$user_name="Jeyakumar";

Friday, May 19, 2006

பன்னாட்டு நிறுவனகள் ரூ.2500 கோடி வரி ஏய்ப்பு - மத்திய அரசு!

இந்தியாவில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்துள்ள வரி ஏய்ப்பு ரூ.2500 கோடி என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது!

மக்களவையில் வரி ஏய்ப்பு குறித்து பேசிய நிதியமைச்சக துணை அமைச்சர் எ.எ. பழனிமாணிக்கம் 2005-06 நிதியாண்டில் மட்டும் வரி ஏய்ப்பு செய்ததாக 411 பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பப்படுள்ளதாகக் கூறியுள்ளார். இந்தியாவில் தற்பொழுது 1915 பன்னாட்டு நிறுவனகள் இயங்கி வருகின்றன. இவைகள் நேரடியாக செய்த வரி ஏய்ப்பின் அளவே ரூ.2500 கோடிக்கும் அதிகம் என்று கூறிய பழனி மாணிக்கம் மறைமுக வரியில் இவைகள் ஏமாற்றியிருப்பதை கணக்கில் எடுத்தால் அது இதைவிட அதிகமாக இருக்கும் என்று கூறினார். 2004-05 நிதியாண்டில் 326 நிறுவனகளின் மீது வரி ஏய்ப்பு செய்ததாக தாக்கீது அனுபபட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.



நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துகிறேன் என்கிற பெயரில் ,கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக தொலைநோக்குப்பார்வையில்லாமல் கண்டவனையும் உள்ளே விடுவதுதான் நம் பொருளாதார மேதையான நிதி அமைச்சர் மற்றும் தயாநிதி மாறன் போன்ற அமைச்சர்களில் தொழிலாகிப்போய்விட்டது. உள்ளே அனுமதித்ததுடன் அவர்களின் வேலை முடிந்துவிட்டதாக அவர்கள் நினைத்துவிடுகிறார்கள். அவற்றின் செயல்பாடுகளை முறைப்படுத்த சரியான துறை நம்மிடம் இல்லாதது இதுபோன்ற செயல்களில் அவர்களை ஈடுபட தூண்டுகிறது. அவர்களை கண்கானிப்பவர்களே, அவர்களுக்கு எப்படி வரி கொடுக்காமல் தொழில் நடத்துவது என்று கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். சுயநலத்துடன் நாட்டைக்காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்கள் இன்னும் நமது நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். காட்டிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கூட்டிக்கொடுக்கும் மத்திய அமைச்சர்கள் இருக்கும் போது வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இதே நிறுவனங்கள் மற்ற வளரும் , வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற மெத்தனத்துடன் நடந்துகொள்ள முடியுமா?

சீனாவால் புறந்தள்ளப்பட்ட ஒரு இரும்பு ஆலைக்கு இந்தியாவில் ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு இன்று அவர்கள் ஒரிஸாவில் தொழிற்சாலை அமைக்க ஆரம்பித்துவிட்டார்கள். சீனாவும் வெளி நாட்டு நிறுவனங்களை வரவேற்கிறது. ஆனால் அவர்களால் தங்கள் நாட்டின் கணிம வளங்கள் மற்றும் இயற்கை ஆதாரங்கள் சுரண்டப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஆனால் இந்தியா அப்படி இல்லை, தொழில் வளம் பெருக்குகிறேன், வேலை வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் சரியான ஆய்வு மற்றும் முறையான சட்டதிட்டங்கள் இல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர், நமது தென்மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமான, தாமிரபரணி ஆற்று நீரில் ஒரு புகழ்பெற்ற ஒரு வெளிநாட்டி குளிர்பான நிறுவனம் கைவைக்கப்பார்த்தது அணைவரும் அறிந்ததே!. இன்னும் அவர்களின் செயல்பாடுகள் மறைமுகமாக அங்கு நடந்துகொண்டுதான் இருப்பதாக கேள்வி!.

இந்த வெளிநாட்டு நிறுவனங்களால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மையென்றாலும். ஆண்டுகள் செல்லச்செல்ல நமக்கும் மிஞ்சுவது அவர்கள் கொடுக்கும் சம்பளமாக மட்டும் தான் இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே அவர்களின் தேசத்திற்கு எடுத்துச்செல்லலாம் , உற்பத்தியில் குறிப்பிட்ட அளவு இங்குதான் வியாபாரம் செய்யவேண்டும் என்று சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் , அவைகள் எங்கே முறையாகப்பின்பற்றப்படுகின்றன.

நம் தாயகத்தின் மதிப்பற்ற இயற்கை வளத்தை, போற்றிப்பாதுகாத்து , அதை பெருக்காவிட்டாலும் பரவாயில்லை , அவைகளை அந்நியரிடத்தில் இழத்துவிடாமல் நம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

11 Comments:

At 12:28 PM, Blogger Santhosh said...

நல்ல பதிவு ஜெயகுமார்.

 
At 1:09 PM, Blogger thiru said...

மனதார உங்கள் பதிவை பாராட்டுகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் "சோனி" போன்ற நிறுவனக்களின் வரி ஏய்ப்பை, ஐரோப்பாவில் ஒரு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க தயாரித்த வேலை தெரிந்து கொண்டு வேதனையடைந்தேன். பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற, வெளிப்படையற்ற, சட்டத்தை வளைத்து நடத்துகிற வர்த்தகம் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு ஆபத்தானது.

என்ரான் நிறுவனம் அமெரிக்கவில் நடத்திய மோசடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடிவாளம் அவசியம் என்பதற்கான எச்சரிக்கை மணி! வெளிபாடாத இப்படியான மோசடிகள் இன்னும் பல... கோக், பெப்சி செய்கிற அட்டூழியங்கள் எண்ணிலடங்கா...

 
At 10:55 PM, Blogger ஜெயக்குமார் said...

சந்தோஷ், திரு உங்களின் ஆதரவுக்கு நன்றி!. திரு குறிப்பிட்ட என்ரான் நிறுவனம் நல்ல உதாரணம்.

 
At 11:55 PM, Anonymous Anonymous said...

பூனைக்கு யார் மணி கட்டுவது. மணி கட்டவேண்டியவர்கள் money வாங்கிக்கொண்டு சும்மா இருந்துவிடுவதால்தான் இதெல்லாம் நிகழ்கிறது.

 
At 11:56 PM, Blogger முத்துகுமரன் said...

நல்ல பதிவு ஜெயகுமார். வாழ்த்துகள்

தாரள பொருளாதாரமயமாக்குதலின் பக்க விளைவுகள் இவை. வெளிநாட்டு மூலதனங்களை வரவேற்கும் அதே சமயத்தில் அவைகள் தீவிர கவனிப்பிற்குள்ளாக்கவேண்டியதன் அவசியத்தையும் நாம் உணரவேண்டும். அதே போல் நமது வளங்களை சுரண்டுவதையும் அனுமதிக்ககூடாது என்பதும் மிகவும் முக்கியம். இதன் அவசயத்தை வலியுறுத்துபவர்களை அதிகாரவர்க்கம் நாட்டின் முன்னேற்றத்தின் தடைக்கற்கள் என்று முத்திரை குத்துகின்றன.

ஆனால் இது இரண்டிற்கும் காரணம் தயாநிதியும் சிதம்பரமும்தான் என்றூ சொல்லும் போதுதான் உங்கள் உண்மையான நோக்கம் அடிபட்டு போய்விடுகிறது. இந்த மாற்றங்கள் 1991 காங்கிரஸ் ஆட்சியிலிருந்தே நடந்துவருகிறது. அதற்கடுத்த வந்த பாஜகவும் இத்தகைய கூறுகளை ஆதரித்தே வந்திருக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டிருக்கலாம். நீங்கள் சொல்ல வரும் பெரும்பாலான நல்ல விசயங்களும் இந்தவகையான குறைகளோடு வருகையில்(குறீப்பிட்ட ஒரு சாராரை குற்றவாளியாக்கி பேசுவது) அதன் தன்மையை மாற்றிவிடுகிறது.

நட்புணர்வுடன் சொல்லியிருப்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

 
At 12:29 AM, Blogger ஜெயக்குமார் said...

//ஆனால் இது இரண்டிற்கும் காரணம் தயாநிதியும் சிதம்பரமும்தான் என்றூ சொல்லும் போதுதான் உங்கள் உண்மையான நோக்கம் அடிபட்டு போய்விடுகிறது.//

நீங்கள் சொல்லுவது உண்மைதான் முத்துக்குமரன். 1991 ஆரம்பித்த இந்த முயற்சிகளுக்கு சிதம்பரமும் ஒரு காரணம், அதேபோலத்தான் பாஜக ஆட்சிக்கு வந்தபோது மாறன், இப்போது தயாநிதி மாறன். பெரும்பாலான விசயங்களில் இவர்களின் தலை அதிகம் தெரிவதால் , இவர்களைப்பற்றி குறிப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டவிட்டது. மற்றபடி நீங்கள் குறிப்பிட்டதுபோல இது நரசிம்மராவ் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான். நோக்கம் நல்ல விசயமாக இருந்தாலும், அதன் நீண்ட கால நன்மைகளை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கும்போது கவனமுடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.

 
At 12:30 AM, Blogger Amar said...

// இந்தியாவில் தற்பொழுது 1915 பன்னாட்டு நிறுவனகள் இயங்கி வருகின்றன. இவைகள் நேரடியாக செய்த வரி ஏய்ப்பின் அளவே ரூ.2500 கோடிக்கும் அதிகம் என்று கூறி//

தவறாக நினைக்கவேண்டாம் அனால இந்திய நிறுவனங்களும் இதே மாதிரி வரிஏய்ப்பு செய்து இருக்கும் அல்லவா?

மொத்தமாக எத்தனை நிறுவனங்கள் ஒழுங்காக வரி கட்டுகின்றன என்று பார்த்தால் அனேகமாக மிக பெரும்பான்மையான நிறுவனங்கள் ஒழுங்காக வரி கட்டி கொண்டு இருக்குமா?

 
At 12:30 AM, Blogger Amar said...

// இந்தியாவில் தற்பொழுது 1915 பன்னாட்டு நிறுவனகள் இயங்கி வருகின்றன. இவைகள் நேரடியாக செய்த வரி ஏய்ப்பின் அளவே ரூ.2500 கோடிக்கும் அதிகம் என்று கூறி//

தவறாக நினைக்கவேண்டாம் அனால இந்திய நிறுவனங்களும் இதே மாதிரி வரிஏய்ப்பு செய்து இருக்கும் அல்லவா?

மொத்தமாக எத்தனை நிறுவனங்கள் ஒழுங்காக வரி கட்டுகின்றன என்று பார்த்தால் அனேகமாக மிக பெரும்பான்மையான நிறுவனங்கள் ஒழுங்காக வரி கட்டி கொண்டு இருக்குமா?

 
At 12:37 AM, Blogger ஜெயக்குமார் said...

//தவறாக நினைக்கவேண்டாம் அனால இந்திய நிறுவனங்களும் இதே மாதிரி வரிஏய்ப்பு செய்து இருக்கும் அல்லவா?//

உண்மைதான், எனக்கு தெரிந்து சென்னையில் உள்ள 95% நகைக்கடைகளில் வரியுடன் கூடிய ரசீது வழங்கப்படுவதில்லை. இதே போன்ற நிலை தான் மற்ற உள்நாட்டு நிறுவனங்களிலும். ஆனால் இங்கு நான் விவாதிப்பது, வெளிநாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மற்றும் நம் நாட்டில் அவர்களின் சுரண்டல்கள் பற்றித்தான். உள்நாட்டு ஏய்ப்புகளைப்பற்றி நாம் நிச்சயமாக மற்றுமொரு பதிவில் விவாதிக்கலாம்.

 
At 1:45 AM, Anonymous Anonymous said...

வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி யாராவது விளக்கமுடியுமா?

 
At 2:26 AM, Blogger Chellamuthu Kuppusamy said...

வரி ஏய்ப்புச் செய்த இந்திய நிறுவனங்கள் இல்லையா?....

வருமான வரி ஏய்ப்புச் செய்யும் தனி மனித இந்தியர்கள் இல்லையா?...

பிரச்சினை வெளிநாட்டு நிறுவனம் என்பதால் இல்லை. ஏய்ப்பதற்கும் ஏமாற்றுவதற்கு ஏற்றாற்போல சட்டதிட்டங்களை அமல்படுத்துவதில் நிகழும் குறைபாடுகள் தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும். வெளிநாட்டு நிறுவனம் நம் நாட்டில் மாத்திரமல்லாமல் அவர்கள் ஊரிலேயே ஏமாற்றாமலும் இல்லை என்ற உண்மையை உணர வேண்டும்.

தெசப்பற்றற்றவன் என முத்திரை குத்திவிடாதீர்கள் கருத்து.... :-)

- குப்புசாமி செல்லமுத்து

 

Post a Comment

<< Home