$user_name="Jeyakumar";

Friday, April 21, 2006

காட்டுமிராண்டிகள் பற்றிப்பேச கலைஞருக்கு ஒரு வாய்ப்பு!



செய்தி
சென்னையில் பிரச்சாரதிற்காக சென்ற ஸ்டாலினுக்கு
வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து பரிவட்டம் கட்டி
பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

-- இது எப்படி இருக்கு
மீசை கொஞ்சம் பெரிசா வைச்சா, விருமாண்டி மாதிரி இருப்பாரில்ல?

42 Comments:

At 1:01 AM, Blogger ஜெயக்குமார் said...

திமுக-வையோ அதன் தலைவர் கருணாநிதியையோ விமர்சித்தால் , ஏதோ நான் அவர்களின் குடும்பத்தை பற்றி விமர்சிப்பது போல சிலருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. சில நேரங்களில் கோபத்தில் அவர்கள் விடும் பிண்ணுட்டாங்கள் சிரிப்பை வரவழைப்பத்தாக உள்ளன.

 
At 1:53 AM, Blogger Bharaniru_balraj said...

கோவிலோ, பக்தியோ வேன்டாம் என்று கருனாநிதி ஒருபோதும் சொன்னதிலை. கோவில் கொடியவர்களின் கூடாரமாகக் கூடாது என்றுதான் (நீங்கள் பிறக்குமுன்னே ) பராசக்தியில் வசனமாக்ச் சொல்லியிருந்தார்.

ஒரு முறை மூதறிவாளர் ராஜாஜி அவர்கள் பெரியாரை சந்தித்தபோது கையில் வைத்திருந்த விபூதியை பெரியாரிடம் கொடுக்க அவரும் எடுத்துப் பூசிக்கொண்டார். அருகில்ருந்த தொண்டர்கள் பெரியாரை பார்த்து " பகுததறிவாளரான் நீங்கள் இப்படி செய்யலாமா என்ற் கேட்டனர். அதற்குப் பெரியார் சொன்னார் " கொடுப்பவர் மனது புண்படக்கூடாது. அதனால்தான் என்றார்." ( பெரியார் ராமசமியாக இருந்ததவரை மிகப்பெரிய பக்திமான். கோவில்களில் நடந்த அக்கிரமங்களை தட்டிக்கேட்கவே பகுததறிவுப் பகலவனாக் மாறினார்.)

ஸ்டாலினுக்காக் யாரேனும் இத்தகய வரவேற்பை செய்திருக்கலாம். இதில் தவறு இருப்பதாக் தெரியவில்லை.

குறிப்பு: இதைச் சொல்வதால் நான் தினகரன் ஏஜென்ட் இல்லை.

 
At 1:54 AM, Blogger Bharaniru_balraj said...

கோவிலோ, பக்தியோ வேன்டாம் என்று கருனாநிதி ஒருபோதும் சொன்னதிலை. கோவில் கொடியவர்களின் கூடாரமாகக் கூடாது என்றுதான் (நீங்கள் பிறக்குமுன்னே ) பராசக்தியில் வசனமாக்ச் சொல்லியிருந்தார்.

ஒரு முறை மூதறிவாளர் ராஜாஜி அவர்கள் பெரியாரை சந்தித்தபோது கையில் வைத்திருந்த விபூதியை பெரியாரிடம் கொடுக்க அவரும் எடுத்துப் பூசிக்கொண்டார். அருகில்ருந்த தொண்டர்கள் பெரியாரை பார்த்து " பகுததறிவாளரான் நீங்கள் இப்படி செய்யலாமா என்ற் கேட்டனர். அதற்குப் பெரியார் சொன்னார் " கொடுப்பவர் மனது புண்படக்கூடாது. அதனால்தான் என்றார்." ( பெரியார் ராமசமியாக இருந்ததவரை மிகப்பெரிய பக்திமான். கோவில்களில் நடந்த அக்கிரமங்களை தட்டிக்கேட்கவே பகுததறிவுப் பகலவனாக் மாறினார்.)

ஸ்டாலினுக்காக் யாரேனும் இத்தகய வரவேற்பை செய்திருக்கலாம். இதில் தவறு இருப்பதாக் தெரியவில்லை.

குறிப்பு: இதைச் சொல்வதால் நான் தினகரன் ஏஜென்ட் இல்லை.

 
At 2:17 AM, Blogger காழியன் said...

இதெல்லாம் மக்களுக்கு புரிந்தால்..திமுக-வின் போலி மதச்சாற்பின்மை மக்களிடம் எடுபடாது

 
At 2:26 AM, Blogger ஜோ/Joe said...

ஜெயக்குமார்,
நீங்க என்ன தான் எதிர்பாக்குறீங்க.தேடி வந்து மரியாதை செய்பவர்களை திட்டி துரத்தி விடணுமுண்ணு சொல்லுறீங்களா? உங்கள் விமரிசனத்தில் 'நுனிப்புல்' மேய்வது தான் தெரிகிறது..ரொம்ப தான் நினைச்சுக்காதீங்க.

 
At 7:04 AM, Blogger ஜெயக்குமார் said...

Mr Joe,

if any other DMK leader did the same, karunanithi will use the same word as I mentioned here. It was happened before to pongalore pazanichami. So please think about the past history before leave your comment.

 
At 1:15 PM, Blogger பாலசந்தர் கணேசன். said...

ஜெயகுமார் அவர்களே,
கலைஞர் பழனிச்சாமியை தீ மிதித்தற்காக கண்டித்தார். இது போன்று மரியாதையை ஏற்றதற்காக அல்ல. கடற்புரத்தான் ஜோவும் இந்த விபரங்கள் அறிந்தவரே. தி.மு.க வை கண்டித்தே எழுதும் மாயவரத்தான், முகமூடி குரூப்பின் புதிய உறுப்பினர்.

 
At 1:25 PM, Blogger ஜெயக்குமார் said...

தீமிதித்ததற்கு மட்டும் கருணாநிதி அவரது கட்சிக்காரர்களை திட்டவில்லை, குங்குமம், திருநீறு இட்டவர்களையும்தான் திட்டினார். "இந்து" என்றால் "திருடன்" என்று அர்த்தம் கண்டுபிடித்தவர்தானே கருணாநிதி. அந்த திருடர்கள் மரியாதை கொடுத்தால் மட்டும் ஏற்றுக்கொள்வாரா அவர்?. வீரப்பனை, வீரப்பர் என்று கூறியவர்தானே கருணாநிதி ஆனால் வைகோவை தன் பேரன் "நாயே" என்று விளிக்க வைத்து வேடிக்கை பார்த்தவர் அவர்.

 
At 2:03 PM, Anonymous Anonymous said...

//At 1:25 PM, ஜெயக்குமார் said...
தீமிதித்ததற்கு மட்டும் கருணாநிதி அவரது கட்சிக்காரர்களை திட்டவில்லை, குங்குமம், திருநீறு இட்டவர்களையும்தான் திட்டினார். "இந்து" என்றால் "திருடன்" என்று அர்த்தம் கண்டுபிடித்தவர்தானே கருணாநிதி. அந்த திருடர்கள் மரியாதை கொடுத்தால் மட்டும் ஏற்றுக்கொள்வாரா அவர்?. வீரப்பனை, வீரப்பர் என்று கூறியவர்தானே கருணாநிதி ஆனால் வைகோவை தன் பேரன் "நாயே" என்று விளிக்க வைத்து வேடிக்கை பார்த்தவர் அவர்.//

sirippu thaan varuthu jeyakumar unga pathivu, pinnuuttangal padikka. ADMK pakkam ninukitu neenga romba kastapattu karuthu solli niyaayam pesurathaa ninaikatheenga. konjam suthi kannai thiranthu paarunga. nijamave thunkureengala? ilaa thuukkam maathiri.. hehehe. ena jeyakumar?

 
At 2:05 PM, Blogger நியோ / neo said...

>> குங்குமம், திருநீறு இட்டவர்களையும்தான் திட்டினார். >>

1. இதை கலைஞர் செய்தது 1998 வாக்கில் - திமுக-வின் அப்போதைய எம்.பி ஆதிசங்கர கட்சிக் கூட்டத்துக்கு வைத்திருந்த குங்குமத்தோடு வந்திருந்த போது கட்சி உறுப்பினர்களுக்கு பெரியாரியம் பற்றி நினைவூட்டினார். அவ்வளவுதான்.

நீர் போன தேர்தலில் (2001 இல்) திமுக-வுக்கு ஓட்டுப் போட்டேன் என்று 'எடுத்து விட்டீரே?!' - அதற்கும் முன்பே அந்தச் சம்பவம் நடந்து விட்டதே!


2. >> "இந்து" என்றால் "திருடன்" என்று அர்த்தம் கண்டுபிடித்தவர்தானே கருணாநிதி >>

என்ன ஏதென்று தெரியாமல் உளறக் கூடாது.

"இந்து என்றால் திருடன் என்ற அர்த்தம் போட்டிருப்பது எங்கே தெரியுமா? நானல்ல; ஒரு நாத்திகனல்ல - திராவிட இயக்கத்தான் அல்ல - ஒரு பெரியாரியவாதி அல்ல - பழுத்த ஆத்திகவாதியான 'கமலாபதி திரிபாதி' (இவர் ஒரு பார்ப்பனர்) - என்கிற காங்கிரஸ்காரர் வேந்தராக இருந்த காசி பனாரஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அகராதியிலே போட்டிருக்கிறது; நாம் அதைக்கூட அப்படியே 'திருடன்' 'கள்வன்' என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் 'உள்ளம் கவர்ந்த கள்வன்' என்று எடுத்துக் கொள்வோம்"

- என்று அவருக்கே உரிய பாணியில் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிக் காட்டினார்!

உம்மைப் போன்றவர்களுக்கு வரலாறும் தெரியாது, சமயமும் தெரியாது, பகுத்தறிவும் புரியப் போவதில்லை - இப்படி அரைவேக்காட்டுத்தனமாக உளறுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது!


'இந்து' என்கிற சொல்லாடலே அய்ரோப்பியர்களும் அதற்கு முந்தைய பாரசீகர்களும் பயன்படுத்தியதுதான். இங்கே அந்தச் சொல் ப்ண்டைக்காலத்தின் எந்தக் காலகட்டத்திலும் இல்லை.

'இந்து' என்கிற சொல் "thug" "thuggee" என்றெல்லாம் ரவுடி கொள்ளைக்காரன், வழிப்பறி செய்பவன் என்ற பொருளில் எல்லாம் வெள்ளையர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த வரலாறுகளெல்லாம் நம்முடைய அகரமுதலிகளில், பண்டைச் சொற்களஞ்சியங்களில் உள்ளன!

இதைத்தான் கலைஞர் அன்று எடுத்துக் காட்டினார்!

"..அட களவாணிக் கோத்திரமே!
காளமாட்டு **த்திரமே!

எப்ப நீங்க திருந்தப் போறீக!.."

- என்று வைரமுத்து எழுதியதால் அவரை முக்குலத்தோர் வெட்டியா விட்டார்கள்??!!! ;)

 
At 2:24 PM, Blogger ஜெயக்குமார் said...

திரு நியோ அவர்களே,

தமிழில் உள்ள சில சொற்களுக்கு மலையாளத்தில் வேறு அர்த்தம் இருக்கலாம், அதே போல மற்ற மொழியில் உள்ள ஒரு சொல்லுக்கு தமிழில் அசிங்கமான அர்த்தம் இருக்கலாம் அதற்காக அந்த நாட்டு மக்களிடம் அர்த்தம் புரிந்தே அந்த வார்த்தகளைப்பயன் படுத்தி பேசிவிட்டு பின்பு மன்னிக்கவும் மொழி புரியாமல் பேசிவிட்டேன் என்று கூறுவது போல உள்ளது உங்கள் வாதம்.

வீதியில ஒரு அசிங்கம் இருந்தால் அதை தூக்கி வீட்டுக்குள் வைப்பீர்கள் போலிருக்கே!

பரவாயில்லை நம்மை வேற்று மொழிகளைப்படிக்ககூடாது என்று போராட்டம் செய்த கருணாநிதி "காசி பனாரஸ் பல்கலைக்கழகம்" வெளியிட்ட அகராதியெல்லாம் படித்துள்ளாரா?. திருந்தி விட்டால் நல்ல விசயம்தான்.

அய்யா நியோ, மன்னிக்கவும்! எனக்கு பனாரஸ் பல்கலைக்கழகம பற்றி எல்லாம் தெரியாது, பனாரஸ் பட்டு புடவையைப்பற்றிதான் கேள்விப்பட்டுள்ளேன்.

 
At 2:31 PM, Anonymous Anonymous said...

நியோ

கழகம் என்றால் சூதாடிகள் கூடும் இடம் என்ற பொருளும் உண்டு.திராவிட முன்னேற்ற சூதாடிகள் கூடும் இடம் என்று சொன்னால் கலைஞர் சும்மா விடுவாரா?

மலையாளத்தில் பட்டி என்றால் நாய் என்று பொருள்.புளியம்பட்டி ஊர்காரர்களை புளியநாய் என்றால் சும்மா விடுவார்களா?

இடம்,பொருள்,ஏவல் இவை மூன்றும் பேச்சாளர்களுக்கு தேவை.அதுவும் பெரிய தலைவர்களுக்கு இன்னும் அதிகமாக தேவை.

 
At 2:34 PM, Blogger ஜெயக்குமார் said...

//
"..அட களவாணிக் கோத்திரமே!
காளமாட்டு **த்திரமே!

எப்ப நீங்க திருந்தப் போறீக!.."

- என்று வைரமுத்து எழுதியதால் அவரை முக்குலத்தோர் வெட்டியா விட்டார்கள்??!!! ;)//

இதை கங்கைஅமரன் எழுதியிருந்தால் பிரச்சனையாகி இருக்கும்.

இதற்குமேல் இதற்கு விளக்கம் சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் புத்திசாலி புரிந்துகொள்வீர்கள்.

 
At 3:43 PM, Blogger நியோ / neo said...

>> இதை கங்கைஅமரன் எழுதியிருந்தால் பிரச்சனையாகி இருக்கும். >>

அப்பிடிப் போடுறா அருவாளன்னானாம்!

'வாக்குமூலம்' கொடுத்துட்டாரப்பா நம்ம இணைய சீயான்!

இந்தப் பேச்சுக்கும், தமிழகத்தின் கடந்த 80 ஆண்டு கால வரலாற்றுக்கும் எத்தனை தொடர்பு உள்ளது என்பது புரிபவர்களுக்குப் புரியும்!!

கண்டதேவியும், நாட்டார்மங்கலமும், பாப்பாப் பட்டியும், கீரிப்பட்டியும் ஏன் இன்றும் செய்திகளாகின்றன என்பதும் இதிலே அடக்கம்! ;)

 
At 3:51 PM, Blogger நியோ / neo said...

>> இடம்,பொருள்,ஏவல் இவை மூன்றும் பேச்சாளர்களுக்கு தேவை.அதுவும் பெரிய தலைவர்களுக்கு இன்னும் அதிகமாக தேவை >>

கலைஞர் அப்படிப் பேசியது 'மதமாற்றத் தடைச் சட்ட'த்துக்கு எதிராக நடந்த சீரணி அரங்கப் பொதுக்கூட்ட மேடையிலே, அக்டோபர் 2002 என்று நினைவு.

பார்ப்பனீய-இந்துத்துவ ஜெ.வின் 2001 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளையும் மீறி - இந்துத்துவ வெறியர்களின் கொடூரப் பசிக்குத் தீனி போட கொண்டு வந்த அடக்குமுற அராஜகச் சட்டம் அது.

'இந்து' மதம் என்கிற மாயைக் கருத்தியலை ஊன்றுகோலாகக் கொண்டு பார்ப்பனீய மனுவாத உயர்சாதீயவாதத்தை - ஆதிக்க அதிகாரவர்க்கமாக எப்போதும் இருக்கச் செய்யும் Agenda-வின் ஒரு பகுதிதான் அந்தக் கருப்புச் சட்டம்.

அதை எதிர்க்கிற இயக்கம்/செயல்பாடு - 'இந்து' என்கிற மாயையை ஒரு 'ஒற்றைத்தன்மை'யான மதவாதக் கட்டமைப்புப் பிரச்சாரத்தை - முறியடிக்கிற, உண்மையை எடுத்துச் சொல்கிற இயக்கமாகத்தான் செய்லபடும்.

அதையே கலைஞர் அன்று செய்தார்!

தமிழ் 'சூத்ர' பாஷை! அதிலே ஸ்வாமிய ஸ்தோத்ரம் செய்யப்படாது - என்று கொக்கரிக்கிற எச்சிக்கலை நாய்களின் 'சத்ரிய' அடிவருடிகளுக்கு தரப்பட்ட செருப்படி அது!

கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும் அந்த அடி! ;)

 
At 3:59 PM, Blogger ஜெயக்குமார் said...

/ இந்தப் பேச்சுக்கும், தமிழகத்தின் கடந்த 80 ஆண்டு கால வரலாற்றுக்கும் எத்தனை தொடர்பு உள்ளது என்பது புரிபவர்களுக்குப் புரியும்!!

கண்டதேவியும், நாட்டார்மங்கலமும், பாப்பாப் பட்டியும், கீரிப்பட்டியும் ஏன் இன்றும் செய்திகளாகின்றன என்பதும் இதிலே அடக்கம்! ;)
/
ஜயா,
சொல்லுரத கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. எதுக்கும் எதுக்குமோ முடிச்சி போட்டான்னு சொல்லுவாங்கள்ள அது மாதிரி இருக்கு.

வைரமுத்து அந்த சமூகத்துக்காரார் அவர் அவ்வாரு பாட்டு எழுதுவதால் அது பிரச்சனை ஆகாது. சங்கராச்சாரியார் கூட சிவனைத் திட்டிவிட்டு பாசத்தால் திட்டினேன் என்றால் பிரச்சனை முடிந்து விடும் அதுவே அலாவுதீன் சிவனைத்திட்டிவிட்டு பாசத்தால் திட்டினேன் என்றால் அதை இந்த சமூகம் ஏற்றிருக்குமா?.

இவன் இந்த சமூத்துகாரன் இவன் அந்த சமூகத்துக்காரன் என்று பட்டம் கட்டிவிடாதீர்.

மேலவளவு கிராமத்தை விட்டுவிட்டீரே!

திமுக ஆட்சிகாலத்தில் தான் சாதி மத சண்டைகள் அதிகமாக இருந்தது. நீங்கள் ஒரு திமுக அனுதாபி என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்து விட்டீர்கள்.

 
At 4:09 PM, Blogger ஜெயக்குமார் said...

//இந்து' மதம் என்கிற மாயைக் கருத்தியலை ஊன்றுகோலாகக் கொண்டு பார்ப்பனீய மனுவாத உயர்சாதீயவாதத்தை - ஆதிக்க அதிகாரவர்க்கமாக எப்போதும் இருக்கச் செய்யும் Agenda-வின் ஒரு பகுதிதான் அந்தக் கருப்புச் சட்டம்.

அதை எதிர்க்கிற இயக்கம்/செயல்பாடு - 'இந்து' என்கிற மாயையை ஒரு 'ஒற்றைத்தன்மை'யான மதவாதக் கட்டமைப்புப் பிரச்சாரத்தை - முறியடிக்கிற, உண்மையை எடுத்துச் சொல்கிற இயக்கமாகத்தான் செய்லபடும்.

அதையே கலைஞர் அன்று செய்தார்!//


ஹிஹி!ஹிஹி....

கலைஞர் அதை செய்தார் இதை செய்தார் என்கிறீர்களே அவரால் ஒரு "வேப்பில்லைக்காரி" -யை ஒரு "குங்குமக்காரி"-யை (தலைப்பு நல்லா இருக்குன்னு சன் டிவி-ல ஸ்லாட் வாங்கிவிடதீர்கள்) நிறுத்தச்சொல்லமுடியுமா?

படிக்கிறது ராமாயானம் இடிக்குறது பெருமாள் கோயில்னு சொல்லுவாங்களே!
அதுதான் ஞாபகத்த்ற்கு வருகிறது.

 
At 4:22 PM, Blogger ஜெயக்குமார் said...

//இந்துத்துவ வெறியர்களின் கொடூரப் பசிக்குத் தீனி போட கொண்டு வந்த அடக்குமுற அராஜகச் சட்டம் அது.//


எனக்கு உங்களை போன்று ஆண்டு, தேதி புள்ளி விவரெமெல்லாம் தெரியாது ராசா!. ஆனால் நான் சொன்னது நடந்தது.

"மகாஜனங்களே!, என் மருமகனுக்கு மத்திய மந்திரி பதவி வேண்டும் என்பதற்காக நான் என்னுடைய இந்துத்வா எதிப்பு கொள்கையை கொஞ்ச நாளைக்கு அடகு வைக்கப்போகிறேன். அதற்காக நீங்கள் நாங்கள் உள்ள இந்துத்வா கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள்"

 
At 4:37 PM, Anonymous Anonymous said...

அதை எதிர்க்கிற இயக்கம்/செயல்பாடு - 'இந்து' என்கிற மாயையை ஒரு 'ஒற்றைத்தன்மை'யான மதவாதக் கட்டமைப்புப் பிரச்சாரத்தை - முறியடிக்கிற, உண்மையை எடுத்துச் சொல்கிற இயக்கமாகத்தான் செய்லபடும்.///

செயல்பட்டுக்கொண்டு போகட்டும்.இந்துமதம் என்பது மாயை என்று சொல்லட்டும்."இந்து" என்றால் திருடன் என்று பொருள் என்று அருள்வாக்கு அருளி அம்மதத்தை பின்பற்றும் சாதாரண அப்பாவி தமிழர்களை ஏன் திருடனாக்குகிறார்?

ஒரு மதத்தை குறைகூறுவது வேறு.அம்மதத்தை பின்பற்றும் சாதாரண பொதுமக்களை கேவலப்படுத்துவது வேறு.முதலாவது ஏற்றுக்கொள்ளகூடியது.இரண்டாவது கண்டிக்கப்படக்கூடியது

/தமிழ் 'சூத்ர' பாஷை! அதிலே ஸ்வாமிய ஸ்தோத்ரம் செய்யப்படாது - என்று கொக்கரிக்கிற எச்சிக்கலை நாய்களின் 'சத்ரிய' அடிவருடிகளுக்கு தரப்பட்ட செருப்படி அது!/

இதற்கும் அதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?தமிழ் சூத்திர பாஷை என்று சொன்னவனை திட்டுங்கள்.அப்பாவி இந்துவை ஏனையா திருடன் என்று இகழ்கிறீர்கள்?

 
At 5:02 PM, Blogger மாயவரத்தான் said...

கையைக் குடுங்க ஜெயகுமார். மக்களை மறதி மன்னர்கள், மடையர்கள் என்று நினைத்து எழுதி, பேசி வரும் மாங்கா மடையன்களுக்கு ம்ரண அடி குடுக்கிறீர்கள்.

 
At 5:19 PM, Anonymous Anonymous said...

கேள்வி: "மகாஜனங்களே!, என் மருமகனுக்கு மத்திய மந்திரி பதவி வேண்டும் என்பதற்காக நான் என்னுடைய இந்துத்வா எதிப்பு கொள்கையை கொஞ்ச நாளைக்கு அடகு வைக்கப்போகிறேன். அதற்காக நீங்கள் நாங்கள் உள்ள இந்துத்வா கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள்"

மு.க பதில் :பார்ப்பனீயத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இந்துத்துவ கொள்கைகளின் அடிப்படையை அழித்தொழிக்கவும், சமூக நீதியைக்காக்கவும் உருவாக்கப்பட்ட இனமான வீரர்களின் அணிவகுப்பின் புரட்சிகர கூட்டணியாக மட்டுமல்லாமல் லெமூரியர்களின் திராவிட எழுச்சியாகவும் அமைந்த சிந்தனை கூட்டணியாகவும் அமைந்த ஒன்று மட்டுமின்றி அண்ணல் வாஜ்பாயின் தலைமையிலும், கொள்கை வீரன் அத்வானியின் சீரிய வழிகாட்டுதலிலும் அமைந்த கூட்டணியாகவும் இருந்த சிறப்பு மிக்கது, நமது மாறன் மந்திரியான கூட்டணி என்பதை தெரிவித்துக்கொள்ள மிகுந்த கடமைப்பட்டவன் இந்த கருணாநிதி என்ற கருத்தை மக்கள் மன்றத்தில் வைப்பதில் மிகுந்த கர்வம் கொள்கிறேன்.

ஸ்டாலின், தயாநிதி : ச்ச, இதுதான்யா நமக்கு வர மாட்டேங்குது. என்னதான் நாம "ஒண்டிக்கு ஒண்டிக்கு வற்றியா" எல்லாம் பேசினாலும், இந்த மாதிரி இலக்கியநயமா, கமா, கமாவா போட்டு பேச வரலையே. கடசில பி.ஜெ.பி யோட ஏன் கூட்டணி வச்சீங்கன்ற கேள்வி, கேட்டவனுக்கே மறந்து போச்சு பாரு!

 
At 7:17 PM, Anonymous Anonymous said...

அடுத்த நடுவண் அரசு தேர்தலில் பாஜக ஜெயித்துவிட்டதென்றால் தன் மகனுக்கோ, மருமகனுக்கோ பேரனுக்கோ பதவிப்பிச்சை கேட்டு கலைஞர் காவடி எடுப்பார். அப்போது, நியோ காணாமல் போய் ஜியோ என்ற பெயரில் எழுதிக்கொண்டிருப்பார். அப்படி காணாமல் போகவேண்டி வரும் என்று தெரிந்திருப்பதாலேயே இன்றைக்கு முகத்தை மூடி போட்டுக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறார்.

 
At 8:51 PM, Anonymous Anonymous said...

இவர்களுக்கு தமிழ், மதச்சார்பின்மை,மாநில சுயாட்சி... எல்லாமே மற்றுமொரு மூலதனம்

 
At 10:51 PM, Anonymous Anonymous said...

//ஜெயக்குமார் said...திமுக ஆட்சிகாலத்தில் தான் சாதி மத சண்டைகள் அதிகமாக இருந்தது. நீங்கள் ஒரு திமுக அனுதாபி என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்து விட்டீர்கள்.//

ஹிஹிஹி... மண்டைக்காடு முதல் துவங்கிய மதக்கலவரத்தின் போதும் அதன் பிறக்கு நடந்த எண்ணற்ற சாதிக்கொடுமைகலின் போதும் கலைஞரா முதல்வர்? ஜெயக்குமார் லாறி லாறியா பூசணிக்காய சோத்துக்குள்ளே அமுக்கிறீரே!

ஸ்டாலினுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை மதித்து வாங்கியதை கிண்டலடிப்பதில் சில விடயங்களை புரிந்து கொள்வதில் உமக்கு பிரச்சனையிருப்பதும், திரித்து கூறுவதில் உமது கைவண்ணமும் பேஸ் நன்னாருக்கு!

தேர்தல் முடியிற வரை நீர் உணர்ச்சிவசபடுறது நாங்க புரிஞ்சுக்கிறோம்... ஹிஹிஹி

 
At 12:30 AM, Blogger ஜெயக்குமார் said...

//ஸ்டாலின், தயாநிதி : ச்ச, இதுதான்யா நமக்கு வர மாட்டேங்குது. என்னதான் நாம "ஒண்டிக்கு ஒண்டிக்கு வற்றியா" எல்லாம் பேசினாலும், இந்த மாதிரி இலக்கியநயமா, கமா, கமாவா போட்டு பேச வரலையே. கடசில பி.ஜெ.பி யோட ஏன் கூட்டணி வச்சீங்கன்ற கேள்வி, கேட்டவனுக்கே மறந்து போச்சு பாரு!//

அவருடைய கட்சியில் அப்படி யாரும் இலக்கிய நயமா பேசி தன்னைவிட பெரிய ஆளா வந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் இவர்கள் மிக கவனமாக உள்ளனர்.

 
At 12:40 AM, Blogger ஜெயக்குமார் said...

//ஹிஹிஹி... மண்டைக்காடு முதல் துவங்கிய மதக்கலவரத்தின் போதும் அதன் பிறக்கு நடந்த எண்ணற்ற சாதிக்கொடுமைகலின் போதும் கலைஞரா முதல்வர்? ஜெயக்குமார் லாறி லாறியா பூசணிக்காய சோத்துக்குள்ளே அமுக்கிறீரே!//

எனது ஆட்சிகாலத்தில் நடந்த இனக்கலவரங்களுக்கும், மதக்கலவரங்களுக்கும் எதிர்க்கட்சிகளே காரணம் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கலைஞரே 2 தினங்களுக்குமுன் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார் என்பதை உங்களுக்கு இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

 
At 1:08 AM, Blogger ஜெயக்குமார் said...

//கலைஞர் பேச்சக் கேட்டு மதம் மாறின ஒரு திமுககாரன உங்களால காட்ட முடியுமா? கலைஞர் அவர் மதத்தக் குற சொன்னாலும் அவர் உரிமையய்யா. இன்னித் தேதில மூடநம்பிக்கைய ஒழிக்கறவந்தான் சரியான இந்து. பொட்டையும் நாமத்தயும் போட்டுகிட்டு கோயிலுக்கு யானைக்குட்டிங்கள வாங்கி விட்டுட்டா பெரிய பக்தருங்களாக்கும். எல்லாம் வேசம். பாத்திக்கிட்டே இருங்க ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சரு.//

சரியாக சொன்னீர்கள்,

இன்னித் தேதில மூடநம்பிக்கைய ஒழிக்கறவந்தான் சரியான இந்து.

இப்போது அவரது குடும்ப சன் டிவி-ல ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் "வேப்பில்லைக்காரி", இதற்கு முன்பு ஒளிபரப்பாகிய சூலம், etc.. etc.. இதெல்லாம் மூடநம்பிக்கையை ஒழிக்கும் நிகழ்ச்சிகளா?.

 
At 2:05 AM, Blogger ஜெயக்குமார் said...

//அதல்லாம் அவங்க குடும்பதாருங்க விருப்பமா இருக்கலாம். அதனலதான்யா சொல்றன் அவரோ அவர் குடும்பமோ இந்துமத விரோதிங்க இல்லன்னு.//

மூடப்பழக்கதிற்கு பதில் சொன்னா, இந்து மதப்பாசத்துக்கு பதில் சொல்லுறாங்கப்பா!.

//கலைஞர் பேச்சக் கேட்டு மதம் மாறின ஒரு திமுககாரன உங்களால காட்ட முடியுமா? //

எனக்கு தெரிஞ்சு, கலைஞர் ஒரு இந்துவை கிறிஸ்தவனாகவே, அல்லது ஒரு முஸ்லீமை இந்துவாகவோ மாறச்சொல்லவில்லை. அப்புறம் எப்படி மாறுவான். கேள்வி கேட்கும்போது நாலுதடவை யோசிச்சுக்கேட்கனும்.

கருணாநிதி இந்துக்களைத்தான் மட்டம்தட்டி பேசியுள்ளார். ஏதோ இவர்தான் தமிழையும், தமிழர்களையும் வாழவைத்ததுபோல பேசுவார். பெரியபுராணங்களும், திருவாசகமும் வாழவைக்காத தமிழையா இவர் வாழவைத்தார்.

 
At 8:31 AM, Blogger மாயவரத்தான் said...

//அப்பறம் திமுக ஆதரவாளனுங்கன்ற பேர்ல சிலவனுங்க இங்க ரவுடித்தனமா எழுதறத நிறுந்துங்கய்யா. மொதல்ல நீங்கதா எல்லாத்தயம் கெடுக்கறீங்க//

ஒரு வார்த்தைன்னாலும் திரு வார்த்தை வெற்றிவேல். ஆனாலும் ஒரு பழ மொழி நியாபகத்துக்கு வந்து தொலைக்குது எனக்கு!

 
At 12:15 PM, Blogger ஜெயக்குமார் said...

//மற்றபடி உங்கள் வாதத்தில் அர்த்தமிருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.//

நான் இட்ட பிண்ணூட்டங்கள் அணைத்தையும் படித்தீர்கள் என்றால், உங்களுக்கு ஓரளவுக்கு புரியலாம். அப்படியும் புரியவில்லையென்றால் உங்களுக்கு எப்படிப்புரிய வைப்பதென்று எனக்கு புரியாமல் போய்விடும்.

 
At 12:17 PM, Anonymous Anonymous said...

ஜெய்குமார்.அடிபின்றீங்க.உங்க பதிவுகளை படிச்சு சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துடுச்சு.ஆனா உண்மையாவே அரசியல் நிலமை இப்படித்தான் இருக்கு.

தொடர்ந்து எழுதவும்.

 
At 12:20 PM, Anonymous Anonymous said...

மற்றபடி உங்கள் வாதத்தில் அர்த்தமிருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை./

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று சொல்லிவிட்டு மஞ்சள் துண்டு அணிந்து பக்திப்பழமாக மாறியதில் அர்த்தம் உண்டா என்ன?

 
At 12:24 PM, Blogger ஜெயக்குமார் said...

Anonymous

உங்கள் பிண்ணூட்டங்களுக்கு நன்றி!.

நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன் உங்களைபோன்றவர்களின் ஒத்துழைப்புடன்.

 
At 3:16 PM, Blogger ஜெயக்குமார் said...

சில அனானிகள் அருவெறுக்கத்தக்க வார்த்தைகளுடன், சில பிண்ணூட்டங்க்ளை இடுகிறார்கள், அவற்றை நாகரீகம் கருதி இங்கு நான் தவிர்த்துள்ளேன். அனானிகளை பிண்ணூட்டம் இட அனுமதித்தது , எல்லொரும் என் பதிவு பற்றிய தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் சிலர் அதை தவறாக பயன்படுத்துகின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உண்மையிலேயே உங்களுக்கு துனிவு இருந்தால் உங்கள் பெயர் மற்றும் இ-மெயில் முகவரியுடன் தெரிவிக்கவும். அவர்களுக்கு அவர்கள் பாசையிலேயே பதில் அளிக்க நான் காத்திருக்கிறேன்.

என்னிடமும் அதுபோன்ற நிறைய வார்த்தைகள் (அருவா புகழ் திருப்பாச்சேத்தியில் படிக்கும்போது கற்றுக்கொண்டது) பலகாலம் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்துக்கிடக்கின்றன.

 
At 9:58 PM, Blogger Bharaniru_balraj said...

\\என்னிடமும் அதுபோன்ற நிறைய வார்த்தைகள் (அருவா புகழ் திருப்பாச்சேத்தியில் படிக்கும்போது கற்றுக்கொண்டது) பலகாலம் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்துக்கிடக்கின்றன.\\

கருத்துக்களைப்பறிமாறிக் கொள்ளும் போது கொஞசம் கோபமாக அல்லது வேகமாக் விமர்சனங்கள் வரலாம்.

அதற்காக் ஒரு system analyst இப்படிக் குரோதமாய் பதிலலிக்கலாமா.?

 
At 1:27 AM, Blogger ஜெயக்குமார் said...

//கருத்துக்களைப்பறிமாறிக் கொள்ளும் போது கொஞசம் கோபமாக அல்லது வேகமாக் விமர்சனங்கள் வரலாம்.

அதற்காக் ஒரு system analyst இப்படிக் குரோதமாய் பதிலலிக்கலாமா.?//

பரணி,

கலைஞரை விமர்சித்த ஒரே காரணத்திற்காக எனக்கு வந்த பிண்ணூட்டங்களை நீங்கள் படிக்க நேர்ந்தால் இப்படி சொல்லமாட்டீர்கள்
system analyst என்றாலும் நானும் மனிதன் தான். ஒரு படித்த பொறுப்புள்ள மத்திய அமைச்சரே பொதுகூட்டத்தில் பேசும்போது அநாகரிகமாக பேசுகிறார் அவரின் ஆதரவாளராகளாக இருக்கும் இந்த அடிப்பொடிகள் எப்படியெல்லாம் பேசும் என்பதை நீங்கள் சற்று சிந்திதீர்கள் என்றால் உங்களுக்கும் புரியும்.

 
At 1:38 AM, Anonymous Anonymous said...

//கலைஞரை விமர்சித்த ஒரே காரணத்திற்காக எனக்கு வந்த பிண்ணூட்டங்களை //

கலைஞரா?? "கருணாநிதி"ன்னு சொல்லுப்பா.

 
At 1:39 AM, Anonymous Anonymous said...

//Bharaniru_balraj said...
\\என்னிடமும் அதுபோன்ற நிறைய வார்த்தைகள் (அருவா புகழ் திருப்பாச்சேத்தியில் படிக்கும்போது கற்றுக்கொண்டது) பலகாலம் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்துக்கிடக்கின்றன.\\

கருத்துக்களைப்பறிமாறிக் கொள்ளும் போது கொஞசம் கோபமாக அல்லது வேகமாக் விமர்சனங்கள் வரலாம்.

அதற்காக் ஒரு system analyst இப்படிக் குரோதமாய் பதிலலிக்கலாமா.? //

Bharaniru_balraj,

What else you can expect from a guy who compares Thirukkural with DINA-MALAM.

 
At 2:59 PM, Anonymous Anonymous said...

Bharaniru_balraj,

What else you can expect from a guy who compares Thirukkural with DINA-MALAM//

கலைஞர் கருணாநிதியை கூடத்தான் 'வாழும் வள்ளுவர்' 'மும்முடிச்சோழன்' என்று கவியரங்கத்தில் வைரமுத்து ஐஸ் வைக்க அதை சன்டீவியில் காட்டி பூரிப்படைந்தார்கள்.அப்போது நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் ?

 
At 3:23 PM, Blogger கால்கரி சிவா said...

//என்னிடமும் அதுபோன்ற நிறைய வார்த்தைகள் (அருவா புகழ் திருப்பாச்சேத்தியில் படிக்கும்போது கற்றுக்கொண்டது) பலகாலம் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்துக்கிடக்கின்றன//

நன்றி ஜெயகுமார், நானும் இதைப்ப் போல்தான் எழுத நினைத்தேன். என் மனைவியும் தம்பியும் தடுத்துவிட்டனர். அந்த போலிகளுக்கு Vocabulary ரொம்ப கம்மி. மதுர தெற்கு மாசி வீதியில் வளர்ந்த எனக்கு எவ்வளவு வார்த்தைகள் தெரியும். அதெல்லாம் உபயோக்கிக்க வேண்டாம். களவையும் கற்று மறந்தாகிவிட்டது. திரும்பவும் பழக வேண்டாம்

 
At 6:59 PM, Anonymous Anonymous said...

When this guy Karunanithi kicks the bucket, I am waiting to watch Stalin and Dayanithi fight like dogs to control DMK. At present it looks like advantage Dayanithi.

My sympathies are with Stalin, atleast this guy has put in 25 years in DMK, but this guy Dayanithi waltz in and trying to take over the party.

 
At 10:41 PM, Blogger ஜெயக்குமார் said...

//அந்த போலிகளுக்கு Vocabulary ரொம்ப கம்மி. மதுர தெற்கு மாசி வீதியில் வளர்ந்த எனக்கு எவ்வளவு வார்த்தைகள் தெரியும். அதெல்லாம் உபயோக்கிக்க வேண்டாம். களவையும் கற்று மறந்தாகிவிட்டது. திரும்பவும் பழக வேண்டாம்//

சில விஷமிகள் டோண்டு அவர்களின் பெயருடன் மற்றும் அவரது இமெயில் முகவரியுடன் இத்தகைய பிண்ணூட்டங்களை விடுகின்றனர். டோண்டுவை ஒரு பார்பனன் என்ற முறையில் விமர்சிக்கும் இவர்கள் அவருக்கு இருக்கும் தைரியம் கூட இல்லாத "-------"கள் என்றுதான் சொல்லமுடியும்.

 

Post a Comment

<< Home