$user_name="Jeyakumar";

Wednesday, April 19, 2006

வைகோ -வின் மிகப்பெரிய தவறு! (புதுப்பிக்கப்பட்டது)

வைகோ கூட்டணி மாறியது பற்றி, பல ஊடகங்கள் பலவாறு விமர்சித்துக்கொண்டிருக்கின்றன. சிலர் அவரை துரோகி என்றும், சிலர்
அவர் பணத்துக்காக ஜெயலலிதாவிடம் சரணடைந்து விட்டார் என்றும் மேலும் சிலர் தன் கட்சியின் இரண்டாம் கட்டதலைவர்களின் வற்புறுத்தலின் பேரில்தான் இத்தகைய முடிவு எடுத்துவிட்டார் என்றும் பலவாறு பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

திமுக-வினர் இன்று வைகோவை துரோகி என்றும், "பெட்டி வாங்கிகொண்டு உன்னை சிறையில் தள்ளிய ஜெயலலிதாவை ஆதரிக்கிறாயே!, நாயே!" என்றும் ஏசுகின்றார்கள். ஒன்றை நடுநிலையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதே கலைஞர் தான் வைகோ என்னைக் "கொலை செய்ய முயன்றார்" என்று பழி சுமத்தி , கட்சியை விட்டே நீக்கி ஆயுள் தண்டனை கொடுத்தவர். அதன் பிறகு 5
பேரின் உயிர்தியாகத்தின் மேல்தான் மதிமுக பிறந்தது. ஆனால் அத்தகைய தியாகத்தை மறந்து மீண்டும் திமுக-வுடன் கூட்டனி வைத்ததுதான் "வைகோ செய்த மிகப்பெரிய தவறாகும்".

சிலர் சொல்லுகிறார்கள் வைகோவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர கலைஞரும் திமுக-வினரும் தான் உதவினர் என்று. ஆனால் அது எதற்காக என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டும். அப்போது மத்திய அரசுக்கான தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. மாநிலத்தில் ஆட்சியில் இல்லாத திமுக-விற்கு ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் நடத்தவும், தன்
சொத்துகளையும் , குடும்ப தொழில்களையும் காப்பாற்ற மத்திய அரசில் முக்கியப்ப்ங்கு வகிப்பது மிக அவசியமாகிவிட்டது. அப்போது பெரிய தவறு எதுவும் செய்யாமல் ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்டதால் வைகோ மீதான அனுதாப அலையை கருணாநிதி பயன்படுத்திக்கொள்ளத்தான் வைகோ-வின் மீது மிகுந்த அக்கரையுள்ளது போல நடித்தார் கருணாநிதி. அந்த தேர்தலில் திமுக தன்னுடைய சொந்த செல்வாக்காலோ, அல்லது மக்களுக்கு அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையினாலோ வெற்றிபெறவில்லை. வைகோ-வின் மேல் இருந்த அனுதாப அலையும், அவரின் தமிழகம் முழுவதுமான தேர்தல் பிரச்சாரமும், அப்போது ஜெயலலிதா எடுத்த சில அதிரடி நடவெடிக்கைகள் மக்களுக்கு பிடிக்காமல் போனதாலும் மேலும் மிகப்பெரிய மெகா கூட்டணியினால் மட்டுமே அவர்களால் வெற்றிபெற முடிந்த்து. வெற்றிபெற்றவுடன் அதற்காக பாடுபட்டவர்களை மறந்துவிடுவது கருணாநிதியுன் குடும்பவழக்கம்.

இன்று வைகோ-வை "நாயே!" என்று விளிக்கும் தயாநிதி மாறனுக்காவும் தான் அன்று வைகோ பிரச்சாரம் செய்தார். வெற்றிபெற்ற பிறகு மத்தியில் தங்களுக்கு வருமானம் ஈட்டித்தறும் அமைசசர் பதிவிகளை அதுவும் தன் பேரனுக்கு வாங்கி கொடுப்பதில் கருணாநிதி காட்டிய அதே மும்முரத்தைதான் வெற்றிக்காக பாடுபட்ட வைகோ-வை கூட்டணியில் இருந்து புறக்கணிக்கவும் காட்டினார்.

வைகோ-வையும் மதிமுக-வையும் அழிக்க திமுக (முக்கியமாக ஸ்டாலின்) மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் கூட்டணி மாறத்தூண்டின என்றால மிகையாகாது. ஜெயலலிதா எதிரி என்றால் கருணாநிதி இங்கு துரோகியாகிட்டார். துரோகிக்கு எதிரி எவ்வளவோ மேல் என்றுதான் வைகோ ஜெ வுடன் கூட்டனி சேர்ந்தது. வைகோ-வால் தனியாக தேர்தலை சந்தித்திருக்க முடியும், ஆனால் அப்படி சந்திப்பதால் லாப நஷ்டங்களைப்பார்த்தால், மதிமுக இப்போது இருக்கும்
சூழ்நிலையில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வரமுடியாது. வேண்டுமானால் அதிமுக அல்லது திமுக-வின் ஓட்டுகளை வேண்டுமானால் பிரிக்கலாம், ஆனால் அப்படிப்பிரிப்பதானல் என்ன லாபம். ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றால் அதனால் பெரிய அளவில் மதிமுக-விற்கு பாதகம் இருக்காது( வேண்டுமானால் ஜெ சிறையில் தள்ளுவார், அதனால் மதிமுக பலம் பெறுமே தவிர அழிந்து விடாது) ஆனால் துரோகி திமுக வென்றால் மதிமுக-வின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அதனால்தான் திமுக-வை தோற்கடிக்க
ஜெ-வுடன் கைகோர்க்க வேண்டிய நிலைக்கு வைகோ தள்ளப்பட்டார். கூட்டனி தர்மத்திற்காக அதிமுக-வை புகழ்ந்து கொண்டிருக்கிறார். மற்றபடி தொகுதிப்பங்கீட்டுப் பிரச்சனை என்பதெல்லாம் வெறும் நாடகம்தான். இந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் அதன்பிறகு ஸ்டாலின் தலைமையில் திமுக -வும் ஜெ தலைமயில் அதிமுக-வுமே தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக
இருக்கும் . ஏனென்றால் ஆட்சியில் இருக்கும் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. ஆனால் இந்த தேர்தலில் திமுக தோற்கும் பட்சத்தில் , அதன் தலைவர் கருணாநிதி காலத்திற்கு பிறகு கட்சியில் பல பிளவுகள் ஏற்பட நிறையவே வாய்ப்பு உள்ளது(அதுவும் ஆட்சியில் இல்லாதபோது மிக அதிகமாகவே உள்ளது). இப்போதே பலர் மனதுக்குள் கொதித்துக்கொண்டுதான்
உள்ளார்கள், பலர் கருணாநிதிக்காக மெளனம் காத்துக்கொண்டிருக்கின்றனர். என்வே அதிமுக-வின் வெற்றியை விட திமுக-வின் தோல்விதான் வைகோ-விற்கும் மதிமுக-விற்கும் இப்போது ஒரே நோக்கமாக உள்ளது.

கருணாநிதி தன்னுடையகாலத்தில் தனக்கு நெருக்கமாக திறமையான நல்ல பேச்சாற்றலும் விசுவாசமும் கொண்ட சில தலைவர்களை (அன்பழகன், துறைமுருகன், ஆற்காடு வீராச்சாமி, கோ.சி மணி, மறைந்த நாஞ்சில் மனோகரன் மற்றும் பிடிஆர்) வைத்திருந்தார். ஆனால் பல வருடங்களாக கட்சியில் இருக்கும் அதுவும் தலைவருக்கு மிக அருகாமையில் இருக்கும், அடுத்த தலைவர் என்று எதிர்பார்க்கப்படும் ஸடாலின் அப்படி ஒரு வட்டத்தை தன்னைச்சுற்றி உருவாக்கிக்கொள்ளவில்லை. இப்போது அவரைச்சுற்றி
இருப்பவர்கள் எல்லாம் அவரது அடிவருடிகளாகவும், காக்கைகளாகவும், ஜால்ராக்களாகவும் தான் இருக்கின்றனர். இது வரை தன்னை ஒரு தலைமை பண்புகளுடன் கூடிய ஆற்றல் மிக்க ஒருவனாக மாற்ற முயலவில்லை அதோடு மட்டமல்லாமல் திமுக-விலும் அப்படி யாரையும் அடுத்த தலைமுறையில் உருவாக்கவிடவும் இல்லை. அதற்கு அவரின் இயலாமையும், சுயநலமுமே காரணமாக இருக்கிறது. இதனால் கலைஞர் காலத்திற்கு பிறகு திமுக-வில் உள்ள திராவிட கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்கள் நிச்சயாமாக வைகோ-வின் பின்னால் அணிவகுப்பார்கள். அப்போது அதிமுக மற்றும் மதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக
திகழும் என்று எதிர்பார்க்கிறேன்.

14 Comments:

At 3:42 PM, Blogger பாலசந்தர் கணேசன். said...

அனுதாப அலை என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. வைகோ கைது செய்யப் பட்டதால் எந்த விதமான அனுதாப அலையும் கிளம்பவில்லை. இன்னமும் சொல்ல போனால் வைகோவின் பேச்சினை தமிழக மக்கள் ஆதரித்ததாகவே தெரியவில்லை. இலங்கை தமிழர்கள் மீதான அனுதாபம் தமிழக மக்கள் மனதிலிருந்து என்றோ அகன்று விட்டது. அவர்களை ஆதரிப்பதனால் மக்கள் ஆதரவு வைகோவிற்கு கூடவில்லை. மேலும் சென்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வைகோ இல்லாமல் போட்டி இட்டிருந்தால் கூட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்- காரணம் அ.தி.மு.க எதிர்ப்பு அலை.

 
At 2:01 AM, Blogger Bharaniru_balraj said...

யார் இந்த வைகோ?. (துரோகத்தின் மொத்த உருவமே இந்த நெட்ட்யந்தான்).

பொடாவில் ஜெயிலுக்குப் போனது தியாகமல்ல. தடை செய்யபபட்ட இயக்கத்தை பற்றி வாய்த்திமிறாக பேசியதால் உள்ளே போனார் இந்த நாற்பது கோடியான். 18 வருடம் M P ஆக இருந்து என்ன சாதித்தார். போயஸ் கார்டனில் பாவாடை துவைக்கும் கருப்பு துண்டு கபாலிக்கு இனி அரசியலில் அனாதை என்கிற தகுதி மட்டுமே மிச்சம். நா காக்கவில்லை என்றால் நாயக்கர் கட்சி நாசமாய் போகப்போவது உறுதி.

 
At 2:26 AM, Anonymous Anonymous said...

Bharaniru_balraj--> If you want to comment on Vaiko,do it bcoz that's your liberty. Don't use the caste name and all. It points everyone whoever falls under this.
Hope you understand.

 
At 2:56 AM, Blogger Bharaniru_balraj said...

அன்னாத்தே,

அவரு கட்சியிலே பாதி பேருக்கு மேலே அவரு ஜாதிதான். கோவில்பட்டியில் வேட்பாளர் அவரின் மிக நெருங்கிய உறவுக்காரர்தான். சிவகாசி நாடளுமன்ற உறுப்பினர் கூட சொந்தக்காரர்தான். விருதுநகர், விளாத்திகுளம், கோவையில் சில தொகுதிகள் அதே ஜாதிக்கார்கள்தான். ஜாதியை நம்பி கட்சி நடத்துபவரை அப்படித்தான் சொல்ல தோன்றுகிறது. இவர் ஒரு மகக்ள் தலைவர் என்றால் சிவகாசி தவிர ஏதாவது தொகுதியில் நின்று வெல்லட்டும். அப்போது தெரியும் இவர் ஜாதித்தலைவரா இல்லயா என்று. கடந்த 5 வருடத்தில் இவை போகத கட்சியுமில்லை. பெறாத தோல்வியுமில்லை. சரியான பல்டி நாயகன்.

 
At 3:09 AM, Blogger ஜெயக்குமார் said...

திரு பரணி அவர்களே,

கபாலிக்கும் கருப்புத்துண்டுக்கும் என்னையா சம்பந்தம். காபாலி என்பது சிவனுடைய பெயர்(கபாலீஸ்வரர்). உங்களைப்போன்ற சில மூடர்களால் அது ரவுடிகளின் , கொடியவர்களின் பெயராகிவிட்டது.
அதேபோலத்தான் சாதி பற்றிப்பேசுவதும், தப்பு செய்தவர்கள் உங்கள் சாதிக்காரர்களாக இருந்தால் அது தப்பில்லையென்று ஆகிவிடுமா?. அல்லது அவர்களுக்கு உங்கள் வீட்டில் விருந்து வைப்பீர்களா அல்லது உங்கள் வீட்டுப்பெண்ணைத்தான் திருமணம் செய்து கொடுபீர்களா?.
எதையும் எழுதுவதற்கு முன் சிறிது யோசிக்கவேண்டும்.

 
At 3:13 AM, Blogger ஜெயக்குமார் said...

இந்த பல்டி கதையை சொல்ல எந்த கட்சிக்காரணுக்கும், சாதிக்காரண்க்கும் இங்கு யோக்கியதை இல்லை.

 
At 5:13 AM, Blogger லக்கிலுக் said...

///உங்களைப்போன்ற சில மூடர்களால் அது ரவுடிகளின் , கொடியவர்களின் பெயராகிவிட்டது.///

ஜெயக்குமார் உங்கள் Blogல் பின்னூட்டம் இடுபவரை நீங்களே இது மாதிரி விமர்சிப்பது ஆரோக்கியமானது தானா? பரணி விமர்சித்தது ஒரு மூன்றாம் நபரை... நீங்கள் நேரடியாக அவரையே தாக்குகிறீர்கள்... உங்களுக்கு ஏன் அவ்வளவு ரோஷம்... அவர் உங்கள் ஜாதிக்காரரா?

 
At 5:26 AM, Blogger ஜெயக்குமார் said...

அவர் எந்த சாதியைப்பற்றி கூறி இருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பேன்.

எனக்கு ஒன்று புரியவில்லை, கருணாநிதி், திமுக மற்றும் சன் டிவி ஆகியவற்றை விமர்சித்தால் மட்டும் தமிழ்மணத்தில் இவ்வளவு மட்டமான விமர்சனம் வருகிறது.
ஒருவர் நீ பார்ப்பனனா என்கிறார், ஒருவர் ஜெயலலிதாவிடன் என்னத்தைப்பார்த்த, அவள் எதை தூக்கி காட்டினாள் என்று கேட்கிறார். ஒருவர் நீ தினமலர் ஏஜென்டா என்று கேட்கிறார். இன்னொருவர் ஜெயலலிதாவிடன் எவ்வளவு வாங்கினாய் என்று கேட்கிறார்.

என்னுடைய பதிவுகளில் இதுவரை நான் எந்த ஒரு சாதியைப்பற்றியும் எழுதியது கிடையாது. அதே போல ஜெயலலிதாவை ஆதரித்தும் ஒரு பதிவும் நான் இதுவரை வெளியிடவில்லை.

காகிதப்பூக்களுக்கு மகரந்த சேர்க்கை உண்டு என்று எண்ணிக்கொண்டிருக்கும் தமிழக மக்களிடம், உங்கள் ரத்தஓட்டம் சுத்தம் கெட்டது எதனால், உங்கள் சிந்தனா மணடலத்தில் ஏன் இத்தனை சிலந்திவலைகள் என்று தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

 
At 6:37 AM, Blogger Bharaniru_balraj said...

ஆரோக்கியமான பதிலை சொல்ல முடியாமல் ஏன் வைகோ புகழ் பாட வேண்டும். ஒரு வேளை நீங்கள் நாயக்கரா?

 
At 8:33 AM, Anonymous Anonymous said...

I got some packet to support DMK. So it is oblivious that i will have a doubt that if you get the same kinda pckt from ADMK/MDMK...

hehe.. ithellaam arasiyalla sagajam.

Vaikko nnaa romba perukku ullangkaalla irunthu uschanthala varaikkum eriyuthu!

 
At 3:49 AM, Anonymous Anonymous said...

Vaiko is much better person and politician than karunanidhi or dayanidhi. I am not from his caste as well as I am not a ADMK supporter. But I still support his stand. From his (bharaniru..) comment itself we can see his standard. So there is no need to take it so seriously, infact you dont need to allow such comments.

 
At 3:49 AM, Anonymous Anonymous said...

Vaiko is much better person and politician than karunanidhi or dayanidhi. I am not from his caste as well as I am not a ADMK supporter. But I still support his stand. From his (bharaniru..) comment itself we can see his standard. So there is no need to take it so seriously, infact you dont need to allow such comments.

 
At 10:54 AM, Anonymous Anonymous said...

AArasiyala ithu ellam sagagem appu

Agent news ellam ippo kaanom....vera ethavathu agenta maritingala

 
At 11:26 AM, Anonymous Anonymous said...

Balachandar ganesan vomited in Tamilmanam. where are u living?
In Moon or Mars? Viko is good Politician. certain percentage of TN Population support him and Ceylon Tamils. No clean Hands in Indian politics. but viko is better than karunanithi and JJ.

 

Post a Comment

<< Home