$user_name="Jeyakumar";

Wednesday, April 19, 2006

கருணாநிதியின் சூப்பரோ, சூப்பர் பிளான்!

சூப்பரோ, சூப்பர் பிளானுங்கோ!

அ.கணேசன், தேனியிலிருந்து எழுதுகிறார்:

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கலர் "டிவி' இல்லாத வீடுகள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு கலர் "டிவி' வழங்குவோம்' என்று தன் தேர்தல் அறிக்கையில் தி.மு.க., அறிவித்திருக்கிறது.இந்த கலர் "டிவி' விவகாரம் குறித்து விமர்சித்தாலே கருணாநதிக்கும், அவரது கழக உடன்பிறப்புகளுக்கும் கோபம் கொந்தளித்துக் கொண்டு வருகிறது.

அரசாங்கம் என்பது நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தும் போது, அதன் பயன் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதில் ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு. அதை ஒரு அலசு அலசிவிட்டு, இந்த கலர் "டிவி' விவகாரத்திற்குள் நுழைவோம்.

விவசாயிகள் என்பவர்கள் எப்பொழுதுமே வறுமையிலும், துன்பத்திலும் உழன்று கொண்டிருப்பவர்கள்; நெசவாளர்களும் அப்படியே! விவசாயிகளுக்கும், நெசவாளி களுக்கும் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, இலவச மின்சாரம் போன்ற சலுகைகளை ஒரு அரசாங்கம் வழங்கும் போது, யாரும் வயிறெரியவோ, பொறாமைப்படவோ போவதில்லை. காரணம்: அது, அவர்களது "வாழ்க்கை' பிரச்னை.

அதேபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தீவிபத்து, சுனாமி, பூகம்பம், பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கும் அரசாங்கம் உதவிக்கரம் நீட்டி, நவாரணத் தொகை வழங்கும் போது, யாரும் குறையோ, குற்றமோ கூற மாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

ஆனால், கலர் "டிவி' விஷயம், வாழ்க்கைப் பிரச்னை அல்ல; முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சமாச்சாரம்(இப்போது உள்ள டிவி-களில் வேரென்ன நல்ல விசயங்களை சொல்லப்போகிறார்கள்). இந்தப் பொழுதுபோக்கு சமாச்சாரத்தில், ஒரு வீட்டுக்குக் கொடுத்து, ஒரு வீட்டுக்கு மறுத்து, ஏற்றத்தாழ்வு பார்த்தால், இதை ஏற்றுக் கொள்ள முடியுமா? இது ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு
கண்ணில் சுண்ணாம்பும் தடவும் விஷ(ய)ம் அல்லவா?

"ஓட்டுப் போட்டாலும், நமக்குக் கலர் "டிவி' கிடைக்கப் போவதில்லை' என்று தெரிந்தால், யாராவது கழக வேட்பாளர்களுக்கும், அதன் தோழமைக் கட்சி கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்க முன் வருவரா?பகுத்தறிவு பற்றி பேசும் கழகத் தலைமை, இந்த விஷயத்தைப் பகுத்தறிந்து பார்க்க மறந்தது ஏன்?

தமிழகத்தின் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் தொகையில், 30 லட்சம் வீடுகளில் மட்டும் தான் கலர் "டிவி' இல்லையாம். அதையும் துல்லியமாகக் கணக்குப் போட்டு காட்டி விட்டனர்.வீட்டுக்கு நாலு ஓட்டு என்று
எடுத்துக் கொண்டாலும், 30 லட்சம் வீடுகளில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் ஓட்டுக்கள் தானே தி.மு.க., கூட்டணிக்குக் கிடைக்கும். மீதியுள்ள ஓட்டுகள் எதிரணி (அ.தி.மு.க., அல்லது தே.க.தி.க., அல்லது பா.ஜ.,)க்குத் தானே போகும்.

அடுத்து இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கலர் "டிவி'யை இலவசமாக வாங்கினால், அந்தக் குடும்பம் அடுத்த ஐந்தாண்டுகளில் கேபிள்
கனெக்ஷனுக்காக ஆறாயிரம் ரூபாய் (மாதம் 100 ரூபாய் வீதம்) கட்ட வேண்டி வருமே! இது சுண்டைக்காய் கால் பணம் (ஆனால், கலர் "டிவி' ப்ட) சுமை கூலி (கேபிள் கனெக்ஷன்) முக்கால் பணம் என்பது மாதிரி அல்லவா உள்ளது.
மொத்தம் 30 லட்சம் கலர் "டிவி' இலவசமாக வழங்க அரசுக்கு அதிகம் செலவாகாதாம்; 600 கோடி தான் ஆகுமாம்.

அதாவது, அரசு 600 கோடி செலவழித்து, 30 லட்சம் வீடுகளுக்கு கலர் "டிவி' வழங்குமாம்... அதிலிருந்து ஒரு தனியார் கேபிள் கனெக்ஷன் ஐந்தாண்டுகளில் 1800 கோடி ரூபாய் சம்பாதிக்குமாம். தற்போதைய வசூல் தனி! சூப்பர் பிளானுங்கோ; சூப்பரோ சூப்பர் பிளான்!

6 Comments:

At 2:05 AM, Blogger siva gnanamji(#18100882083107547329) said...

makkalai sindhikka vidak koodadhu
adhudhan sirandha arasiyalvadhiyin
ilakkanam

 
At 2:14 AM, Anonymous Anonymous said...

Dear DINA-MALAM agent,

Atleast have the basic courtesy of giving credits to DINA-MALAM when you cut & paste from them.

Dont claim credit for others work!!!.

 
At 2:59 AM, Blogger ஜெயக்குமார் said...

/Atleast have the basic courtesy of giving credits to DINA-MALAM when you cut & paste from them.

Dont claim credit for others work!!!. /

I don't need to claim the credit for others work!!!.

I have clearly mentioned the writer name. Read it properly from the beginning

 
At 4:36 AM, Anonymous Anonymous said...

i DONT KNOW WHY ARE U SO MUCH AGAINST dmK... sEEMS TO BE U HAVE RECIEVED A BIG PACKET.....

 
At 5:28 AM, Blogger ஜெயக்குமார் said...

எனக்கு ஒன்று புரியவில்லை, கருணாநிதி், திமுக மற்றும் சன் டிவி ஆகியவற்றை விமர்சித்தால் மட்டும் தமிழ்மணத்தில் இவ்வளவு மட்டமான விமர்சனம் வருகிறது.
ஒருவர் நீ பார்ப்பனனா என்கிறார், ஒருவர் ஜெயலலிதாவிடன் என்னத்தைப்பார்த்த, அவள் எதை தூக்கி காட்டினாள் என்று கேட்கிறார். ஒருவர் நீ தினமலர் ஏஜென்டா என்று கேட்கிறார். இன்னொருவர் ஜெயலலிதாவிடன் எவ்வளவு வாங்கினாய் என்று கேட்கிறார்.

என்னுடைய பதிவுகளில் இதுவரை நான் எந்த ஒரு சாதியைப்பற்றியும் எழுதியது கிடையாது. அதே போல ஜெயலலிதாவை ஆதரித்தும் ஒரு பதிவும் நான் இதுவரை வெளியிடவில்லை.

காகிதப்பூக்களுக்கு மகரந்த சேர்க்கை உண்டு என்று எண்ணிக்கொண்டிருக்கும் தமிழக மக்களிடம், உங்கள் ரத்தஓட்டம் சுத்தம் கெட்டது எதனால், உங்கள் சிந்தனா மணடலத்தில் ஏன் இத்தனை சிலந்திவலைகள் என்று தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

 
At 6:18 AM, Anonymous Anonymous said...

//காகிதப்பூக்களுக்கு மகரந்த சேர்க்கை உண்டு என்று எண்ணிக்கொண்டிருக்கும் தமிழக மக்களிடம், உங்கள் ரத்தஓட்டம் சுத்தம் கெட்டது எதனால், உங்கள் சிந்தனா மணடலத்தில் ஏன் இத்தனை சிலந்திவலைகள் என்று தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். //

Karuthu,

This is the biggest JOKE.

None of these articles were your own thoughts. You just cut & paste the junk from DINA-MALAM. Nothing else. Dont claim credit for other peoples work.

 

Post a Comment

<< Home