$user_name="Jeyakumar";

Saturday, April 22, 2006

மக்கள் ஏமாறத் தயார் இல்லை! - கோவை வாசகர்

ஏமாறத் தயார் இல்லை!

ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவையிலிருந்து எழுதுகிறார்:

"முடியாது என்பது தி.மு.க., அகராதியிலேயே கிடையாது' என கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படியானால், இதுவரை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றியுள்ளாரா?

கடந்த 1961ம் ஆண்டு கோவையில் நிடந்த சிறப்பு தி.மு.க., மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன்.

இன்றைக்கு 45 ஆண்டுகள் உருண்டோ டி விட்டன. இடைப்பட்ட காலங்களில், கருணாநிதி 15 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். அவர் அடிக்கடி ஒன்றை குறிப்பிடுவார்: "சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்' என்று.கடந்த 1961 முதல் 2006 வரை சொன்னதை செய்யவே இல்லை. டிச., 22, 1961ல், தி.மு.க., சார்பு வார ஏடாகிய, "அறப்போர்' (ஆசிரியர் அரங்கண்ணல்) என்ற இதழில், வெளிவந்த தேர்தல் அறிக்கை:

* கவர்னர் ஒழிப்பு: மக்கள் வரிப்பணத்தில் ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் பாழாக்கி வரும் கவர்னர் பதவி தேவை இல்லை என தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதுடன், அதன் காரணமாக, கவர்னர் சம்பந்தப்பட்ட சிறப்பு நகழ்ச்சிகளில் இருந்து, ஒதுங்கியே செயல்பட்டு வந்திருக்கிறது தி.மு.க., ஆனால், மாநிலம் மற்றும் மத்தியில் பல ஆண்டுகள் அமைச்சர் பதவி வகித்திருந்தும், இது சம்பந்தமாக எள்ளளவும் கவர்னர் ஒழிப்புக்கு, தி.மு.க., முயற்சி எடுக்கவில்லை.

* தமிழகத்தில் வசதியான ஏதேனும் ஒரு துறைமுகத்தை தேர்வு செய்து, அதை சுங்க தீர்வையற்ற துறைமுகமாக்க ஏற்பாடு செய்வோம்! ஆனால், இன்று வரை தி.மு.க., எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

* நெய்வேலி சுரங்க திட்டத்தை விரிவுபடுத்தி, அதை மாநில அரசின் உடமையாக்குவோம்! இதையும் இன்று வரை செய்யவில்லை.

* கடல் நீரை குடிநீராக்குவோம்! அந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

* பக்கிங்காம் கால்வாயை, வேதாரண்யம் கால்வாயுடன் இணைத்து, படகு பாதை அமைப்போம்! இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

* குதிரைப் பந்தயத்தை நிறுத்த வழி காணோம். குதிரை பந்தயம் ஒழித்து விட்டதாக நினைத்து குதிரை சிலை வைத்தனர். அது விக்ரமாதித்தன் குதிரை போல உயிர் பெற்று, இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது, கம்பீரமாக!

* தனியார் துறையில் உள்ள பெருத்த வருவாய் தரும் தொழில்களை நியாயமான நஷ்ட ஈடு பத்திரங்கள் கொடுத்து அவற்றை அரசுடமை ஆக்குவோம்!

அதை தான் முதல்வர் ஜெ., செய்தார். கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வரும் தனியார் கேபிள் "டிவி'யை அரசு ஏற்க சட்டம் கொண்டு வந்தார். அதை, "தேவையில்லை' என கூறி, அவரை அகற்ற தீர்மானம் போட்டனரே, அவரிடமே சென்று, "அதில் கையொப்பம் இட வேண்டாம்' என தி.மு.க., தடுத்து நறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

* கூட்டுறவுத் துறையில் 100க்கு 25 பங்கு ஆதி திராவிட மக்களும், 25 பங்கு பின்தங்கிய வகுப்பினரும் உறுப்பினர் ஆக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை செயல்படுத்துவோம்! இதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

கடைசியில் மிக மிக முக்கியமான தீர்மானம் வருமாறு:

* தரிசு நலம் என்ற தலைப்பில் உள்ள விளை நிலமாகக் கூடியவைகளை உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆதி திராவிடர்களுக்கும், நிலமற்ற மற்றையோருக்கும் நஞ்சையாக இருந்தால் மூன்று ஏக்கர், புஞ்சையாக இருந்தால் ஐந்து ஏக்கரும் பகிர்ந்தளிக்கும் திட்டம் மேற்கொள்வோம்!

அந்த காலகட்டத்தில், ஈ.வெ.ரா., காமராஜருக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தார். மேற்படி திட்டத்தை பற்றி அவர் கூறியதை அப்படியே தருகிறேன்:

"மூன்று ஏக்கர் நிலமாம்... எங்கே இருக்கு நிலம்? கடலில் தான் அளந்து கொடுக்க வேண்டும்!'

மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்... இதை கூறியது நான் அல்ல... "நாங்கள் தி.க.,வை விட்டு பிரிந்தாலும், எங்கள் நிரந்தர தலைவர்' என அண்ணாதுரையால் கூறப்பட்ட, ஈ.வெ.ரா., தான் உண்மையில் மிகப்பெரிய தீர்க்கதரிசி. ஏனெனில், இந்த தீர்மானம் போட்டு 45 ஆண்டுகள் ஆகியும், 15 ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்தும், மத்தியிலும், பல்வேறு பிரதமர்களின் கீழ் முக்கியமான அமைச்சர்களைப் பெற்று இருந்தும் கூட, இந்த தீர்மானங்களை அவர்கள் நிறைவேற்றவில்லை! இப்படி ஏற்கனவே கூறிய பல்வேறு உறுதிமொழிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு, இன்று 2006ல் வந்து, "வீட்டுக்கு ஒரு கலர் "டிவி' ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நலம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அ஛சி' எனக் கூறினால், மக்கள் நச்சயமாக ஏமாற மாட்டார்கள்.

நன்றி தினமலர்.

27 Comments:

At 6:26 PM, Blogger மாயவரத்தான் said...

//"முடியாது என்பது தி.மு.க., அகராதியிலேயே கிடையாது' என கருணாநிதி கூறியிருக்கிறார். //

ஒரு வேளை தி.மு.க. அகராதியிலே அதுக்கு பதிலா 'நஹி' அப்படீன்னு இருக்கோ என்னவோ?! தயாநிதி மாறன் ஹிந்தி படிச்சப்ப தயாரிச்ச அக்ராதியா இருக்குமோ?!

 
At 12:44 AM, Blogger வரவனையான் said...

தம்பி, நீங்க தினமலத்தில சை தினமலருல இருந்து வாசகர் கடித்த உருவி போடுறதுல ஒரே ஒரு நன்மைதான் இருக்கு, அது இங்க இருக்குற பார்ப்பன பருப்புக்கு****களூக்கு மட்டும்தான் சந்தோசமா இருக்கும்,ஆனா அந்த கோவை வாசகர் எழுதியிருக்குற கடிதத்தோட ஒவ்வொரு வரியும் மாறாம "குலமங்கலத்தில் இருந்து சுரேஷ்" எழுதுகிறார்ன்னு நெல்லை பதிப்புல ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துருச்சு.இப்ப தெரியுதா நீங்க வால் புடிக்கிற தினமலருடைய லட்சனம்.

குறிப்பு: இதையாவது மறுமொழிகள்ல போடுவிங்களா இல்லை வழக்கம் போல ..........

 
At 12:50 AM, Blogger ஜெயக்குமார் said...

திமுக-வின் அகராதியை எழுதியவர் கலைஞர்தான். சிலேடையாக பதில் சொல்வதில் அவர் வல்லவர். "முடியாது என்பது தி.மு.க., அகராதியிலேயே கிடையாது' என்று உங்கள் அகராதியில் குறிப்பிட்டுள்ளீர்களே, அப்படியென்றால் இப்போது கொடுங்கள் என்று கேட்ட்டால்.

"மன்னிக்கவும் 'கொடுக்க முடியாது என்பது திமுக அகராதியில் கிடையாது என்றுதான் கூறினேன் அதை ஊடகங்கள் திரித்துக்கூறிவிட்டன" என்று கூறினாலும் கூறுவார். உண்மைகளை திரித்துக்கூறி மக்களை ஏமாற்றத்தான் இப்போது தமிழகத்தில் ஊடங்களில் இவர்கள் தங்களது பேராதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றனர்.

 
At 12:58 AM, Blogger ஜெயக்குமார் said...

//"குலமங்கலத்தில் இருந்து சுரேஷ்" எழுதுகிறார்ன்னு நெல்லை பதிப்புல ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துருச்சு.//

ஜயா,
விசயத்தை யாரு சொன்னா என்ன, அதில இருக்கிற உண்மையைப்பாருங்க, மூலத்தை பார்க்காதீர்கள். நமக்கு திருவள்ளுவரின் மூலமும் தெரியாது, திருகுறளின் மூலமும் தெரியாது. ஆனால் அதில் உள்ள நல்ல கருத்துகளை உண்மைகளை நம்புவதில்லையா? அது மாதிரிதான் இதுவும்

 
At 1:12 AM, Blogger வரவனையான் said...

//ஜயா,
விசயத்தை யாரு சொன்னா என்ன, அதில இருக்கிற உண்மையைப்பாருங்க, மூலத்தை பார்க்காதீர்கள். நமக்கு திருவள்ளுவரின் மூலமும் தெரியாது, திருகுறளின் மூலமும் தெரியாது. ஆனால் அதில் உள்ள நல்ல கருத்துகளை உண்மைகளை நம்புவதில்லையா? அது மாதிரிதான் இதுவும் //





அங்கதான் தம்பி விசயமே இருக்கு, இப்போ அனைவரும் சமாதானத்தை நேசியுங்கள்ன்னு புஷ் பேசினா நமக்கு சிரிப்பு வருமா வராதா, எளிமையாக இருங்கள் , சகமனிதரை அவர் அமைச்சராக இருந்தாலும் மதிப்பளியுங்கள் அப்படின்னு ஜெயலலிதா சொன்னா "நீங்களே" சிரிப்பிங்களா மாட்டிங்களா ? சொல்லுங்க. அறிவுரை கேக்குறது முக்கியமில்ல யாரு சொல்லறாங்குறது தான் காளை இந்த காலத்துல முக்கியம்.திருவள்ளுவத்திலையும் "சிற்றினம் சேராமை"ன்னு ஒரு தலைப்பு வருது ப்பா அதனால தான் சொல்றேன் .தினமலருக்கு அந்த தகுதியில்ல........

 
At 1:16 AM, Anonymous Anonymous said...

//விசயத்தை யாரு சொன்னா என்ன, அதில இருக்கிற உண்மையைப்பாருங்க, மூலத்தை பார்க்காதீர்கள். நமக்கு திருவள்ளுவரின் மூலமும் தெரியாது, திருகுறளின் மூலமும் தெரியாது. ஆனால் அதில் உள்ள நல்ல கருத்துகளை உண்மைகளை நம்புவதில்லையா? அது மாதிரிதான் இதுவும் //

அடப்பாவி,

உனக்கு திருக்குறளும் தின-மலமும் ஒன்றா???

எல்லாவற்றிக்கும் ஒரு அளவு வேண்டும்.

 
At 1:53 AM, Blogger ஜெயக்குமார் said...

அட லூசுகளா!,
நான் தினமலரும் திருக்குறளும் ஒன்னுன்னா சொன்னேன். ஒரு உதாரணத்திற்காக பண்டைய இலக்கியங்களின் மூலம் நமக்கு தெரியாவிட்டாலும் அதன் கருத்தை எடுத்துக்கொளவதில்லையா என்ற அர்த்தத்தில் சொன்னேன்.
இதைகூட சரியா புரிந்து கொள்ளாதவர்களிடம் விளக்கம் சொல்லி என்ன பன்ன. எரும மாட்டு மேல மழை பேய்ஞ்சமாதிரிதான்.

 
At 2:13 AM, Blogger ஜெயக்குமார் said...

திரு வரவனையான்,

என்னுடைய முந்தய பதில் உங்களுக்க அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அந்த பதில்

//
உனக்கு திருக்குறளும் தின-மலமும் ஒன்றா???//

என்று கேட்ட ஒரு முகவரியற்றவருக்காக.

 
At 3:59 AM, Anonymous Anonymous said...

//அட லூசுகளா!,
நான் தினமலரும் திருக்குறளும் ஒன்னுன்னா சொன்னேன். ஒரு உதாரணத்திற்காக பண்டைய இலக்கியங்களின் மூலம் நமக்கு தெரியாவிட்டாலும் அதன் கருத்தை எடுத்துக்கொளவதில்லையா என்ற அர்த்தத்தில் சொன்னேன்.//

You keep on claiming that someone wrote the letters to DINA-MALAM & you are publishing the source.

Varavanyan proved that the same letter appeared with two different sources in different editions of DINA-MALAM.

I have already mentioned to you that this is how DINA-MALAM operates. The letters they publish is mostly written by their own staff. Most of them will be anti-DMK, anti-MK, anti-Ramadoss. As an DINA-MALAM agent you should know better how much MALAM they carry everyday. Well that is their business.

But I am dumbfounded that an educated guy like you started comparing Thrirukkural with DINA-MALAM.

 
At 4:34 AM, Blogger ஜெயக்குமார் said...

Mr/Miss/Mrs Anonymous


நீங்கள் பதலளிக்க எடுத்துக்கொண்ட உதாரணத்தையே உங்களுக்கு மீண்டும் என் பதிலாக அளிக்கிறேன்.

 
At 6:09 AM, Blogger ஜெயக்குமார் said...

/I have already mentioned to you that this is how DINA-MALAM operates. The letters they publish is mostly written by their own staff./

அடுத்த முறை பதிவின் ஆசிரியர் தினமலர் என்றே குறிப்பிட்டுவிடுகிறேன். போதுமா?!

 
At 6:27 AM, Blogger Gopalan Ramasubbu said...

I dunno why ppl should get angry for posting excerpts from Dinamalar.They can post whole dinakaran paper or something against ADMK or pro DMk articles in their post isn'it?am i missing something?

 
At 6:29 AM, Blogger Amar said...

Boss, I'd suggest that you dont entertain these anonymous posters.

What have they contributed? Nothing.Zilch.Nada.Zip.

 
At 6:51 AM, Blogger ஜெயக்குமார் said...

/ Boss, I'd suggest that you dont entertain these anonymous posters.

What have they contributed?/

நான் எல்ல anonymous களைப்பற்றியும் சொல்லவில்லை. குறிப்பாக ஒருவர் தன் பெயரைக்கூடக் குறிப்பிடாமல் ஒரே விசயத்தை (தினமலர்) திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார். இவருக்கு நான் பலமுறை பதில் சொல்லி பதிலி சொல்லி போரடித்தும்விட்டது.

 
At 7:13 AM, Blogger மாயவரத்தான் said...

//Varavanyan proved that the same letter appeared with two different sources in different editions of DINA-MALAM.//

good joke. Did he proved anything here?

சும்மாவாச்சும் அதிலே வந்திச்சுன்னு சொல்ல எங்களுக்கும் தெரியும். உண்மையா இருந்தா ஸ்கேன் பண்ணி போடுங்க. இல்லாட்டி லிங்க் கொடுங்க. சும்மா நீங்க சொன்னா, தட்டிவிட்டான்குஞ்சு அப்படீன்னு தான் எடுத்துக்குவோம்.

 
At 7:35 AM, Blogger ஜெயக்குமார் said...

ஆங்கிலத்தில் பிண்ணூட்டம் இடும் Anonymous முடிந்தால் cut & paste பண்ணி போட்டட்டும் அல்லது image-யாவது cut பண்ணிப்போடட்டும்.

"சொல்லுதல் யாருக்கும் " என்று ஆரம்பிக்கும் குறள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

 
At 7:48 AM, Anonymous Anonymous said...

இதில் ஜோக் என்னவென்றால் இந்த தி.மு.க. கும்பல் இவ்வளவு நாட்களாக தினமலரில் கப்ஸாவாக எழுதித்தள்ளுகிறார்கள் என்றார்கள். இன்றைக்கு அவர்களது ஒத்த ரூபா(ய்க்கும் உருப்படியில்லாத) பேப்பரில் பணி புரியும் அத்தனை பேரும் தினமலரில் இருந்து அதிக சம்பள ஆசை காட்டி இழுக்கப்பட்டவர்கள்.

 
At 12:27 PM, Anonymous Anonymous said...

/அறிவுரை கேக்குறது முக்கியமில்ல யாரு சொல்லறாங்குறது தான் காளை இந்த காலத்துல முக்கியம்.திருவள்ளுவத்திலையும் "சிற்றினம் சேராமை"ன்னு ஒரு தலைப்பு வருது ப்பா அதனால தான் சொல்றேன் .தினமலருக்கு அந்த தகுதியில்ல........ /


எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

சொல்லுவது யாரென்று முக்கியமில்லை.என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

 
At 12:34 PM, Blogger ஜெயக்குமார் said...

//
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
//

பொருத்தமான குறளுடன் விளக்கம் அளித்துள்ளீர்கள்.

இதற்கு மேலும் இதற்கு விளக்கம் வேண்டுமா வரவினையான்?

 
At 12:43 AM, Blogger கோவி.கண்ணன் said...

//அந்த கோவை வாசகர் எழுதியிருக்குற கடிதத்தோட ஒவ்வொரு வரியும் மாறாம "குலமங்கலத்தில் இருந்து சுரேஷ்" எழுதுகிறார்ன்னு //
என்னப்பா இப்படி தினமலர பிச்சி பிச்சி போடுறிங்க,

என் பங்குக்கு,

தினமலர் நடுனிலை நாளேடாம், 1ரூபாய்னு தினகரன் வச்ச ஆப்பின் வலி பொறுக்க முடியாமல், அவ்வப்போது போடும் முனகல் தான் இது. என்ன இருந்தாலும் தினமலருக்கு சாதிபாசம் கொஞ்சம் ஓவர்தாம், மாமி எப்படியும் ஜெயிச்சாதான் நாம பொழப்பு ஓட்ட முடியும்னு தினமலர் நினைக்குது.

இன்னும் 'சுவாமிகள்' பட்டம் போட்டு சுப்ரமணி கோர்டுக்கு வாய்தாவாங்க வருவதை எழுதி மகிழ்ந்து கொள்வது தான் தினமலர்.

 
At 4:41 PM, Blogger கால்கரி சிவா said...

ஜெயகுமார்,

கீழ்கண்ட கேள்வியை ஒரு திராவிட அறிவுசீவியுடன் கேட்டிருந்தேன். இதுவரைக்கும் பதிலில்லை

கீழே சொன்ன கருத்து திருக்குறளில் உள்ளது வேறு யார் இம்மாதிரி பேசியிரூக்கமுடியும்.

" ஒரு கருத்தைக் கேட்டால் , அக்கருத்தை கூறியவர் யார் என்று பார்க்கக்கூடாது. அக்கருத்து எத்தகையது என்று சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். நல்ல கருத்து என்றால் நம் மனதில் நிறுத்தவேண்டும். மற்றவைகளை தூக்கி எறியவேண்டும். அந்த மற்றக் கருத்துகள் நீ வணங்கும் இறைவன் கூறியிருந்தால் கூட"

இங்கே சொல்கிறேன் அதை. இதைக்கூறியவர், திராவிடர்களிலேயே அதிகம் படித்த பேரறிஞர் அண்ணா அவர்கள்.

 
At 5:21 PM, Anonymous Anonymous said...

Hmmm
to know abt dinamalar read this pathivu in Badri's Blog

http://thoughtsintamil.blogspot.com/2004/06/blog-post_13.html

 
At 12:27 AM, Anonymous Anonymous said...

//Anonymous said...
Hmmm
to know abt dinamalar read this pathivu in Badri's Blog

http://thoughtsintamil.blogspot.com/2004/06/blog-post_13.html
//

Anonymous - you cannot say such things. If you say that - they will come up with this answer.

// மாயவரத்தான்... said...
//Varavanyan proved that the same letter appeared with two different sources in different editions of DINA-MALAM.//

good joke. Did he proved anything here?

சும்மாவாச்சும் அதிலே வந்திச்சுன்னு சொல்ல எங்களுக்கும் தெரியும். உண்மையா இருந்தா ஸ்கேன் பண்ணி போடுங்க. இல்லாட்டி லிங்க் கொடுங்க. சும்மா நீங்க சொன்னா, தட்டிவிட்டான்குஞ்சு அப்படீன்னு தான் எடுத்துக்குவோம். //

So you have to provide solid proof - by scanning the pages!!!!

 
At 1:34 AM, Blogger ஜெயக்குமார் said...

// Hmmm
to know abt dinamalar read this pathivu in Badri's Blog//

அனானி,
மீண்டும் உங்களுக்கு இந்த குறளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

 
At 2:16 AM, Blogger Bharaniru_balraj said...

கலைஞர் சொன்னதை விட செய்தது ஏராளம்.

மூவலுர் ராமார்மிதம் பெயரில் ஏழைப் பெண்களின் திரும்ண உதவிக்கு 10000 ரூபாய்.
உழவர் சந்தை
இலவச மின்சாரம்
போலிஸ்க்கு புல் பேன்ட் கொடுத்தது
வெளி நாட்டு நிறுவனங்கள் உருவாக அனுமதியளித்தது(கூன்டாய், போர்டு, அதிக அளவில் மென் பொருள் நிறுவனங்கள்).

கலைஞரை எதிரியாகவே பார்த்துப் பழகி விட்டீர்கள். நீங்களும் வர வர வையன்னா கோவன்னா மாதிரியே புகாரி பாடுறீஙக.

\இந்த பின்னூட்டத்தை வெளியிட மாட்டீர்கள். இருந்தாலும் சொல்ல வேண்டியது கடமை/

 
At 2:17 AM, Blogger ரவி said...

எனக்கு தினமலர் ல புடிச்சது திரைமலர் தான்..அதுல தான்
கவி(வ)ர்ச்சி படம் போடுவானுங்க..

நல்ல வேளையா Bangalore ல தினமலர் வரல.தினதந்தி தான்.

எனக்கு தினமலர் ல புடிகாத விசயம், வாஜ்பாய் பிரதமரா இருந்தப்ப தினமும் அந்த கிழ மூஞ்சிய மொத பக்கத்துல போட்டது தான் அந்த பேப்பர எங்க வீட்டு பக்கம் வர உடாம பண்னேன்..

ரவி,
தாய்லாந்து...

 
At 3:09 AM, Blogger ஜெயக்குமார் said...

//எனக்கு தினமலர் ல புடிச்சது திரைமலர் தான்..அதுல தான்
கவி(வ)ர்ச்சி படம் போடுவானுங்க..//

ரவி உங்களுக்கு அதிகமான கவர்ச்சி படங்கள் மற்றும் கவர்ச்சி செய்திகள் வேண்டுமானால் தமிழ் முரசு , தினகரன் படியுங்கள் அதில்தான்

ஆண் விபச்சாரம், செல்போனில் ஆபாச வீடியோ, பெண்களுக்கு காபி குடித்தால் மூட் வருமா, ஆதிவாசிகளின் ஆபாச குறுந்தகடு விற்பனை, நட்சத்திர ஓட்டல்களிலும் பண்ணை வீடுகளிலும் ஆபாச நடனம் மற்றும் விபச்சாரம் என பல செய்திகளும் கடைசிப்பக்கத்திற்கு முந்தய பக்கத்தில் நீங்கள ஆவலுடன் எதிர்பார்க்கும் கவர்ச்சிப்படமும் இருக்கும்.

 

Post a Comment

<< Home