தமிழகத்தின் தலைப்புச்செய்தியாக வேண்டுமா?
சில வாரங்களுக்கு முன் தமிழ் மணத்தில் ஒருவர் தினகரனின் இமாலய சாதனையைப் பற்றி ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.
அந்த பத்திரிக்கையில் நீங்கள் தலைப்புச்செய்தியாக வேண்டுமா? இதோ சில யோசனைகள்
1. உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் நடக்கும் சினிமா அல்லது தொலைக்காட்சித்தொடர் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லுங்கள். அங்கு இருக்கும் கதாநாயகியைக் கூட வேண்டாம், ஒரு துணை நடிகையை நீங்கள் (அடிக்கக்கூட வேண்டாம்) சற்று மிரட்டிவிட்டு வாருங்கள் போதும். அன்றைய மாலை "தமிழ் முரசு" மற்றும் மறுநாள் தினகரனின் தலைப்புச்செய்தியாக
நீங்கள் இருப்பீர்கள்.
குறிப்பு: உங்கள் புகைப்படம் வரவேண்டுமென்றால் நீங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லுமுன் இந்த பத்திரிக்கைகளுக்கும்,சன் தொலைக்காட்சிக்கும் இது பற்றிய ஒரு மொட்டைச் செய்தியை முன் கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும்.
2. ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வைகோவை கைது செய்யச்சொல்லி அருகில் இருக்கும் காவல் நிலையத்தின் ஆய்வாளருக்கு ஒரு புகார் மனு ஒன்றை எழுதுங்கள். காவல் நிலையம் செல்லுமுன் சன் தொலைக்காட்சிக்கும், மேலே குறிப்பிட்ட தமிழகத்தின் தரமான பத்திரிக்கைகளுக்கும் "தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகவும், தமிழகத்தை பதட்டம் மிகுந்த பகுதியாக மாற்றும் விதமாகவும் பேசும் வைகோ-வை கைது செய்யச்சொல்லி வழக்கு பதிவு செய்யப்போகிறொம்" என்று தகவல் சொல்லி விடுங்கள். அதோடு காவல் நிலையத்தின் முகவரி நீங்கள் செல்லும் நேரம் ஆகியவற்றையும் தெரிவித்து விடுங்கள்.
அப்புறமென்ன? அன்றைய இரவு 8 மணி செய்திகளில் நீங்கள் தான் தலைப்பு செய்தி.
குறிப்பு: உங்களுடைய பேட்டி நிச்சயமாக் ஒளிபரப்பாகும், எனவே திக்கி தினறாமல் பேட்டி கொடுக்க நன்றாக பயிற்சி எடுத்து வரவும்
12 Comments:
:))))))))
ஜெயா டி.வியில் வர வேண்டுமா:
சிக்கன் குனியா நோயால் மக்கள் எவ்வளவு தூரம் பாதிப்படைந்துள்ளனர் என்று விரிவாக பேட்டி கொடுங்கள்.
(அந்த நோய் வந்தால் ஜூரம் நின்றபிறகு கூட 15 நாட்களுக்கு கை கால் வீக்கமும், வலையும் இருக்கும் என்பதை பேச்சியின்போது மறந்து விட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருந்து கொடுத்தும், ஊசி போட்டும் கூட இன்னமும் கை கால் வலி இருப்பதாகவும், அரசின் இந்த மெத்தனப் போக்கினாலேயே வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றும் பெருத்த அளவில் அரசு நஷ்ட ஈடு கொடுத்தால் பரவாயில்லை என்றும் பேச்சியளித்தீர்கள் என்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு நீங்கள்தான் சிறப்புச் செய்தியாளர்.)
ஜெயா...!
இதைத் தான் இவ்வளவு நாளா மிஸ் பண்ணினேன்.
பி.கு : இது பதிவுக்கான பின்னூட்டம் அல்ல. பதிவு வந்ததற்கான பின்னூட்டம்
:))
ஜாய் ஜாய் ! என்ஜாய் !
சூப்பரப்பு!
பேசாம ஒரு வாக்கெடுப்பு நடத்திடலாம் - இனையத்தில் எந்த கட்சியில் யார் ( டார்) என்று..
//பேசாம ஒரு வாக்கெடுப்பு நடத்திடலாம் - இனையத்தில் எந்த கட்சியில் யார் ( டார்) என்று..//
அதையும் நீங்களே துவக்கி வைத்துவிடலாமே ரவி!
//குறிப்பு: உங்களுடைய பேட்டி நிச்சயமாக் ஒளிபரப்பாகும், எனவே திக்கி தினறாமல் பேட்டி கொடுக்க நன்றாக பயிற்சி எடுத்து வரவும்//
அதற்கு முன்னர் அழகு நிலையம் சென்று தங்களை அழகு படுத்திக்கொண்டால், பார்வையாளர்களை பயப்படவைக்காமல் தப்பிக்கலாம்.
ஐயா செயகுமாரு எங்கய்யா போயிருந்திக இம்புட்டு நாளக
எலக்சனுக்கு அப்புறமா ஒங்கள
கானமே. மவராச இப்பவது வந்திகளே
வாங்க வாங்க செளாவுகியமா இருகிகளா.
எப்படி நீங்களே ஒரு போலிய உண்டாக்கி போலி போலின்னு கத்தி பிறகு கொஞ்ச நாள் காணாம போனிங்களே? அப்படியா?
அடுத்த வார குங்குமத்தில் உங்கள் பெயர் வரவேண்டுமா ? குங்குமம் 6 கோடி பிரதி விக்குதுன்னு ஒரு பதிவு அடிச்சு விடுங்க , தினகரன் உலகத்திலேயே நெ 1 என்று ஒரு சர்வே எடுத்து விடுங்க , எதாவது "LUCKY" ல கவுதம் பாத்தா குங்குமத்தில் உங்கள் பெயர் வந்துரும் .
என் பெயரில் உருவாகியுள்ள போலியின் IP சேகரிக்கப்பட்டு விட்டது. வெகு விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆப்பு வைக்கப்படும். எவ்வளவு செலவானாலும் கவலைப்படபோவதில்லை. சந்திக்க போலி தயாராக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் சொல்வது அருமை
Post a Comment
<< Home