$user_name="Jeyakumar";

Monday, December 18, 2006

மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள ரஜினி வாய்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது எதையாவது பேசி பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். ஆனால், சமீபத்தில் அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிக்கிறது. நடிகர் விவேக் கதாநாயகனாக நடிக்கும் ‘சொல்லி அடிப்பேன்’ என்ற படத்தின் ஆடியோ கேசட் விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, ‘‘விவேக் அரசியலும் பேசுவார், ஆன்மிகமும் பேசுவார், கம்ப்யூட்டர் பற்றியும் தெரியும், பூகோளம் பற்றியும் தெரியும். இவ்வளவு அறிவு ஜீவியான விவேக் ஒரு பிராமணராக இருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பின்னர்தான் தெரியவந்தது’’ என்று ஆச்சரியப்பட்டுப் பேசியிருந்தார்.

விவேக் பற்றி ரஜினி கூறியுள்ள இந்த கமெண்ட்தான் பெரும் சர்ச்சையைக் கிளம்பியுள்ளது. தேவர் இனத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவரை பிராமணர் என்று சொல்லியதன் மூலம் ஒட்டுமொத்த தேவர் இனத்தையே ரஜினி அவமானப்படுத்திவிட்டார் என்று எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசினார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனரான டாக்டர்சேதுராமன். ‘‘தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த விவேக் பற்றி ரஜினிகாந்த் பேசியிருப்பது அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது. தேவர் இனத்தில் மட்டுமின்றி எல்லா சமுதாயத்திலும் அறிவாளிகளும், நல்லவர்களும் இருக்கிறார்கள். அதுபோல் பிராமண சமுதாயத்தில் வன்முறை எண்ணம் கொண்டவர்களும், முட்டாள்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார் ரஜினி.

யதார்த்தம் இப்படியிருக்க... தேவர் இனத்தை இழிவுப்படுத்துவது போல அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ரஜினி வெறும் நடிகர் மட்டுமல்ல. ரஜினியின் வாய்ஸ§க்கு இன்னமும் ஒரு மதிப்பிருப்பதால்தான் அவர் கூறியிருப்பதைக் கண்டிக்கிறோம்.

இதுபோன்று அறியாமையால் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசும் பழக்கத்தால்தான் அவரால் அரசியலில் நுழையக்கூட முடியவில்லை. தேவர் சமுதாயத்தின் பெருமையைப் பற்றித் தெரியாத ரஜினிக்கு, சில விஷயங்களைச் சொல்லிக்காட்டுகிறேன். விவேகானந்தரை சிகாகோவிற்கு அனுப்பிப் பெருமை சேர்த்தது நம் தேவர்தான். முதன்முதலாக தமிழ்ச் சங்கத்தை நிறுவிய வள்ளல் பாண்டித்துரையும் ஒரு தேவர்தான். எல்லா சமுதாய மக்களும் ஒரு தாய் மக்களே என்று குரல் கொடுத்து, அரசியல் புரட்சி செய்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரய்யா பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? இப்படி தமிழகத்திற்கும், இந்தச் சமுதாயத்திற்கும் எண்ணிலடங்கா சேவைகளைச் செய்த தேவர் இனத்தைக்
கொச்சைப்படுத்திவிட்டார் ரஜினி.

தென்பாண்டி மண்டலங்களில் பல கோயில்களையும், கோட்டைகளையும் கட்டிய பரம்பரை, தேவர் பரம்பரைதான். நம்மை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையனை வீரத்தோடு எதிர்த்தவர்களில் தேவர்கள்தான் அதிகம். இன்றைக்கும் கல்வியில் சிறந்த பலர் தேவரினத்தில் இருக்கிறார்கள். என்னைப் போன்றவர்கள்கூட கல்வியில் 17_க்கும் மேற்பட்ட தங்க மெடல்கள் வாங்கியிருப்பது, அந்த கோடம்பாக்கத்திற்கு எப்படித்தான் தெரியாமல் போனதோ?

புத்திசாலி என்றால் பிராமணர் என்றும், தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரா இப்படி வளர்ந்திருக்கிறார் என்று வியந்தும் பேசி, தேவர் சமுதாயத்தை மட்டம் தட்டிப் பேசியிருப்பதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் சமுதாய இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு போயஸ்கார்டனிலுள்ள ரஜினியின் வீட்டுக்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது.

இதையெல்லாம் தாண்டி அந்த மேடையில் ரஜினி பேசியதற்கு எங்கள் உறவினர் விவேக் உரியமுறையில் பதில் தெரிவிக்காததும் கண்டிக்கத்தக்கது. சரி... இவர்தான் சொல்லவில்லை. அந்த விழாவில் நடந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, இதே சமுதாயத்தைச் சேர்ந்த பாரதி ராஜா, வைரமுத்து போன்றவர்கள் கூட எதுவும் சொல்லாதது வருத்தமாகத்தான் இருக்கிறது!’’ என்று ஆவேசமும், ஆதங்கமுமாகப் பேசி முடித்தார் டாக்டர் சேதுராமன்.

ரஜினியின் வாய்ஸ் என்றாலே சர்ச்சை என்று மறுபடியும் நிரூபணமாகியுள்ளது!

--நன்றி குமுதம்

12 Comments:

At 4:58 AM, Blogger வெங்கட்ராமன் said...

நண்பரே, குமுதம் மட்டும் படித்து விட்டு பேசாதீர்கள்.
இதைப்பற்றி முழுமையான விஷயத்தை குமுதம் மறைத்து விட்டது.

மேலே சொல்லப்பட்ட விஷயம் எடிட் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது.

உண்மையிலேயே அவர் பேசியது

அவர் மிகப்பெரிய அறிவாளி. விஞ்ஞானம், கம்ப்ïட்டர், வரலாறு, புவியியல் என்று எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிருக்கார்.


எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க.

இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. பாலசந்தர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். எல்லார்கிட்டேயும் நல்லா பழகுவார்.

விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள்
பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.

http://rajapattai.blogspot.com/2006/12/blog-post_17.html
என் பதிவில் இந்த விஷயத்தைப் பற்றி தெளிவாக வெளியிட்டுள்ளேன்.

நன்றி குமுதம், என்பதை குமுததை வணமையாக கண்டிக்கிறோம் என்று மாற்றிவிடுங்கள்

 
At 5:02 AM, Anonymous Anonymous said...

ஜெயா அதெல்லாம் வுடுங்க, எங்க இவ்ளோ நாள் ஆள காணோம். நலமா

 
At 6:06 AM, Anonymous Anonymous said...

ஜெயா அண்ணே, வாங்க வாங்க!

இந்த மடக்கழுதை சொல்லி இருப்பது போல ரஜினி பேசவே இல்லை.

அவர் பேசியதின் முழு விவரம்:
டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்தபோது பயந்தேன். ஷாட் ஓ.கே. ஆகுமா என்கிற தவிப்பு எனக்குள் இருக்கும். அவர் படங்களில் நடித்து 30 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சிவாஜியில் நடிக்கும்போதும் அதே பயம் இருக்கிறது. ஷாட் ஓ.கே. ஆகுமா, ஷங்கர் ஏத்துக்கிட்டாரா என்றெல்லாம் யோசிக்கிறேன்.

இதில் விவேக்கும் என்னோடு நடிக்கிறார். சிவாஜி ரிலீசுக்கு பிறகுதான் விழாக்களில் கலந்துக்கணும் என்று முடிவு எடுத்திருந்தேன். விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். சில விஷயங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இந்த விழாவையும் விதிவிலக்கா கருதி கலந்துக்க சம்மதித்தேன்.

`வீரா‘ படத்தில் விவேக் என்னோடு நடித்தார். அப்ப அவர் சின்ன பையன் மாதிரி இருந்தார். வசனம் நல்லா பேசினார். திறமைசாலி. அதன் பிறகு இப்போது `சிவாஜி’யில் முழு படத்திலும் விவேக்குடன் நடிக்கிறேன். எனக்கு ஷாட் முடிந்ததும் விவேக்குக்கிட்டே போய் உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பேன். அவர் மிகப்பெரிய அறிவாளி. விஞ்ஞானம், கம்ப்ïட்டர், வரலாறு, புவியியல் என்று எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிருக்கார்.

எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க.

இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. பாலசந்தர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். எல்லார்கிட்டேயும் நல்லா பழகுவார்.

விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.

புகழின் உச்சியில் இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கணும். புகழ் ஆயிரம் கிலோ பாறை மாதிரி. அதை `பேலன்ஸ்’ ஆக வச்சிக்கணும். கொஞ்சம் ஆடினால் காலில் விழுந்து விடும். விவேக் கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


அவ்வளவுதான்.

இதில எங்கய்யா தேவர்களை மட்டம் தட்டி இருக்காரு?

 
At 6:14 AM, Blogger மகேஸ் said...

JK அண்ணா, நலமா? அடுத்த இன்னிங்ஸ்கு தயாராயிட்டீங்க போல.

நல்லது அண்ணா. கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
At 2:08 AM, Blogger ஜெயக்குமார் said...

மகேஸ், செந்தில் உங்கள் வருகைக்கு நன்றி!
வெங்கட்ராமன், ரஜினியின் அறியாமையைத்தான் அவரது பேச்சு காட்டுகிறது. மிகுந்த அறிவுள்ளவர் என்றால் அவர் பிராமணனாகத்தான் இருப்பார் என்கிற அவரின் அறியாமையைத்தான் அவரது இந்த பேச்சு காட்டிகிறது. இதனால் அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவானவர் என்று அர்த்தமில்லை . ஆனால் இது போன்ற பொது இடங்களில் பேசும் போது சற்று யோசித்துப்பேச வேண்டும். அவர் பேச்சிலிருந்து அவர் தமிழகம் பற்றிய அறிவில் கூமுட்டை என்றுதான் தோனுகிறது. ஆனால் அவருக்கு தமிழகத்தில் இவ்வளவு ஆதரவும், ரசிகர் கூட்டமும் இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

 
At 2:40 AM, Anonymous Anonymous said...

//நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது.//

unnecessary open statement. when he is not believing caste, why does he quote this?

 
At 3:04 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

ஜெயக்குமார்,

எப்போ வருவே, எப்டி வருவேன்னு தெரியாம இருந்தது.

வரவேண்டிய நேரத்துக்கு தரவேண்டிய செய்தியோட வந்துட்டியே !
:)

 
At 2:41 AM, Blogger வெங்கட்ராமன் said...

/**************************

முதன்முறையாக அம்பேத்கர் அவர்கள் காந்தியை சந்தித்து பல விஷயங்களை பேசிச்சென்ற பின்னர், மற்றவர்கள் காந்தியிடம் அவர் தலித் என்பதை எடுத்துக்கூற காந்தி, 'அப்படியா அவர் புனே பிராமணர் என்றல்லவா நினைத்தேன்' என்று வியந்தாராம்.

**************************/


ஜெயகுமார், மேற்சொன்ன வரிகளை படித்தீர்களா . . . . ?
அதற்கு உங்கள் பதில் என்ன . . . .?

/********************
வெங்கட்ராமன், ரஜினியின் அறியாமையைத்தான் அவரது பேச்சு காட்டுகிறது. மிகுந்த அறிவுள்ளவர் என்றால் அவர் பிராமணனாகத்தான் இருப்பார் என்கிற அவரின் அறியாமையைத்தான் அவரது இந்த பேச்சு காட்டுகிறது
********************/

நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது என்று தானே சொன்னார்.

பதிவை முழுமையாக படித்தீர்களா. . . . ?

 
At 5:05 AM, Blogger ஜெயக்குமார் said...

//முதன்முறையாக அம்பேத்கர் அவர்கள் காந்தியை சந்தித்து பல விஷயங்களை பேசிச்சென்ற பின்னர், மற்றவர்கள் காந்தியிடம் அவர் தலித் என்பதை எடுத்துக்கூற காந்தி, 'அப்படியா அவர் புனே பிராமணர் என்றல்லவா நினைத்தேன்' என்று வியந்தாராம்.//

அது கல்வி பிராமணர்கள் மற்றும் உயர்குடியினருக்கே சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருந்த காலம்.

காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதில் சில ஜாதி பாகுபாடு குறித்தவை.

ரஜினி ஒருவேளை தனக்கும் தன் மனைவி மற்றும் மனைவி குடும்பத்திற்குமுள்ள அறிவு வேற்றுமையை நினைத்து இப்படி சொல்லி இருக்கலாம்.

அவர் முட்டாள் என்றால், பிராமணன் அல்லாத எல்லோரும் அறிவில் குறைந்தவர்கள் என்று அர்த்தமா?

 
At 8:11 AM, Blogger முஸ்லிம் said...

ஜெயக்குமார் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

///முதன்முறையாக அம்பேத்கர் அவர்கள் காந்தியை சந்தித்து பல விஷயங்களை பேசிச்சென்ற பின்னர், மற்றவர்கள் காந்தியிடம் அவர் தலித் என்பதை எடுத்துக்கூற காந்தி, 'அப்படியா அவர் புனே பிராமணர் என்றல்லவா நினைத்தேன்' என்று வியந்தாராம்.///

//அது கல்வி பிராமணர்கள் மற்றும் உயர்குடியினருக்கே சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருந்த காலம்.//

காந்தியும் அம்பேத்கரும் முதன் முறையாக சந்தித்து கொண்டதில் பல விஷயங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. அம்பேத்கர் சென்றவுடன் காந்தியிடம் 'அவர் தலித்' என்று ஏன் போட்டு கொடுக்க வேண்டும்? காந்தி ஒரு தலித்திடம் நெருக்கமாக இருப்பதை பொறுக்காதவர்களே இப்படி செய்திருப்பார்கள். அவர்களை திருப்திபடுத்தவாவது காந்தி 'அப்படியா...' என்று சொல்லியிருக்கலாமே.

எப்பவும் ஒரு தவறை இன்னொரு தவறோடு இணைத்து நியாயப்படுத்தலாமோ?

சொல்ல மறந்தது

ஜெயக்குமார் இந்த பதிவை நான்தான் முதலில் பதிகிறேன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கு முன்பே நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்.

 
At 3:27 AM, Blogger theevu said...

ரஜனி போன்றவர்கள் இது விடயமாக குமுதத்தை கண்டித்து அறிக்கை விடவேண்டும்.

 
At 4:40 AM, Blogger ஜெயக்குமார் said...

//ரஜனி போன்றவர்கள் இது விடயமாக குமுதத்தை கண்டித்து அறிக்கை விடவேண்டும். //

ரஜினிக்கு ஏது அவ்வளவு தைரியம். அவரின் பஞ்ச் டையலாக் எல்லாம் சினிமாவில் மட்டும்தான், அதுவும் யாராவது எழுதிக்கொடுத்தால்தான்.

ஒழுங்காக தமிழ் பேசத்தெரியாத ரஜினிக்கு தமிழ்நாட்டில் இவ்வளவு ரசிகர் கூட்டம் இருப்பது ஆச்சர்யமான விசயம்தான்!

அவன் தான் தமிழன்!

 

Post a Comment

<< Home