$user_name="Jeyakumar";

Tuesday, January 05, 2010

நவீனமாகியும் மாறாத இந்தியாவின் “க்யூ” சிஸ்டம்.

சமீபத்தில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ஒரு வேலையாக போயிருந்தேன். இணையதளத்தில் குறிப்பிட்டபடி 8:30 க்கு டோக்கன் வாங்க கடும் குளிரில்(-1C) 7:15க்கே சென்றுவிட்டேன். எனக்கு முன்னறே பெரியவர்களும் குழந்தைகளுமாக சுமார் 30 பேர் அங்கு “க்யூ” வில் நின்று கொண்டிருந்தார்கள். இந்திய தூதரகம் பயனீட்டாளர்களுக்கு எந்த விதமான வசதியும் அங்கு செய்துதரவில்லை. அந்த கடும் குளிரில் அனைவரும் நடுங்கியபடியே நின்றுகொண்டிருந்தனர். குளிருக்கோ அல்லது மழைக்கொ எந்தவிதமான வசதியும் அங்கு இல்லை. இங்கு உள்ள பெரும்பாலான தூதரகங்களில் appointment system நடைமுறைக்கு வந்து பல வருடங்கள் ஆகியும் நம் தூதரகம் மட்டும் நம்மக்களை “க்யூ”-வில் நிற்கவைத்து இப்படி அவதிப்பட வைக்கிறது. எல்லாவித சேவைகளுக்கும் ஒரே “க்யூ” தான். இதே முறையை முன்பு ஒருமுறை திருச்சியிலும் கண்டேன்(சமீபத்தில் அங்கு நடந்த அடிதடி மற்றும் மறியல்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்). பெயர் மாற்றம் செய்ய வருபவர்க்கும் புது பாஸ்போர்ட் விண்ணபிக்க வருபவருக்கும் ஒரு “க்யூ” தான். இங்கு சாதாரண பொட்டிக்கடையில் கூட டெபிட் மற்றும் கிரிடிட்கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது ஆனால் நம் தூதரகத்திற்கு இன்னும் கையில் பணம் தான் எடுத்துச்செல்லவேண்டும். அங்கு வேலை செய்பவர்கள் சிரிக்க மறந்து பல நாட்கள் ஆனவர்கள் போலத்தான் உள்ளனர். டோக்கன் கொடுக்கும் “பாட்டியம்மா” தேமே என்று டோக்கன் கொடுத்துக்கொண்டிருந்தது. டோக்கன் வைத்திருந்தவர்களில் பலர் தங்களை அழைக்கும் முன்னரே கவுண்டர் அருகில் நின்றுகொண்டு அடுத்து போக அவசரசரப்ப்ட்டுக்கொண்டு இம்சித்தார்கள். வேலைசெய்பவர்களில் பலர் வீட்டு அடுப்பாங்கரையில் கையில் இருந்த கரண்டியை அப்படியே போட்டுவிட்டு வந்தவர்கள் பொல உடையணிந்து இருந்தார்கள்.

வெளிநாடுகளில் உள்ள நல்ல நடைமுறைகளை நாம் பயன்படுத்துவதில் என்ன சிக்கல் என்று இன்னும் எனக்கு புரியவில்லை. நம் நாட்டில் அன்றைக்கே வேலை நடக்கவேண்டும் என்றால் நாம் அலுவலர்களை தனியாக கவனிக்கவேண்டும். ஆனால் இங்கு அதுபோன்ற சேவைகளுக்கு “Express” என்று பெயர்வைத்து கூடுதல் பணம் வசூல் செய்கிறார்கள். ஆனால் அந்த பணம் அரசாங்கத்திற்குப் போகிறது. அதனால் தான் வளர்ந்த நாடுகளில் அரசு பணக்கார அரசாகவும், மக்கள் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற சேவைகள் பல தபால் முறையில் நாம் நேராக போகாமலேயே வேலை நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் முதல் பல இன்னல்களும் செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன.

சிந்திக்கத் தெரியாத, பிற்போக்கு சிந்தனையுள்ள வயதான கிழட்டு அதிகாரிகளை வைத்துக்கொண்டு இந்தியா 2020-வில் வல்லரசாகும் என்றும் நாம் கனவு மட்டும்தான் கானமுடியும் என்று நினைக்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home