$user_name="Jeyakumar";

Saturday, April 22, 2006

வந்தாச்சு! சம்மர் வந்தாச்சு!



நான் பணியாற்றும் அலுவலகம் அமைந்துள்ள லண்டனில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள oxford street-க்கு இன்று ஒரு சிறிய வேலை நிமித்தமாக செல்லவேண்டியிருந்தது. பொதுவாக வார விடுமுறை நாட்களில் அதிகம் அந்தப்பக்கம் போவதில்லை. குளிர்காலத்திலேயே அதிக கூட்டம் காணப்படும் இந்த தெருவில்(நம்ம ரங்கநாதன் தெரு மாதிரித்தான்) இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளே அவர்கள் சம்மரை வரவேற்கத்தயாரகிவிட்டது தெரிந்தது.

பொதுவாக நம்ம ஊரில் சம்மர் யாருக்கும் அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இங்கு வெயில் இருக்கும் ஆறு மாத்திற்காக(அதுதான் அவர்களின் வசந்த காலம்) அவர்கள் ஆறுமாதம் காக்கவேண்டியுள்ளது. இந்த காலத்தில் தான் தொழில் தொடங்குதல், திட்டமிடுதல் என பல வேலைகளை செய்ய அவர்கள் விரும்புகின்றனர். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு இங்கு கோடைக்காலங்களில் பகல் நேரம் காலை 5.30 மணியில் இருந்து இரவு 9 to 10 மணிவரை இருக்கும் (ஆதாவது நல்ல வெளிச்சம் இருக்கும்). இன்று வெளியில் செல்லும் போது பல வீடுகளில் தோட்டவேலையை ஆரம்பித்திருப்பது தெரிந்தது. மரங்களில் இலைகளும், பூக்களும் தலைகாட்டத்தொடங்கியுள்ளது. உடற்பயிற்சி நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது (குளிர்காலத்தில் ஏறிய கொழுப்பையெல்லாம் கோடைகாலத்தில் தான் குறைப்பார்கள்).

பொதுவாக நம்ம ஊர் வெயிலுக்கும் இந்த ஊர் வெயிலுக்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால், நமது ஊரில் காற்றில் தண்ணீரின் அளவு அதிகம் இருக்கும் (குறிப்பாக சென்னையில் கடற்கரை அருகில் உள்ளதால்.) எனவே அதிகமாக வியர்வை இருக்கும் (கச கச என்று இருக்கும்) . ஆனால் இங்குள்ள வெயில் ஒரு மாதிரியான எரிச்சலைத்தரும். வெயில் காலங்களில் சட்டையில்லாமல் வெளியில் அதிக நேரம் சுற்றினால் தோல் உரிந்துவிடும். இருந்தாலும் மக்கள் இதை அதிகம் விரும்புகின்றனர். மக்கள் புற ஊதாக்கதிர்களால் தோல் பாதிக்காமல் இருக்க சில லோசன்களை பயன்படுத்துகிறார்கள்.

இன்று என்னுடைய mobile phone மூலமாக சில புகைப்படங்களை எடுத்தேன், அதை இங்கே உங்களுக்கு காணத்தருகிறேன்.




ஹரே ராம!, ஹரே ராம!! ராம! ராம! ஹரே! ஹரே!

இந்த கூட்டத்தில் நான் ஒரே ஒரு இந்தியரைத்தான் பார்த்தேன் மற்றவர்கள் ஜரோப்பியர்கள் மற்றும் ஒரு ஆப்பிரிக்கர்.

இவர்களை இங்கு நான் பலமுறை பார்த்ததுண்டு. ஓவ்வொரு முறையும் சில புது ஆட்களைப்பார்ப்பதுண்டு. இவர்களின் பிரசுரங்களை ஒரு முறைகூட வாங்கிப்படிக்க தோன்றவில்லை. அடுத்த முறை அதில் என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்



புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு வெளிப்புறத்தோற்றம் பேருந்தில் பயணம் செய்தபோது எடுத்தது.











பல நாடுகளில் இருந்து பலதரப்பட்ட கலாச்சாரத்தில் இருந்து வந்த மக்களை இங்கு நாம் காணலாம்.

0 Comments:

Post a Comment

<< Home