$user_name="Jeyakumar";

Friday, April 14, 2006

சி.என்.என்., - ஐ.பி.என்., - "தி இந்து' - தேர்தல் கணிப்பு














சி.என்.என்., - ஐ.பி.என்., - "தி இந்து' ஆங்கில நாளிதழ் இணைந்து நிடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. அரசு நர்வாகம், ஏழைகள் மீதான அக்முறை, மாநலத்தின் வளர்ச்சி, ஊழலை கட்டுப்படுத்துதல் ஆகிய விஷயங்களில் கருணாநதியை விட ஜெயலலிதாவே சிறந்தவர் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சி.என்.என்., தொலைக்காட்சியின் இந்திய தொலைக்காட்சியான ஐ.பி.என்., நிறுவனகம் பிரபல ஆங்கில நாளிதழான "தி இந்து' நாளிதழும் இணைந்து தேர்தல் நிடைபெறவுள்ள ஐந்து மாநலங்களில் கருத்துக் கணிப்பை நடத்தின. இதில் தமிழகத்தில் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் உள்ள செல்வாக்கு குறித்த கருத்துக் கணிப்பின் கடிவுகளை இந்து நாளிதழ் நேற்று வெளியிட்டது. அறிவியல் முறைப்படி 58 சட்டசபை தொகுதிகளில் உள்ள 232 இடங்களில் 4 ஆயிரத்து 781 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2ம் தேதி கதல் 8ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்ட நிபர்களில் 46 சதவீதம் பெண்கள், 66 சதவீதம் கிராமப்புற மக்கள், 88 சதவீதம் இந்துக்கள், 5 சதவீத முஸ்லிம்கள், 7 சதவீத கிறிஸ்தவர்கள், 26 சதவீத தாழ்த்தப்பட்ட மக்கள் என அவரவர் மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் பிரதிநதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில் வெளிவந்துள்ள கடிவுகள் வருமாறு:
கடந்த 2004ம் ஆண்டு நிடந்த லோக்சபா தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தோல்வியடைந்த அ.தி.மு.க., இந்த முறை கணிசமான வளர்ச்சியைப் பெற்றிருப்பது அனைத்து தரப்புக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கும் தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கும் இடையே சிறிய அளவிலான மாற்றம் மட்டுமே நிடந்துள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ஜ., தற்போது தனித்து போட்டியிடுகிறது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க., அங்கிருந்து விலகி அ.தி.மு.க.,வுடன் சேர்ந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் அ.தி.மு.க.,வில் சேர்ந்துள்ளது. இந்த மாற்றங்கள் தவிர தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஓட்டுக்கள் தற்போது அ.தி.மு.க., பக்கமாக கணிசமாக திரும்பியுள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஓட்டுக்கள் அதிக அளவில் அ.தி.மு.க., பக்கம் திரும்பியுள்ளன.
* அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., சேர்ந்திருப்பதால் அ.தி.மு.க.,வுக்கு பெரிய அளவில் ஓட்டுக்கள் சேரவில்லை.
* ம.தி.மு.க.,வின் ஓட்டுக்களில் 48 சதவீதம் ஓட்டுக்கள் தி.மு.க., பக்கமே இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. எனவே ம.தி.மு.க.,வை சேர்த்திருப்பதால் அ.தி.மு.க.,வுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
நடிகர் விஜயகாந்த் கட்சியான தே.மு.தி.க., கணிசமான ஓட்டுக்களை பிரிக்கவிருக்கிறது. அவர் பிரிக்கவிருக்கும் ஓட்டுக்களில் 49 சதவீதம் தி.மு.க.,விலிருந்தும், 25 சதவீதம் அ.தி.மு.க.,வில் இருந்தும், 26 சதவீதம் இதர கட்சிகள் மற்றும் புதிய ஓட்டுக்களாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. விஜயகாந்துக்கு கிடைக்கவுள்ள ஐந்து சதவீத ஓட்டுக்களால் அதிக பாதிப்பை சந்திக்கப் போவது தி.மு.க., கூட்டணிதான்.
* கருத்துக் கணிப்பில் இடம்பெற்றவர்களில் 34 சதவீதம் பேர் வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்தே ஓட்டுப் போடுவேன் என்றும், 55 பேர் கட்சிக்கே ஓட்டுப் போடுவேன் என்றும், 6 சதவீதம் பேர் மற்ற காரணங்களை கன்வைத்து ஓட்டுப் போடுவேன் என்றும் தெரிவித்தனர்.
* தற்போதைய எம்.எல்.ஏ., மீண்டும் தேர்வு பெற வேண்டுமா? என்ற கேள்விக்கு 40 சதவீதம் பேர் "வேண்டாம்' என்றும் 31 சதவீதம் பேர் "ஆம்' என்றும் பதிலளித்துள்ளனர்.
* தமிழக அரசின் நிடவடிக்கை 2004ம் ஆண்டில் திருப்தியளிக்கவில்லை என்று 52 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். 2006ம் ஆண்டில் இதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. திருப்தியளிக்கவில்லை என்று 24 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். 2004ம் ஆண்டில் திருப்தியாக இருந்ததாக 47 சதவீதம் பேரும் 2006ம் ஆண்டில் திருப்தியாக இருப்பதாக 67 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
* அ.தி.மு.க., ஆட்சி, முந்தைய தி.மு.க., ஆட்சி ஆகிய இரண்டில் எது சிறந்தது? என்ற கேள்விக்கு அ.தி.மு.க., அரசு சிறப்பாக உள்ளது என்று 42 சதவீதம் பேரும், தி.மு.க., அரசு சிறப்பாக இருந்தது என்று 38 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர். இரண்டு அரசுகளும் ஒரே மாதிரியாக உள்ளதாக 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவையும் தி.மு.க., தலைவர் கருணாநதியையும் ஒப்பிட்டு பார்க்கையில் பல்வேறு விஷயங்களில் ஜெயலலிதாவே சிறந்தவர் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பார்லிமென்ட் தேர்தலின்போது மிகவும் பின்தங்கி இருந்த ஜெயலலிதா அதிலிருந்து முன்னேறி கருணாநதியை முந்தும் வகையில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ளது கருத்துக் கணிப்பில் வெளிப்படுகிறது. வைகோ அணி மாறியதை 46 சதவீதம் அ.தி.மு.க.,வினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். 34 சதவீதம் பேர் ஏற்கவில்லை. தி.மு.க.,வினர் 18 சதவீதம் பேர் மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர். 64 சதவீதம் பேர் அவரது செயலை ஏற்கவில்லை. கட்சி சாராதவர்கள் 20 சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர். 45 சதவீதம் பேர் ஏற்கவில்லை. ஆனால், ஸ்டாலினுக்கு எதிராக அவர் அரசியல் நிடத்துவதை 52 சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர். 27 சதவீதம் பேர் ஏற்கவில்லை. பொடாவுக்கு எதிரான அவரது பிரசாரத்தை 38 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்கின்றனர். 22 சதவீதம் பேர் ஏற்கவில்லை.
வாரிசு அரசியல் உள்ள விஷயங்களில் மக்களின் கருத்து கருணாநதிக்கு எதிராகவே உள்ளது.
ஜாதி ஓட்டுக்கள் எந்தெந்த கட்சிக்கு ஆதரவாக பிரிகின்றன என்ற விவரகம் தெரியவந்துள்ளது.
ஆண்களிடம் தி.மு.க.,வுக்கும் பெண்களிடம் அ.தி.மு.க.,வுக்கும் செல்வாக்கு இருந்து வருகிறது. ஆண்களில் 44 சதவீதம் பேர் அ.தி.மு.க.,வுக்கும், 47 சதவீதம் பேர் தி.மு.க.,வுக்கும், ஐந்து சதவீதம் பேர் தே.மு.தி.க.,விற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெண்களில் 51 சதவீதம் பேர் அ.தி.மு.க.,விற்கும், 41 சதவீதம் பேர் தி.மு.க.,விற்கும், ஐந்து சதவீதம் பேர் தே.மு.தி.க.,விற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினர் எப்போதும் பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளிப்பது வழக்கம். இந்த முறை அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே பா.ஜ.,வுடன் கூட்டணியில் இல்லை. இருந்தாலும் சிறுபான்மையினர் அ.தி.மு.க.,வை விட தி.மு.க.,வுக்கே அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டமே அதற்கு காரணம் என்று தெரிகிறது. மதமாற்ற தடைச் சட்டத்தை 2004ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க., அரசு வாபஸ் பெற்றுவிட்டாலும் சிறுபான்மையினர் மத்தியில் இன்னும் அதிருப்தி மாறவில்லை என்பது கருத்துக் கணிப்பில் வெளியாகி உள்ளது.
மொத்தத்தில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது தி.மு.க.,வை விட அ.தி.மு.க., தற்போது முந்தும் நிலையே காணப்படுகிறது.

5 Comments:

At 6:33 PM, Blogger Unknown said...

கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்ட நிபர்களில் 46 சதவீதம் பெண்கள், 66 சதவீதம் கிராமப்புற மக்கள், 88 சதவீதம் இந்துக்கள், 5 சதவீத முஸ்லிம்கள், 7 சதவீத கிறிஸ்தவர்கள், 26 சதவீத தாழ்த்தப்பட்ட மக்கள் என அவரவர் மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் பிரதிநதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.//


இதென்ன கேனத்தனமா இருக்கு?எல்லா சதவிகிதத்தையும் கூட்டினா 238% வருது:-)))))))

(jokeeeeeee....)

 
At 6:44 PM, Blogger குழலி / Kuzhali said...

ஊழலை கட்டுப்படுத்துதலில் கருணாநிதியை விட ஜெயலலிதாவின் மீது மக்களுக்கு நம்பிக்கையா? என்னங்கய்யா நடக்குது நாட்டில ஒன்னுமே புரியலை.....

கருணாநிதியை விட ஜெயலலிதா ஊழலை கட்டுப்படுத்துவார் என்றால் அரசை நடத்துதல், தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறை நிச்சயம ஜெயலலிதாவிற்கு தான்....

மற்ற ஒன்னுமே புரியலைகள் இங்கே

 
At 9:26 PM, Blogger கருப்பு said...

இரண்டு மூன்றுகிலோ நகையை கடனாக ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டு மாரடைப்பு வந்து செத்துப் போனாரே அய்யப்பான் நகைமாளிகை ஓனர், அவர் வந்து சொன்னால்கூட ஜெயலலிதா நல்லவர் என்றுதான் ஜெயக்குமார் சொல்வார்!

 
At 11:35 PM, Blogger நன்மனம் said...

"வி.க" ஸ்டாலின்,ராமதாஸ் பற்றி வந்த வதந்தியை வைத்து ஒரு பதிவு வந்ததே படிக்க நேரம் இல்லியோ. "அய்யப்பான் நகைமாளிகை ஓனர்" பிஸினஸ் தான் பண்ணாரு, தரும காரியம் பண்ணல.

ஸ்ரீதர்

 
At 12:31 AM, Blogger ஜெயக்குமார் said...

/கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்ட நிபர்களில் 46 சதவீதம் பெண்கள், 66 சதவீதம் கிராமப்புற மக்கள், 88 சதவீதம் இந்துக்கள், 5 சதவீத முஸ்லிம்கள், 7 சதவீத கிறிஸ்தவர்கள், 26 சதவீத தாழ்த்தப்பட்ட மக்கள் என அவரவர் மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் பிரதிநதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.//


இதென்ன கேனத்தனமா இருக்கு?எல்லா சதவிகிதத்தையும் கூட்டினா 238% வருது:-)))))))/


அட லூசு, இந்த 46 சதவீதம் பெண்கள் என்பது 66 சதவீதம் கிராமப்புற மக்கள, 88 சதவீதம் இந்துக்கள், 5 சதவீத முஸ்லிம்கள், 7 சதவீத கிறிஸ்தவர்கள், 26 சதவீத தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியவற்றில் உள்ளடங்கும் அய்யா. அதே போலத்தான் 66 சதவீதம் கிராமப்புற மக்களில் இவர்கள் குறிப்பிட்டுள்ள இந்துக்கள், முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள், பெண்கள் எல்லொரும் வருவார்கள்.
இதுகூடத்தெரியாத உங்களுக்கு Statistics,
Research methods ஆகியவற்றில் interest வேற, கொடுமைடா சாமி.

 

Post a Comment

<< Home