ஆதீனத்தின் அரசியல் - குமுதம்
ஆதீனங்கள் ஆன்மிகப் பணியை மட்டுமே பார்க்கும்போது வணக்கத்திற்குரியவர்களாகப் போற்றப்படுகின்றனர். அதுவே அரசியலில் மூக்கை நுழைப்பதால், அவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. இது மதுரை ஆதீனத்துக்கும் பொருந்தும் என்பதை உணர்வாரா?ஒஒ என்று, கடந்த நமது குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் சேத்தியாத்தோப்பு வாசகி ராஜகுமாரி தெரிவித்திருந்தார்.
கும்பகோணம் வந்திருந்த மதுரை ஆதீனத்திடம் அந்த வாசகியின் கருத்தை முன் வைத்துப் பேசினோம்...
தமிழகத்திலுள்ள மற்ற ஆதீனங்கள் யாவும் ஆன்மிகப் பணியை மட்டுமே செய்து வரும் வேளையில், தாங்கள் அரசியல்வாதியைப் போலவே செயல்படுவது ஏன்?
தமிழகத்தில் உள்ள முக்கிய நான்கு மடங்களில் மதுரை ஆதீனம் மிகவும் பழைமையானது. ஆதீனம் என்றால் சன்னியாசியாய் இருப்பது, விபூதி கொடுப்பது, ஆசீர்வாதம் செய்வது மட்டுமே பணி அல்ல. ஏற்கெனவே இருந்தவர்கள் சமஸ்தானத்தில் அமைச்சர்களாக, ராஜகுருக்களாக எல்லாம் இருந்திருக்கிறார்கள். அரசுக்கு உறுதுணையாக, நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்களாக, மத நல்லிணக்கத்திற்கு உதவியாக, மக்கள் நலனுக்காக, அரசுடன் இணைந்து ஆதீனங்கள் செயல்படுவது தவறல்ல.ஒஒ
அதற்காக அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் போல் செயல்படுவதும், கூட்டணிக்காக நடிகர் கார்த்திக்கிடம் தூதுவராகச் சென்று பேசுவதும் சரியா?
(சிரித்துக்கொண்டே) எம்மை அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் என்றா சொல்கிறார்கள்? புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் அவர்களின் வேண்டுகோளின்படி கார்த்திக்கிடம் தூதுவர் போலப் பேசினோம். உண்மை!ஒஒ
கார்த்திக் அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருப்பார் என்று கூறினீர்கள். ஆனால் தற்போது எதிர்த்து நிற்பதோடு, ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் பொது வேட்பாளராகவும் நிறுத்தப்படுவார் என்ற பேச்சும் இருக்கிறதே!
அந்த நேரத்தில் உள்ள நிலை அது. தற்போது அவர் கருத்தை மாற்றிக்கொண்டாலும், ஒருபோதும் புரட்சித் தலைவியை எதிர்த்துப் போட்டியிடமாட்டார் என்று நம்புகிறோம். அந்த வாக்குறுதியை என்னிடம் தந்திருக்கிறார்.ஒஒ
இப்படி ஒரு கட்சி ஆதரவாளராக இருப்பது ஆதீனத்திற்கு அழகா?
மற்ற கட்சியினர் யாரும் எம் உதவி கேட்கவில்லையே... யாரிடமாவது பேசச் சொல்லி தி.மு.க. தரப்பில் கேட்டாலும் செய்யத் தயாராகத்தான் இருக்கிறோம்.ஒஒ
நடராஜன் சொன்னதால் கார்த்திக்கிடம் பேசியதாகச் சொல்கிறீர்கள். நடராஜனிடம் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்புகொள்ளக்கூடாது என்று அ.தி.மு.க. தலைமையால் அவர் ஒதுக்கப்பட்டவர்தானே?
நடராஜன் ஒதுக்கப்பட்டவரல்ல... அன்று முதல் இன்றுவரை அ.தி.மு.க.வின் பாதுகாவலராக, வளர்க்கக்கூடியவராக இருக்கிறார் என்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். அவரைத் தொடர்பு கொள்ளும் யாரும் இனி பாதிக்கப்படமாட்டார்கள்.ஒஒ
கலைத்துறையில் தங்களுக்கு அதிகத் தொடர்பு உண்டு. கோவை சரளா முதல் நடிகை சிம்ரன் வரை பலரையும் அ.தி.மு.க.வில் இணைத்ததிலும் தங்கள் பங்களிப்பு உண்டா?
கலைத்துறையில் உள்ள பலரிடமும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நடிகைகள் அ.தி.மு.க. பக்கம் வருவதில் ஆச்சரியம் இல்லை. ஜெயலலிதாவும் கலைத்துறையில் நடிகையாக இருந்தவர்தானே... அதனால் ஆதரவு தெரிவித்திருக்கலாம்.ஒஒ
உங்களைப்போலவே ஒரு நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரும் ஜெ.ஒவுக்கு நெருக்கமாக இருந்தவர்தான். கடைசியில் எந்த சங்கடத்திற்கு ஆளானார் என்பது தங்களுக்கே தெரியும்!
அப்படிப்பட்ட சங்கடம் எமக்கு ஒருபோதும் வராதுஒஒ
ஒருவேளை தி.மு.க. வென்று ஆட்சி அமைத்தால்?
எம் எண்ணம் என்ன? செயல்பாடு என்ன? தமிழ் உணர்வு என்ன? சேவை என்ன? என்பதெல்லாம் தி.மு.க. தொண்டர் முதல், தலைவர் வரை தெரியும். அதனால் எமக்கு எந்தத் தொந்தரவும் வராது.ஒஒ
சரி... வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த அணி வெற்றி பெறும்?
நாம் ஜோதிடர் அல்ல, ஆருடம் கூறுவதற்கு!ஒஒ
வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். புரட்சித்தலைவி அவர்கள் மீண்டும் முதலமைச்சராவார் என்று தெரிகிறது.ஒஒ
சற்று முன்புதான் ஜோதிடர் அல்லஒ என்றீர்கள். தற்போது புரட்சித்தலைவிஒ என்று அ.தி.மு.க.வினர் போல் பேசுகிறீர்கள். ஆதீனம் பேசுவது குழப்பமாக இருக்கிறதே...
மக்கள் கருத்தைச் சொல்கிறோம். புரட்சித்தலைவி என்றால் உண்மையான புரட்சித்தலைவி. அதனால் நாமும் சொல்கிறோம். ஆனால், இன்றுவரை புரட்சித்தலைவியை நாம் நேரில் சந்தித்ததில்லை. தொலைபேசியில்கூட பேசியதில்லை.ஒஒ
இறுதியாக ஒரு கேள்வி... எல்லா கட்சிக்கும் பொதுவானவர் என்று பேச்சளவில் நீங்கள் கூறினாலும் ஜெயலலிதாவை மட்டும் ஆதரிப்பதற்கு ஒரு காரணம் இருக்கும் அல்லவா?
ஏன் ஆதரிக்கிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்கிறோம். திருநீறு பூசி, குங்குமம் இட்டு, யாக சாலை, ஹோமகுண்டம் வளர்த்து, அங்கப்பிரதட்சணம் செய்யவும், கோயில் தோறும் கும்பாபிஷேகம் நடத்தவும், அன்னதானம் செய்யவும், ஆன்மிகம் வளர்க்கவும், திராவிடக் கட்சிகளிலேயே அ.தி.மு.க. தவிர வேறு எதுவும் இல்லை. அந்த ஆன்மிக ஈடுபாட்டின் காரணமாகவே நாம் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறோம்.ஒஒ
1 Comments:
ஒஒ
Post a Comment
<< Home