$user_name="Jeyakumar";

Monday, April 17, 2006

தி.மு.க - வின் குடும்ப அரசியல் - சரத்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க., குடும்ப அரசியலால் கட்சியில் பலர் பாதிப்பு: சரத்குமார் குற்றச்சாட்டு

தேனி: தி.மு.க.,வில் நிடக்கும் குடும்ப அரசியலால் கட்சியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் அ.தி.மு.க.,வில் சேர்ந்தேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். அ.தி.மு.க.,வில் சேர்ந்த பிறகு நடிகர் சரத்குமார்

தேனியில் நிருபர்களிடம் கூறியதாவது:


தேனியில் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் நான் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் நல்லாட்சி நடக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் நான் இணைந்துள்ளேன். தி.மு.க.,வில்
குடும்பத்தினரின் சிபாரிசு, தலையீடு அதிகரித்துள்ளது. அங்கு மூத்த தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னோடிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு மதிப்பில்லை. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. தி.மு.க.,வில் குடும்ப அரசியல் நிடக்கிறது. இதனால், கட்சியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களும் நல்ல முடிவு எடுப்பர்.
என்னைப்போல் பலரும் தி.மு.க.,வில் மனக்குறையுடன் உள்ளனர். நான் வெளியே சொல்லிவிட்டேன். விரைவில் அவர்களும் சொல்வார்கள். நான் இப்போது எடுத்துள்ள இந்த நல்ல முடிவு என் வாழ்வின் புதிய முடிவு. நிரந்தரமான முடிவும் இது தான். நிதானமாக சிந்தித்து, நண்பர்களுடன் ஆலோசித்த பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
என் ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் 80 சதவீதம் பேரிடம் இது பற்றி கருத்து கேட்டு ஆய்வு செய்தேன். அவர்கள் அனைவருமே நான் இருக்க வேண்டிய இடம் அ.தி.மு.க., தான் என்று தெரிவித்தனர். இப்போது தான் சரியான இடத்திற்கு வந்துள்ளேன். ராடான் டிவி என்பது கார்ப்பரேட் நறுவனம். சன் டிவி கார்ப்பரேட் நிறுவனம். செல்வி உள்ளிட்ட தொடர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாவது பற்றி சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநதி மாறன் தான் முடிவு எடுக்க வேண்டும்.

திருச்சியில் சென்ற மாதம் நிடந்த மாநாட்டில் நான் தி.மு.க.,வில் கடைசிவரை இருப்பேன் என பேசியது உண்மைதான். அப்போது எனக்கு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதன் பின்னரும் எனக்கு மிரட்டல்கள் தொடர்ந்தன. எவ்வளவு காலம் தான் மிரட்டல்களை தொடர்ந்து தாங்கிக்கொண்டு இருக்க கடியும்? நான் எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன். உள்மனம், வெளிமனம் மற்றும் இறைவனுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்.
இன்று காலை 11.30 மணிக்கே என் எம்.பி., பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி விட்டேன். எந்த பதவிக்காகவும் அ.தி.மு.க.,வில் நான் சேரவில்லை. சின்ன வயதில் இருந்தே நான் எம்.ஜி.ஆர்., ரசிகன். அதன்படிவிசுவாசமுள்ள போர் வீரனாக இருப்பேன். இதனால் தான் தற்போது அக்கட்சியில் சேர்ந்துள்ளேன். அன்று எனது நடிப்பிற்காக எம்.ஜி.ஆர்., விருது கொடுத்தனர். அப்போது, இந்த விருது பெறுவது உனக்கு சந்தோஷம் தானே? என கிண்டல் செய்தனர். இப்போது எம்.ஜி.ஆ ரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் முதல்வர் ஜெயலலிதா
பின்பற்றி வருகிறார்.
தி.மு.க., தலைவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் தடுக்க பலர் தயாராக உள்ளனர்.அதை நிறைவேற்றும் போது பார்த்துக் கொள்ளலாம். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற
நோக்கத்துடன் வரும் ஏப்., 20 முதல் பிரசாரம் செய்வேன். நான் பிரசாரம் செய்யப்போகும் இடங்களை முதல்வர் தேர்ந்தெடுப்பார். பிரசாரத்தின் போது திரைமறைவில் நடந்த உண்மைகளை வெளியே சொல்வேன். அப்போது அவர்களும் பதில் சொல்லட்டும். ராதிகாவிற்கு தற்போது கம்பெனி வேலை அதிகமாக இருப்பதால் அவர் பிரசாரம் செய்வது குறித்து முடிவெடுக்கவில்லை. இனிமேல் நிரந்தரமாக அ.தி.மு.க.,வில் தான் இருப்பேன். நான் சேரும் கடைசி கட்சி இது தான். இவ்வாறு சரத்குமார் கூறினார். பேட்டியின் போது இடையே வந்த ராதிகா கூறியதாவது: நான் சில காலமாக எந்த கட்சியிலும் சேரவில்லை. தற்போது என் கணவருடன் வந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்துள்ளேன். செல்வி தொடர் ஒளிபரப்பாவது பற்றி சன் டிவி முடிவு எடுக்க வேண்டும் என ராதிகா கூறினார்.

3 Comments:

At 2:33 PM, Blogger VSK said...

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே!

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

உத்தமர் போலவே பகல் வேஷம் போட்டு
[இனிமேல் என் சொந்த சரக்கு!]
அப்பாவித் தமிழரை இருவரும் சேர்ந்து

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே!

இவ்வாண்டு அவர்களை அனுப்பி வைப்போம்
இனி எந்நாளும் அவர்களே ஆளாமல் செய்வோம்
திறனுள்ள ந்ல்லோரைத் தேர்ந்தெடுப்போம்-- நம்
தமிழ்நாட்டின் நலனென்றும் மனதில் கொள்வோம்

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே!

 
At 3:21 PM, Blogger Machi said...

//தி.மு.க.,வில்
குடும்பத்தினரின் சிபாரிசு, தலையீடு அதிகரித்துள்ளது. அங்கு மூத்த தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னோடிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு மதிப்பில்லை. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. //

ஹி ஹி அ.திமுகவில் குடும்பத்தின் தலையீடே இல்லை ( குடும்பத்தை எதிர்த்தா பொன்னையன் கதிதான் அனுசரிச்சு போனா பன்னீர் ஆகலாம் :-)) )
அ.திமுகவில் மூத்த தலைவர்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு ஏகப்பட்ட பேர் நினைவுக்கு வர்ராங்கப்பா :-))
- சரத் சிலேடையா எப்ப பேச கத்துக்கிட்டார்.

 
At 2:13 AM, Anonymous Anonymous said...

//அங்கு மூத்த தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னோடிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு மதிப்பில்லை. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. //

So when he joined DMK, mk gave the MP post to him at that time, he did not know that there where old peoples are there in DMK.

Y he left AIADMK and join dmk,
because old JJ TV telecasted his movie with out the satelite rights.

So now he has other reason to join there back, he is standing besides his caste and telling that he is going to create a soceity with out castisim. What a Funn

 

Post a Comment

<< Home