$user_name="Jeyakumar";

Friday, June 02, 2006

போலிக்கு சில கேள்விகள்!..

நான் நேற்று முன் தினம் தான், என்னுடைய பதிவுகளில் இருந்து அதர் ஆப்சனை நீக்கினேன். இதற்கு முன்னர் அணானிமஸாக வந்து என்னை திட்டிக்கொண்டிருந்தவருக்கு, தொடர்ந்து என்னைத்திட்ட வேறு வழியில்லாமல் போலி தளம் உருவாக்கவேண்டி அவசியம் ஏற்பட்டுவிட்டது.

தமிழ் மணத்தில், ஆங்கிலப்பெயர்களுடன், தமிழர்களின் பாதுகாவலர்கள் போல வேசமிட்டு திரியும் இரு நயவஞசகர்களின் வேலையாக இது இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.

நான் என்னுடைய பதிவுகளில் , கருணாநிதியையும், அவரது குடும்ப அரசியல் மற்றும் குடும்ப ஊடங்களை பற்றியும் அதிகமாக விமர்சிக்கிறேன். அதற்கு என்னிடம் சில காரணங்கள் உள்ளன. நான் ஒட்டு மொத்த திமுக-வையும் விமர்சித்ததில்லை. திமுக விலும் பி.டி.ஆர் போல சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அவர்கள் யாரையும் விமர்சிப்பதில்லை. போலியான கவர்ச்சி காட்டி மக்களை ஏமாற்றுபவர்களைத்தான் விமர்சித்துள்ளேன். ஜெயலலிதாவின் தவறான அனுகுமுறையையும் விமர்சித்துள்ளேன்.

தமது சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்தாமல் மற்ற சமூகத்தினரை திட்டுவதிலேயே தன்னுடைய காலத்தை வீணாக்கிக்கொண்டிருப்பவர்களைப் பற்றியும் விமர்சித்துள்ளேன்.

போலி குறிப்பிடுவது போல நான் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் இல்லை, கண்மூடித்தனமாக எதிர்க்கவும் இல்லை.

போலிக்கு நான் கூறுவது என்னவென்றால். இந்த உலகில் ஒவ்வொன்றும் Unique. ஒன்றைபோல ஒன்று இல்லை. உதாரணமாக ஒரு மரத்தில் இருக்கும் இலைகள் கூட ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. மனிதர்கள் மட்டும் ஏன் அவ்வாறு இருக்க முயலவேண்டும்?. இதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?. அதனால் நீங்கள் அடையபோகும் லாபம்தான் என்ன?. இதுபோன்ற வீணான செயல்களில் ஈடுபட்டு உங்களுடைய காலத்தையும் திறமையையும் ஏன் வீணாக்குகிறீர்கள்.

16 Comments:

At 5:08 AM, Anonymous Anonymous said...

ஒரிஜினல்களே தங்கள் பெயரில் போலிகளை உருவாக்கி அல்ப விளம்பரம் தேடும் கலாச்சாரம் தமிழ்மணத்தில் உருவாகி இருக்கிறது. இதெல்லாம் ஒரு பொழைப்பு தூ....

 
At 5:36 AM, Blogger நாகை சிவா said...

ஜெயகுமார், உங்கள் பெயரில் சில பின்னூட்டங்கள் என் பதிவில் வந்துள்ளது. உங்கள் படத்தை பார்த்து ஏமாந்து விட்டேன்.

 
At 5:38 AM, Blogger நாகை சிவா said...

அந்த பின்னூட்டங்களை இன்னும் நீக்கவில்லை. அநாகரிமாக எந்த ஒரு வார்த்தையும் அதில் இல்லை. ஒரு அனாமி தான் அதை சுட்டிக் காட்டினார். நீங்கள் கூறினால் உடனடியாக அழித்து விடுகின்றேன்.

 
At 5:47 AM, Blogger ஜெயக்குமார் said...

சிவா,

போலியை அடையாளம் கண்டுகொள்ள, கீழே குறிப்பிட்டுள்ள தளத்தில் உள்ள விளக்கத்தை படியுங்கள்.

http://jeyakumar777.blogspot.com/2006/06/blog-post_01.html

நன்றி!

 
At 5:52 AM, Blogger ஜெயக்குமார் said...

என்னுடைய கருத்து என்று நினைத்து நீங்கள் வெளியிட்டு இருந்தால் தயவுசெய்து அதை நீக்கிவிடவும்.

என்னுடைய பிண்ணூட்டங்களை அடையாளம் கண்டுகொள்ள அது blog ID: 20967563 யில் இருந்து வந்துள்ளதா என்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

 
At 11:46 PM, Blogger Unknown said...

அன்புள்ள திரு ஜெயக்குமார் அவர்களுக்கு.
தங்களின் பெயரில் வந்திருந்த வேறொருவரின் அனைத்து பின்னூட்டமும் அழிக்கப் பட்டது. தங்களின் பின்னூட்டமும் அழிக்கப்பட வேண்டுமா என்பதை தெரிவித்தால் அதையும் செய்கிறேன். விஷயம் இத்தனை விபரீதமானதற்க்கு மன்னிக்கவும் அன்புடன் மகேந்திரன்.பெ

 
At 11:48 PM, Blogger Unknown said...

அன்புள்ள திரு ஜெயக்குமார் அவர்களுக்கு.
தங்களின் பெயரில் வந்திருந்த வேறொருவரின் அனைத்து பின்னூட்டமும் அழிக்கப் பட்டது. தங்களின் பின்னூட்டமும் அழிக்கப்பட வேண்டுமா என்பதை தெரிவித்தால் அதையும் செய்கிறேன். விஷயம் இத்தனை விபரீதமானதற்க்கு மன்னிக்கவும் அன்புடன் மகேந்திரன்.பெ

 
At 12:06 AM, Blogger ஜெயக்குமார் said...

திரு மகேந்திரன் அவர்களுக்கு,

உங்கள் பதிவுகளுக்கு வந்த பிண்ணூட்டங்களை வெளியிடும் உரிமை அல்லது நீக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது. ஆனால் என்னால் உங்களிடம் என்னைப்போன்று பிண்ணூட்டம் இடும் போலியின் பிண்ணூட்டங்களை நீக்க கேட்டுக்கொள்ளத்தான் முடியும். வேறு எந்த உரிமையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நீங்கள் உங்களின் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள். என்னுடைய பிண்ணூட்டங்களை வெளியிடுவதும், நீக்குவதும் உங்களுடைய விருப்பத்தைப் பொருத்தது.

 
At 9:16 AM, Blogger ஜெயக்குமார் said...

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி செல்வா.

 
At 10:25 AM, Blogger Unknown said...

//தமிழ் மணத்தில், ஆங்கிலப்பெயர்களுடன், தமிழர்களின் பாதுகாவலர்கள் போல வேசமிட்டு திரியும் இரு நயவஞசகர்களின் வேலையாக இது இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.//

அந்த இருவரில் நானும் ஒருவரென்று நீங்கள் யாராவது சந்தேகப்பட்டால் நன்றி. சந்தேகப்படவில்லையென்றால் மிக்க நன்றி. நான் ஆங்கிலப்பெயர் பயன்படுத்துவது, போலி என் பெயரை தவறாக உபயோகித்தால் ப்ளாக்கரிடம் முறையிட சுலபமாக இருக்கும் என்ற காரணத்துக்காக.

 
At 10:30 AM, Blogger ஜெயக்குமார் said...

"வெங்கடரமணி" என்பது ஆங்கிலப்பெயராக தெரியவில்லையே?!. நான் சொல்லும் நபர்களின் பெயர்களே ஆங்கிலப்பெயர்கள். தமிழ்ப் பெயரை ஆங்கிலத்தில் எழுதியுள்ளவர்கள் அல்ல.

 
At 10:51 AM, Blogger Unknown said...

நன்றி ஜெயக்குமார். எதற்கும் இருக்கட்டும் என்றுதான் விளக்கினேன். அநாகரிக வார்த்தைகள் இல்லாமல் ஆனால் சிண்டுமுடியும் வேலை ஆரம்பித்திருக்கிறது போலிருக்கிறது. நாகை சிவா போன்ற எத்தனை பேர் இதில் ஏமாறுவார்களோ?

'மட்டுறுத்தல் நண்பன்' இதில் உதவலாம். செட்டப் செய்ய தேவைப்படும் நேரம் -பத்து நிமிடம்.

இதுவும் எதற்கும் இருக்கட்டும் என்று சொல்லி வைப்பது.

 
At 12:06 AM, Blogger ILA (a) இளா said...

போலி பற்றி எழுதிய எனக்கு வந்த முதல் பின்னூட்டமே உங்கள் போலி. மட்டுறுத்தியாயிற்று.
http://vivasaayi.blogspot.com/2006/06/blog-post_114974319325553983.html

 
At 1:11 AM, Blogger ஜெயக்குமார் said...

//போலி பற்றி எழுதிய எனக்கு வந்த முதல் பின்னூட்டமே உங்கள் போலி. மட்டுறுத்தியாயிற்று.
/

மட்டுறுத்தியதற்கு நன்றி இளா.

ஆனால் சிலர் போலியின் பின்னூட்டங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். இன்று கூட லக்கிலுக்கின்
(http://madippakkam.blogspot.com/2006/06/blog-post_08.html)
பதிவில் போலியின் பின்னூட்டத்தை அவர் வெளியிட்டிருந்தார்.

 
At 12:00 AM, Blogger லக்கிலுக் said...

சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஜெயக்குமார்... நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்டம் நீக்கப்பட்டு விட்டது...

பொதுவாக எனக்கு technical knowledge குறைவாக இருப்பதால் யார் போலி, யார் ஒரிஜினல் என்று அறியமுடியவில்லை.... மறுமொழியில் ஆபாசம் ஏதும் இல்லையென்றால் வெளியிட்டு விடுகிறேன்....

 
At 2:45 AM, Anonymous Anonymous said...

ஏ அப்பா செயக்குமாரு,
பளய பதிவுலெல்லாம் உன்னோட குடும்பத்து போட்டா போட்டிருக்கியா ? இருந்தா மொதே வேலயா அதுகள அளிக்கிற வேலயப்பாரு.

போலி கோஷ்டி அடுத்து கதே எளுதுற வேலய ஆரமுச்சிரும். எல்லப் பய புள்ளகளும் நல்லாப் படிச்சி பெரிய வேலயில இருக்கீக, ஆனா "personal information"ன வெளியெ தெரியாம வச்சிருக்கணூமினு தெரியலியே. என்னமோ போ.

 

Post a Comment

<< Home