$user_name="Jeyakumar";

Tuesday, May 30, 2006

சர்வதேச இலவச அழைப்புகளுக்கு... இந்தியாவுக்கு 2.50 ரூபாய்

அன்பான தமிழ்மணம் வாசகர்களுக்கு,

நீங்கள் ஏற்கனவே voipstunt என்ற மென்பொருள் பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம். இதன் மூலம் அமெரிக்க, ஜ்ரோப்பா மற்றும் சில வளர்ந்த, வளர்ந்து கொண்டிருக்கிற (சீனா உட்பட) பல ஆசிய நாடுகளுக்கும் , இலவசமாக அவர்களின் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் (அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் செல்போன் அழைப்புகள் இலவசம்).

இப்போது அதே நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள voipcheap என்ற மென்பொருள் மூலமாக இந்தியாவை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இந்திய நாணய மதிப்பில் நிமிடத்திற்கு சுமார் 2.50 ரூபாய்க்கு அழைக்கலாம்(செல்போன் உட்பட).

இதில் இலவசமாக சோதித்துப்பார்க்கும் வசதியும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் நீங்கள் கட்டணம் செலுத்தாமல் குறைந்தபட்சம் ஒரு நிமிடம் பேசலாம். பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். ஆனால் இந்த வசதியை நீங்கள் பலமுறை சோதித்துபார்க்கலாம். ஓவ்வொரு முறையும் உங்களால் ஒரு நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து பேச முடியாது.

நீங்கள் தொடர்ந்து பேசவேண்டுமானால் நீங்கள் குறைந்த பட்சமாக €10.00 கட்டணம் செலுத்து உங்கள் கணக்கை துவக்கலாம். இதன் மூலம் இலவச அழைப்புகளை தடங்கல் இல்லாமல் பல மணி நேரமும், கட்டண அழைப்புகளை தடங்கல் இல்லாமல் தொடர்ந்தும் பேச முடியும். இந்தியாவில் உள்ள உங்கள் உறவினர் வீட்டில் அகன்ற அலைவரிசை internet வசதி இருந்தால், அவர்களிடம் உங்களுடைய username and password -ஜ் கொடுத்து இந்த மென்பொருள் மூலமாக உங்களை தொடர்புகொள்ளச் செய்யலாம். நீங்கள் இலவச அழைப்புகள் வசதி வழங்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்தால், இது மிகவும் வசதி தானே.

வீட்டை விட்டு தொலை தூரம் இருக்கிறோம் என்ற எண்ணம் இதன் மூலம் நீங்க வாய்ப்புள்ளது. இந்த வசதியை voipstunt மூலமாக பல மாதங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அனுபவிக்க வாழ்த்துக்கள்.

11 Comments:

At 7:14 AM, Blogger மகேஸ் said...

JK. இதுல ஏதாவது உள்குத்து/வெளிக்குத்து இருக்கா?

 
At 7:25 AM, Blogger ஜெயக்குமார் said...

நான் இப்போது தான் பரிசோதனை செய்து பார்த்தேன். இந்தியாவில் சாதரண தொலைபேசியையும் , செல்போனையும் அழைத்தேன். எந்த தடையும் இல்லை. சரியாகத்தான் வேலைசெய்கிறது. ஆனால் skype - யுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிறிது தொந்தரவுகள் (noise) இருக்கத்தான் செய்கிறது. கூடிய சீக்கிரம் இன்னும் தரத்துடன் இதுபோன்ற மென்பொருட்கள் வர வாய்ப்புள்ளது.

 
At 7:37 AM, Blogger வானம்பாடி said...

10 யூரோ சென்ட்கள் கிட்டத்தட்ட 5.50 - 6.00 இந்திய ரூபாய்தானே, எப்படி 2.50 ரூபாய் என்று சொல்கிறீர்கள்?

 
At 7:43 AM, Blogger ஜெயக்குமார் said...

சுதர்சன் நீங்கள் சொல்லுவது voipstunt-ல் நான் சொன்ன 2.50 voipcheap-ல்.
தயவு செய்து மீண்டும் சரி பார்க்கவும்.

india (Landline & Mobile) SuperDeal! 5 (including VAT) 5.80

 
At 12:55 AM, Blogger வானம்பாடி said...

நீங்கள் சொல்வது சரிதான் ஜெயக்குமார். இதே நிறுவனம் VoipDiscount, VoipStunt, VoipBuster, Internetcalls, WebCallDirect என்று பல சேவைகளை தருவதால் எதில் பார்த்தேன் என்று தெரியவில்லை. நன்றி!

 
At 2:33 AM, Blogger ரவி said...

செய்திக்கு நன்றி...

 
At 2:51 AM, Blogger ஜெயக்குமார் said...

சுதர்சன், சுமா

உங்கள் வருகைக்கு நன்றி!.

 
At 3:16 AM, Anonymous Anonymous said...

Thanks for your info JK :)
But, you cannot continue use free service 1 min.Since the conversation interest will be lost.

 
At 4:34 AM, Blogger ஜெயக்குமார் said...

//But, you cannot continue use free service 1 min.Since the conversation interest will be lost.//

calling card-க்காக நீங்கள் செலவு செய்யும் தொகைக்கு நீங்கள், இதில் உங்கள் கணக்கை துவங்கலாமே. உங்களுடைய credit card மூலம் கணக்கை துவக்க பயமாக இருந்தால், paypal மூலமாக செலுத்தலாம்.

 
At 3:30 AM, Blogger Udhayakumar said...

Don't publish this comment!

Somebody put a comment on your name and I had a doubt in it...

http://jayakumar777.blogspot.com/

I am not going to publish the comment.

 
At 4:55 AM, Blogger ஜெயக்குமார் said...

தமிழ் மணத்தில் சில போலிகள் என் பெயரில் சில பிண்ணூட்டங்களை இட்டு வருகின்றன. என்னுடைய blog போலவே ஒரு blog-ஜ் உருவாக்கி இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பதிலுக்கு என்னாலும் இதுபோன்று செய்யமுடியும். ஆனால் அது போன்ற மட்டமான செயல்களில் ஈடுபட மனமில்லை.

இதில் குறிப்பிடவேண்டிய விசயம் என்னவென்றால், அவர்கள் அணைவரும் திமுக அனுதாபிகள், கருணாநிதியின் அடிவருடிகள். இது அவர்களின் புத்தி, மாற்ற முடியாது.

இதிலிருந்து என்னுடைய பதிவுகளும், பிண்ணூட்டங்களும் அவர்களை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. விவாதங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

என்னுடைய பெயரில் உங்கள் பதிவுகளில் பிண்ணூட்டங்கள் வந்தால், தயவு செய்து என்னுடைய இமெயில் முகவரிக்கு (jeyakumar777@yahoo.co.uk) தொடர்புகொண்டு உறுதிசெய்துகொண்டு பின்பு வெளியிட வேண்டுகிறேன்.
இதே பொல போலியான பதிவுகளும் வர வாய்ப்புள்ளதால், என்னுடைய பதிவுகளைப் படிக்குமுன் இந்த http://jeyakumar777.blogspot.com முகவரியில் இருந்து வெளிவந்துள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். அதே போல பிண்ணூட்டங்கள் என்னுடையதா என்பதை சரிபார்க்க, வெளியிட்டவரின் profile (http://www.blogger.com/profile/20967563) இதுதானா என்று சரிபார்க்கவும்.

மிக்க நன்றி!.

 

Post a Comment

<< Home