$user_name="Jeyakumar";

Thursday, April 05, 2007

சச்சினின் ஜமைக்கா சிக்கன்!

செய்யும் தொழிலே தெய்வம் என்று உள்ளவர்களால் தான் அந்த தொழிலில் உச்ச நிலையை அடைய முடியும். அதற்கு பல உதாரணங்களை நாம் சொல்லமுடியும். அதே சமயம் ஒருவர் இரு வேறு தொழில்களை செய்யும் போது தடுமாற்றங்கள் தவிர்க முடியாது. தான் செய்யும் எல்லா தொழில்களிலும் தங்கள் முழு திறமையை காட்டமுடியாமல் தவிர்ப்பர். இதனால் தடுமாற்றங்களும், அதனால் ஏற்படும் குறைபாடுகளும் சில சமயம் அவர்கள் செய்யும் அனைத்து தொழில்களையுமே பாதிக்கும்.

உதாரணமாக நம் கிரிக்கெட் வீரர்களை எடுத்துக்கொண்டால், முன்பெல்லாம் அவர்கள் ஏதாவது ஒரு அரசு அல்லது தனியார் அலுவலங்களில் வேலை செய்து வந்தனர் அல்லது ஓய்விற்கு பிறகு சிலர் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய துறைகளிலும் அல்லது வேறு துறைகளுலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். ஆனால் இப்போது நிலைமையே வேறு. சச்சின், ட்ராவிட், கங்கூலி மற்றும் சேவாக் போன்றவர்களி தங்களை தொழில் முறை ஆட்டக்காரர்களாக சில வருடங்களுக்கு முன்னால் அறிவித்தனார். சரி இனிமேல் அவர்கள் வேறு எந்த வேலையும் செய்யாமல் கிரிக்கெட்டையே தொழிலாக கொண்டு வளர்த்து , வாழ்ந்து , சுவாசிக்கப்போகிறார்கள் என்று பார்த்தால், சில நாட்களிலேயே டெண்டுல்கர் மும்பையில் ஒரு உணவு விடுதியைத்தொடங்கினார், அடுத்து சவுரவ், அதற்கு அடுத்து சேவாக், ஜாகிர்ஹான் என்று அனைவரும் ஹோட்டல் தொழிலில் இறங்கி சம்பாதிக்க ஆரம்பித்தனர். அன்று ஆரம்பித்த இந்திய கிரிக்கெட்டின் சரிவு இன்று உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறக் காரணமாயிருக்கிறது.

கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கிரிக்கெட் தவிர வேறு எதாவது தொழில் செய்து தங்கள் வருமானத்தை வளர்த்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தை முதலில் தொடங்கி வைத்தவர் எனக்கு தெரிந்து சச்சின் தான். அதனால் அவரின் கவனம் சிதறி கிரிக்கெட்டில் தன்னை ஒருமுகப்படுத்தி ஆட முடியாமல் தவிக்கிறார். இங்கிலாந்து வீரர் ட்ரஸ்கோதிக் தன் குடும்ப சூழலால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என்று தனது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பி நல்ல நிலையில் உள்ளமற்றவருக்கு

வாய்ப்பு கொடுத்தார். விடுதித் தொழில்தான் முக்கியம் என்றால் அதிலேயே முழுக்கவனமும் சச்சின் செலுத்தலாம், அதை விடுத்து ஒவ்வொரு இந்தியனின் கனவான உலகக்கோப்பையில் கவனக்குறைவாக விளையாடி நம்மைக் கேவலப்படுத்தனுமா?

உதாரணமாக இலங்கைக்கு எதிரான போட்டியில் சச்சின் களத்தில் மட்டையுடன் இறங்கும் போது என்ன யோசித்துக்கொண்டிருந்திருப்பாரென்றால்.. "நேற்று இரவு சாப்பிட்ட ஜமைக்கா சிக்கன் மிகவும் ருஷியாக இருந்தது, இந்தியா போனவுடன் நமது விடுதியில் இந்த டிஸ்ஸை சேர்த்து நமது வாடிக்கையாளர்களை குசிப்படுத்த வேண்டும்."

மூன்று பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் களத்தை விட்டு வெளியேரும் போது என்ன நினைத்திருப்பார் ..."ஜமைக்கன் சிக்கனை நமது விடுதியில் அறிமுகப்படுத்த இவ்வளவு சீக்கிரம் நேரம் வந்துவிட்டதே!, இந்த ட்ராவிட் பயலும், யுவராஜும் சீக்கிரம் அவுட்டாகி தொலைந்தால் நாளைக்கே ஊருக்கு கிளம்பிவிடலாம். யாரும் அறிமுகப்படுத்தும் முன்னர் ஜமைக்கன் சிக்கனை நம்ம விடுதியில் அறிமுகப்படுத்தி அதுக்கு காப்பி ரைட்சும் வாங்கிவிடலாம்..."


இனிமேலாவது BCCI வீரகள் அணியில் இருக்கும் போது மற்ற தொழில்களைல் ஈடுபடுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இப்போது உள்ள நிலையே தொடரும்.

0 Comments:

Post a Comment

<< Home