$user_name="Jeyakumar";

Monday, April 17, 2006

ராமதாஸின் கனவு Vs ஒரு இளைஞனின் கனவு


தினமலரில் வெளிவந்த இது உங்கள் இடம் பகுதியில் இருந்து.

டாக்டர் க.சற்குணம், சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பிய இ-மெயில் கடிதம்:
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் சாராம்சத்தை பார்க்கும் போது, அ.தி.மு.க., தவிர, வேறு எந்தக் கூட்டணியிலும் தமிழகத்தின் முன்னேற்றத் திற்கான திட்டங்கள் இல்லை. மற்ற எல்லா கட்சிகளும் இலவசம், ஜாதி அல்லது மதம் இவைகளையே முன்னிறுத்துகின்றன.

நீங்களே உங்கள் மனச்சாட்சியை தொட்டு, ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்... கடந்த ஐந்தாண்டுகளில் நிடந்த சில விபத்துக்களுக்கும், சில தகாத சம்பவங்களுக்கும் யார் காரணம்? நாம் தான் காரணம்... நம் பேராசை தான் காரணம்! நாம் விலங்குகள் அல்ல... இலவசமாகக் கொடுக்கின்றனர் என்பதற்காக நம் உடல் பலத்தால் நம் சகோதர, சகோதரிகளை, முதியோர்களை மிதித்து விட்டு சென்று நிவாரணங்களை வாங்க முயற்சித்தது யார் தவறு? இதே வலிமையை வைத்து உழைத்துப் பிழைக்கலாமே... கேவலம் இலவசத்திற்காக அத்தனை உயிர்களை இழந்தோமே.

நான் ஒரு இளைஞன். எனக்கு கருணாநதி கொடுக்கும் 300 ரூபாய் மாதாந்திர இலவசத் தொகை (பிச்சை) தேவையில்லை. என்னைப் போன்ற இளைஞர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் தான் வேண்டும். இவர்கள் கொடுக்கும் பிச்சை வேண்டாம். நாங்களும் முன்னேற வேண்டும்... நாடும் முன்னேற வேண்டும்.

உங்களிடம் ஒரு நாட்டுப் பற்றுள்ள ஒரு இளைஞனாக வேண்டிக் கொள் கிறேன்: தயவுசெய்து இலவசம் வேண் டாம்... அதற்கு அடிமையாக வேண் டாம். அதனால் நாம் இழந்தது போதும்!

கலர் "டிவி'க்காகவும்; இரண்டு ஏக்கர் நலத்திற்காகவும்; 300 ரூபாய்காகவும் நாம் தி.மு.க., கூட்டணி தலைவரிடம் பிச்சை எடுக்க வேண்டுமா? அதுவும் அவரது சொந்த பணத்தில் இல்லை; நம் வரிப் பணத்தை தான் செலவிடப் போகின்றனர்.

இலவச கல்வி, இலவச சுகாதாரம் போன்றவை நாட்டிற்குத் தேவையானவை. இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைப்பவை. ஆனால், கலர் "டிவி'யும், 300 ரூபாயும் எந்த சமூக ஏற்றத்தாழ்வுகளையும் குறைக்காது.

கடந்த 1991- 96ல் இருந்த ஜெயலலிதாவின் ஆட்சி போன்றல்ல இப்போது இருப்பது. அவர்கள் நிறையவே மாறி விட்டனர்; தவறை விட்டுத் திருந்தியுள்ளனர்.

ஆனால், தவறுகளையே வாழ்க்கையாகக் கொண்டவர்களை எவ்வாறு ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும்? அதிலும் மக்களை முட்டாள்கள் என நினைப்பவர்களை... நாம் அறிவுள்ள, உணர்வுள்ள, வலிமையுள்ள தமிழர்கள் தானே! நம்மை பிச்சை எடுக்க வைக்காமல், சுய கவுரவத்துடன் வாழ வைக்கிற அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தி, இந்தியாவின் மற்றைய மாநலங்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்வோம்!

மருத்துவர் அய்யா கனவு!

கே.சபாபதி, கோவையிலிருந்து எழுதுகிறார்: ஒருவர் காரை ஊர் எல்லைக்குள் ஓட்டி வருகிறார். பின்னாடியே சைரனுடன் ஒரு போலீஸ் கார் துரத்தி அவரைக் குறுக்கிடுகிறது. "நீ அதிவேகமாக கார் ஓட்டினாய்' என்று போலீஸ்காரர் கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போகிறார்.

அங்கிருந்த மேலதிகாரியிடம், "மாமா இவன் காரை அதிவேகமாக ஓட்டி வந்தான்' என்று குற்றம் சாட்டுகிறார். "நான் எப்.ஐ.ஆர்., பைல் பண்ணிக்கிறேன். இவனை நம்ம ஜெயிலர் பெரியப்பாவிடம் கொண்டு போய் அடை. நாளை காலையில் மாஜிஸ்திரேட் சித்தப்பா முன் ஆஜர்படுத்து மாப்பிள்ளை' என்று அந்த அதிகாரி அனுப்பி வைக்கிறார்.

வழியில் ஒரு ஓட்டல், "இது என் மச்சினன் நடத்துற ஓட்டல். நல்லா இருக்கும். வா சாப்பிடலாம். நீ தான் துட்டு குடுக்கணும்' என்று போலீஸ்காரர் அங்கு அழைத்துப் போகிறார். சாப்பிட்டு எழுந்ததும்,

"பயப்படாதே. பிராசிகியூட்டர் என் ஒண்ணுவிட்ட சித்தப்பா தான். நான் சொன்னா கேட்பார். இல்லாட்டி போனாலும், என் அத்தை மகன் தான் பிரபல வக்கீல். அவரை ஏற்பாடு செய்கிறேன்' என்பார்.

காரோட்டி தன்னிடமிருந்து பணம், காசு, நிகை, நிட்டு அத்தனையையும் அந்த போலீஸ்கார஛டம் கொடுத்துவிட்டு, தப்பித்தேன்... பிழைத்தேன் என்று காரை மெதுவாக, மிக மெதுவாக ஓட்டியபடி ஊர் எல்லையைப் கடப்பார்.

இது ஒரு ஆல்பிரட் ஹிட்ச்காக் கதை. ஒரு அமெரிக்க கிராமத்தில் நிடக்கும் அநியாயங்களை விளக்கும் கதை. அதாவது, அந்த ஊ஛ல் ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லா உறவினர்களுமே எல்லா பதவிகளையும் வகித்தால் எப்படி இருக்கும் என்று விவரிக்கிற கதை இது.

கிட்டத்தட்ட இது தான் மருத்துவர் ராமதாசின் கனவு. விழுப்புரம் மாவட்டத்தில் எல்லா பதவிகளிலும், அவருடைய ஜாதிக்காரர்களே இருந்தால், அது தான் சமூக நீதி என்று அவர் கருதுகிறார் போலும். ஆனால், மாட்டிக் கொண்டு கப்பம் கட்டுகிறவன் மட்டும் வேறு ஜாதியாக இருக்க வேண்டுமாம்! இதெல்லாம் நிடக்கிற கதையா!

இந்தியாவில் மொத்தம் நான்காயிரம் ஜாதிகள் இருப்பதாக ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்காரனும், இப்படி நினைக்க ஆரம்பித்தால் நாடு என்ன ஆவது? இப்படியெல்லாம் கனவு காண்பதை மருத்துவர் நிறுத்தினால் நில்லது.

7 Comments:

At 12:45 AM, Anonymous Anonymous said...

ஜெய்,

உங்க புரொஃபைலில் உள்ள உங்கள் புகைப்படம் அழகாக இருக்கிறது.

 
At 12:56 AM, Anonymous Anonymous said...

looks like you became an agent for DINA-MALAM. The bloggers have discussed enough about its negative reporting. Now a new torch bearer has come up.

Do you know that other papers have exposed the letters to the editor of DINA-MALAM. Most of the letters were written by the sub-editors or staff. They publish the letters in different editions under different names.

 
At 1:02 AM, Blogger ஜெயக்குமார் said...

/Do you know that other papers have exposed the letters to the editor of DINA-MALAM. Most of the letters were written by the sub-editors or staff. They publish the letters in different editions under different names./

அப்படியா! எனக்கு தெரியவே தெரியாதே!

நல்ல விசயங்கள் எங்கு இருந்த்தாலும் எடுத்து எழுதுவேன். இது என்னால் நம் நாட்டிற்கு செய்யும் சிறு உதவி.
இதை யார் எழுதினார்கள் என்பது முக்கியமில்லை, அதில் சொல்லப்பட்ட விசயம் தான் முக்கியம்.

 
At 1:03 AM, Blogger ஜெயக்குமார் said...

/ ஜெய்,

உங்க புரொஃபைலில் உள்ள உங்கள் புகைப்படம் அழகாக இருக்கிறது./

யாரப்பா இது?

 
At 2:12 AM, Blogger ப்ரியன் said...

அன்பின் ஜெயக்குமார்,

உங்களின் பதிவுகளையும் உங்கள் பின்னூட்டங்களைப் படிக்கும் போதும் நீங்கள் திவிர தி.மு.க எதிர்ப்பாலர் என்பது புலனாகிறது.இதையேதான் தினமலரும் செய்கிறது இதுவரை "இது உங்கள் இடத்தில்" நான் அ.தி.மு.க வை விமர்சித்தோ அல்லது பா.ஜ.க வை விமர்சித்தோ ஒரு வாசகரும் எழுதிப்பார்த்தது இல்லை.ஏன் யாரும் எழுத மாட்டர்களா?வாசகர்கள் எழுதுவார்கள் அதை தினமலர் வெளியிடுவதில்லை என்பதே உண்மை.

அப்படித்தான் தினமலரில் வரும் ஒரு பகுதியில் (ஞாயிற்று கிழமையில்) சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் "ரோஜா" தொடரை ஒரு வாசகர் கிழி கிழி என கிழித்திருந்தார்.அதையும் தினமலர் வெளியிட்டு இருந்தது உண்மையில் "ரோஜா" தொடர் சன் டிவியில் இல்லை ஜெயா டிவியில்.வாசகர் சன் டிவியை திட்டியிருக்கார் என்ற ஒரே காரணத்திற்காக வெளியிடும் பத்திரிக்கை தினமலர் என்றால் மிகையல்ல

அடுத்து இலவசம் என்ற பகுதிக்கு வருவோம்,

இலவசம் என்பது இல்லாமல் ஆக்கவேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாதுதான்.ஆனால் தமிழ்நாட்டு வாழ்க்கையில் அது இரண்டர கலந்துவிட்டது கொடுமை.எல்லா கட்சிகளும் இலவசம் தரவதில் முன்னோடிகள்தாம் அதில் தி.மு.க , அ.தி.மு.க என்று பார்க்கத் தேவையில்லை.மற்றபடி வேலை இல்லா இளைஞர்களுக்கு பண உதவி தருவதையும் மகளிருக்கு திருமண உதவிதருவதையும் வரவேற்றுத்தான் தீரவேண்டும்.வேலை இல்லா இளைஞருக்கு பண உதவி என்பது எல்லா மேலை நாடுகளிலும் உண்டு.அதேப் போல் லாலுவும் வேலைக்காக நேர்காணலுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு இலவச இரயில் பயணம் என்றார் அதுவும் வரவேற்கப்பட வேண்டிய விசயமே.

 
At 2:36 AM, Blogger ஜெயக்குமார் said...

திரு பிரியன் அவர்களுக்கு,

இலவசத்தைப்பற்றி நீங்கள் குறிபிட்டதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் வெறும் இலவசத்திட்டங்களை மட்டும் குறிப்பிட்டவர்கள், அதை கொடுக்க அரசு வருமானத்தை எப்படி பெருக்கபோகிறோம் என்பதை மட்டும் சொல்லவே இல்லையே!

வருமானம் இல்லாமல் இத்தகைய இலவசங்களை உலகவங்கியில் கடன் வாங்கியா குடுக்க முடியும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

 
At 6:18 PM, Anonymous Anonymous said...

ஜெயகுமார்,

தின-மலதின் நடுநிலைமை.

April 16th - Jaya submits nomination. Head lines

குவிந்தன மனுக்கள்!!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரம்: சசிகலாவுடன் வந்து ஆண்டிபட்டியில் ஜெ. மனு

It didnot mention about J's wealth in that article.

It did mention J's wealth in a different article. Look at the title.

ஜெ சொத்து எவ்வளவு? பிரமாண வாக்குமூலத்தில் தகவல். கையிருப்பு பணம் 20 ஆயிரம் மட்டுமே

April 18th - Karunanidhi submits nomination. Head lines

ரூ 22 கோடி!!. தி.மு.க தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு 22 கோடி. வேட்பு மனு தாக்கலில் விபரத்தை வெளியிட்டார்.

As priyan said, if you are against DMK, there is nothing wrong. Everyone has their own opinion about supporting a party.

But dont claim that DINA-MALAM is a paper which publish good things.

 

Post a Comment

<< Home