டாட்டாவை மிரட்டிய தயாநிதி மாறன்?!
டாட்டாவை மிரட்டினாரா தயாநிதி மாறன்?: பரபரப்பு தகவல்கள்
செட்டாப் பாக்ஸ் மூலம் வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வகைசெய்யும் டி.டி.எச். திட்டத்தை டாட்டா குழுமத்திடமிருந்து அபகரிக்க மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நிர்பந்தம் செய்து, மிரட்டல் விடுத்தது உண்மையா என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
டி.டி.எச். டி.வி. திட்டத்தை தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கக் கோரி டாட்டா குழுமத்தை நிர்பந்தம் செய்து, மிரட்டியதாக தயாநிதி மாறன் மீது மதிமுக பொதுச்செயலர் வைகோ தேர்தல் பிரசாரத்தின்போது புகார் கூறியிருந்தார். இப்புகார் உண்மைதானா என்பதை அறிந்துகொள்வதற்காக டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கு நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கேள்விப் பட்டியலை அனுப்பியிருந்தது. இதற்கு உடனடியாக டாட்டா குழுமத்திடமிருந்து பதில் வந்தது. "நீங்கள் அனுப்பியுள்ள கேள்விகளில் கடுமையான புகார்கள் இடம்பெற்றுள்ளன. இப்புகாரை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இப்புகார் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை.' என்று அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது. இப்புகாரை டாட்டா குழுமத்தினர் மறுக்காத காரணத்தால், புகார்களை அவர்கள் உறுதி செய்ததாகவே முடிவுசெய்ய வேண்டியுள்ளது.
இப்புகார்கள் குறித்து கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனிடம், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தொடர்புகொண்டு கருத்து கோரப்பட்டது.
டாட்டா டி.டி.எச். டிவி. திட்டத்தை, டாட்டா குழுமத்திடமிருந்து அபகரிக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து நேரடியாக பதில் அளிப்பதை தயாநிதி மாறன் தவிர்த்தார். மாறாக புகார் கூறிய வைகோவை இகழ்ந்து பேசினார்.
நேர்மையுடனும் நெறிமுறைகளுடனும் செயல்பட்டுவரும் டாட்டா குழும விவகாரத்தில் தயாநிதி மாறன் சிக்கிவிட்டதாக கருதப்படுவதால் இது பெரும் பிரச்சினையாக உருவாகும் என்பது நிச்சயமாகிவிட்டது.
தயாநிதி மாறனுக்கு எதிராக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பான விவரம்:
சர்வதேச டி.வி. ஜாம்பவான் ரூபர்ட் முர்தோச்சின் ஸ்டார் டி.வி.யுடன் இணைந்து, டாட்டா குழுமம் டி.டி.எச். டி.வி. திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டம் பல கோடிக்கணக்கான மதிப்புடையது. இத்திட்டத்தில் டாட்டா குழுமத்தின் பங்கு 80 சதவீதம். ரூபர்ட் மர்தோவின் பங்கு 20 சதவீதமாகும்.
இது ஒருபுறம் இருக்க, தயாநிதி மாறன் குடும்பம் டி.டி.எச். உரிமத்தை அண்மையில் பெற்றது. ஆனால் இதை நடத்துவதற்கேற்ற வல்லமை படைத்த பங்குதாரர் நிறுவனத்தை அது தேடிவந்தது. ஸ்டார் டி.வி.யைப் போன்று சன் டி.வி. நிறுவனமும் (தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் குடும்பத்துக்கு சொந்தமானது) 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்க இயலும்.
எனவே 80 சதவீதம் வல்லமை படைத்த பங்குதாரரையும் அதற்கேற்ற பணபலம் படைத்த நிறுவனத்தையும் சன்.டி.வி. நிறுவனம் தேடவேண்டிய அவசியம் நேரிட்டது.
எனவே டாட்டா குழுமம் மற்றும் ரூபர்ட் முர்தோச் இணைந்து நடத்திவந்த டி.டி.எச். டி.வி. திட்டத்தை கைக்கொள்ள தயாநிதி மாறனும் சகோதரர் கலாநிதி மாறனும் ஆர்வம் காட்டினர்.
இதுவிஷயமாக டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரடியாக விவாதிக்க அனுமதி கோரினார் கலாநிதி மாறன்.
டாட்டாஸ்டார் டி,டி,எச். திட்டத்தில் 33 சதவீத பங்கை அளிக்குமாறு ரத்தன் டாட்டாவிடம் கலாநிதி மாறன் கோரினார். அத்துடன் நிர்வாக உரிமைகளையும் அளிக்குமாறு வலியுறுத்தினார். சுருக்கமாக கூற வேண்டுமெனில் பங்குதாரராக மட்டுமின்றி ஏராளமான சலுகைகளையும் கோரினார்.
இக்கோரிக்கைகளைக் கேட்டு ரத்தன் டாட்டா அதிர்ச்சி அடைந்தார். டாட்டா குழும திட்டத்தில் பங்குதாரர் என்ற கோரிக்கைக்கே இடமில்லை என அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் அமைச்சர் தயாநிதி மாறன் தலையிடத் தொடங்கினார். 33 சதவீத பங்குதாரராக அனுமதிக்கக் கோரி ரத்தன் டாட்டாவை நிர்பந்தம் செய்யத் தொடங்கினார் தயாநிதி மாறன்.
இதேவேளையில், ரூபர்ட் முர்தோச்சையும், தயாநிதி மாறன் தொடர்புகொண்டு 33 சதவீத பங்குதாரராக அனுமதி கோரினார். ஆனால் இக்கோரிக்கையை ரூபர்ட் முர்தோச் நிராகரித்துவிட்டார்.
டாட்டா நிறுவனமும் முர்தோச்சின் ஸ்டார் நிறுவனமும் 33 சதவீத பங்குகளை சன் டி.வி.க்கு அளிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாக தயாநிதி மாறன் கூறிவந்தார். ஆனால் அவர் கூறியது பொய்யானது என்பது பின்னர் உறுதியானது.
இதற்கிடையில், தனது நிர்பந்தத்துக்குப் பணியாத டாட்டா குழுமத்தை மிரட்டத் தொடங்கினார் தயாநிதி மாறன். டாட்டா டெலிகாம் திட்டத்தை சீர்குலைத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் டாட்டா டெலிகாம் நிறுவனத்துக்கு பல அனுமதிகளை நிறுத்திவைத்ததாகவும் தெரிகிறது.
இப்புகார்கள் குறித்து சன் டி.வி.க்கு தலைமை வகிக்கும் கலாநிதி மாறனிடம் பதில் கோரி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் சார்பில் கேள்விகள் அனுப்பிவைக்கப்பட்டன.
"எங்களிடம் ஏற்கெனவே டி.டி.எச். உரிமம் உள்ளதால், நாங்கள் எதற்காக டாட்டா குழுமத்தை நிர்பந்திக்க வேண்டும்' என கலாநிதி மாறன் பதில் அனுப்பியுள்ளார். டாட்டா குழுமத்துக்கு
தயாநிதி மாறன் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் புகார்களை. டாட்டா குழுமம் மறுக்கவில்லை. எனவே இப்புகார்கள் தொடர்பாக இனி பதில் அளிக்க வேண்டியது தயாநிதி மாறன்தான்
செய்தியை தினமணி-யில் படிக்க கீழுள்ள இணையதள முகவரியை Click செய்யுங்கள்
தினமணி
நன்றி தினமணி
இது போன்ற கூற்றுகள் தயாநிதி மாறனைப்பற்றி, சரத்குமார் கூறிய குற்றச்சாட்டுகளும் உண்மை என்று நம்பவைக்கின்றன.
"நடிகர் விஜயை வைத்து தபால் தலை வெளியீட்டு விழா நடத்தியதை சரத்குமார் கட்சியில் இருந்து கொண்டே விமர்சித்தார். உலகப்புகழ் பெற்ற தமிழ் நடிகர்கள் இருக்கும் போது விஜயை வைத்து தபால்தலை வெளியிட்டது முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கமுடையது( ஸ்டாலினின் மகன் விஜயை வைத்து படம் எடுக்க முயன்று கொண்டிருப்பது அணைவருக்கும் தெரிந்தது) என்று விமர்சித்தார் (அதை சன் டிவியிலும் ஒளிபரப்பி காசு பார்த்தனர்). அப்போதே அவர் மிரட்டப்பட்டார். திமுக-விற்கும் தயாநிதிமாறனுக்கு எதிராக செயல்பட்டால் ராதிகாவின் ராடான் டிவி முடக்கப்படும் என்று மிரட்டல் விடப்பட்டதாக தெரிகிறது. குமுதமும் இத்தகைய கருத்தையே வெளியிட்டு இருந்தது"
ஏற்கனவே மாறன் காலத்தில் இருந்து தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் துவங்கப்பட்ட பல வெளிநாட்டுத்தொழிற்சாலைகளில் மாறன் குடும்பத்திற்கும் பங்கு உண்டு என்று சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் (சிலர் அத்தொழிற்சாலைகள் மாறனின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன என்றுகூட சொல்லுகிறார்கள். அதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை) இது போன்ற மிரட்டல் செய்திகள் மேலும் இந்திய தொழில்துறையில் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
14 Comments:
இந்த பின்னூட்டம் பதிவிற்காக அல்ல, என்பதை தெளிவு படுத்துகிறேன்.
ஜெயக்குமார் உங்களுக்கு சில விசயங்களை புரிந்துகொள்வதில் சிக்கல் எதாவது இருக்கிறதா? இல்லை, செல்வி.ஜெயலலிதா மன்னார்குடி வகையறாக்கள் செய்த, செய்கிற அட்டூழியங்கள், அக்கிரமங்களை வசதியாக மறந்துவிடும் "செலக்டீவ் அம்னீசியா"வா? எழுதுவதற்கு முன் கொஞ்சம் மேல் மாடியையும் பயன்படுத்துங்கள். எப்படியாவது குப்பையை எழுதியாவது பின்னூட்டம் வாங்க ஆசைன்னா தொடர்ந்து தேடி பிடித்து வெட்டி ஒட்டுங்க.
பொய்யை உரக்க சொல்வதால் உண்மை அழிந்து விடாது! செல்வி.ஜெயலலிதாவின் கடந்த 5 ஆண்டு ஆட்சியிலும் அதற்கு முன்னரும் செல்வி.ஜெயலலிதா வகையறாக்கள் செய்த அராஜகம், அதிகார வரம்பு மீறல்கள், சொத்துகுவிப்பு, ஊழல்கள், அடக்குமுறை... இவற்றை விட திரு.கருணாநிதி ஆட்சி தான் கொடுமையானதா?
குடும்ப ஆதிக்கம் பற்றி சொன்னால் ஜெயலலிதா, சசி குடும்பத்தையும் சேர்த்து பாருங்கள். லண்டனில் இருந்து கொண்டே இணையத்தில் குப்பைகளை தேடி வெட்டி ஒட்டுவது எளியது தான். தமிழகத்தில் வேதனை அனுபவிப்பது சாதாரண மக்கள் தானே! அரசியல்வாதிகளை (எல்லோரையும் தான்) அவர்களது கொள்கைகளை, திட்டங்களை, நடைமுறைகளை வைத்து விமர்சியுங்கள். ஆனால் ஒருதலை பட்சமாக இப்படி மட்டையடிக்கையில் அது உங்களை அ.தி.மு.க லண்டன் கிளை ஜெயலலிதா பேரவை செயலாளராக நினைக்க வைக்கிறது. பேனாவை சரியாக பிடியுங்கள்!
புரிந்துகொள்வீர்கள் என நம்பும் சக வலைஞன்,
Jeyakumar,
Please look into this link also.
http://www.newindpress.com/Newsitems.asp?ID=IE920060425124946&Title=Chennai&Topic=-443&?headline=Exclusive:~Is~Maran~arm-twisting~Tatas?
New Indian Express reports:
It is in response to these specific queries that the Tata spokesperson responded cryptically, but significantly with his remark: ‘‘We do not wish to make any comment’’ which is in itself a profound comment.
Dinamani reports:
நீங்கள் அனுப்பியுள்ள கேள்விகளில் கடுமையான புகார்கள் இடம்பெற்றுள்ளன. இப்புகாரை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இப்புகார் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை.' என்று அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.
I hope everyone can notice the difference in reporting.
Please dont think that I am supporting Nidhi's. I am just stating the different view of reporting.
//. லண்டனில் இருந்து கொண்டே இணையத்தில் குப்பைகளை தேடி வெட்டி ஒட்டுவது எளியது தான். தமிழகத்தில் வேதனை அனுபவிப்பது சாதாரண மக்கள் தானே!//
அட்டை பூச்சி கடிக்கும்போது வலி தெரிவதில்லை ஆனால் அது உரிஞ்சுவது நம்முடைய ரத்தம் என்பது பிறகுதான் தெரியும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞரின் குடும்ப தொழில்கள் தமிழகத்தை அப்படித்தான் உரிஞ்சும்.
ஆதாவது நமக்கு தெரியாமலேயே நம்முடைய பலவீனங்களை பயன்படுத்தி நம்மை அழிப்பது.
Hi Jayakumar
This comes as no suprise.I have extensively written about the Maran's intimidation and strong-arm tatctics used fto further
business.
Marans represent the worst form of crony capitalism
Someone needs to call their bluff very soon.
This what happens when political power come in the way of influencing business decision
Knowing the highly cultured and honourable individual person that Ratan Tata ,I am sure he will not make any fuss about this and keep doing buisness ethically .
Luckily Tata is not a Brahminical Businessman .He is a Parsi.
Otherwise Karuna would have used the caste angle to counter this accusation
And nobody can accuse Tata's to be unethical and profit greedy business house.The social responsibility and philantrophy shown by them needs no elaboration
9000 crore worth Marans-Dont behave so cheaply with India'foresmost busines house
Try to learn how to run business from them
And Jayakumar-i think you should not respond to ludicrous accusation from the anon
When the point of discussion is Maran,they talk about Mannargudi.Ridiculous.Nobody condones Saikala 's loot .It deserves as much condemnation.And also if you talk about the wealth amassed by Maran it dosent mean one is overlooking the anti-democratic misdeedds of Jaya
And there is nothing wrong in being in London and writing about Tamil Nadu.If at all it shows you have true concern for the state
How does this accusation become personal in nature?Can someone explain?This is a serious allegation-using your political power(man u under the oath of the constitution) to influence family business
Hi Jayakumar
This comes as no suprise.I have extensively written about the Maran's intimidation and strong-arm tatctics used fto further
business.
Marans represent the worst form of crony capitalism
Someone needs to call their bluff very soon.
This what happens when political power come in the way of influencing business decision
Knowing the highly cultured and honourable individual person that Ratan Tata ,I am sure he will not make any fuss about this and keep doing buisness ethically .
Luckily Tata is not a Brahminical Businessman .He is a Parsi.
Otherwise Karuna would have used the caste angle to counter this accusation
And nobody can accuse Tata's to be unethical and profit greedy business house.The social responsibility and philantrophy shown by them needs no elaboration
9000 crore worth Marans-Dont behave so cheaply with India'foresmost busines house
Try to learn how to run business from them
And Jayakumar-i think you should not respond to ludicrous accusation from the anon
When the point of discussion is Maran,they talk about Mannargudi.Ridiculous.Nobody condones Saikala 's loot .It deserves as much condemnation.And also if you talk about the wealth amassed by Maran it dosent mean one is overlooking the anti-democratic misdeedds of Jaya
And there is nothing wrong in being in London and writing about Tamil Nadu.If at all it shows you have true concern for the state
How does this accusation become personal in nature?Can someone explain?This is a serious allegation-using your political power(man u under the oath of the constitution) to influence family business
//When the point of discussion is Maran,they talk about Mannargudi.Ridiculous.Nobody condones Saikala 's loot .It deserves as much condemnation.And also if you talk about the wealth amassed by Maran it dosent mean one is overlooking the anti-democratic misdeedds of Jaya
And there is nothing wrong in being in London and writing about Tamil Nadu.If at all it shows you have true concern for the state//
Dear Prasanna,
உங்கள் பிண்ணூட்டத்தில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்கிறேன்.
சசிகலா நடராசனின் அட்டகாசங்களை அன்றைக்கு அனைவருமே எதிர்த்தனர். எனக்கு தெரிந்து யாரும் அப்போது அவர்களை ஆதரித்ததாக தெரியவில்லை. அவர்களிம் கொள்ளைகள் அணைத்தும் மிகவும் வெளிப்படையாக இருந்தன. அதற்கு தான் அடுத்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டினர். ஜெயலலிதாவையே தோற்கடித்தனர்.
"கொசுக் கடித்தால் தெரியும், தெரியாது
அட்டை ரத்தம் உரிஞ்சும்போது"
என்ற புதுக்குறள் இதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
வெளிநாட்டில் இருந்தால் தாய் நாட்டில் மேல் பாசம் வைக்கக்கூடாதா?. வெளிநாட்டில் இருந்து கொண்டு தன் தாய்நாட்டில் புரட்சி செய்த பலபேரை நான் இங்கு கூறமுடியும். அப்படி சொன்னால் "நீயும் அவர்களும் ஒன்றா?" என்று கேட்பார்கள், அதனால் அதைப்பற்றி இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
ஜெயக்குமார்,
நீங்கள் எழுதுங்கள். உங்களை மிரட்டும், அல்லது புத்திசொல்லும் நபர்கள் கண்ணைமூடிக்கொண்டு கலைஞரைத் துதிப்பவர்கள்தான். எதற்கு உங்களை எழுத வேண்டாமெனச் சொல்கிறார்கள்? உங்களுக்கு மூளையிருக்கா எனக்கேட்பவர்கள் தங்களுக்கு அது இருக்கிறதா எனப்பார்க்க வேண்டும். இப்போது நீங்கள் சொன்ன செய்தியாவது ஆதாரத்துடன் வந்த உண்மைச்செய்தி. ஆனால், அவன் அத்தனை கோடி வாங்கினான், இவன் இத்தனை கோடி வாங்கினான், அவனுக்கு இத்தனை கோடி தருவதாகப் பேரம் பேசினார்களென்று சும்மா கதையெழுதும் (அவர் கதையெழுதி தானே அரசியலுக்கே வந்தவர்) ஒரு தலைவனைத் துதிபாடுவதற்கு அவர்களுக்கு வெட்கமில்லை. விதாண்டாவாதத்தை விட்டுவிட்டு இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏதாவது சொல்ல முடிகிறதா இந்த கலைஞர் அடிபொடிகளால்? மாறாக இதைப்பற்றி எழுதக்கூடாது என்று மறைமுகமாக கருத்துச் சொல்கிறார்களாம்.
ஜெயலலிதா செய்த கொடுமைகளை யாராவது மறுத்திருக்கிறார்களா? ஜெயக்குமார் தான் மறுத்திருக்கிறாரா? ஆனால் கலைஞர் குடும்பத் தவறுகளை மறைக்க இந்த அடிபொடிகள் ஆடும் ஆட்டம்தான் என்ன? அப்புறம் என்ன புத்திமதி வேண்டிக்கிடக்கிறது? முடிந்தால் ஜெயாவைப்பற்றி நீங்கள் எழுதித் தள்ளுங்களேன்? உண்மைகளுடன் பொய்களையும் புனைந்து (கலைஞர் செய்வது போல) காவியம் படைக்கலாமே? அதையும் ஜெயக்குமார் செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பது ஏன்?
ஜெயக்குமார், நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இதுபோன்ற அடிபொடிகளுக்குப் பயந்து நீங்கள் உங்கள் முயற்சியை விடாதீர்கள். இப்படியொரு கொள்ளைக்கூட்டம் ஆட்சிக்கு வருவதிலுள்ள (குறைந்தபட்சம் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே குடும்பம் ஆட்சியிலிருப்பதில் ஜனநாயகத்துக்கு உள்ள ஆபத்தை உணரத் தெரியாதவர்கள் இவர்கள்) சிக்கல்கள் பற்றி நீங்கள் எழுதுங்கள்.
ஜெயலலிதா ஒன்றும் தங்கமான ஆட்சி நடத்தவில்லை. சர்வாதிகார ஆட்சிதான். ஆனால் இப்போதுள்ள நிலையில் (குறிப்பாக மத்தியில் கலைஞர் குடும்பம் அமைச்சர் பொறுப்பை வைத்துள்ள நிலையில்) தமிழகத்துக்கு தி.மு.க ஆட்சி சாபக்கேடாகவே முடியும். குறைந்த பட்சம் கூட்டணி ஆட்சியையாவது உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழன் தலையில் மிளகாய்தான்.
திரு மாயன் அவர்களே,
உங்கள் கருத்துக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.
சில நேரங்களில் இவர்களின் வரட்டுவாதங்களும், அருவெறுக்கத்தக்க பிண்ணூட்டங்கள் என்னைக்கோமடையச்செய்தாலும், "கடவுளே!, இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்கிறார்கள்!" என்று யேசு சொன்னவார்த்தைகளால் மனதை கட்டுபடுத்திக்கொண்டு நான் எனது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறேன்.
பாவம் இவர்கள் என்ன செய்வார்கள், கலைஞரின் சிலேடைப்பேச்சுக்களையும் , ஜால்ராக்களின் சத்தங்களையும், சன் டிவியின் "இளமை புதுமை" போன்ற புரட்சிகர நிகழ்ச்சிகளையும் பார்த்து வளர்ந்த கூட்டங்களாகவே இருக்கின்றனர்.
கலைஞரின் குடும்ப ஊடகங்கள், நம் இளைஞர்களையும், சமுதாயத்தையும் சிந்தித்துபார்க்கும், போராடும் குணமற்றவர்களாக ஆக்கிகொண்டிருக்கிறது.
யோவ், சன் வளர்ந்தா தமிழ் வளர்ந்த மாதிரி... "வட இந்திய முதலாளியிடம் இருக்கும் பணத்தை சென்னையில் முதலீடு செய்வதற்கான வியாபார தந்திரத்தை புரிந்துகொள்ளாத தமிழின துரோகியா இருக்கியே" அப்பிடீன்னு யார்னா திட்ட போறாங்க!!!
நல்ல பதிவு. இந்த செய்தியை[விஷயத்தை] புரிந்து கொள்வதில் ஜெயக்குமார் எங்கு மேல் மாடியை உபயயோகிக்கவில்லை என்று புரியவில்லை. வெளி நாட்டில் இருந்தால் செய்திகளை வெட்டி ஒட்டத்தான் வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எனக்குத் தெரிந்த பலர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே என்னிடம் செய்திகள் கேட்பதுண்டு.
"உடன்பிறப்பே, பார்ப்பனீயம் என்ற பாம்பினைப் பாலூட்டி வளர்த்த ஆரிய முதலாளிதான் டாட்டா என்பதனை அன்றே அறிந்து சொன்ன அண்ணாவின் அறிவுரையைத் தன்மானத்தமிழன் மறந்துவிட்டிருப்பான் என மனப்பால் குடிப்பவருக்கும், வீணாய்ப்போன விபீடணனுக்கும், ஆரிய சூழ்ச்சிக்கும், அநியாய ஆட்சிக்கும் வேட்டாய் வைத்து டாட்டா சொல்லும் வண்ணம், அய்யன் வள்ளுவன் அழகுபடுத்திய அம்மொழிதன்னை செம்மொழியாக்கிய சிங்கத்தமிழனை சிம்மாசனம் ஏற்றும்வரை ஊணில்லை உரக்கமில்லை ஒருநாளும் ஓய்வுமில்லை என்றெழுந்து, புறப்படு, அதோ தெரிகிறது மே 8.
கருணாநிதி".
அருண்கிரி பின்னூட்டம் வயிறு குலுங்க சிரிக்க வைக்குது..
மாறன் சகோதரர்களானாலும் சரி ஜெயாவானாலும் சரி மற்றவரை மிரட்டிக் காரியம் சாதித்தால் தவறுதான். இன்னும் டாடா அதிகாரபூர்வமாக அறிவிக்காதபோதே தயாநிதியைப் பதவி விலகக் கோரும் ஜெ. (அது நியாயமும் கூட) முன்னுதாரணமாகத் தானே பதவி விலகிக் காட்ட வேண்டியதுதானே!
இது பற்றி தரண் ஒரு நல்ல பதிவு போட்டிருக்கிறார்.
அது இங்கே http://manamay.blogspot.com/2006/04/blog-post_27.html
Mr.Jayakumar
(If Maran misuses his power then he should be punished)
Please see this also.
1. TCS - TCS collected tax refunds owed to its non-US citizen workers. A TCS employee sues for this.
http://ia.rediff.com/money/2006/feb/16tcs.htm?q=bp&file=.htm
2. VSNL - TATA - Corruption issue - propriety of VSNL (Government Property) Rs. 1,200 crores (company's reserves) diverted to an ailing group company, Tata Teleservices.
http://www.hinduonnet.com/2002/05/30/stories/2002053001971800.htm
Post a Comment
<< Home