய்ஸ் இல்லைனு யாரும் கேஸ் போடப்போறதில்லீங்க!

 
At 4:34 AM, Blogger பிரதீப் said...

ஓஹோ...
அவங்க தாத்தா வீட்டுக்குள்ள போயிப் படம் புடிக்க அப்ப சன் டிவி தவிர மத்தவங்களுக்கு அனுமதி இருந்துச்சோ...

இன்னொரு டிவியிலயும் பிட்டு பிட்டா அம்புக்குறி எல்லாம் போட்டு வேற காட்சிகளைக் காட்டினாங்களே...

 
At 4:52 AM, Blogger ஜெயக்குமார் said...

//இன்னொரு டிவியிலயும் பிட்டு பிட்டா அம்புக்குறி எல்லாம் போட்டு வேற காட்சிகளைக் காட்டினாங்களே...//

இல்லாவிட்டால் சன் டிவி இயக்குனர்கள், இதற்கு இல்லாத திரைக்கதை வசனம் எல்லாம் சேர்த்து ஒரு கமர்சியல் படமாகவே வெளியிட்டு இருப்பார்களே?

 
At 11:36 PM, Blogger வெங்கட்ராமன் said...

இதெல்லாம் கால்ல போட்டுகறதா, இல்ல வீட்டு ஹால்ல டெக்கரேசனுக்காக வக்கறதா.

 
At 11:03 PM, Blogger ரவி said...

வாங்க, வந்து எழ்துங்க நிறைய....

 

Post a Comment

<< Home