ராமதாஸ், கருணாநிதியை மிரட்டும் காலம் வருமா?
என்ன செய்யும் தி.மு.க.,
கே.கருணாகர், திருவல்லிக்கேணி, சென்னையிலிருந்து எழுதுகிறார்:
தி.மு.க., கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று விட்டதாக வைத்துக் கொள்வோம்...
தி.மு.க., போட்டியிட்ட மொத்த தொகுதிகள் 129; தனித்து ஆட்சி அமைக்க தேவை 118. மொத்த 129ல், 118 கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அப்படியெனில், கூட்டணிக் கட்சிகள் தூக்கி உட்கார வைத்தால் தான் ஆட்சி. ஒன்று கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்; இல்லை, கூட்டணிகளின் தயவால் அவர்கள் வெளியிலிருந்து ஆதரவு தர, தி.மு.க., ஆட்சியில் அமர வேண்டும். இந்த இரண்டில் எது நிடந்தாலும் தி.மு.க.,வுக்கு இடைஞ்சல் தான்.
ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும், "இரண்டு ரூபாய்க்கு ரேஷனில் அரிசி போடு' என்பர். மக்கள் மறந்தாலும், காங்கிரஸ், பா.ம.க., இரு கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் இவற்றின் தலைவர்கள் மறக்க மாட்டார்கள். பேனாவைக் கையில் கொடுத்து, ஆணை பிறப்பித்து, "கையெழுத்து போடு' என்று வற்புறுத்துவர். அவர்கள்
தயவின்றி, ஆட்சி இல்லை என்றான பின் மறுக்க முடியாது.
இந்த அரிசி சலுகைக்காக மத்தியிலிருந்து மானியம் எதிர்பார்க்க முடியாது. தமிழகத்திற்கு மட்டும் மத்திய அரசு சலுகை காட்ட முடியாது. இப்போது சலுகை விலை அரிசிக்காக ஆகும் கூடுதல் செலவை எந்த வகையில் ஈடுகட்டுவது? தி.மு.க., அரசுக்கு விழி பிதுங்காதா?
அடுத்து: இலவச கலர் "டிவி' வழங்க உத்தரவு பிறப்பித்தாக வேண்டும். தி.மு.க.,வை நாற்காலியில் உட்கார வைத்த கூட்டணித் தலைவர்கள் ஆட்டம்
காட்டி விடுவர். "டிவி' பெட்டி வழங்க பணத்தை எங்கிருந்து பெறுவது? கூடுதல் வரி விதிக்குமா? வரி போட்டால் பா.ம.க.,வும், கம்யூனிஸ்ட்டுகளும் வரிந்து கட்டிக் கொண்டு குஸ்திக்கு வருவர். "கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை' என்று தி.மு.க., திண்டாடுமே!
இனி, "ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தா...' என்பர். ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தங்கள் கட்சிக்கு "கோட்டா' வேண்டும் என்று நச்சரிப்பர். அத்தனை நிலத்துக்கு தி.மு.க., எங்கே போகும்? வழங்க நிலம் இருக்காது; வழங்காவிட்டால், கூட்டணிகள், "தையா தக்கா' என்று குதிக்கும். தி.மு.க.,வால் சமாளிக்க முடியுமா? மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டி வருமே! அடுத்தாற் போல, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வாரி வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட சலுகைகளை வழங்கிய பின், புதுச் சலுகைகள் தொடங்க வேண்டும்.
ஏது வருமானம்? "கொடு... கொடு' என்பர் கூட்டணிகள். கொடுக்கா விட்டால் அவர்கள் தி.மு.க., ஆட்சிக்கு கெடு வைத்து விடுவர். ஆட்சியில் இருக்கும் தி.மு.க., கையைப் பிசைந்தும் பயனில்லை; கண்ணை உருட்டியும் பயனில்லை. கூட்டணித் தலைவர்கள் வாத்தியார் மாதிரி நின்று ஆணையிடுவர்; ஆட்டி வைப்பர். தி.மு.க., கதி என்னாகும்? நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பது போல், தி.மு.க.,வின் நிலை வந்து விடுமே! கூட்டணிக் கட்சிகள் தி.மு.க.,வின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இந்த அவதி ஏன் வந்தது? அள்ளித் தெளித்த இலவச வாக்குறுதிகளால் அல்லவா?
--- நன்றி தினமலர்
(இத சொல்லாட்டி சில முகவரியற்றவர்களின் தொல்லை தாங்கமுடியலப்பா)
--என்னுடைய கருத்து
கூட்டணி ஆட்சி என்றால் அதுவும் பா,மா.க தயவில் என்றால் ராமதாஸின் அட்டகாசம் தாங்கமுடியாது. கருணாநிதி நிம்மதியாக தூங்கவும்முடியாது.
ஏற்கனவே தமிழ்நாட்டை சென்னையையும், மதுரையையும் தலைநகர்களாக வைத்து இரண்டாக பிரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
எனென்றால் வடக்கே அவரின் கட்சிக்கு அமோக ஆதரவு உள்ளதாகவும் அதைவைத்து வடதமிழ்நாட்டில் ஆட்சியைப்பிடித்துவிடலாம் என்கிற
கணக்கில் தான் (புதுவை மக்கள் பாடம் புகட்டியும் கூட புத்தி வரவில்லை). இந்நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்கள் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கட்டாயம் கேட்பார் ராமதாஸ். இப்போது கருணாநிதி மத்திய அரசை மிரட்டுவது போல தமிழ்நாட்டில் ராமதாஸ் கருணாநிதியை மிரட்டலாம். இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
11 Comments:
அதனால்தான், திரும்பவும் சொல்கிறேன், ஆணவம் பிடித்த அம்மா ஆட்சியும் வேண்டாம்; குழப்பம் நிறைந்த கலைஞர் ஆட்சியும் வேண்டாம்!
இரு கழகங்களையும் ஒருசேர வீட்டிற்கு அனுப்ப சரியான நேரம் இது!
தனித்து, துணிவுடன் நிற்பவரையே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து, மற்றவர்களுக்கு ஓய்வுகொடுத்து விடலாம்!
சரியாக சொன்னீர்கள் ,
ஆனால் விஜயகாந்தின் அரசியல் அணுபவம் வெறும் ஆறு மாதங்கள் தான் உள்ளது அது தான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.
தமிழ்மணத்தில் பா.ம.க அனுதாபிகள் அதிகம் என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்து யாரும் பா.ம.க வை அதிகம் விமர்சித்தது இல்லை. சசி கூட மறைமுமாக அந்த கட்சியை ஆதரிப்பது தெரிகிறது. மரம் வெட்ட்ய் ராமதாஸுக்கு புதுவை மக்கள் பாடம் புகட்டியது போல, நம் தமிழக மக்கள் எப்போது புகட்டப்போகிறார்களோ தெரியவில்லை
Jeya kumar , I dont know how to write in tamil in this blog ,Since I'm new .
But , I too agree with you , Just with a single caste in his hand "PMK" Leader Ramadas got a central minister post for his son. I realy dont know how people are voting for him ..
Why do you dont see "Vaiko" as next CM ?
கார்திக்கேயன்,
என்னுடைய மற்ற பதிவுகளைப்படித்தால் உங்களுக்கு வைகோ-வை பற்றிய என்னுடைய பார்வை புரியும்
http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post_19.html
பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்.
அத்தைக்கு மீசை முளைக்கட்டும் ஜெயக்குமார்
Jeya, I read your view about "vaiko" and all the comments as well.
Really ,my heart got wounded by seeing the worst below level comments from our tamil friends around the world.
Though every one of us have "BAD" image inside , hiding and living is called as Social animal.
I hope you agree with me .
Regarding vaiko, I dont want to comment about his party Or His caste Or his view about tamilnadu and his view on improving tamilnadu.
Infact though he never spoke about Tamilnadu improvement any time,
1) He tried to get vote from the tamil people in early days just by telling "Lankan" tamil matter.
2) Later "Some Sedu" project
But all the time accusing the other party people and getting votes.
Still, I feel with his lots of exp in Politics he can speak something about TAMIL nadu improvement and At least have 10 year goal as Tamilnadu CM.
What do you say ?
/ அத்தைக்கு மீசை முளைக்கட்டும் ஜெயக்குமார்/
என்ன மாயவரத்தான், திமுக கூட்டணி வெற்றிபெறாது என்று முடிவே பண்ணிவிட்டீர்களா?
திரு கார்த்திக்கேயன்,
உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்று நினைக்கிறேன். வைகோ சேது சமுத்திரத்திட்டத்திற்காக மட்டும் அல்ல, சிவகாசி தீப்பட்டி தொழிலார்கள் பிரச்சனையில் இருந்து பல பிரச்சனைகளைப்பற்றி பார்லிமெண்டில் அதிக அக்கறையோடு பேசியவர் வைகோ மட்டும்தான். சிறந்த பார்லிமண்டேரியனாகவும் விளங்கினார். அவரை எப்படியும் தன் அமைச்சரவையில் சேர்த்துவிடவேண்டும் என்று வாஜ்பாய் அவர்களே மிகவும் விரும்பினார்.
I agree .
I dont know much history in politics and Statistics.
But , I feel myself as an ordinary tamil guy who votes only with latest happenings. Am I right ?
Tamil people will not recall very old things before vote.. Am I right ?
Also ,I'm NOT against "Vaiko" ,all I say I , he has to come out of this "Kuutani" and prove himself as a REAL LEADER in all parts of Tamil nadu.
BTW : How to write my replies in tamil ?
This comment has been removed by a blog administrator.
//ஏற்கனவே தமிழ்நாட்டை சென்னையையும், மதுரையையும் தலைநகர்களாக வைத்து இரண்டாக பிரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.//
தமிழகத்தை, தமிழர்களைப் பிரிக்க நினைக்கும் ராமதாஸின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவாவது இந்த தேர்தலில் இவர்கள் கூட்டணி தோற்கவேண்டும்.
Post a Comment
<< Home