$user_name="Jeyakumar";

Wednesday, April 12, 2006

வைகோ-வின் கூட்டணிக்கணக்கு

சென்ற வாரம் திண்ணையில் வெளிவந்த திரு அக்னிபுத்திரனின் கோபால்சாமியா? கோயபல்ஸ்சாமியா? என்ற ஆராய்ச்சிக்கட்டுரை அவர் ஒரு திமுக அனுதாபி என்பதைத்தான் காட்டுகிறதே தவிர உண்மையான ஆராய்ச்சிக்கட்டுரையாக இல்லை என்பது என்னைப்போன்ற நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த தேர்தலில் வைகோ அவர்கள் திமுக வுடன் கூட்டணிிவைத்து அதனால் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அது வைகோவுக்கும் மதிமுக-விற்கும் அவர்களே அடித்துக்கொண்ட சாவுமணியாகத்தான் இருக்கும்.

இப்போது இருக்கும் தமிழகத்தலைவர்களுல் ஓரளவுக்கு நல்லவராகவும், திறமையுள்ளவராகவும், கொள்கைப்பிடிப்பு உள்ளவராகவும் இருக்கக்கூடியவர் திரு வைகோ அவர்கள்தான். அவர் இந்த முறை இல்லாவிட்டாலும் அடுத்த முறையாவது நிச்சயமாக ஆட்சிக்கு வரக்கூடிய சூழல் உருவாவதற்கு அவர் இப்பொது எடுத்த முடிவே சரியானதாகும்.

ஏனெனில் மதிமுக போல் தென்மாவட்டங்களில் ஒரு வலுவான கட்சியுடனும், பாமக போல் வட மாவட்டங்களில் ஒரு வலுவான கட்சியுடனும் கூட்டணிி வைப்பதன் மூலம் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற் திமுக கனவு கண்டுகொண்டிருக்கிறது. அவர்கள் கனவு நிஜமானால் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராக வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அப்படி ஸ்டாலின் முதல்வராக வரும்பட்சத்தில் அது எந்த விதத்தில் வைகோவுக்கும் மதிமுக-விற்கும் நன்மை பயப்பதாக அமையும்?. தன் ஆட்சி மற்றும் அதிகார பலத்தால் தனக்கு பிடிக்காத வைகோவையும், மதிமுக-வையும் அழிக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்வார். அது வைகோவிற்கு ஜெயலலிதா செய்த கொடுமையை விட அதிகமாகத்தான் இருக்கும்.அதோடு திமுக-வில் பிழவு ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகும். ஸ்டாலின் தலைமையில் திமுக-வும், ஜெயலலிதா தலைமையில் அதிமுக-வும் தான் தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக இருக்கும். தமிழக அரசியலில் வைகோ-விற்கு இப்பொது இருக்கும் நிலைகூட வரும்காலங்களில் இல்லாமல் போகலாம்.

ஆனால் ஒருவேளை இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் நிச்சயமாக ஜெயலலிதா தன் தோழமைக்கட்சிகளை வெகு விரைவிலேயே கழட்டி விட்டுவிடுவார். அது எல்லோரும், ஏன் வைகோவும் எதிர்பார்க்கும் ஒரு விசயம்தான். ஆனால் ஒருவேளை அடுத்த 5 ஆண்டுகளில் எதிர்பாராதவிதமாக திமுக தலைவர் திரு கருணாநிதி அவ்ரகளின் காலம் நிறைவடையும்பட்சத்தில் அவரின் வாரிசுகளால் திமுக-வில் மிகப்பெரிய பிழவு ஏற்படும். அது திமுக-வை வலுவிலக்கச்செய்யும். உண்மையான திமுக தொண்டர்களும், திரவிடக்கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களும் வைகோவின் தலைமையில் மதி,முக-வில் ஜ்க்கியமாவார்கள். தமிழகத்தில் அதிமுக-விற்கு சரியான போட்டியாக மதி,முக வளரும். அடுத்து வரும் தேர்தலில் நம் மக்களின் எகோபித்தா ஆதரவுடன் மதி,முக ஆட்சியில் அமரும். வைகோ தமிழகத்தின் சிறந்தா முதல்வர்களுல் ஒருவராக நிச்சயம் இருப்பார். வைகோவும் அவருடைய கட்சியும் எடுத்த இந்த கூட்டனி முடிவு மேற்கூறிய கருத்துக்களை ஒத்தே எடுக்கப்பட்ட முடிவாக நான் கருதுகிறேன். தொகுதிப்பங்கீட்டுப்ப்ரச்சனையெல்லாம் கூட்டணிியை விட்டு வெளியேற ஒரு காரணமே தவிர அது முக்கிய பிரச்சனையாக இங்கு நான் கருதவில்லை. வரும் தேர்தலில் திமுக வெற்றிபெறக்கூடது என்பதுதான் இப்பொது முக்கியமாக மதிமுக கருதுகிறது.

தொலைநோக்குப்பார்வையுடன் எடுக்கப்பட்ட இந்த முடிவால் அடுத்த சில ஆண்டுகள் தமிழகம் கஷ்டப்பட்டாலும் வரும் காலங்களில் வைகோ-வின் தலைமையில் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

9 Comments:

At 6:15 PM, Blogger கோவி.கண்ணன் said...

வைகோவின் மீது ஏற்பட்ட சாதி சாயம் கழவ முடியாதது. ஸ்டாலில் வைகோ விற்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல, கருணாநிதிக்கு பின் திமுக உடையும் என்று வைகோ நினைப்பது, எம்ஜிஆருக்கு பின் அதிமுக உடையும் என்று கருணாநிதி நினைத்து போன்ற ஒரு கற்பனை. பதவியில் இருப்பவர்களை போன்றே மதிமுக கட்சி நிர்வாகிகள் நன்றாகவே சம்பாதித்துள்ளனர். இன்றைய நிலையில் தமிழக கட்சிகள் எதற்கும் கொள்கைகள், நேர்மைகள், தன்மானம் எல்லாம் மேடைப்பேச்சளவில் அதுவும் அடுத்த தேர்தல் வரைதான்.

 
At 9:40 PM, Blogger அழகப்பன் said...

//உண்மையான ஆராய்ச்சிக்கட்டுரையாக இல்லை என்பது என்னைப்போன்ற நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்.//

//இப்போது இருக்கும் தமிழகத்தலைவர்களுல் ஓரளவுக்கு நல்லவராகவும், திறமையுள்ளவராகவும், கொள்கைப்பிடிப்பு உள்ளவராகவும் இருக்கக்கூடியவர் திரு வைகோ அவர்கள்தான்.//

அப்படியா?

வை.கோ. எந்த கொள்கையில் உறுதியாக இருந்தார் என்பதை விளக்க முடியுமா? அ.தி.மு.க.வுடன் ஏற்பட்டுள்ள இந்த கூட்டணி அரசியல் கூட்டணியே. கொள்கைக்காக அமைந்ததல்ல என்று அவரே கூறியிருக்கிறாரே.

இந்த கூட்டணி முடிவை நான் எடுக்கவில்லை. தொண்டர்கள்தான் எடுத்தார்கள் என்று கூறினாரே அப்போதே அவரின் தலைமைத்துவ திறமை தெரிந்ததே. தலைமையின் முடிவுக்கு தொண்டர்களை கட்டுப்படுத்தத் தெரியாதவர் எப்படி திறமையான தொண்டனாக முடியும்?

ஒரு பக்கம் தனக்கு அடுத்த கட்ட தலைவர்களை அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவிட்டு இவர் மட்டும் நான் தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளேன். திருச்சி மாநாட்டில் பங்கு பெறுவேன் என்று கூறினார். அதனை நம்பி தி.மு.க.வினரும் அவரது கட்அவுட்களை திருச்சியில் வைத்தனரே. நம்பவைத்து கழுத்தறுத்தது யார்? இதுதான் நல்லவர்களின் அடையாளமோ?

 
At 10:26 PM, Anonymous Anonymous said...

நீங்கள் நடுநிலைவாதியா?

ஒருமுறை உங்கள் எல்லா பதிவுகளையும் எடுத்து திரும்ப படிக்கவும்.

 
At 11:11 PM, Blogger ப்ரியன் said...

//என்னைப்போன்ற நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்.//

உங்கள் பதிவை நீங்களே மறுபடியும் வாசியுங்கள் நீங்கள் நடுநிலையாளரா?

சரி வை.கோ விலகியது அவரின் தொலைநோக்குப் பார்வை ஏன் முன்னமே இல்லை ஒரு வாரத்துக்கு முன் கலைஞர்தான் அடுத்த முதல்வர் அதற்குப் பாடுபடுவோம் எனச் சொல்லிவிட்டு இப்போ அன்புத் தங்கை என்பதுதான் தொலைநோக்கா?

சரி எந்த விடயத்தில் அவர் கொள்கைப் பிடிப்பாக இருந்தார்...

ஊர்முழுக்க நடந்து வந்தார் எதற்காக மருத்துவர் நடக்கச் சென்னதற்காகவா ? டாக்டர் அம்மாவை வீட்டுக்கு அனுப்பனும் என்று சொல்லிதானே இப்போ எங்கே போச்சு அந்த கொள்கை ????

சரி கொள்கைகள் திட்டங்கள் இருந்தால் அதைச் சொல்லி ஓட்டுக் கேளேன் அதைவிட்டு குழந்தைகள் அம்மா அடிச்சுட்டான்னு முறையிடுமே அது போல அந்த தொலைக்காட்சியில் என்னைக் காட்டலேனு சொல்லியா ஒட்டிக் கொண்டதுக்கு விளக்கம் அளிப்பாய்?

நீங்கள் தீவிர வை.கோ அனுதாபி என்பது என் கருத்து

 
At 1:09 AM, Blogger லக்கிலுக் said...

உங்களை நீங்களே நடுநிலையாளர் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் ரொம்ப ஓவர்....

வைகோவே ஒத்துக்கொண்டார் 40 கோடி வாங்கி விட்டேன் என்று.... அப்புறம் என்ன சார் அவருக்கும் கண்ணியம், கடமை, கொள்கையெல்லாம்...

திமுக கூட்டணியிலேயே இருந்திருந்தால் ஒரு வேளை அண்ணன் செத்த பிறகு திண்ணை காலியாகும் என்று பிடித்துக் கொண்டிருக்கலாம்... இப்போதைய நிலையில் மக்கள் வெறுப்பை சம்பாதித்திருக்கும் வைகோவுக்கு எதிர்காலம் இருட்டானது தான்....

 
At 1:19 AM, Blogger ஜெயக்குமார் said...

சசிகலாவின் குடும்பத்தால் அதிமுக-வின் செல்வாக்கு எப்படி சரிந்ததோ அதேபோலத்தான் மாறன் குடும்பத்தால் திமுகவின் செல்வாக்கும் வெகு சீக்கிரம் சரியும். மாறனுக்கு டெல்லி அரசியலை சொல்லிக்கொடுத்தவரே வைகோதான் ஆனால் அதனை வைத்து எப்படி த்ங்கள் செல்வத்தை பெருக்குவது என்று கற்றுக்கொண்டது அவரது குடும்பமும் அவரும் தான்

தொண்டர்களின் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பவந்தான் உண்மையான தலைவன். திமுக வெற்றிபெற்றால் தன் கட்சியுன் நிலையும் தன் தொண்டர்களின் நிலையும் அதலபாதாளத்தில் போய்விடும் என்றுதான் வைகோ இத்தகைய முடிவை எடுத்த்ள்ளார்

 
At 2:50 AM, Blogger லக்கிலுக் said...

///மாறனுக்கு டெல்லி அரசியலை சொல்லிக்கொடுத்தவரே வைகோதான்///

உங்கள் அரசியல் அறிவு ரொம்பவும் ஆச்சரியமானது.... 1967ல் எம்.பி. ஆன மாறனுக்கு 1984ல் எம்.பி. ஆன வைகோ டெல்லி அரசியலை சொல்லிக் கொடுத்திருப்பார் என்று எப்படி நம்புகிறீர்கள்?

மேலும் வைகோவே பலமுறை மாறன் தான் தன் பாராளுமன்ற ஆசான் என்று கூறி இருக்கிறார்....

 
At 2:52 AM, Blogger லக்கிலுக் said...

///தொண்டர்களின் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பவந்தான் உண்மையான தலைவன். திமுக வெற்றிபெற்றால் தன் கட்சியுன் நிலையும் தன் தொண்டர்களின் நிலையும் அதலபாதாளத்தில் போய்விடும் என்றுதான் வைகோ இத்தகைய முடிவை எடுத்த்ள்ளார்///

ஆமாம்... அதிமுக வெற்றி பெற்றால் மதிமுகவும் அதன் தொண்டர்களும் நாடாளப் போகிறார்கள்... இமயத்தின் உச்சியில் மதிமுக கொடி பறக்கப் போகிறது :-)

 
At 4:26 AM, Blogger ஜெயக்குமார் said...

/அதிமுக வெற்றி பெற்றால் மதிமுகவும் அதன் தொண்டர்களும் நாடாளப் போகிறார்கள்... இமயத்தின் உச்சியில் மதிமுக கொடி பறக்கப் போகிறது :-) /

ஆமாம் அதிமுக வெற்றிபெற்றால் மதிமுக-விற்கு எந்த பலனும் இல்லை என்றாலும் திமுக தோல்வியுற்றால் மதிமுக-விற்கு நிச்சயம் பலன் உண்டு.

 

Post a Comment

<< Home