கமல் - 100 கோடி - கேடி நக்கீரனின் செய்தி
நக்கீரன் செய்தி
"100 கோடி வியாபாரத்தை கொஞ்சமும் எதிர்பார்க்காத கமலஹாசன், தனது விருமாண்டித்தோழரான நெப்போலியனுடன் தொடர்புகொண்டு நடந்ததை விவரித்திருக்கிறார், அரசியலில் தொடர்பில்லாத என்னை விலைபேச ஆளும்கட்சி வந்திருக்காங்கன்னா, கலைஞர்தான் வெற்றிபெறப்போறார்ங்கிறதை அவங்க தெரிஞ்சிருக்காங்கன்னு தானே அர்த்தம், என் வாழ்த்துக்களை கலைஞரிடம் சொல்லிவிடுங்கள் நான் யு.ஸ் போறேன். தேர்தல் முடிந்தபின் தான் திரும்புவேன் என நெப்போலியனிடம் கூறிவிட்டு , அமெரிக்கா பறந்துவிட்டார் கமல். இந்த சம்பவத்தை அப்படியே கலைஞரிடம் விவரித்திருக்கிறார் நெப்போலியன்."
என்னவோ பக்கத்தில உட்கார்ந்து ஒட்டுகேட்டமாதிரி எழுதியிருக்காங்கப்பா.
"சிவபெருமானே உன் நெற்றிக்கண்ணை கொஞ்சம் திறக்க மாட்டியா?, உன் பக்தனின் பெயரில் பத்திரிக்கை நடத்திக்கொண்டு , இப்படியெல்லாம் புழுகுகிறார்களே, இது நியாயமா?"
பல்லவி
"மீசைக்கார நண்பா!, உனக்கு மேட்டர் இல்லடா?
மேட்டர் இல்லடா, உன்கிட்ட உண்மையில்லடா
சரணம்
"நீ புழுகிறத விடவில்லையே!, உன் பத்திரிக்கைதான் விற்கவில்லையே!
வீரப்பனும்தான் இங்கு இல்லையே! , உன் பொழப்புக்குத்தான் வழியில்லையே! "
மீண்டும் பல்லவி
"மீசைக்கார நண்பா!, உனக்கு ரோசம் இல்லடா?
ரோசம் இல்லடா, உன்கிட்ட உண்மையில்லடா"
27 Comments:
நக்கீரனுக்கெல்லாம் ஒரு போஸ்ட், ரொம்ப வேஸ்ட்.
// நக்கீரனுக்கெல்லாம் ஒரு போஸ்ட், ரொம்ப வேஸ்ட்.//
பொய்யான செய்திகளை டோஸ்ட் செய்து தறுவதில் நக்கீரன் ரொம்ப ஃபாஸ்ட், இருந்தாலும் நீங்கள் சொல்வது போல சுத்த வேஸ்ட்.
இதிலே மேட்ரரு என்னான்னா, 'ஜெ.வின் 100 கோடி பேரம். நடந்தது என்ன? விவரிக்கிறார் கமல்' அப்படீன்னு கவர் ஸ்டோரி. அடப்பாவிகளா, விவரிக்கிறார் அப்படீன்னா, சம்பந்தப்பட்டவரே நேரடியா சொன்னதுன்னு அர்த்தம். இங்கேயோ 'சொன்னாராம், கேட்டாராம்' டைப் நியூஸ் கப்ஸா. ஜெ. ஆட்சியை எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நக்கீரன் கங்கணம் எடுத்துள்ளது. நக்கீரனை வாங்கிப் படிக்கும் கொஞ்சம் நஞ்சம் பேரும் கூட அதை செய்யப் போவதில்லை. இதிலே பெரிய கூத்து, 'சேலஞ்ச்' அப்படீன்ற பெயரிலே தலையணை சைஸிலே ஒரு புத்தகம் நக்கீரனிலே வெளிவந்திருக்கிறது. இலவசமாக கிடைத்ததால் பார்த்தேன். 1996 பொது தேர்தலிலே நக்கீரன் தொடர்ந்து அந்த ஜெ. ஆட்சியை எதிர்த்து வந்ததால் தான் மக்கள் பொங்கி எழுந்து தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளித்தார்கள் என்று வாய்கூசாமல் எழுதியிருக்கிறார்கள். நெனப்பு தான் பொழப்பு கெடுக்குமாம்.
// நெனப்பு தான் பொழப்பு கெடுக்குமாம்.//
அவரோட சகலை வீரப்பன் இல்லாததால அவரோட பொழப்பே already கெட்டுக்கிடக்கு இதுல அடுத்தவர் பொழப்புக்கு இவர் காவடி தூக்குறாரா. எல்லாம் ஒரே கமெடிதாம்பா.
'சேலஞ்ச்'-ன்னு என்ன சொல்லிருக்காங்க , வீரப்பனுக்கு பணப்பட்டுவாடா பண்ணதையா? அல்லது காட்டில வீரப்பன் ஆக்கிப்போட்ட மான் கறி சாப்பிட்டதையா?
nobody believes in what is published in such magazines.Junior vikatan and kumudam reporter are far better
//Junior vikatan and kumudam reporter are far better//
நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மைதான், இருந்தாலும் தங்களின் தரத்தை மேம்படுத்தும் நிலையில் தான் அவர்களும் இருக்கிறார்கள். பத்திரிக்கைகள் வெறும் வியாபார நோக்கோடு மட்டுமில்லாமல் படிப்பவர்களின் மனதை பண்படுத்துபவர்களாகவும், மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்களாகவும், பயனுள்ள செய்திகளை மக்களுக்கு அறியத்தருபவர்களாகவும் இருக்கவேண்டும்.
ஏனென்றால் இவர்களுக்குத்தான் (ஊடகங்களுக்கு) சமூகப்பொறுப்பு அதிகம் இருக்கிறது
// ஏனென்றால் இவர்களுக்குத்தான் (ஊடகங்களுக்கு) சமூகப்பொறுப்பு அதிகம் இருக்கிறது
:->
அதானே! உங்களுக்கும் தினமலருக்கும் இதுவெல்லாம் பொருந்தாதே?
விஜயகுமார்
Well said Jeyakumar..... I also remember reading in Nakeeran about the AIFB candidate in Aandipatti expressing concerns about security threats but still he will contest against all odds. Well I think Nakeeran published this well imagined news a bit late as the AIFB candidate had already withdrew from competition and joined ADMK. :-)
உயர் ஜாதிகாரர்கள் மத்தியில் அகப்பட்டிருந்த ப்த்திரிக்கைத் துறையை சாமாணியனும் தொடங்கலாம் என்று பத்திரிக்கைத்துறையில் கால் பதித்து சாதித்தவ்ர்கள் 3 பேர். ஆதித்தனார், கருணாநிதி தற்போது நக்கீரன் கோபால்.
//என்னவோ பக்கத்தில உட்கார்ந்து ஒட்டுகேட்டமாதிரி எழுதியிருக்காங்கப்பா//
ஜுனியர் விகடனும், ரிபோர்டரும், சோவும், திணமனியும் அருகில் இருந்து பார்த்துதான் எல்லாம் அழுதுகிறார்களா?.
வீரப்பன் போட்டோ கூட் இல்லாமல் அவனை பிடிக்கவும், சம்மன் அனுப்பவும் ஏற்பாடு செய்தது ஜெ. அரசு( 90' களில்). அப்போது துணிச்சலாக வீரப்பணை பார்த்து அவனை சரணடைய ஏற்பாடும் செய்தார் கோபால்.
இப்படி ஏகவசனத்தில் கிண்டல் செய்வது கண்டிக்கத்தக்கது.
தம்பி, குமாரு நேத்திக்கு என்னமோ தினமலர மேற்கோள் காட்டி "நல்லது யாரு சொன்ன என்ன" அப்படின்னு கேட்டு இருந்திக , இப்ப என்னடான்ன நக்கீரன் கேடி , ரவுடி அப்படின்னு சொல்றீக. இதையும் "யாரு சொன்னா என்ன செய்திதானே" அப்படின்னு போக வேண்டியதுதானே.
ஜெயகுமார்,
விஜயகாந்த் ஒரு பேட்டியில் கலைஞர் குறிப்பிடும் " கோடி நடிகர்" நான்தான் , என்று சொல்லுகிறாரே ?
//ஏனென்றால் இவர்களுக்குத்தான் (ஊடகங்களுக்கு) சமூகப்பொறுப்பு அதிகம் இருக்கிறது//
தின மலர்க்கு மட்டும் அந்த சமூகப்பொறுப்பு இல்லையா??
I should start posting as "Anonymous"
so that Our brother 'jeya' will add my
comments and not as 'blogger'?
what do you say ?
ஜெய(லலிதா)குமார்,
உங்கள் நகைச்சுவைகளை மிகவும் ரசிக்கிறேன்!
/தம்பி, குமாரு நேத்திக்கு என்னமோ தினமலர மேற்கோள் காட்டி "நல்லது யாரு சொன்ன என்ன" அப்படின்னு கேட்டு இருந்திக , இப்ப என்னடான்ன நக்கீரன் கேடி , ரவுடி அப்படின்னு சொல்றீக./
நக்கீரன் நல்ல செய்தி சொன்னாலும், உங்களுக்கு சொல்வேன்.
//அதானே! உங்களுக்கும் தினமலருக்கும் இதுவெல்லாம் பொருந்தாதே?//
அப்படியா!, நல்ல கண்டுபிடிப்பு. எதாவது ஆதாரம் இருந்தால் சொல்லுங்களேன்.
//வீரப்பன் போட்டோ கூட் இல்லாமல் அவனை பிடிக்கவும், சம்மன் அனுப்பவும் ஏற்பாடு செய்தது ஜெ. அரசு( 90' களில்). அப்போது துணிச்சலாக வீரப்பணை பார்த்து அவனை சரணடைய ஏற்பாடும் செய்தார் கோபால்.//
அதற்காக கவர் ஸ்டோரி, வாழ்க்கை வரலாறு, தொடர்கதை எல்லாம் வருசக்கணக்கில் எழுதுவது கொஞ்சம் ஓவரா தெரியல.
எழுதுவதற்கு வேற விசயமே கிடைக்கவில்லையா?
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
என்ன ஜோ,
விட்டால் நான் தான் ஜெயலலிதாவோட அண்ணன் (ஜெயக்குமார் ) என்று ராங்-கால் - சங்கர்லால் மாதிரி ராங் ஸ்டேட்மெண்ட் விட்டாலும் விடுவீர்கள் போலிருக்கு.
என்னுடைய பதிவுகளில் எங்காவது ஜெ-வையோ, அல்லது அதிமுக-வையோ ஆதிரித்து பேசியுள்ளேனா?
தோடா LL-தாஸ் வந்துட்டாரு,
//பத்திரிக்கைகள் வெறும் வியாபார நோக்கோடு மட்டுமில்லாமல் படிப்பவர்களின் மனதை பண்படுத்துபவர்களாகவும், மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்களாகவும், பயனுள்ள செய்திகளை மக்களுக்கு அறியத்தருபவர்களாகவும் இருக்கவேண்டும்.
ஏனென்றால் இவர்களுக்குத்தான் (ஊடகங்களுக்கு) சமூகப்பொறுப்பு அதிகம் இருக்கிறது //
அப்ப தின-மலம் மட்டும் தான் ஒழுங்கான பத்திரிக்கையா?
ஏய், யாருப்பா இது... என் சாதிக்காரனை கிண்டலடிச்சு போஸ்ட் போட்டது? :-)
என்ன ஜோ,
அதிமுக -விற்கு எதிராக நீங்கள் எழுதி அதை நான் எதிர்த்து எழுதியிருந்தால், நீங்கள் சொல்வதில் நியாயம் உள்ளது. ஆனால் நான் திமுக-வை விமர்சிக்கும் போது மட்டும் உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருவதால் நீங்கள் திமுக அனுதாபி என்று நான் கூறலாமா?
ஜெயக்குமார் ஜெயாவுக்கு "ஜிங்குசா" அடிக்கும் செய்திகள் என்றால் உனக்கு அல்வா. இல்லைனா கசப்பா? போய்யா நீயும் உன் Blogம்!
சில அனானிகள் அருவெறுக்கத்தக்க வார்த்தைகளுடன், சில பிண்ணூட்டங்க்ளை இடுகிறார்கள், அவற்றை நாகரீகம் கருதி இங்கு நான் தவிர்த்துள்ளேன். அனானிகளை பிண்ணூட்டம் இட அனுமதித்தது , எல்லொரும் என் பதிவு பற்றிய தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் சிலர் அதை தவறாக பயன்படுத்துகின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உண்மையிலேயே உங்களுக்கு துனிவு இருந்தால் உங்கள் பெயர் மற்றும் இ-மெயில் முகவரியுடன் தெரிவிக்கவும். அவர்களுக்கு அவர்கள் பாசையிலேயே பதில் அளிக்க நான் காத்திருக்கிறேன்.
என்னிடமும் அதுபோன்ற நிறைய வார்த்தைகள் (அருவா புகழ் திருப்பாச்சேத்தியில் படிக்கும்போது கற்றுக்கொண்டது) பலகாலம் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்துக்கிடக்கின்றன.
இன்னைக்கு தினமலர்ல கொட்டை எழுத்துல தலைப்புச் செய்தி
தி.மு.க. வசூல்
ஆனால் உள்ள போயி பாத்தீங்கன்னா அவங்களுக்கே பெரிய கொழப்பம் இருக்குது.
"கோவை அருகேயுள்ள மதுக்கரை, வாளையார், கந்தேகவுண்டன் சாவடி, தொண்டாமுத்துõர், வீரகேரளம் பகுதிகளில் சிலர் வீடு, வீடாகச் சென்று கலர் "டிவி' கணக்கெடுப்பு நடத்த வந்திருப்பதாக கூறியுள்ளனர். விண்ணப்ப படிவங்களை மக்களிடம் கொடுத்து, பூர்த்தி செய்து தருமாறு வற்புறுத்தியுள்ளனர். "தேர்தலுக்கு பிறகு கலர் "டிவி' தர வேண்டுமானால், முன்பதிவு கட்டணமாக ரூ.100 தர வேண்டும்' எனக்கூறி வசூலித்துள்ளனர். வந்தவர்கள் தி.மு.க.,வினரா அல்லது தி.மு.க.,வினர் போர்வையில் வந்த மோசடி நபர்களா எனத் தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்."
இப்படி எழுதி இருக்கு... வாரா வாரம் நக்கீரனைப் படிக்கிறவுங்க எத்தனை பேரு தினமலரைப் படிக்கிறவங்க எத்தனை பேரு. நக்கீரன் செஞ்ச தப்பைச் சொன்னீங்க நியாயம்தான்... அத்தோட தினமலரோட பித்தலாட்டங்களையும் சொல்லீருந்தீங்கன்னா நல்லாயிருந்துருக்கும்...
அதுதான் சொல்லிட்டீங்களே பிரதீப். எல்லாவற்றையும் நானே சொல்லனம்னு எதிர்பார்கிறீர்களா?
//வீரப்பன் போட்டோ கூட் இல்லாமல் அவனை பிடிக்கவும், சம்மன் அனுப்பவும் ஏற்பாடு செய்தது ஜெ. அரசு( 90' களில்). அப்போது துணிச்சலாக வீரப்பணை பார்த்து அவனை சரணடைய ஏற்பாடும் செய்தார் கோபால்//
ஹிஹி, அந்த வீரப்பன் மேட்டரிலே ஆரம்பத்திலேயே பெரிய கொழப்பம் நடந்திச்சி. இது உலகுக்கே தெரியும். ஒரே நேரத்திலே அந்த போட்டோவும், பேட்டியும் இந்தியா டுடே, நக்கீரன் ரெண்டுத்திலயும் வந்திச்சு. மேட்டர் என்னான்னா அந்த சிவசுப்ரமணியன்றவர் ஒரு ப்ரீலான்ஸர். வீரப்பன் போட்டோ எடுத்திட்டு வந்து ஒவ்வொரு பத்திரிகையா ஏறி இறங்கி விலைக்கு வித்தாராம். அதில ஒரே நேரத்தில ரெண்டு பத்திரிகைகளுக்கு வித்து, உடனே அவருக்கு அதிகமா காசு கொடுக்கப்பட்டு அடையாள அட்டையும் கொடுத்து நிருபராக்கிட்டாங்க. தெரிஞ்சா பேத்தணும். ஹும்!
Mr.Jeyakumar,
please read this site for more about media and their status
http://www.thehoot.org/default.asp
In the same site , I read a article which contains
"Dina Malar said Jayalakshmi had seduced over 20 policemen. On Aug 14 Dina Malar carried an article headlined ``Jayalakshmi Vallaiyil Bank Athigarigal'' (Bank officials in Jayalakshmi's net), suggesting there could be more than just police officials that she had a sexual relationship with. But the article was just speculation and there was no proof. The text of the story went like this: ``Thanathu Azhagirkku ethanaiyo rajakumarargal queuevil nirpargal ena mana kottai kattinar. Avar ninaithathu pola yaarum varavillai.'' (She daydreamed that many a prince will queue up falling for her beauty. But that was not to be.) This verbiage, when her all-too homely face was splashed across all channels. In subsequent weeks, the police started feeding information on her ``criminal background'' including a stay at a sub-jail for prostitution. Little did it matter that case was also sub-judice! "
தமிழில் எழுதமுடியாமைக்கு மன்னிக்கவும்.
//அதில ஒரே நேரத்தில ரெண்டு பத்திரிகைகளுக்கு வித்து, உடனே அவருக்கு அதிகமா காசு கொடுக்கப்பட்டு அடையாள அட்டையும் கொடுத்து நிருபராக்கிட்டாங்க. தெரிஞ்சா பேத்தணும். ஹும்!//
நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளை படித்து வளர்ந்தவர்கள் அவர்கள் என்ன சொன்னாலும் அதுதான் உண்மை என்று என்று வாக்குவாதம் செய்யவும் தயங்கமாட்டார்கள். இதுபோன்ற மஞ்சள் பத்திரிக்கைகளை ஊக்குவிப்பட்தை நிறுத்தினால்தான் பத்திரிக்கை உலகம் மேம்படும். இல்லாவிட்டால் அது ஒரு வியாதி போலப்பரவி மத்த பத்திரிக்கைகளையும் பாதிக்கும். ஏற்கனவே சில பத்திரிக்கைகள் நக்கீரன் போல செய்திகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. பரபரப்புச் செய்திகளில் என்று சில கன்றாவியான செய்திகளை படத்துடனும் வெளியிட ஆரம்பித்துவிட்டன. இது பத்திரிக்கை உலகிற்கு ஆரோக்கியமான விசயம் அல்ல. "investigation reporter " என்றால் இவ்வாறான செய்திகள் எல்லாம் உண்மைக்கு புறம்பாக வெளியிடலாமா?
//என்னவோ பக்கத்தில உட்கார்ந்து ஒட்டுகேட்டமாதிரி எழுதியிருக்காங்கப்பா//
//ஜுனியர் விகடனும், ரிபோர்டரும், சோவும், திணமனியும் அருகில் இருந்து பார்த்துதான் எல்லாம் அழுதுகிறார்களா?. //
Only one question, did vaiko, jj , cho sat near maran & tata when maran treaten TATA. Same logic goes here also
Post a Comment
<< Home