என்ன செய்தார் கருணாநிதி?!
கலைஞர் அதைச்செய்தார், இதைச்செய்தார் என உழவர் சந்தைத்திட்டத்தையும், இலவச மின்சாரத்திட்டம், சமத்துவபுரத்திட்டத்தையும் ஒரு வாசகர் இங்கே கூறியிருந்தார்.
உண்மையிலேயே உழவர் சந்தைத் திட்டத்தால் பயனடைந்தது திமுக-வினர்தான். "காசு கொடுத்தால் கடை இல்லாவிட்டல் தடை" என்ற வகையில்தான் அவர்களின் இந்த திட்டம் அமைந்திருந்தது. அவர்களுக்கு உண்மையிலேயே உழவர்கள் மேல் அக்கரை இருந்திருந்தால் அவர்களின் உழைப்பால் விளைந்தவற்றை அரசே நியாய விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு வினியோகம் செய்திருக்கவேண்டும். அதைவிட்டு அவர்களை இங்கும் அங்கும் அலையவிட்டிருக்கக்கூடாது. அதோடுமட்டுமல்லாமல் விவசாயத்திற்கும், விளைச்சலுக்கும் வழிகாட்டிவிட்டு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கவேண்டும். விவசாயமே இல்லை, சந்தை மட்டும் இருந்து என்ன பன்ன.
அடுத்தது இலவச மின்சாரத்திட்டம்.
இதனால் யார் பயனடைந்தார்கள் என்றால், பல பண்ணையார்களும், நிலசுவான்தார்களும் தான். ஏழை விவசாயிக்கு பம்ப்பு-செட்டு வைக்க எங்கையா காசு இருக்கு?. அதை வைச்சிருக்கவங்கக்கிட்ட மணிக்கு இவ்வளவுன்னு காசு கொடுத்து தண்ணி பாய்ச்சும் நிலையில்தான் அவன் இருக்கான்.
அடுத்தது சமத்துவபுறத்திட்டம்
சமத்துவபுரம் என்பது திமுக காரன் கமிஷன் வாங்கிக்கொண்டு, இந்த சாதிக்காரனுக்கு நாலு வீடு, அந்த சாதிக்காரனுக்கு நாலு வீடுன்னு பிரிச்சு வைச்சு வீடு குடுப்பதில்லை. ஏற்கனவே உயர்ந்த சாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு தாழத்தப்பட்டவன்
குடியேறினால், மற்றசாதிக்காரர்களின் மனதில் ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லாமல் இருந்தால் அதுதானையா சமத்துவம். அதைவிட்டு நாங்கள் தாழ்த்தப்பட்டமக்களை கோவிலுக்குள் அனுமதித்தோம், சமபந்தி விருந்து நடத்தினோம், அந்த சலுகை செய்தோம், இந்த சலுகை செய்தோம் என்பதேல்லாம் "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல" என்பது போல இவர்கள் இந்த சாதிக்காரர்கள், அவர்கள் அந்த சாதிக்காரர்கள் என்று அடையாளம் காட்டுவதாகும்.
உரிமைகளை நீங்கள் கொடுத்து அவர்கள் வாங்கக்கூடாது, அவர்கள் தானாக எடுத்துக்கொள்ளும் போது உங்கள் மனதில் ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லாமல் இருந்தால் அதுதானைய்யா நீங்கள் காட்டும் சமத்துவம்.
தயவு செய்து அந்த கட்சிகாரர்கள் செய்தார்களா? இந்த கட்சிக்காரர்கள் செய்தார்களா? என்று கேட்கவேண்டும். இங்கே நான் சமத்துவம் பற்றி குறிப்பிட்டது அனைத்து கட்சிக்காரர்களுக்கும்தான்.
என்னுடைய அடுத்த பதிப்பில் சம்த்துவம் பற்றி விரிவாக எழுதுகிறேன். அது கட்சிகளோ, அல்லது வேறு எந்த அரசியல் காரணிகளோ சம்பந்தப்படாததாக இருக்கும்.
29 Comments:
ஜெயக்குமார், இங்கே எல்லாவற்றிலும் நான் உடன்படுகிறேன். ஆனால் உழவர் சந்தையில் மட்டும் அப்படியில்லை. உண்மையிலேயே உழவர் சந்தை திட்டம் நல்லதொரு திட்டம். எனக்கு தெரிந்த கிராமத்து அடிமட்ட விவசாயிகள் அதனால் பலன் பெற்றதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்களிடன் எடுத்துச் சென்றதால் மக்களுக்கும் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைத்தன. ஒரேயொரு குறை.. உழவர் சந்தையில் உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் கடைகளுக்கான இடங்களைப் பெறுவதில் தி.மு.க.வினரின் பங்கு அமோகம். இது எந்தக் கட்சியாக இருந்தாலும் செய்யும் ஒன்று தான் என்று எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் (காலங்களில்) கொண்டு வந்த உருப்படியான ஒரே திட்டம் உழவர் சந்தை திட்டம் தான் என்றால் அது மிகையல்ல.
உங்களுக்கு ஆதரவாக இதோ தானைத்தலிவன் மாயவரத்தான் வந்து கொண்டிருக்கிறார்.
உங்களுக்கு திட்டங்களைப் பற்றிய சரியான பார்வையோ, தமிழக மக்களைப் பற்றியோ எதுவும் சுத்தமாக தெரியவில்லை...
உழவர் சந்தை எப்படி செயல்படுத்தப்பட்டது என்று கூட தெரியாமல் அது பற்றி கருத்து தெரிவிக்க வந்தது செம காமெடி....
உழவர் சந்தை ஒவ்வொன்றிலும் ஒரு அரசு அலுவலர் தான் விலை நிர்ணயம் செய்வார்... உழவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை ஒன்றைக் காட்டி உழவர் சந்தைகளில் அவர்கள் கடை போட்டுக் கொள்ளலாம்... பல்லாவரம் உழவர் சந்தையில் நான் வாங்கி இருக்கிறேன்... மிகவும் சீப்பான ரேட்டில் நல்ல காய்கறிகள் வாங்க முடியும்.... காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த அம்மா அதை நிறுத்தி விட்டார்கள்... ஆனால் தமிழகத்தைப் பார்த்து பஞ்சாப் அரசு உழவர் சந்தைகளை அமைத்து சக்கை போடு போடுகிறது....
சமத்துவபுரம் ஒரு வெட்டித் திட்டமே அதில் சந்தேகம் இல்லை....
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தேவை தான்... அதைப் பணக்கார பண்ணையார்கள் மட்டுமே பயன்படுத்தினர் என்பது கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல... 1 ஏக்கர், 2 ஏக்கர் வைத்திருக்கும் சாதாரண விவசாயிக்கு கூட பம்புசெட்டு இருக்கும் என்பது அன்னிய நாட்டில் இருப்பதாலோ என்னவோ ஜெயக்குமாருக்கு தெரியாது போலிருக்கிறது....
சும்மா பொய்யும், புரட்டும் சொல்வதை விட்டு விட்டு உருப்படியாக ஏதாவது எழுதப் பாருங்களேன்.....
மாயவரத்தான் அவர்களே,
உழவர்சந்தை திட்டம் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பயன்தறத்தக்கது என்று ஒத்துக்கொண்டாலும், விவசாயத்தை பெருக்க வழிவகை செய்யாமல், நீராதாரங்களை பெருக்காமல், காவரிப்பிரச்சனைக்கு வழிகானாமல்(மத்தியில் இவர்கள் தான் பலகாலம் ஆட்சியில் இருந்தனர்). உழவர்சந்தைகளை அமைப்பது, மின்சாரமே இல்லாத வீடுகளுக்கு கலைஞர் கலர் டிவி கொடுப்போம் என்பது போன்றதாகும்.
JK கருத்துளின் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஜெயக்குமார்(JK) மாயவரத்தான் கூட்டணி ஆரம்புச்சுடுய்யா.
JK , கலைஞர் எதிர்ப்ப கொஞ்சம் விட்டுட்டு வேற விசயங்கள் எழுதலாமே. படிக்கிற மக்களுக்குப் போர் அடிக்காது?
எல்லாஞ்சரி தான் சார். இவ்வளவையும் எந்தக் காலத்திலே செய்யுறது, அதுக்கு அப்புறம் எப்போ திட்டத்தை கொண்டு வர்றது. அதுக்குள்ளே அடுத்த எலெக்ஷன் வந்து மக்கள் ஆப்படிச்சிடுவாங்களே. சர்க்கரை இல்லாத ஊரிலே இலுப்பைப்பூ சர்க்கரையாம். அதே மாதிரி ஒண்ணும் இல்லாததுக்கு சாதனைன்னு நெஜம்மாவே சொல்லிக்கிறதுக்கு இதுவாச்சும் இருக்குதே! என்ன நான் சொல்றது?!
ஜெயக்குமார் நீங்கள் அ.தி.மு.க அல்லது வைகோ வின் விசுவாசியாக இருங்க தவறில்லை ஆனால் உழவர் சந்தை திட்டத்தை குறைச் சொல்லாதீர் எல்லா மக்களாலும் வரவேற்கப்பட்ட திட்டம் அது.கிராமத்திலிருந்து பார்த்தவன், என் சொந்த பந்தங்கள் (எல்லோரும் அ.தி.மு.க பக்கம்) சிறு குறு விவசாயிகள் இடைத்தரகர்கள் முழியமாக தக்காளி கிலோ எப்போதும் ரூபாய் 2 க்கு விற்றவர்கள் மக்களுக்கு நேரடியாக விற்க லாபம் கண்டார்கள் அதே போல் நுகர்வோர்களும் 2 ரூபாய்க்கு வாங்கி 6 ரூபாய்க்கு விற்ற இடைத்தரகர்களிடமிருந்து தப்பிட்த்து ரூபாய் 4 க்கு வாங்கி மகிழ்ந்தார்கள் எப்படிப்பார்த்தலும் உழவர் சந்தை திட்டம் இருப்பக்கமும் பலன் தந்த திட்டம் அதே போல்தான் மினி பஸ்ஸும் மக்களின் அமோக ஆதரவால்தான் அம்மாவால் அதை நிறுத்த முடியவில்லை..அடுத்து இலவச மின்சாரம் எல்லோருக்கும் பயனளிக்கும் திட்டம் யார் சொன்னார்கள் குறு சிறு விவசாய்களிடம் இன்றைக்கு பம்பு இல்லை என்று..வேண்டுமானால் அத்திட்டத்தை மாற்றலாம் குறு சிறு விவசாயிகளுக்கு இலவசம் பண்ணையார்களுக்கு இலவசமில்லை என்று..சமத்துவபுரம் அது கட்சி ஆட்களுக்கு...
J.J.பற்றியும் பதிவு போடவும்!!??
நான் வக்காலத்து வாங்குறதுக்காகச் சொல்லலை....
நீங்க ஏதாச்சும் கிராமத்துப் பக்கம் போயிருக்கீங்களான்னே புரியலை. போன திமுக ஆட்சியில அதிமுக கோட்டையான தென்மாவட்டங்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றவை அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மற்றும் மினி பஸ் திட்டம். எங்க குலதெய்வம் இருக்குற புலியூரானுக்குக் கவர்மெண்டு பஸ்ஸே எப்பயாச்சும்தான் வரும். ஆனா இப்ப மணிக்கொரு மினி பஸ் வருது. என் நண்பன் ஊரில் ஒரு கண்டக்டருக்கு அந்த ஊரிலேயே பெண் எடுத்துவிட்டார்கள்.
பஸ்ஸே போகாத கிராமங்களில் தெருவுக்குத் தெரு சிமெண்டு போட்டதை எல்லாம் நிஜமாவே மறந்துட்டீங்களா, அல்லது நான் பார்த்த கிராமங்களில் மட்டும் இருக்குதா?
இந்த மாதிரி நிஜமாவே நல்ல திட்டங்களையும் அரசியல் ரீதியா விளக்க ஆரம்பிச்சா எந்த ஆட்சியுமே... நீங்க ஆதரவு தெரிவிக்காத (வேற ஏதோ பதிவுல இந்தக் கேள்விய வேற நீங்க கேட்டிருந்தீங்க!) அதிமுக ஆட்சி கூட தப்பாதுங்கோவ்...
எல்லாத்தையும் நானே சொல்லணுமான்னு கேக்காம ரெண்டு பக்கத்து நியாய அநியாயங்களையும் சொல்லுங்க, நாங்க வரவேற்கிறோம்.
ஆஹா...நம்மையும் தானைத்தலைவனாக ஏற்றுக் கொள்ள ஒரு விசுவாசமிக்க தொண்டர் இருக்கிறாரே. ஜெயக்குமார், நீங்கள் உழவர் சந்தை திட்டத்தை நல்ல திட்டம் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் அதனை எதிர்த்து எனது உடன்பிறவா தொண்டர் பால்ராஜ் தீக்குளிப்பார் (தீக்குளிக்க வைப்போம்) என்று அறிவித்துக் கொள்கிறேன்.
அடப்பாவிகளா!,
கருணாநிதி இவ்வளவு பண்ணியும் போன தேர்தல்ல அவரை நீங்கள் தோக்கடிசிட்டீங்களா?.
பாவம் கலைஞர்!. நல்ல விசயங்கள் பண்ணாலும், செய்தாலும் யாருக்குப் பிடிக்குது?. வாக்காளப்பெருமக்களே!, வாங்கித்திண்ணிப்பயமக்களே என்று கலைஞர் புலம்பவேண்டியதுதான்.
இதை மட்டும் பாத்துத்தான் ஓட்டுப் போடுவோமின்னா காமராஜர் ஏய்யா தோக்குறாரு?
வாங்கித் தின்னிப்பய மக்களா நம்மாட்களை மாத்தியும் வச்சிருக்கம்ல???
தேர்தல்ங்கறது பல கணக்குகளை வச்சு வெற்றி தோல்விகளை நிர்ணயிக்குது. இப்பப் பேச்சு, என்ன செஞ்சாரு கலைஞருங்கறதுதானே... நீங்க ஒத்துக்கறீங்களா அல்லது கருத்தை விட்டுத் திசை மாறுறீங்களான்னு புரியலை.
//வாங்கித் தின்னிப்பய மக்களா நம்மாட்களை மாத்தியும் வச்சிருக்கம்ல???//
யாரு?
நமக்குள் இருக்கும் மெல்லிய சாதி, மத, இன, மொழி உணர்வுகளை எரியவிட்டு அதில் குளிர்காய்ந்தவர்கள் யார்?
அவர்களால் நமக்கு கிடைத்ததை விட இழந்தது எவ்வளவு என்பதை நினைத்துப்பார்த்தால் இப்படியெல்லம் அவர்களுக்கு வக்காலத்து வாங்கமாட்டீர்கள்.
Jayakumar,
I have been reading your view/comments starting from the one you wrote on Cheran's TT in Thinnai. I could agree with most of your comments in the blogs. However, I would say that the "Uzhavar Santhai" scheme was in fact welcomed by the farmers in general and benifitted them too. I say this as I have seen this in the villages nearby and heard from the people too.
Wish you continue your writing without taking sides.
-SV
என்ன செய்தார் அம்மா? னு ஒரு பதிவு போடுங்களேன் ஜெயக்குமார்
Dear SV,
பலருடைய கருத்துக்கள் இதில் ஒத்துப்போவதால் நான் "உழவர் சந்தை" பற்றிய என்னுடைய விமர்சனத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
// என்ன செய்தார் அம்மா? னு ஒரு பதிவு போடுங்களேன் ஜெயக்குமார்//
சீக்கிரம் எதிர்பார்க்கலாம்.
முடிந்தவரை சப்பைகட்டு கட்டுவது, எதிர்ப்பு ரொம்ப அதிகமாய் இருந்தால், (அடிக்கும் ஜால்ரா ரொம்ப அப்பட்டமாய் தெரிஞ்சுடுமேன்னு) வாபஸ் வாங்குவது--- ஜெயகுமார், ஜெக்கு சரியான தொண்டன் தான்!!
Jokes apart, உங்கள் பின்வாங்கலை பாராட்டுகிறேன்.
திரு.ஜெயக்குமார் அவர்களே,
நான் விவசாய குடிம்பத்தில் இருந்து தான் வந்து இருக்கிறேன், நீங்கள் உழவர் சந்தை திட்டத்தை பற்றி கூறிய கருத்தை வாபஸ் வாங்கி கொண்டதால் அது பற்றி மேலும் பேச விருப்பம் இல்லை,
சில திட்டங்கள் கட்சிகாக உழைத்த கழக கண்மனிகளூக்காவே அறிவிப்பது உண்டு அதில் ஒன்றுதான் இந்த சமத்துவபுரம்.இதில் சந்தேகமே இல்லை ....
எங்கள் ஊர் திருவாரூர் அருகில் இருக்கும் குடவாசல் அங்கு சமத்துவ புரம் ஒன்றை ஆரம்பித்தார்கள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் கூலி தொழிலாலி ஒருவருக்கு அதில் ஒரு வீடு ஒதுக்கபட்டவுடன் அவர் அடைந்த மகிழ்சியை நேரில் பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன்
அவர் இருந்து கொண்டு இருப்பதோ கீற்று வீடு கரண்ட் கிடையாது, ஆனால் கொடுக்க போகும் வீட்டில் எல்லாம் இருக்கும் என்றவுடன் மிகவும் மகிழ்சி அடைந்தார், எல்லாம் முடியும் தருவாயில் ஆட்சி மாறியதால் இன்று வரை அது திறக்க படாமலேயே ஆடும் மாடும் மழைக்கு ஒதுங்கும் இடமாகி விட்டது. அந்த கூலியின் கணவும் நினைவாக வில்லை. சமத்துவபுரம் மூலமாக தி.மு.க ஆட்கள் பயன் அடையவில்லை என்று நான் ஒரு போதும் சொல்ல வில்லை, நெல்லுக்கு பாய்ந்தது புல்லுக்கும் என்பது போல் ஏழையும் பயன் அடைந்தனர்.அதனால் தி.மு.க ஆரம்பித்த திட்டம் என்பதாலேயே முடியும் தருவாயில் இருந்த சமத்துவபுரத்தை திறக்காமலே வைத்து இருப்பது என்னவென்று சொல்வது????
பிறகு இலவச மின்சாரம்...
நீங்கள் தயவு செய்து நீங்கள் பார்த்த மிட்டா மிராசுகளை மட்டும் மனதில் வைத்து பேசுகிறீர்கள், நான் ஒத்து கொள்கிறேன் அரசு அறிவிக்கும் ஒரு திட்டத்தை சிலர் தவறாக பயன் படுத்துவதால் ஒட்டி மொத்தமாக அந்த திட்டத்தை குற்றம் சொல்லி விட முடியாது. எனக்கு தெரிந்து மோட்டார் கரண்ட் பில் கட்ட முடியாமல் என் சொந்தா காரர்களே கஷ்ட பட்டதை நேரில் பார்த்து இருக்கிறேன். எங்கள் ஊரில் நிறைய சிறு விவசாயிகள் பம்பு செட் வைத்து இருக்கிறார்கள்.
சத்தியமாக அவர்களுக்கு இதைவிட சிறந்த பயன் தரும்திட்டம் இல்லை.
அன்புடன்
சரவணன்.இரா
"ஜெயகுமார், ஜெக்கு சரியான தொண்டன் தான்!!"//
-- அப்படியா கிருஷ்ணா, அடடா எனக்கு அது தெரியாமல் நான் வேறு ஒரு பதிவில் சரியாக ஒரு பின்னூட்டம் இட்டு விட்டேனே!
திரு மாயவரத்தான் அவர்களுக்கு,
//ஆஹா...நம்மையும் தானைத்தலைவனாக ஏற்றுக் கொள்ள ஒரு விசுவாசமிக்க தொண்டர் இருக்கிறாரே. ஜெயக்குமார், நீங்கள் உழவர் சந்தை திட்டத்தை நல்ல திட்டம் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் அதனை எதிர்த்து எனது உடன்பிறவா தொண்டர் பால்ராஜ் தீக்குளிப்பார் (தீக்குளிக்க வைப்போம்) என்று அறிவித்துக் கொள்கிறேன். //
பாவிகளா ஒரு பேச்சுக்கு தலிவானு கூப்டா தீக்குளிக்கச் சொல்றியேளே, பாவிமக்கா உம்ம திசைக்கு ஒரு கும்பிடு. நல்ல வேளை இந்த செயக்குமாரு தம்பி நம்மள காப்பாத்திடுச்சி.
////விவசாயத்தை பெருக்க வழிவகை செய்யாமல், நீராதாரங்களை பெருக்காமல், காவரிப்பிரச்சனைக்கு வழிகானாமல்(மத்தியில் இவர்கள் தான் பலகாலம் ஆட்சியில் இருந்தனர்). உழவர்சந்தைகளை அமைப்பது, மின்சாரமே இல்லாத வீடுகளுக்கு கலைஞர் கலர் டிவி கொடுப்போம் என்பது போன்றதாகும்.///
ஜெயக்குமார் நீங்கள் படித்தவர்.... கலைஞர் மீது உள்ள வெறுப்பால் உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்ல வேண்டாம்.... 1996 - 2001 காலக்கட்டத்துல் 5 ஆண்டும் காவிரியில் இருந்து நடுவர்மன்றம் நிர்ணயித்த 205 டி.எம்.சி.யை விட அதிகமாகத்தான் திமுக ஆட்சி பெற்றிருக்கிறது.....
ஆனால் 2001-2006 ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஒரு முறை கூட 205 டி.எம்.சி. நீர் பெற்றதில்லை?
என்ன காரணம்? அணுகுமுறை தான்....
சும்மா ஜெ.க்கு ஜால்ரா அடிப்பதை விட்டு விட்டு தமிழ்நாடு அரசாங்க வெப்சைட்டை கொஞ்சம் Browse செய்துப் பாருங்கள்.... நிறையத் தெரிந்து கொள்ளலாம்....
//ஆனால் 2001-2006 ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஒரு முறை கூட 205 டி.எம்.சி. நீர் பெற்றதில்லை?//
இந்த காலகட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் யார்?
காவிரியில் தண்ணீர் வந்தால், அது அதிமுக அரசுக்கு சாதகமாக அமையும் என்று அதற்கு மறைமுகமாக எதிர்ப்புத்தெரிவித்தவர்கள் தான் திமுக அமைச்சர்கள்.
மத்திய அரசு நிவாரணநிதிகளிலும், அவர்கள் அப்படித்தான் விளையாடினார்கள்.
/*
இந்த காலகட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் யார்?
காவிரியில் தண்ணீர் வந்தால், அது அதிமுக அரசுக்கு சாதகமாக அமையும் என்று அதற்கு மறைமுகமாக எதிர்ப்புத்தெரிவித்தவர்கள் தான் திமுக அமைச்சர்கள்.
மத்திய அரசு நிவாரணநிதிகளிலும், அவர்கள் அப்படித்தான் விளையாடினார்கள்.
*/
ஜெயக்குமார் - "ஜெயா" குமார்
///இந்த காலகட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் யார்?///
வெத்து வாதம் செய்வதில் உங்களுக்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை....
1998-99 ஆண்டுகளில் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்ற பா.ஜ.க. அரசு இருந்தபோதும் கூட திமுக சரியான அளவு தண்ணீரைப் பெறத் தவறியதில்லை....
மேலும் 99ஆம் ஆண்டு காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் திமுக அரசு தூர் வாரி தயாராக வைத்திருந்ததே திமுகவின் தொலைநோக்குப் பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டு....
//மேலும் 99ஆம் ஆண்டு காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் திமுக அரசு தூர் வாரி தயாராக வைத்திருந்ததே திமுகவின் தொலைநோக்குப் பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.... //
இப்ப என்ன சொல்றீக?
நான் கேட்டது திமுக ஏன் செய்யவில்லை என்று. அதிமுக செய்ததா இல்லையே என்றல்ல.
திமுக ஆட்சியில் இருந்த போது கிஞ்சித்து பெறவேண்டும் என்று நினைத்தது. அதிமுக சட்டப்பூர்வமாக பெற நினைத்தது. இதில் எது தொலை நோக்குப்பார்வை என்று நீங்கள் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.
//அதிமுக சட்டப்பூர்வமாக பெற நினைத்தது. //
சட்டபூர்வமாக என்றாலே தாமதப்படுத்துவதுதான். நமது நீதிமன்றங்கள், ஊழல் புகாருக்குக் கொடுக்கும் முக்கியத்தை பொது நல வழக்குகளுக்கு தருவதில்லை. அ தி மு க தலைமை முதலில் சட்டத்தை மதிக்கட்டும். குறைந்தபட்சம் தன் மீதான் வழக்குகளுக்காகவாவது நீதிமன்றத்திற்கு வரட்ட்டும். கிடப்பில் போடப்பட்ட மாணவிகள் வழக்கு ஞாபகம் இருக்கிறதா.
தெய்வம் நின்று கொல்லும்.
////அதிமுக சட்டப்பூர்வமாக பெற நினைத்தது.///
மீண்டும் மீண்டும் தமிழகப் பிரச்சினைகளில் உங்களுக்கு இருக்கும் அறியாமைகளை தெளிவாக காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.... 205 டி.எம்.சி.க்கு குறைவாக தண்ணீரை கர்னாடகம் கொடுத்தால் உடனே நடுவர் மன்றத்திடம் தான் முறையிட வேண்டும்....
அதைவிட்டு இந்த அம்மா கவுரவம் பார்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றபோது உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் கொட்டி நடுவர் மன்றத்துக்கு போகாமல் எங்கள் உயிரை ஏன் வாங்குகிறாய் என்றது....
கர்நாடகா தமிழ்நாட்டைப் பார்த்து கைகொட்டி சிரித்தது தான் மிச்சம்....
ஜெ.வை பெரிய புத்திசாலி, நிர்வாகி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்ன?
Post a Comment
<< Home