$user_name="Jeyakumar";

Thursday, April 13, 2006

கருணாநிதி அஸ்திரத்தின் அர்த்தம் தெரியும்! - வைகோ

இன்றைய தினமலரில் வந்த ஒரு செய்தி.

கருணாநிதி அஸ்திரத்தின் அர்த்தம் தெரியும்! மயிலாடுதுறையில் வைகோ ஆவேசம்

மயிலாடுதுறை : தமிழகத்தில் ஏழெட்டு தொகுதிகளையாவது கைப்பற்றும் நிப்பாசையில் தி.மு.க., மலிவான சலுகைகளை அறிவித்துள்ளது என்று வைகோ பேசினார்.மயிலாடுதுறை நிகர பூங்காவில் ஜனநாயக மக்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ நேற்று முன்தினம் இரவு உரையாற்றினார். அ.தி.க.க வேட்பாளர் பூம்புகார் பவுன்ராஜ், குத்தாலம் ராஜேந்திரன் மயிலாடுதுறை ம.தி.மு.க. வேட்பாளர் மகாலிங்கம் ஆகியோரை அறிககப்படுத்தி வைகோ பேசியதாவது:

தமிழகத்தில் மக்கள் ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆனால் எதிரணியில் குத்து வெட்டு இன்னும் ஓயவில்லை. தொகுதியிலுள்ள விவகாரங்களும் முடியவில்லை. தி.மு.க., அரசு தமிழக கஜானாவை காலி செய்து வைத்திருந்த நேரத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு இயற்கை இடர்பாடுகளான வறட்சி, சுனாமி, வெள்ளம் ஆகியவற்றை சந்தித்து நிதி நெருக்கடியை சீர் செய்து மின்னல் வேகத்தில் திட்டங்களை நறைவேற்றியுள்ளது. சுனாமி பாதிப்பிலிருந்து தமிழகம் மீள

ரூ. ஒன்பதாயிரத்து 860 கோடியை மத்திய அரசிடம் மாநல அரசு கோரியது. அதில் ரூ.860 கோடியை மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசு ஒருபோதும் மாநல அரசுகளை வஞ்சிக்கக் கூடாது. இது அ.தி.மு.க., அரசை வஞ்சித்ததல்ல. தமிழகத்தில் வாழ்கிற ஆறு கோடி மக்களையும் வஞ்சித்தமைக்கு சமம். மத்திய அரசு போதுமான நிதியைக் கொடுக்காத போதும் தமிழக அரசு அனைவரும் பாராட்டும் விதத்தில் நவாரணப் பணிகளை மேற்கொண்டது.

சுனாமியின்போது சேதப்பகுதிகளை பார்வையிட பிரதமர் வருவதாக இருந்தது. அப்படி வந்தால் பிரதமருடன் தமிழக முதல்வரும் சேர்ந்து போவார் என்பதால் காங்கிரஸ்காரர்கள் கட்சித் தலைவியை வரவழைத்தனர். காங்கிரஸ்காரர்கள் பிரதமரையும் மதிக்க வேண்டும். 2004-ம் ஆண்டு ஆகஸ்டில் கல்பாக்கத்தில் நிடந்த பொது விழாவுக்கு பிரதமர் வருவதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் அது ரத்தானது. அக்டோ பர் 23 ஆம் தேதி பிரதமர் தமிழகத்துக்கு வருவதாகவும் அன்று மாலை 4 மணிக்கு கோபாலபுரம் சென்று தி.க.க. தலைவரை சந்திப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. அப்போது மதுரையிலிருந்த கருணாநதி, "பிரதமர் வருவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் முக்கிய வேலையாக கொடைக்கானல் செல்கிறேன்' என்று கூறி ஓடாத படத்துக்கு கதை எழுதப் போய்விட்டார். வீட்டுக்கு வரும் பகைவரைக்கூட வரவேற்பது தான் தமிழ்ப் பண்பாடு. கருணாநதியின் இந்த மதியாத போக்கை தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கையில் எம்.பி.,க்கள் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்ற இறுமாப்புடன் தி.மு.க., செயல்படுகிறது.

மத்திய அரசு அரிசி விலையை உயர்த்த முயற்சித்த போது தி.மு.க., எம்.பி.,க்கள் ஒத்துக் கொண்டு வந்தனர். உடனடியாக தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க ம.தி.மு.க.,வும் கண்டித்தது. தேர்தலைக் கருத்தில் கொண்டு தானும் மத்திய அரசின் கடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் ஏழெட்டு தொகுதிகளையாவது கைப்பற்றும் நப்பாசையில் தி.மு.க., மலிவான சலுகைகளை அறிவித்துள்ளது. நான் எந்த வழக்குகளையும் சந்திக்கத் தயார். வழக்குகளை பார்த்து தயங்கியதில்லை. எதற்காக என்மீது அஸ்திரத்தை ஏவுகிறார் என்பது எனக்குத் தெரியும். எதையும் நான் அப்படியே விட்டு விடமாட்டேன். எதையும் சந்திக்கத் தயார். தமிழகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் பொற்கால ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைந்திட ஜனநாயக மக்கள் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ பேசினார்

8 Comments:

At 6:10 PM, Blogger கருப்பு said...

ஆகா. தினமலர், வைகோ என நீங்கள் அருமையாக அலசுகிறீர்கள். விரைவில் உங்களுக்கு அதிமுகவில் இருந்து பாராட்டு கிடைக்கலாம் சார்.

அப்படியே தமிழ் இணைய இளைஞர் அணித்தலைவர் பதவியும் கிடைக்கலாம் சார்.

 
At 7:02 PM, Anonymous Anonymous said...

வை.கோ. இன்றைக்குத் தான் சேர்ந்திருக்கும் கூட்டணிக்காக இப்படியெல்லாம் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

நீங்கள் பேசாமல் கருணாநிதியையும் அவரது அடிபொடிகளையும் வாழ்த்தி வரும் செய்திகளைப் போட்டால் இணையத்தில் உங்களுக்கு நடுநிலைமையாளன் என்ற பட்டம் கிடைக்கும். இல்லாவிட்டால் 'அம்மா ஆளு' என்றுதான் சொல்வார்கள்.

தமிழ்முரசு, தினகரன், சன்ரீவி வகையறாக்களையும் கருணாநிதிக்கூட்டத்தையும் அலசுபவர்களுக்கு பெட்டியில் எவ்வளவு வருகிறதென்றும் எந்நெந்தப் பொறுப்புக்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதென்றும் நீங்களும் ஒரு பதிவுபோட்டால் ஆயிற்று.

வை.கோவைப் பற்றி நல்லதாக நாலு சொன்னால் பலருக்குப் பொத்துக்கொண்டு வருகிறது. அதுதான் ஏனென்று தெரியவில்லை. இவ்வளவுக்கு அவர்களே சொல்கிறார்கள், அவர் வெத்துவேட்டு என்று. தங்களுக்கு வேட்டுவைத்துவிடுவாரென்ற பயமோ என்னவோ?

 
At 8:55 PM, Blogger கருப்பு said...

அனானி,


நான் எங்கும் திமுக அனுதாபி என்று எப்போதும் எழுதியது இல்லை. எங்கே எழுதினேன் என காட்டுங்களேன்.

 
At 12:46 AM, Blogger ஜெயக்குமார் said...

//நான் எங்கும் திமுக அனுதாபி என்று எப்போதும் எழுதியது இல்லை. எங்கே எழுதினேன் என காட்டுங்களேன்.//

அது உங்கள் கருத்துகளிலிருந்தே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. நீங்கள் திமுக-வின் விடாதகறுப்பு!.

 
At 6:48 PM, Anonymous Anonymous said...

¨Å§¸¡ «õÁ¡ ¬Ù ±ýÀ¾¢ø ´ÕÅ¢¾¾ ³ÂôÀ¼¡Îõ þø¨Ä.108 ¿¡ð¸Ç¢ø þó¾¢Â¡Å¢ø þÅà ´ÕÅ÷ÁðÎõ §À¡¼¼¡ ºð¼ò¾¢ý ¸£ú º¢¨È¢ĢÕó¾ÅÕìÌ ±ýÉ Á⡨¾ §ÅñÎõ.
þÅ÷ ÁüÈÅí¸¨ÄôÀüÈ¢ §Àº ±ýɾ̾¢ þÕ츢ÈÐ. Ã.À¡÷ò¾º¡Ã¾¢
4-14-06

 
At 7:04 PM, Anonymous Anonymous said...

I am sending my comments in English as I unable to type in tamil.
Vai Ko has no moral standing to speak about others. Only person put in jail for nearly 108 days under Potta Act and was released beacuse the said act was reperaled what status has he got to face the voters when he choos to join the leader who was responsible in putting him inot prison.I am sure every voter will realise this atrocious act. The most reprehensible feature is that the Chief Minister who was resposnsible visited the house of Vaiko.This sort of person deserves to be condemned.R.Parthasarathy

 
At 9:31 PM, Blogger கருப்பு said...

//அது உங்கள் கருத்துகளிலிருந்தே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. நீங்கள் திமுக-வின் விடாதகறுப்பு!.//

ஜெயக்குமார்,

அவ்வாறு நான் எங்குமே எழுதியது இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருவரையுமே எதிர்க்கிறேன். நம் தொகுதியில் யார் நிற்கிறார் என்று பார்த்து வாக்களித்தாலே போதும், நல்லது நடக்கும்.

மற்றபடி ஜெயலிதா கட்சியில் உள்ள எல்லா வேட்பாளரும் நல்லவரோ கருணாநிதி கட்சியில் உள்ள எல்லோரும் களவாணிப் பயல்களோ இல்லை.

இப்போது இருக்கும் முதலமைச்சர் வேட்பாளரில் விஜயகாந்த் நல்லாட்சி புரிவார் என்ற நம்பிக்கை உண்டு.

உங்களைப்போல நான் அதிமுக பேட்ஜ் குத்திக் கொண்டு வலைபதிய வரவில்லை!

 
At 12:51 AM, Blogger ஜெயக்குமார் said...

விடாது கருப்பு அவர்களே,

கடந்த தேர்தல் வரை திமுக-விற்கு வாக்கு அளித்தவன் தான் நான். இப்பொது அதற்க்கு எதிராக இருப்பது அதிமுக-விற்கு சப்போர்ட்டாக இருப்பதாக அர்த்தம் இல்லை. ஜெயலலிதாவை வைத்து எப்படி சசிகலா குடும்பம் தமிழகத்தில் ஆட்டம் போடுகிறதோ அதே மாதிரித்தான் கலைஞரை வைத்து மாறன் குடும்பம், தமிழகத்தை நாம் அறியாமலேயே சுரண்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் என் நோக்கமேதவிர, ஜெயலலிதா வரவேண்டும் என்பதல்ல.

 

Post a Comment

<< Home