$user_name="Jeyakumar";

Sunday, April 16, 2006

சசி-யின் சன் - டிவி மோகம்

திரு சசி அவர்கள், தன்னுடைய சமீபத்திய பதிவில் சன் டிவி பற்றியும் அவர்களின் வியாபார யுக்தியைப்பற்றியும் மற்றும் அவர்கள் நடத்தும் பத்திரிக்கைகள் பற்றியும் பெருமையாக எழுதி இருந்தார்.
ஆனால் அந்த சன் டிவி -யால் நம் சமூகத்துக்கு விளையும் நன்மை என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி.


இன்று சன் டிவி -யில் என்ன நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன?. சினிமா, சினிமா விட்டால் அழுது வடியும் பிற்போக்கு தொலைக்காட்சித்தொடர்கள். என்ன செய்தி சொல்கிறார்கள்?. "செய்திகளில் அடுத்து வருவது ஜெயேந்திரர். சிவகாசி ஜெயலட்சுமி, ஜ்டியல் சுப்பரமணியம், செக்ஸ் சாமியார் சதுர்வேதி, கஞ்சா செரினா மற்றும் கருத்து கருணாநிதி" என்ற அளவில்தான் நமக்கு செய்திகள் சொல்லப்படுகின்றன. உலக செய்திகள் என்று இவர்கள் கூறுவது ஆப்பிரிக்காவில் சிங்கம் இரண்டு குட்டி போட்டது, இங்கிலாந்தில் ஒரு ஜோடி 24 மணி நேரம் முத்தம் கொடுத்தது, அமெரிக்காவில் நிர்வாணப்போரட்டம் என்கிற அளவில்தான் உள்ளது. நாட்டில் வேறு நல்ல விசயங்களே நடக்கவில்லையா. மக்களுக்கு தேவையான, பயனுள்ள, சிந்திக்க தூண்டுகிற நல்ல விசயங்கள் தினம்இ தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் நடந்த சில அசம்பாவிதங்களைப்பற்றி சொல்லும் போது உண்மை நிலை என்ன என்பதை அந்த நாடுகளின் தொலைக்காட்சி செய்திகளைப்பார்த்தாவது சொல்லலாம், அப்படி இல்லாமல் ஒரு குண்டு வெடிப்பில் 10 பேர் இறந்தால் 100 பேர் இறந்ததாக கூறுவது, ஒரு ரயில்வே ஸ்டேசன் மூடினால் லண்டனில் அனைத்து ரயில்வே ஸ்டேசன்களும் மூடப்ப்ட்டன என்று கூறி தாயகத்தில் உள்ள உறவினர்களின் மனநிலை எப்படி பாதிப்பு அடையும் என்று கூட கவலைப்படாமல் செய்திகளை வெளியிடுவது போன்ற முட்டாள் தனமான காரியங்களையும் செய்கின்றனர். நல்ல செய்திகள், கருத்துக்கள் சொன்னால் மக்கள் சிந்திக்க ஆரம்ப்பித்துவிடுவார்கள்! இவர்களின் போலியான கவர்ச்சி எடுபடாமல் போய்விடுமே என்ற எண்ணம் தான் இன்று இவர்களிடம் மேலோங்கி உள்ளது. கெட்டவிசயங்கள் மிக எளிதாக மக்களை சென்றடையும். ஆனால் நல்ல விசயங்கள் மருந்து போன்று கசப்பாக இருந்தாலும், அது அவர்களுக்கு எளிய முறையில் சொல்லப்படுமானால், அது ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்க உதவும்.


இன்று சுதந்திர தின மற்றும் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்தால் அதில் சில நடிகர், நடிகைகளின்

நேர்காணல், குத்து நடனங்கள் மற்றும் "இந்திய தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக" என்று மூளையை

மழுங்கடிக்கச்செய்யும் ஒரு படம். இதுதான் இன்றைய தலைமுறைக்கும், நாளைய தலைமுறைக்கும் சுதந்திர போராட்ட

வரலாற்றை சொல்லும் நிகழ்ச்சிகளா?. கொஞ்சம் ஏமாந்தால் விக்ரமும், விஜய்யும் தான் காந்தியோடு உப்பு சத்யாக்கிரகத்துக்கு போனார்கள் என்று கூட சொன்னாலும் சொல்வார்கள். இதேபோல் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தால், நாளைய சமுதாயம் சுதந்திர தினத்திற்கு விடுமுறை விடுவதே இவர்களின் நிகழ்ச்சியை பார்க்கத்தான் என்று புரிந்துகொள்ளும் நிலை

ஏற்படலாம். இப்படி சமூகப்பொறுப்பற்ற ஊடகங்களால் நாளைய தலைமுறைக்கு சத்யாக்கிரகம் என்றால் அந்த கிரகம் பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கேட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. நம் தாய் தந்தையரின் அன்பையும், தியாகங்களையும் நேரில் பார்த்து உணர்கிறோம். ஆனால் தேசத்திற்காக பாடுபட்டு நம் முன்னோர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு சிறப்பாக சொல்லுவதன் மூலம்தான் நம்முடைய சுதந்திரத்தின் அருமையை நம் இளைய தலைமுறைக்கு உனர்த்தமுடியும். நாம் ரத்தம் சிந்தி பாடுபட்டு வாங்கிய இந்த சுதந்திரத்தை பாதுகாக்க முடியும். ஏன் நம் நாட்டில் ஒரு தியாகி கூட இல்லையா? அவர்களிடம் நேர்காணல் கண்டால் இவர்களின் வியாபாரம் போகிவிடுமா?. மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன! என்ற எண்ணம்தான் இவர்களிடம் மேலோங்கி உள்ளது. இதே போல்தான் அனைத்து தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளும் உள்ளன. நம் மண்ணைப்பற்றிய, நம் மக்களைப்பற்றிய, உலகில் சிறந்த நம் கலாச்சாரத்தைப்பற்றிய எந்த நிகழ்ச்சிகளும் இவர்களின் தொலைக்காட்சிகளில் இடம்பெறாது. மாறாக போலியான கவர்ச்சிகளே மக்கள்முன் நிறுத்தப்படுகின்றன.


இப்போது சும்மா "நச்"-னு ஒரு ஆபாச "விஷம்" சில இலவசங்களுடன் நம் தமிழகத்தை தினம், தினம் தாக்கி நமது தேசத்தை அதன் இயல்பிலிருந்து பிரிக்க முயன்று கொண்டிருக்கிறது. அதில் சொல்லப்படும் செய்திகள் என்னவென்றால் ஆண் விபச்சாரம், பெண்களுக்கு காபி குடித்தால் "மூட்" வருமா? ஆதிவாசிகளின் நிர்வாண பூஜை, ஆதிவாசிகளின் ஆபாச

குருந்தகடு பரபரப்பு விற்பனை, குஷ்பு ஆபாச பட வௌதயீடு, பண்ணை வீடுகளில் ஆபாச நடனம், 5 நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனம், செக்ஸ் சாமியார்கள் பற்றிய செய்திகள் மற்றும் தங்களுக்கு பிடிக்காதவர்கள் பற்றிய தவறான கருத்துகள் போன்ற அருவெறுக்கத்தக்க ஆபாச செய்திகள் தான். இதில் அசிங்கம் என்னவென்றால் இவற்றையெல்லாம் படங்களுடன் தலைப்புச் செய்திகளாக முதல் பக்கதிலேயே வௌதயிடுவதுதான். இவைகளை வௌதயிடுவதால் நம் தமிழகத்திற்கு என்ன பயன்?. செய்தித்தாள்களின் தரம் என்பது அன்றாட நாட்டு நடப்புக்களை உலகுக்கு சொல்வதோடு மட்டுமல்லாமல் நல்ல பயனுள்ள, சிந்திக்கவைக்கக்கூடிய கட்டுரைகளையும், கருத்தாய்வு களையும் வௌதயுட்டு மக்களிடம் உலகளாவிய சிந்தனைகளை வளர்ப்பதாக இருக்கவேண்டும். அதுவே பத்திரிக்கை தர்மமும் நீதியும் ஆகும். சமூகப்பொறுப்புள்ள எந்த செய்தித்தாளும் இதைதான் செய்யும். ஆனால் நான் மேற்கூறிய "விஷம்" இலவசங்களுடன் பரவி மக்களின் செய்தித்தாள் அறிவை மட்டமாக்கி அவர்களிடம் எந்த உலகளாவிய சிந்தனைகளும் தோன்றாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் அச்செய்திதாளுக்கும் அது சார்ந்த கட்சிக்கும் தான் லாபமே தவிர நம் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை, மாறாக நம் மக்கள் வெறும் பணம் சம்பாதிக்கும் எந்திரங்களாக, சுயநலவாதிகளாக மட்டுமே இருப்பார்களே தவிர சிந்திக்கின்ற உண்ர்ச்சியுள்ள, போராடும் குணமுள்ள,பொதுநலனில் அக்கரை உள்ள, மனித நேயமிக்க,சமூகப்பொறுப்புள்ள மற்றும் உலகளாவிய சிந்தனைகளை உள்ளடக்கிய சிறந்த கலாச்சாரத்தில் இருந்து வந்த நல்ல குடிமக்களாக இருக்க மாட்டார்கள்.உதாரணமாக குடியரசுதினத்தன்று வெளிவந்த செய்தித்தாள்கள் அணைத்தும் குடியரசுதின நிகழ்ச்சிகளையும் நம் ஜனாதிபதி மற்றும் ஆளுனர் அவர்கள் நாட்டுமக்களுக்கு சொன்ன செய்தியையும் தான் தலைப்பு செய்திகளாக வௌதயிடுவாரகள். ஆனால் "தமிழ் முரசு" என்ற தரமற்ற முரசில் "பள்ளி மாணவிகளை மயக்கி செல்போனில் ஆபாச வீடியோ, பிடிபட்டது ஆபாசக்கும்பல்" என்ற செய்திதான் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. இவர்களுக்கு இதற்கு முன்னர் இத்துறையில் அணுபவம் உள்ளதா? அல்லது "நீலப்படம்" எடுக்கும் கும்பலில் இருந்து பிரிந்து வந்து இந்த பத்திரிக்கையை ஆரம்பித்தார்களா? என்றே புரியவில்லை.


நாளைய சமுதாயம் எல்லா நல்ல வளங்களும் பெற்று சிறப்பாக வாழ வேண்டுமெனில் வெறும் வியாபார நோக்கோடு செயல்படும் மேற்கூறிய நச்சு விதைகள் தமிழகத்தில் வேரூன்ற விடாமல் பாதுகாப்பது சுரணையுள்ள ஓவ்வொரு தமிழனின் கடமை ஆகும். இவர்களை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல ஊடகங்களை ஊக்குவிப்பதுமே நம் தமிழகத்தை தீயசக்திகளிடம் இருந்து காக்க உதவும்.

23 Comments:

At 2:08 AM, Anonymous Anonymous said...

Don't always blame sun tv, and Dinakaran, if you are a neutral person, first you should blame DINAMALAR after that JAYA TV, then you come to here.

Otherwise you are a onesided reporter, we feel if continues.

 
At 2:20 AM, Blogger ஜெயக்குமார் said...

நீங்கள் கூறுவது போல் தினமலரும் இது போன்ற செய்திகளை வெளியிடுகிறது. ஆனால் துக்கடா செய்திகளாக மட்டுமே. சன் டிவி போல அல்லது தமிழ்முரசு போல முதல் பக்கத்தில் பரபரப்பாக அல்ல. தராசு தட்டில் வைத்து பார்த்தால் எதில் பயனுள்ள தகவல்கள் அதிகம் என்பது மக்களுக்கு தெரியும். "இளமை புதுமை" என்றால் அது சினிமாவும் மிமிக்ரியும் தான் என்பது போன்ற நிகழ்சிகள் மற்ற தொலைக்காட்சிகளில் நான் பார்க்கவில்லை.

சன் டிவி-யால் இலவசமாகவே இந்த பத்திரிக்கைகளை மக்களுக்கு தரமுடியும். ஆனால் அப்படிச்செய்தால் அவையெல்லாம் மளிகைகடைகளில் பொட்டலம் மடிக்கத்தான் போகும் என்பது அவர்களுக்கு தெரியும். கவலைப்படாதீர்கள், இது தேர்தல் நேரமாதலால, நான் குறிப்பிட்டது போன்ற செய்திகள் இப்போது வருவதில்லை, இன்னும் இரண்டே மாதங்கள் தான் இதைவிட அதிகமான ஆபாச செய்திகளுடன் இந்த ஊடங்கள் களமிறங்கும்.

 
At 2:23 AM, Blogger ஜெயக்குமார் said...

திரு Sriram அவர்களே,

நீங்கள் கூறியது போல நல்ல ஊடங்களை வளர்க்க நம் இளைய சமுதாயம் சபதம் ஏறகவேண்டும்.

உங்கள் கருத்துக்கு என் நன்றி.

 
At 2:52 AM, Blogger Geetha Sambasivam said...

மிக நல்ல தேவையான ஒரு கருத்து. ஆனால் போய்ச் சேரவேண்டியவர்களுக்குச் சரியான முறையில் போய் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளுவார்களா? சந்தேகம்தான். மொத்தத்தில் மிக நல்ல முயற்சி.

 
At 3:45 AM, Blogger குழலி / Kuzhali said...

சசியின் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது, சசி எந்த இடத்திலும் சன் டிவி தான் தமிழ் மக்களை உய்விக்க வந்த டிவி என்றோ மிக அற்புதமான டிவி என்றோ சொல்லவில்லை, அவர்களுடைய வியாபார அனுகுமுறைகள் தான் முக்கிய காரணம்.

சன் டிவியின் 14 ஆண்டுகாலத்தில் 9 ஆண்டுகாலம் திமுக எதிர்கட்சியாக இருந்தது.

தூர்தர்ஷனின் அழுது வடிந்து கொண்டிருந்த செய்தியை சுவாரசியமாக மாற்றியது சன் டிவி என்பதை மறுப்பதற்கில்லை (தற்போது கதை வேறு)

வேண்டாம் சசியை எந்த வட்டத்திலும் சிக்கவைக்காதீர்கள் எந்த முத்திரையும் குத்தாதீர்கள், சசி போன்று எழுதிய சிலர் ஏற்கனவே வட்டத்தில் சிக்கி, முத்திரை குத்தப்பட்டுவிட்டது, அந்த நிலை சசிக்கும் வரவேண்டாம்

 
At 4:31 AM, Blogger ஜெயக்குமார் said...

கீதா சாம்பசிவம் அவர்களே,
போய்ச் சேரவேண்டியவர்களுக்குச் சரியான முறையில் போய்சேர நாம் தான் முயற்சிக்கவேண்டும். இது நம் தாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

சசி அவர்களை நான் குறைசொல்லவில்லை. வீதியில் கிடக்கும் ஒரு அசிங்கத்திற்க்கு விளம்பரம் தேடிக்கொடுக்காமல் இருந்தாலே போதும்.

ஒரு ஊரில் பெரும்பான்மையானோர் சாராயம் குடிக்கிறார்கள் என்பதற்காக வீதிக்கு வீதி சாரயக்கடையை திறப்பவர்களின் வியாபரத்திறமையை பாராட்ட நான் ஒன்றும் சமூக அக்கரையற்ற வியாபாரி அல்ல.

 
At 7:19 AM, Anonymous Anonymous said...

Jeyakumar,

Have you read dinamalar properly???

They were the ones who started it. Look into their headlines everyday.

More than half the people working in tamilmurasu & dinakaran are ex-dinamalar employees.

Dinamalar was totally against Karunanidhi, Ramadoss & dravidian parties in particular.

 
At 7:25 AM, Blogger தமிழ் சசி | Tamil SASI said...

சன் டிவியின் "வியபார நோக்கு" என்பது குறித்து தான் நான் என் பதிவில் எழுதினேன்.

அதைப் "புரிந்து கொள்வதில்" உங்களுக்குப் பிரச்சனை என்றால் நான் ஒன்றும் சொல்ல முடியாது.

 
At 7:36 AM, Blogger சங்கரய்யா said...

ஜெயக்குமார், நீங்கள் சசியின் அனைத்துப் பதிவுகளையும் படித்தால், இம்மாதிரியான ஒரு பதிவிட்டிருக்கமாட்டீர்!

 
At 7:49 AM, Blogger ஜெயக்குமார் said...

/ சன் டிவியின் "வியபார நோக்கு" என்பது குறித்து தான் நான் என் பதிவில் எழுதினேன்.

அதைப் "புரிந்து கொள்வதில்" உங்களுக்குப் பிரச்சனை என்றால் நான் ஒன்றும் சொல்ல முடியாது./

நீங்கள் சன் டிவியின் "வியபார நோக்கு" என்பது குறித்து மட்டும் எழுதியிருந்தால் நான் இது பற்றி எழுதி இருக்கவேண்டிய அவசியமில்லை. அதைவிடுத்து சன் குழுமத்தின் மீது உள்ள பொறாமையின் காரணமாகத்தான் மத்த பத்திரிக்கைகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்றன என்று எழுதியுள்ளீர்கள். நல்ல பத்திரிக்கைகளை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை அவதூறாக பேசாமல் (உங்கள் பாணியில் அலசாமல்) இருந்தால் அதுவே நம் சமூகத்துக்கு நீங்கள் செய்த நன்றியாக இருக்கும்.
உங்கள் தந்தையின் பத்திரிக்கை வியாபாரம் சன் குழுமத்தின் உதவியாள் சிறப்பாக விற்று நிறைய லாபம் ஈட்டித்தறுமானால் அதற்கு என் வாழ்த்துக்கள்.

 
At 9:13 AM, Blogger தமிழ் சசி | Tamil SASI said...

எங்களிடம் இருந்து தினகரன் மாற்றப்பட்டு விட்டது என்று நான் என் பதிவில் கூறியிருந்தேன். அப்படியெனில் என் தந்தையின் வியபாரத்திற்கும், தினகரனுக்கும் (சன் குழுமம்) எந்த தொடர்பும் இல்லை என்பது "அர்த்தம்".

தினத்தந்தியுடனும், தினமலருடனும் இன்றைக்கும் வியபார தொடர்பு உள்ளது.

கருத்துக்களை, கருத்துக்கள் மூலமாக மோதுவது தான் நல்லது. அது தான் நேர்மையான அணுகுமுறை. தனிப்பட்ட குடும்பத்தை இழுப்பது அவசியமில்லாதது.

உங்களிடம் வாதம் செய்வதற்கு எனக்கு பொறுமை இல்லை. உங்கள் கருத்துக்கள் அவ்வளவு "வீரியமாக" இருக்கின்றன :-)))

 
At 10:01 AM, Blogger ஜெயக்குமார் said...

Mr. Sasi,

தினகரனுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பைக்குறிப்பிட்டதாலயே இதைப்பற்றி நான் குறிப்பிட வேண்டியதாகி விட்டது.

 
At 2:53 PM, Blogger ஜெயக்குமார் said...

நான் இங்கே சசிக்காகவோ, அல்லது இங்கு பிண்ணூட்டம் இட்டுள்ளவர்களுக்காவோ பேசவில்லை. நம் தமிழகத்தில் இணையதளம் என்றால் என்ன என்றே அறியாத, வெறும் தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களையே ஊடகமாக எண்ணிக்கொண்டிருக்கின்ற நம் கிராமத்து தமிழனுக்காக பேசிக்கொண்டிருக்கிரேன். அவனுக்கு தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களே ஊடகம் அவைகள் சொல்பவை தான் செய்திகள் என்று நம்பக்கூடியவன். சன் டிவி-யும் அது நடத்தும் பத்திரிக்கைகளின் தரத்தைப்பற்றியும் ஏற்கனவே என் பிண்ணுட்டத்தில் சொல்லியுள்ளேன். மத்தியில் ஆட்சியில் இருக்கும் போதே அவர்களின் அநியாயம் தாங்கமுடியவில்லை என்றால் மாநிலத்திலும் அவர்கள் ஆட்சி வந்துவிட்டால், தமிழ்நாட்டில் இவர்கள் கூறுவதுதான் செய்தி, இவர்கள் நடத்துவதான் நிகழ்ச்சி என்றாகிவிடும். அவர்கள் என்ன சொன்னாலும் அப்பாவித்தமிழன் நம்பித்தான் ஆகவேண்டும். தினமலரும், தினத்தந்தியும் திமுக போன்ற ஒரு சமூக விரோத சக்தி ஆட்சிக்கு வருதை தடுக்கவே விஜயகாந்தையும் வைகோவயும் ஆதரிக்கின்றன. மத்திய அரசில் பங்கேற்றுள்ள திமுக முதலில் ஒளிபரப்புத்துறையைத்தான் மிரட்டிக்கேட்டது, இதை அது இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால் மத்தியில் ஆழும் காங்கிரஸ் அரசு எதிகட்சிகளின் கேள்விகளுக்கு பயந்து அதோடு தொடர்புடைய வேறுதுறையை அதுவும் கருணாநிதி பேரனுக்கு தந்தது (ஒளிபரப்புத்துறை ஏன் வழங்கப்பவில்லை என்பது எல்லொருக்கும் தெரியும்). மத்தியில் பல காலம் ஆட்சியில் பங்கு பெறும் திமுக ஏன் தூர்தர்சனை வளப்படுத்த முடியாது. ஒரு பேட்டியில் கலாநிதி மாறனே சொல்லியுள்ளார் தூர்தர்ஷன் மட்டும் விழித்துக்கொண்டால் அதுவே எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாகிவிடும் என்று. எனவே மத்தியில் ஆட்சியில் உள்ள அவர்கள் தமிழகத்திலும் ஆட்சிக்கு வந்தால் அது தமிழகத்தின் அழிவிற்கு மறைமுகமாக காரணம் ஆகிவிடும்.

 
At 3:23 PM, Anonymous Anonymous said...

why do you expect others to have your opinion? if dmk is anti-social according to your own damn point of view, why do force it on others?

 
At 3:51 PM, Blogger ஜெயக்குமார் said...

என்னுடைய் கருத்தை விளக்கத்தான் இந்த பதிவு , இதை நீங்கள் பின்பற்றவேண்டும் என்று கூறவில்லை. ரஜினிகாந்த் பாணியில் என் வழி தனி வழி என்று நீங்கள் சென்றால் அதைப்பற்றி கவலைப்படுபவன் நானல்ல. என்னுடைய கருத்துக்கு மற்றவர்கள் பிண்ணூட்டம் அளித்தால் அதற்கு என் நிலையை விளக்கவேண்டியது என்னுடைய கடமை. என் கருத்தை பற்றி கருத்து தெரிவித்த அடையாளம் ( Anonymous) இல்லாத உங்களுக்கும் என் நிலையை விளக்கவேண்டியுள்ளது.

 
At 8:47 PM, Blogger தருமி said...

நீங்கள் சசியின் பதிவை முற்றாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது பதிவிலிருந்தும், புரிந்து கொள்ள முயலவும் இல்லை என்பது உங்கள் பின்னூட்டங்களிலிருந்தும் தெரிகிறது.

உங்களின் தனிக்கருத்தாக இவைகளைச் சொல்வது வேறு, மற்றவர் எழுதியதைச் சரியான புரிதல் இல்லாது கோணம் மாறி, மாற்றிப் பார்ப்பது என்பது வேறல்லவா?

 
At 9:04 PM, Anonymous Anonymous said...

Kuzhali,

DMK was in power for only 5 years is a wrong statement. They were in power in center for much more than that. Either they were in power in state or in central or in both for about 8-10 years. I hope you understand what that means to them " business wise"

 
At 11:18 PM, Blogger ஜெயக்குமார் said...

தருமி அவர்களே,

சசியின் பதிவை நன்றாக புரிந்துதான் இங்கு என்கருத்தை நான் எழுதியுள்ளேன்.
அவர் சன் டிவி-யின் வியபாரத்திறமையை மட்டும் புகழவில்லை. அவர்களின் வியபாரத்திறமை மீது பொறாமை கொண்டு மத்த ஊடகங்கள் தவறான கருத்தை மக்களுக்கு சொல்வதாகவும் எழுதுயுள்ளார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சன் டிவி யின் வியபாரத்திறமையை பாராட்டமுயல்வது என்பது

"ஒரு ஊரில் பெரும்பான்மையானோர் சாராயம் குடிக்கிறார்கள் என்பதற்காக வீதிக்கு வீதி சாரயக்கடையை திறப்பவர்களின் வியாபரத்திறமையை பாராட்டவது போன்றதாகும்"

 
At 6:02 PM, Blogger மாயவரத்தான் said...

ஒரு ஊடகத்தைப் பற்றி பேசும் போது அது தவறு என்று சொல்ல நம்மிடம் சரியான வாதம் இருந்தால் எடுத்து வைக்க வேண்டும். அதை விடுத்து 'ஜெயா டி.வி. மட்டும் சரியா, தினமலர் மட்டும் சரியா' என்றெல்லாம் வாதிடுவது விவாதத்தை திசை திருப்பும் விஷமத்தனம். கையாலாகாத்தனம். கயமைத்தனம். பேமானித்தனம். லூசுத்தனம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

 
At 1:36 AM, Blogger ஜெயக்குமார் said...

//ஒரு ஊடகத்தைப் பற்றி பேசும் போது அது தவறு என்று சொல்ல நம்மிடம் சரியான வாதம் இருந்தால் எடுத்து வைக்க வேண்டும். அதை விடுத்து 'ஜெயா டி.வி. மட்டும் சரியா, தினமலர் மட்டும் சரியா' என்றெல்லாம் வாதிடுவது விவாதத்தை திசை திருப்பும் விஷமத்தனம். கையாலாகாத்தனம். கயமைத்தனம். பேமானித்தனம். லூசுத்தனம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.//

மிகச்சரியான வாதம்.

 
At 2:11 AM, Blogger ஜெ. ராம்கி said...

ஆகா...ஊரு ஒன்ணு கூடிடுச்சுப்பா!:-)

 
At 4:55 AM, Blogger ஜெயக்குமார் said...

//ஆகா...ஊரு ஒன்ணு கூடிடுச்சுப்பா!:-)//

அதை ரெண்டாக்க நம்ம விசிலடிச்சாங்குஞ்சு வந்திட்டாருப்பா!

 
At 2:37 AM, Anonymous Anonymous said...

Excellent man. I really appreciate you for this BLOG.There are few pople like me and you are in this world to about out state and country.Nice man keep it up.

 

Post a Comment

<< Home