கார்த்திக் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசா?
திரைப்பட நடிகர் கார்த்திக் சில நாட்களுக்கு முன்னர் அவர் மீதான பண மோசடி வழக்குகளுக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அது போன்ற வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க, வழக்கு போட்டவர்களை மிரட்ட அவருக்கு ஒரு அரசியல் கட்சியுன் தயவு தேவைப்பட்ட நேரத்தில் அவர் முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்து அதிமுக- வில் சேர முயன்றார். அது சீக்கிரம் நடக்காமல் போகவே, ஒரு அறிமுகமான நடிகர் மற்றும் ஒரு சாதியை சார்ந்தவர் என்கிற ஒரு அடையாளத்துடன் "சரணாலயம்" என்ற ஒரு சாதீய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அரசியல் கட்சிகளின் பார்வை தன் மீது படர முயற்சி செய்தார். அவர் எதிர்பார்த்தது போலவே தமிழக அரசியலில் அவருக்கு ஒரு இடம் கிடைத்தது. இன்று அவர் பாரம்பரியம் மிக்க "பாரவர்டு பிளாக்" கட்சியின் மாநில தலைவர்.
கார்த்திக்கைப்ப்ற்றி திரையுலகிற்கு மட்டும் அல்ல தமிழகத்ததிற்கே நன்றாக தெரியும் அவர் ஒழுங்கீனத்தின் மொத்த உருவம் என்று. பல நடிகைகளுடன் தவறான உறவு வைத்திருந்தவர். "நடிகையின் கதை"-யின் நாயகனாகவே அவர் இருந்தார். ஏமாற்றிவிட்டு கைவிட்டுவிடலாம் என்றிருந்த ஒருவரை அவர் சார்ந்த மலைவாழ் மக்களின் மிரட்டலுக்காக திருமணம் செய்து கொண்டவர். தன் மனைவியின் தங்கையைகூட விட்டுவைக்காத அவரை தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவரும், நேதாஜி அவர்களுடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவரும், சிறந்த சொற்பொழிவாளருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருடன் ஒப்பிடுப்பேசுவதும், அவர் பாதுகாத்த கட்சியை இனிமேல் இவர்தான் காக்கப்போகிரார் என்கிற ரீதியில் பேசுவதும் அந்த மாகனை இழிவுபடுதும் செயலாகும்.
அம்பேத்கார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் மற்றும் சிதம்பரனார் போன்றவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன் நாட்டிற்கும், தன் மக்களுக்கும் சாதி மதம் பாராது உழைத்தவர்கள். அத்தகைய மகான்களை ஏதோ ஒரு சாதிச்சங்கத்தலைவர் போல ஒரு குறுகிய வட்டதில் அடைத்து அதன் மூலம் அரசியல் லாபமடையப்பார்க்கும் ஒரு சில சமூக விரோத சக்திகளை நம் மக்கள் அடையாளம் கண்டு அப்புறப்படுத்தவேண்டும். அதற்கு இந்த தேர்தல்தான் சரியான தருணம்.
இந்த தேர்தலில் மக்கள் வெரும் குறுகியகால சந்தோசங்களுக்காக தங்கள் விலைமதிப்பில்லாத வாக்குகளை விற்றுவிடாமல் நாட்டின் எதிர்காலத்தையும், நம் மக்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு திறமையுள்ள, தொலைநோக்கு பார்வையுள்ள குறிப்பாக பொது நலனில் அக்கறையுள்ள வேட்பாளர்களை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கவேண்டும்.
6 Comments:
அம்பேத்கார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் மற்றும் சிதம்பரனார் போன்றவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன் நாட்டிற்கும், தன் மக்களுக்கும் சாதி மதம் பாராது உழைத்தவர்கள்.
சூப்பர்டூப்பர் ஸ்டேட்மெண்டு தலை. தன் மக்கள் சரி. சாதி மதம் பாராது? விட்டா clicheல லஜ்ஜையே இல்லாம கைல வந்தத எழுதுவீங்கையா நீங்கல்லாம். நீங்க எழுதுனத போஸ்டு பண்ணமுன்னாடி நீங்களே ஒரு தடவ வாசிச்சுப் பாத்தா என்னவாம்? என்ன நாஞ் சொல்றது?
என்ன வாலு நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே. இங்கே தன் மக்கள் அப்படின்னா, அது நம் நாட்டு மக்கள் தானய்யா. அந்த வார்த்தைக்கு முன் தன் நாடு என்று குறிப்பிட்டுள்ளதை படிக்கவில்லையா நீங்கள்.
உங்கள் இதுபற்றி குறிப்பிட்டதற்கு நன்றியயையா நன்றி.
//கார்த்திக்கைப்ப்ற்றி திரையுலகிற்கு மட்டும் அல்ல தமிழகத்ததிற்கே நன்றாக தெரியும் அவர் ஒழுங்கீனத்தின் மொத்த உருவம் என்று. பல நடிகைகளுடன் தவறான உறவு வைத்திருந்தவர்.//
அரசியல் வாதிகள் நடிகைகளை நாடி நிரந்தர சின்னவீடாக வைத்திருந்த அளவுக்கு கார்திக் இல்லாமல் எதோ தொட்டோம், விட்டோம் என்று இருக்கிறார்.
//கார்த்திக் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசா? //
நல்ல வேளை கார்திக் முத்துராமனின் வாரிசா என்று கேட்காதவரை நன்று. அவருக்கு கூடும் கூட்டங்கள் அவரை தேவரின் வாரிசு என்று நினைக்கையில் உங்களுக்கு ஏன் அவர்மேல் கோபம் ?
தன் சாதிபற்றி வெளிப்படையாக அறிவித்து ஆதரவு கேட்கும் கார்த்திக், தன் சாதிகாரர்களிடம் மறைமுக உறவும், சுற்றியும் முற்றும் பார்த்துவிட்டு, தெலுங்கில் மாட்டலாடும் வைகோ விற்கு எந்த விதத்தில் குறைந்தவர் ?
தன் சாதிக்காரன் ஒழுங்கீனத்தின் மொத்த உருவமாக இருந்தாலும் பரவாயில்லை அவன் என் சாதிக்காரனாக இருப்பதால் உங்கள் தங்கையை அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா?
மொழி அரசியலை மீண்டும் திணிக்காதீர்கள். ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற வேண்டுமானால் திறமையாக ஓடி வெல்ல வேண்டும் அதை விட்டு விட்டு நமக்கு முன்னால் ஓடுபவனின் கால்களுக்கு இடையில் கம்பைவிட்டு ஆட்டி அவனை கீழே விழவைத்து நீங்கள் வெற்றிபெறக்கூடாது
//உங்கள் தங்கையை அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா?//
நீங்கள் வைகோ ஆதரவாளன் என்று நேரிடையாக சொல்லியிருந்தால், உங்களுக்கு மறுமொழியிடுபவர்கள் சற்று யோசித்திருப்பார்கள்.
குறிப்பாக தமிழ்மண வலைப்பதிவு திரட்டிகளில் மறுமொழியிடுபவர்கள் யாரும் குடும்பத்தை இழுப்பதில்லை, நிதானமோடு நடந்து கொள்கிறார்கள்.
உங்கள் பதிவுக்கு என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு , எனது தங்கையை இழுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். எனது தங்கைக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகிறது. நீங்கள் பதிவில் எதையாவது எழுதிவிட்டுப் போங்கள், உங்கள் சார்பு நிலையை தெரிவித்தால் போதும். படிப்பவர்களும், மறு மொழியாளர்களும் எச்சசிக்கையுடன் இருப்பார்கள், அதைவிடுத்து
மறுமொழியிடுபவர்களின் அம்மா, அக்கா, தங்கை, மனைவி இவர்களையெல்லாம் ஏன் இழுக்கவேண்டும், பதிவுகள் எழுதுமுன் நாகரீகத்தையும் கொஞ்சம் கற்றுவிட்டு வந்து பிறகு எழுதுங்கள், அப்படி யில்லையென்றால், அதற்கென்றே உள்ள பதிவுகளில் உங்கள் ஆபாச எண்ணங்களை விதைக்கலாம்.
மன்னிக்கவும், நான் உங்கள் மனதை புன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி கூறவில்லை. பொதுவாழ்வில் வாழ்க்கைக்கு வருபவர்கள் சாதிமத பேதம் பார்ப்பவர்களாகவோ, ஒழுக்கம்கெட்டவர்களாகவோ இருக்கக்கூடாது. அப்படிப்பட்டவர்களை மக்களாகைய நாம் தான் ஒதுக்கவேண்டும் அதை அவர் சார்ந்துள்ள சாதியை மட்டுமே பார்த்து ஆதரிப்பதை சுட்டிக்காட்டவே அப்படி கூறினேன். அது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
Post a Comment
<< Home