என்னுடைய பெயரில் சில போலி பிண்ணூட்டங்கள்!..
தமிழ் மணத்தில் சில போலிகள் என் பெயரில் சில பிண்ணூட்டங்களை இட்டு வருகின்றன. என்னுடைய blog போலவே ஒரு blog-ஜ் உருவாக்கி இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பதிலுக்கு என்னாலும் இதுபோன்று செய்யமுடியும். ஆனால் அது போன்ற மட்டமான செயல்களில் ஈடுபட மனமில்லை.
இதில் குறிப்பிடவேண்டிய விசயம் என்னவென்றால், அவர்கள் அணைவரும் திமுக அனுதாபிகள், கருணாநிதியின் அடிவருடிகள். இது அவர்களின் புத்தி, மாற்ற முடியாது.
இதிலிருந்து என்னுடைய பதிவுகளும், பிண்ணூட்டங்களும் அவர்களை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. விவாதங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
என்னுடைய பெயரில் உங்கள் பதிவுகளில் பிண்ணூட்டங்கள் வந்தால், தயவு செய்து என்னுடைய இமெயில் முகவரிக்கு (jeyakumar777@yahoo.co.uk) தொடர்புகொண்டு உறுதிசெய்துகொண்டு பின்பு வெளியிட வேண்டுகிறேன்.
இதே பொல போலியான பதிவுகளும் வர வாய்ப்புள்ளதால், என்னுடைய பதிவுகளைப் படிக்குமுன் இந்த http://jeyakumar777.blogspot.com முகவரியில் இருந்து வெளிவந்துள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். அதே போல பிண்ணூட்டங்கள் என்னுடையதா என்பதை சரிபார்க்க, வெளியிட்டவரின் profile (http://www.blogger.com/profile/20967563) இதுதானா என்று சரிபார்க்கவும்.
மிக்க நன்றி!.
11 Comments:
எப்பதான் திருந்துவாங்களோ !!!!
//என்னுடைய பெயரில் போலி// இது நல்ல கருத்து ஆனால் அவரும் உண்மை தானே அப்புறம் எப்படி அவர் சொல்வது போலியாகும் ? உங்கள் பெயரில் யாரும் எதுவும் எழுதக்கூடாது என்று சொல்வதுபோல் இருக்கிறது. டைரக்டர் மகேந்திரன் எனக்கு பின்னூட்டம் போட்டு நீபோலின்னு சொல்லிட போறார்:))
தகவலுக்கு நன்றி ஜெயகுமார். இன்று உங்கள் பெயரிலேயே மூன்று போலி பின்னூட்டங்கள் வலைத்தளத்திற்கு வந்திருந்தது. அந்த எழுத்துகளே அதை எழுதியது நீங்களல்ல என்பதை உரைத்ததால் வெளியிடவில்லை. கருத்தை எதிர்கருத்து கொண்டு நேர்கொள்வதுதான் சிறந்த வழியே தவிர அடையாளத்தை சிதைத்து அல்ல.
ஆனால் சந்தேகம் ஏற்படும் போது சம்பந்தபட்டவரை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்வது எப்போதுமே நல்லது.
நன்றி
/////இதில் குறிப்பிடவேண்டிய விசயம் என்னவென்றால், அவர்கள் அணைவரும் திமுக அனுதாபிகள், கருணாநிதியின் அடிவருடிகள். இது அவர்களின் புத்தி, மாற்ற முடியாது./////
இது தவறு...தி.மு.க அனுதாபிகள் அனைவரும் போலிகள் என்று கூறுவதுபோல் உள்ளது...பலர் மனம் புன்படும்..தயவுசெய்து மாற்றவும்..
உங்கள் பெயரிலுமா? இது என் விஷயத்தில் நடந்தபோது எப்படி நான் அதை எதிர்க்கொண்டேன் என்பதை பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html
என்னுடைய பதிவு எண் 4800161 என் டிஸ்ப்ளே பெயரின் மேல் எலிக்குட்டியை வைத்தால் தெரிய வேண்டும். போட்டோ எனேபிள் செய்யப்பட்ட உங்கள் வலைப்பூவில் என்னுடைய போட்டோவும் பின்னூட்டங்கள் பப்ளிஷிங் பக்கத்தில் தெரிய வேண்டும். இந்த இரண்டு சோதனைகளும் ஒரு சேர வெற்றியடைய வேண்டும். அப்போதுதான் அது உண்மையான டோண்டுவின் பின்னூட்டம் என உணர்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//டைரக்டர் மகேந்திரன் எனக்கு பின்னூட்டம் போட்டு நீபோலின்னு சொல்லிட போறார்:))//
டைரக்டர் மகேந்திரன் நீங்கள் பயன்படுத்திய உங்களுடைய புகைப்படத்தை தன் அடையாளமாக பயன்படுத்தினால் என்ன சொல்வீர்கள் மகேந்திரன்?
//இது தவறு...தி.மு.க அனுதாபிகள் அனைவரும் போலிகள் என்று கூறுவதுபோல் உள்ளது...பலர் மனம் புன்படும்..தயவுசெய்து மாற்றவும்..//
நான் அனைத்து திமுக அனுதாபிகளையும் போலிகள் என்று சொல்லவில்லை. ஆனால் இங்குள்ள போலிகள் பெரும்பாலும் திமுக அனுதாபிகளாகவே உள்ளனர். அவர்களுடைய இலக்குகள் எல்லாம் திமுக-வின் குறைகளை சுட்டிக்காட்டுபவர்களை நோக்கியே உள்ளது என்பதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
போலி தன்னுடைய விளையாட்டை என்னிடமும் காட்ட ஆரம்பித்துவிட்டதால் என்னுடைய சரியான தளத்தை தமிழ்மணம் வாசகர்கள் அனைவருக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.
என்னுடைய தளத்திற்கும், போலியுடனுடைய தளத்திற்கும் ஒரே ஒரு சிறிய வித்தியாசம் தான் என்னுடைய தளம் "je"-வுடன் ஆரம்பிக்கும், போலியுடைய தளம் "ja" வுடன் ஆரம்பிக்கும்.
என்னுடையது
http://jeyakumar777.blogspot.com
profile
http://www.blogger.com/profile/20967563
போலியுடைது.
http://jayakumar777.blogspot.com/
போலியுடைய profile
http://www.blogger.com/profile/25330994
//நீங்கள் தப்பித் தவறி ஜெயலலிதாவையோ பார்ப்பனராய் இருக்கும் ஒருவர் சொன்ன சரியான கருத்தை ஆதரித்தோ எதுவும் சொல்லாத வரை உங்கள் பெயரில் போலிகள் உருவாகமாட்டார்கள்.//
இது ஒருவகையான மிரட்டல் போல உள்ளது.
போலி என்னுடைய புகைப்படத்தை என்னுடைய அடையாளங்களை பயன்படுத்தாமல் இருக்கும் வரை நான் அவரை ஒன்றும் சொல்லப்போவதில்லை.
அவருக்கு என்மேல் எதாவது பிரச்சனை இருந்தால் அவர் என்னிடம் இமெயில் மூலம் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
ஹூம். விளையாட்டு இன்னும் முடியவில்லை போலிருக்கிறது. எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் ஒருமுறை என் Identity checker பக்கத்தை சுட்டிக்காட்டிவிட்டு போகிறேன்.
http://anniyalogam.com/scripts/idchecker.php
திரு டோண்டு ராகவன் அவர்களே,
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி!. பல போலிக்கள் வந்தாலும், அதற்கெல்லாம் பயந்து ஒதுங்கி அவர்களின் எண்ணம் வெற்றிபெறாமல் செய்ததற்கு என்னுடைய பாராட்டுகள்.
//என்னுடைய பெயரில் போலி// இது நல்ல கருத்து ஆனால் அவரும் உண்மை தானே அப்புறம் எப்படி அவர் சொல்வது போலியாகும் ? உங்கள் பெயரில் யாரும் எதுவும் எழுதக்கூடாது என்று சொல்வதுபோல் இருக்கிறது. டைரக்டர் மகேந்திரன் எனக்கு பின்னூட்டம் போட்டு நீபோலின்னு சொல்லிட போறார்:))
மகேந்திரன்.பெ என்றால் பெரிய மனசு என்று அர்த்தம் , தன் பெயரையே போலிக்கு கடன் தந்துள்ளாரே . அப்புறம் ஏன் அவர் போலிக்கு தூக்கு தூக்க மாட்டார் ?
Post a Comment
<< Home