$user_name="Jeyakumar";

Thursday, April 27, 2006

பிரதமர் தலையிட ரத்தன் டாடா பகிரங்க கடிதம் !


புதுடில்லி : "தொலைத் தொடர்பு துறை நடந்து கொள்ளும் முறையானது எதிர்கால நாட்டு வளர்ச்சிக்கே குந்தகமாகும்' என்று டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஏற்கனவே கடந்த 3ம் தேதி தான் எழுதிய கடிதத்திற்கு "டாட்' என்னும் தொலைத் தொடர்பு அமைச்சகம் பதிலளிக்காததால், இப்பிரச்னையில் தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

டாடா குழுமம் சார்பில் டாடா டெலி சர்வீசஸ் தொலைத் தொடர்பு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்பு சேவை அளிப்பதில் ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., என்ற இரண்டு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் டாடா டெலி சர்வீசஸ் சி.டி.எம்.ஏ., என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. பி.எஸ்.என்.எல்., தவிர பாரதி, ஹட்ச், ரிலையன்ஸ் என்று பல தனியார் அமைப்புகளும் போட்டி போட்டு பலவசதிகள் நிறைந்த மொபைல் போன் சர்வீஸ்களை தருகின்றன. இதில் "டிராய்' என்னும் ஒழுங்குமுறை அமைப்பு இந்த சர்வீஸ் வளர்ச்சிக்காக "தேசிய அலைவரிசைக் கொள்கையை' (ஸ்பெக்ட்ரம் பாலிசி) அறிவித்தது. இதில் இருந்தே குழப்பம் அதிகரித்தது. இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க "அமைச்சர்கள் குழு ஆலோசனை' பரிசீலனைக்கு விடப்பட்டிருக்கிறது. ஆனால், " தகவல் தொடர்பு துறை செயல்பாடு சரியல்ல' என்று ரத்தன் டாடா புகார் கூறியிருக்கிறார்.

தனது சேவையில் கூடுதல் வசதிகளை அளிக்க டாடா இண்டிகாம் முடிவு செய்துள்ளது. இதற்காக கூடுதல் அலைவரிசை கேட்டு தொலைத் தொடர்பு துறைக்கு இந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், இந்த அனுமதி வழங்குவதில் தொலைத் தொடர்பு துறை தயக்கம் காட்டி வருகிறது. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தொலைத் தொடர்பு துறை வருகிறது. இதற்கு அமைச்சராக இருப்பவர் தயாநிதி மாறன். இப்பிரச்னை தொடர்பாக 2005ம் ஆண்டு மே மாதம் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு டாடா குழும சேர்மன் ரத்தன் டாடா ஒரு கடிதம் எழுதினார். இதற்கு பதில் இல்லை. இதையடுத்து தொலைத் தொடர்பு துறை செயலர் ஜெ.எஸ்.சர்மாவுக்கு கடந்த 3ம் தேதி ஒரு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து டாடா குழும சேர்மன் ரத்தன் டாடா நேரிடையாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே தொலைத் தொடர்பு துறை செயலர் ஜெ.எஸ்.சர்மாவுக்கு அனுப்பிய கடிதம் மற்றும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அனுப்பிய கடிதம் ஆகியவற்றையும் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்துடன் அவர் இணைத்து அனுப்பியுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ரத்தன் டாடா கூறியிருப்பதாவது:

தொலைத் தொடர்பு சேவைக்கான கூடுதல் அலைவரிசை அரிதான வளமாக கருதப்படுகிறது. இதற்கு விலையை தான் குறிப்பிட வேண்டுமே தவிர ஏலத்துக்கு விடக் கூடாது. கூடுதல் அலைவரிசையை உரிமத்தில் சலுகை தர அத்துறை முன்வரும் போது, நாங்கள் ஆயிரத்து 500 கோடி ரூபாய் தர முன் வந்துள்ளோம்.

இந்த அலைவரிசை பிரச்னை குறித்து ஆராய மத்திய அமைச்சர்கள் குழுவை அரசு அமைத்துள்ளது. மேலும், இது தொடர்பாக" டிராய்' அமைப்பு தெரிவித்த ஆலோசனைகள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன. ஆனால், இதை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் மார்ச் 29ம் தேதி தொலைத் தொடர்பு துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிய தொழில்நுட்பத்தை புறக்கணிக்கும் அளவுக்கு அக்கறை காட்டப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தொலைத் தொடர்பு துறை அவசரம் காட்டியது ஏன்?

தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் அழைத்து பேசி அதன்பிறகே தொலைத் தொடர்பு துறை ஒரு முடிவுக்கு வந்து இருக்க வேண்டும். கூடுதல் அலைவரிசை ஒதுக்கும் விஷயத்தில் இந்த நடைமுறையை அது பின்பற்றி இருக்க வேண்டும். மேலும், கட்டண உயர்வு வாடிக்கையாளர்கள் தலையில் தான் போய் விடியும். வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணம், செலவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதை விட , சந்தையில் நிலவும் போட்டியின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறது. அலைவரிசை கட்டணத்தால் டெலிபோன் மற்றும் மொபைல் போன் கட்டணங்கள் தான் உயரும்.

கூடுதல் அலைவரிசை ஒதுக்கும் விஷயத்தில் தொலை தொடர்புத் துறையின் அணுகுமுறை ஜி.எஸ்.எம்., பிரதமர் தலையிட ரத்தன் டாடா பகிரங்க கடிதம்

தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஒரு விதமாகவும், சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு வேறு விதமாகவும் உள்ளது. இதை உதாரணமாகக் கூறினால், சாதாரண வேகத்தில் செல்லும் விமானம் மாதிரி அதிவேக ஜெட் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டால், அதனால் எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்று யோசியுங்கள். அதிவேக விமானங்களை குறைந்த உயரத்தில், குறைந்த வேகத்தில் கூடுதல் எரிபொருள் செலவாகும் நடைமுறையில் தான் இயக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? இது போல தான் தொலைத் தொடர்பு துறையின் உத்தரவும் உள்ளது.

நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வரும் நிறுவனங்களின் கோரிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் ஊக்கப்படுத்த வேண்டும். நான் ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பங்களுக்கு எதிரானவன் அல்ல. எனது கவலை எல்லாம் புதிய தொழில்நுட்பத்துக்கு இந்தியா தடை விதிக்கக் கூடாது என்பது தான். ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்தை காப்பாற்றுவதற்காக புதிய தொழில்நுட்பத்தை அடியோடு புறக்கணித்து விடக்கூடாது என்பதே எனது கருத்து.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுக்கு நேரடி ஒளிபரப்பு திட்டத்தில் ( டி.டி.எச்., நடைமுறை) டாடா நிறுவனத்தை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டினார் என்ற கருத்து பரவலாகப் பேசப்படும் விஷயம். டாடா நிறுவனம் என்பது பிரிட்டிஷார் காலம் முதல் நேர்மைக்கும் தொழில் தர்மத்திற்கும் பெருமை பெற்றவர்கள். பழைய கம்ப்யூட்டர் போதும், புதிய தொழில் நுட்பக் கம்ப்யூட்டர் இல்லாமல் புரட்சி செய்வதாக அறிவிப்பு செய்வது போல தகவல் தொடர்புத் துறையின் உத்தரவு இருக்கிறது என்பதும் டாடா கருத்தாகும். இந்த நிலையில் தயாநிதி மாறன் தலைமையேற்றுள்ள அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட துறை குறித்து டாடா எழுப்பிய கேள்விகள் எளிதில் ஓயாது.

அமைச்சகங்கள் மீதான குறைகள், தவறுகள் ஆகியவற்றை களைய வேண்டியது பிரதமரின் பொறுப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சம். இதில் பிரதமரே நேரடியாகத் தலையிட டாடா வற்புறுத்தியிருப்பது டில்லியில் முக்கியமாக பேசப்படும் செய்தியாகும்.

நன்றி : தினமலர்.


26 Comments:

At 3:56 PM, Blogger மாயவரத்தான் said...

ரத்தன் டாடா எத்தனை கோடி வாங்கினாருன்னு நாளைக்கே 'நச்சு' தினகரனில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போதாக்குறைக்கு டாடாவின் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரைப் பற்றியும் விலாவரியாக குடிகாரர்கள், பெண்பித்தர்கள் (அதை யாரு சொல்றதுன்னு விவஸ்தை இல்லாம போய்டிச்சு!) அப்படீன்னு எழுதினாலும் எழுதும் அந்த ஜென்மங்கள்.

 
At 4:04 PM, Blogger ஜெயக்குமார் said...

மென்பொருள் தாயாரிப்புத்துறையில் நாம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும். தொலைத்தொடர்புத்துறையில் அமெரிக்க, ஜரோப்பிய மற்றும் சில கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் நாம் பின்தங்கிய நிலையில்தான் உள்ளோம்.

இன்று உலகில் பல நாடுகளில் voip தொழில்நுட்பத்தை பயன் படுத்தி தங்கள் நாட்டின் பல பகுதிக்களில் switch-களை நிறுவி சர்வதேச அழைப்புகளை இணையம் மூலம் வாங்கி உள்ளூர் அமைப்புகளாக மாற்றி சர்வதேச அழைப்புகளை எளிமைப்படுத்தியுள்ளனர்.

ஆனால் நமது நாட்டில் தொலைத்தொடர்புத்துறையில் BSNL-லின் ஆதிக்கத்தாலும் அதிகாரத்தாலும் அத்தகைய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆங்காங்கே சிலர் BSNL-லுக்கு தெரியாமல் இதை இதை நடைமுறைபடுத்து சம்பாத்தித்தாலும் அது இவர்களுக்கு தெரியவரும் போது கடும் நடவெடிக்கைகளுக்கு உள்ளாகிரார்கள்.

BSNL-லே இதைச்செய்தால் மிகப்பெரிய தொலைத்தொடர்புப்புரட்சியை இந்தியாவில் கொண்டுவரமுடியும், நம்மிடம் அந்த அளவுக்கு ஆள்பலமும் அறிவு பலமும் உள்ளது. மிகக்குறைந்த கட்டணத்தில் சர்வதேச அழைப்புகளை மக்களுக்கு வழங்களாம்.

இந்த எண்ணம் தயாநிதி மாறனக்கு தோன்றவில்லையா? அல்லது தன் குடும்பத்தொழில் புதிதாக இதையும் சேர்த்துவிடலாம் என்கிற எண்ணத்தில் உள்ளாரா? இது அவருக்கே வெளிச்சம்.

லண்டனில் இருந்து இந்தியாவை முறையான வழியில் தொலைபேசிமூலம் தொடர்புகொள்ளவேண்டுமானால், அதற்கும் ஒரு நிமிடத்திற்கு 20 முதல் 25P செலவாகிறது. இது அழைக்கும் இடங்களுக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் calling card மூலமாக அழைத்தால் 6 முதல் 10P வரை செலவு ஆகிறது. இதை அவர்கள் நான் மேற்கூறிய வழிகளிலோ அல்லது வேறுவிதமாகவோ செய்கின்றனர். ஏனென்றால் சில calling card கம்பனிகள் சில நாட்களிலேயே கானாமல் போய்விடுகிறார்கள்.

voip stund(www.voipstunt.com) என்கிற மென்பொருள் மூலம் நீங்கள் இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல உலகில் எங்கிருந்தாலும் பல ஜரோப்பிய, அமெரிக்க மற்றும் சில ஆசிய நாடுகளை (land line) இலவசமாக அழைக்கலாம் (அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் mobile free). இதில் சீனா வும் உள்ளடங்கும். இவர்கள் நான் மேற்கூறிய தொழில்நுட்பத்தைப்ப்யன்படுத்தி internet மூலம் அழைப்புகளை வாங்கி நமக்கு தறுகிறார்கள். இதில் அவர்களின் Revenue Model எதுவென்றால். unlimitted அழைப்புகளுக்கு நீங்கள் minimum balance வைத்திருக்கவேண்டும். இப்போது லண்டனில் அகன்ற அலைவரிசை (Broadband ) வைத்திருபவர்களுக்கு internet அழைப்புகளை இலவசமாக தருகிறார்கள்(only line rental).

 
At 4:14 PM, Anonymous Anonymous said...

ரத்தன் டாட்டாவுக்கே இந்த கதி என்றால் இன்னொருமுறை ஜெயித்தால் பில்கேட்சையே விடமாட்டார்கள் போலிருக்கிறது.மைக்ரோசாப்டில் பாதி பங்கு கேட்டாலும் கேட்பார்கள்.பில்கேட்ஸ் ஜாக்கிரதை

 
At 4:26 PM, Blogger ஜெயக்குமார் said...

இவனுக்கு பத்திரிக்கைகளில் இருந்து copy & past மட்டும்தான் தெரியும் என்பதுபோல (சில லூசுகள் cut & past என்று சொல்லும்.) சொல்லுபவர்கள் இதில் நான் இட்ட பிண்ணூட்டத்தையே ஒரு பதிவாக அல்லது விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம்.

 
At 4:54 PM, Anonymous Anonymous said...

I did n't understand why this post is relavant in this election .This letter & new indian express has some similarties but this issue is really talking about TRAI's decesion on technical & policy stand .The problem is really in TRAI 's policy decesion .I know TRAI is alwway has some startegic flaw in ints decision ..I guess you guys may not know the telecom issues ,as I am working in the industry I still support TATA's request but dont want to get politicise the issues ..Jeyakumar infact Maran changed simplified lots of tuff procedure in the BSNL.

The VOIP is not yet completely matured enough ,please dont jump right away on that .Those free bee voip can spoil the revenue stream of ISP business models ,Already Telcom industry is struglling because of 2000 & 2001 dot.com bust ..If you are really talkin about monopoly rules then Late 90's VSNL (that time govt controlled) had lot of monopoly rules which favoured to that and it sitting in cash file now.Ironically now VSNL is owned (partially) by TATA .

But I agree that MAran has moral obligation to clear the issues in front of public .I am big fan of TATA's .

aannal ungolooda Athimuka arasiyalukku ithil entha mukkiyathuvamum illai ..

Please dont fool around any more

 
At 6:50 PM, Blogger Santhosh said...

இந்த லட்சணத்தில் இவர் தான் மிகவும் துடிப்பான ஆன அமைச்சர் என்று பெயர் இப்பத்தானே தெரியுது எதுல துடிப்பா இருந்து இருக்காரூன்னு. அம்மா லோக்கல் வியாபாரின்னா நம்மாளு இந்தியா முழுவதும் சுத்தி சுத்தி அடிச்சி இருப்பாரு போல இருக்கே. இதுல நம்ம சிங் எந்த கொள்கைய கொண்டுவந்து என்ன ஆகப்போகுதுங்க. என்ன பண்ணுவாரு நாம்மாளு டாடா மீதும் ஒரு கோடி கேட்டு ஒரு வழக்கு போடப்போகிறார்.அவ்வளவு தான்.

 
At 7:01 PM, Anonymous Anonymous said...

பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் பிராம்மணர்கள் அல்ல.
தமிழ் மீதும், இந்து மதம் மீதும், இந்திய கலாச்சாரம் மீதும் ஆர்வமுள்ள அனைவரும் ஒன்றாக ஆதரிக்கும் ஒரே கட்சி, பாரதிய ஜனதா கட்சிதான்.

அடுத்த தேர்தலில் ஆட்சியை அமைக்கப்போவது பாரதிய ஜனதாதான்.

அதற்கான அச்சாரம்தான் இந்த தேர்தல்.

பாரதிய ஜனதாவுக்கு வாக்களியுங்கள். தமிழ் நாட்டின் தன்னிகரற்ற கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள்.

VOTEBJP.INFO

தொடர்ந்து படியுங்கள். மேலும் மேலும் அதிகமான செய்திகளும் தகவல்களும் சேர்க்கப்படும்
votebjpinfo@yahoo.com

 
At 8:03 PM, Anonymous Anonymous said...

Jayakumar,

//இதில் நான் இட்ட பிண்ணூட்டத்தையே ஒரு பதிவாக அல்லது விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம். //

Why cant you write a separate post about the backwardness of Indian Telecoms???

 
At 9:34 PM, Blogger ஆப்பு said...

ஜெயக்குமார்,

என்னே உங்கள் கச்சி பாசம்? என்னே உங்கள் கொளுவை பாசம். பின்றீங்கண்ணா!

 
At 11:00 PM, Blogger ஜெயக்குமார் said...

//என்னே உங்கள் கச்சி பாசம்? என்னே உங்கள் கொளுவை பாசம். பின்றீங்கண்ணா!//

இதை விட்டா வேறு என்ன ஆரோக்கியமான விவாதத்தை உங்களால் வைக்கமுடியும்.

உங்கள் ஆப்பை "ஜோ"க்கர்களிடமும், பொட்டிகடை பொறம்பொபோக்குகளிடமும் மட்டும் காட்டவும்.

 
At 11:26 PM, Blogger ஜெயக்குமார் said...

//The VOIP is not yet completely matured enough//


நீங்கள் skype பயன்படுத்தியிருந்தால் இப்படி கூறியிருக்க மாட்டீர்கள். digital தொலைபேசிகளின் கிடைக்கும் தரத்தை விட மிகத்தெளிவாக இருக்கிறது. சென்னையில் இருக்கும் என் உறவினர்கள் இதைப்பயன் படுத்தித்தான் அவர்களின் computer -லிருந்து என்னுடைய land line -க்கு என்னுடைய அழைக்கிறார்கள். அவர்களிடம் voip phone இருந்தால் கம்யூட்டர் இல்லாமலேயே என்னை அழைக்க முடியும். மேலும் நான் இங்கு குறிப்பிட்டது சர்வதேச internet call- அழைப்புகளை switch மூலம் உள்ளூர் அழைப்புகளா மாற்றூவது.

இந்த தொழில்நுட்பத்தை முறையாகவும், முறையான பராமரிப்புடனும்( நம் அரசு ஊழியர்களிடம் எதிர்பார்ப்பது தவறு) பயன்படுத்தினால் சிறப்பாக செயல்பட வைக்கலாம். குறைசொல்லிக்கொண்டே இருந்தால், பின்தங்கியே இருக்க வேண்டியதுதான். நம்மைவிட பரப்பளவிலும், மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் உள்ள கம்யூனிச நாடான சீனாவில் கூட இதை செயல்படுத்த துணியும் போது, நாம் ஏன் இதை நடைமுறைப்படுத்த முடியாது.

 
At 12:10 AM, Blogger ஜயராமன் said...

டாட்டா குற்றச்சாட்டு அமைச்சர் மீதோ அல்லது அவரது அமைச்சரவை மீதோ அல்ல.

தொலைதொடர்பு கொள்கையிலும், டிராய் எடுக்கும் முடிவுகளும் நடக்கும் சாதாரண இழுபறிதான். பி.எஸ்.என்.எல். எதிரே தனியார் கம்பனிகள். தனியார் கம்பனிகளுக்குள் சி.டி.எம்.ஏ. எதிரே ஜி.எஸ்.எம். கம்பனிகள் என்று பல வருடங்களாக இது போகிறது.

இது டாடாவின் முதல் குற்றச்சாட்டும் அல்ல.

விவரம் புரியாதவர்களை குழப்புவதற்காகவே இந்த செய்தி இப்போது வெளியாகிறது. இதில் உள் நோக்கம் இருப்பதாக படுகிறது.

இதை தாங்கள் உண்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நன்றி

 
At 12:18 AM, Blogger பிரதீப் said...

ஜெயக்குமார்...

இதுக்குப் பேர்தாங்க விஷமத்தனம். இதையேதான் தினமலர்லயும் செஞ்சிருந்தாங்க. மேல ஜெ. டாடாவை மிரட்டியதால் தயாநிதியைப் பதவி நீக்கம் செய்யச் சொல்லி பிரதமரை வலியுறுத்திய விவகாரம்.

கீழே ரத்தன் டாடா தொலைத் தொடர்புத்துறைக் கொள்கை சம்பந்தமாக பிரதமரைத் தலையிடக் கூறிக் கடிதம் எழுதிய விவகாரம்.

ரெண்டுக்கும் ஒண்ணுக்கொண்ணு தொடர்பேயில்லை. ஆனா கரெக்டா முதல் பக்கத்தில் இந்த இரண்டு செய்திகள் மட்டுமே போட்டு (நல்ல வேளை நான் உள்ளே போயி படிச்சும் தொலைச்சேன்) என்னமோ டாடா பொங்கி எழுந்து தயாநிதியைப் பதவி நீக்கக் கோரியது போல் ஒரு தோற்றம்.

ஏய்யா இதையேதானே நீங்களும் செய்யறீங்க? இதுக்கும் ஏதாச்சும் சப்பைக் கட்டு கட்டாதீங்க. நீங்க அதிமுக ஆதரவாளரா இருங்க தப்பில்லை, ஆனா அதுக்காக வெறும் திமுக எதிர்ப்பு விஷமத்தனங்களை மட்டும் செய்யிறதுதான் ஏன்னு கேக்குறேன். கேட்டா அதிமுகவை எங்கயாச்சும் ஆதரிச்சுருக்கேனான்னு இன்னொரு கேள்வி கேப்பீங்க... வெளிப்படையா இல்லைதான். ஆனா இதைப் படிக்கத் தெரிஞ்ச எவருக்கும் நான் நினைப்பது போல்தான் தோன்றும்.

என்னமோ போங்க.

 
At 1:38 AM, Blogger ஜெயக்குமார் said...

//ஆனா அதுக்காக வெறும் திமுக எதிர்ப்பு விஷமத்தனங்களை மட்டும் செய்யிறதுதான் ஏன்னு கேக்குறேன். கேட்டா அதிமுகவை எங்கயாச்சும் ஆதரிச்சுருக்கேனான்னு இன்னொரு கேள்வி கேப்பீங்க...//

ப்ரதீப்,

இப்படி கூறுவதால் நீங்கள் திமுக அனுதாபி என்று எடுத்துக்கொள்ளலாமா?. என்போன்றோரின் இப்போதைய நோக்கம் திமுக வெல்லக்கூடாது என்பது மட்டுமே.

1996 தேர்தலின் போது அதற்கு முந்தைய ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு அதன் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று இருமாப்பில் இருந்த அதிமுக-வை தமிழக மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் பதிலடி கொடுத்தார்களோ, அதுபோல ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு, மக்களுக்கு பொய்யான செய்திகளிப்பரப்பி, தங்களுடைய குடும்ப தொழில்களுக்காக தமிழ்நாட்டையே முட்டாளாக்க நினைப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும் என்பதே எங்களைப்போன்றோரின் நோக்கம்.

மேலும் மத்தியிலும், மாநிலத்தில் ஒரே அரசு இருந்தால் மாநிலத்திற்கு அதிகமான நன்மைகளை செய்யமுடியும் என்பதெல்லாம் சுத்த கம்பக். இவர்கள் கூட்டனி வைத்திருக்கும் காங்கிரஸ்தான்
கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தது, காவரி நீரைப்பெறமுடிந்ததா? ஆனால் தன் பேரனுக்கு வேண்டிய அமைச்சர் பதவி மட்டும் மிரட்டி பெறமுடிந்ததே.

காங்கிரஸ்தான் கேரளத்தில் இருக்கிறது, ஆனால் தென்மாவட்டங்கள் பலவற்றின் உயிர்நாடிப்பிரச்சனையான பெரியார் அணை பிரச்சனையில் இவர்களுடைய மிரட்டல் எங்கே போனது.

தியாகிகள் வாழ்ந்த மண்ணில் இன்ற் விஞ்சியிருப்பது சுயநலம் மட்டுமே!

அதுவும் மற்றவர்களை பாதிக்காத வரையில் பிரச்சனை இல்லை.

ஆனால் சுயநலம்தவிர வேறெதுவும் அறியாத கருணாநிதி மக்களுக்கு தொடர்ந்து துரோகங்களை செய்துவருவதை நாங்கள் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

 
At 2:00 AM, Anonymous Anonymous said...

As far as i read the complaint from Tata to PM is some thing with TRAI, not with maram(I am not a DMK person).

If this issue is true y the medias like NDTV, CNN-IBN , Aaj Tak, Headlines Today are keeping quite.

Dont say that Sun T.V and maran have stopped them from telecasting this issue.

I dont know how many peoples watch NTDV and the other above said channels. They are not releateed to any party as far as i know . They try to get maximum truth to the people of india. If this complaint is going to be true, y there is no information about this.

AIADMK aliance has lost hope in wining the election because of the DMK's Mainfesto(I dont agree what ever they say in that. all free stuffs). Just because of the they are trying to divert the peoples consentration.

Is aiadmk a pure party. they have not done any thing. As far as i feel, maran is still good at his work. Developing the country telecommunication. The central govt. is still good at there stand and doing good.

My question,
1. Who gave this information to vaiko? did tata gave this info to vaiko, rather than giving it to Manmohan singh.
2. JJ is asking the PM to dismiss mr.maran!!! So how many time jj should have been dismissed from power.
3. Why vaiko did not talk any thing about this when he is with dmk aliance? does this issue happened last week.
4. Other important thing, they blame sun tv not allowing peoples to see other channels. Does sun tv network have remotes for all the peoples tv.

I totally dont belive this cheap political talks. If vaiko has a proof, he should have given it to CBI and manmohan singh for taking action. Y he did not do that.

Any replies

 
At 2:16 AM, Blogger krishjapan said...

ஒரு விஷயத்தை விஷமமாய் எழுதுவது, யாராவது, தெரிந்த எதிர்தரப்பு ஆள் அதை மறுத்தால், முத்திரை குத்தி அதை ஒதுக்குவது, அதே, யாராவது இன்னும் முத்திரை குத்தப்படாதவர் விஷய ஞானமோடு மடக்கிவிட்டால், (தினமலர் ஒரே வாசகர் கடிதத்தை, இரண்டு பேரில் வெளியிட்டது, உழவர் சந்தை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்..., நியூஇன்ட்பிரெஸ்ஸில் நோ கமெண்ட் என வந்ததை தினமணி எப்படி திரித்தது.... தினமலர் பாணியிலேயே, தலைப்பிலேயே திசை திருப்புவது...இவற்றைச் சுட்டிக் காட்டிவிட்டால்), உடனே பொதுப்படையாக சுயநல கருணாநிதி வரக்கூடாது என்பது.... ஜெயக்குமார் உங்களை நினைத்துப் பரிதாபப்படுகிறேன். பரிகசிக்கமுடியவில்லை, உங்கள் நோக்கம் தமிழகம் உயரவேண்டும் என்றிருப்பத்தனால். உமது நோக்கம் முக வரக்கூடாது என்ற துவேஷம்தானோ என எம்மை நினைக்கவைத்து விடாதீர்.

கொஞ்சம் ரோசாவஸந்த் பதிவைப் படித்துப் பாருங்கள், அதிலுள்ள நடுநிலைமை, தெளிவு, ஆதங்கம், உயர்ந்த எண்ணம் புரியும்.

 
At 2:25 AM, Blogger ஜெயக்குமார் said...

Gobinath ,
தமிழ் நாட்டில் எத்தனைபேர் நீங்கள் குறிப்பிட்ட NDTV, CNN, IBN செய்திகளைப்படிக்கிறார்கள்.
//4. Other important thing, they blame sun tv not allowing peoples to see other channels. Does sun tv network have remotes for all the peoples tv.//

நீங்கள் மேல சொன்ன channel-களும் சரி, வேறெந்த channel-களும் cable- tv காரன் கொடுத்தால் தானே பார்க்க முடியும். சென்னையில் பலர் சமீபத்தில் நடந்த கிரிக்கெட் தொடர்களை இந்த குழுமத்தின் சதிகளால் பார்க்க முடியவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?.

நான் இதற்கு முந்தைய பிண்ணூட்டத்தில் குறிப்பிட்ட காவேரி , பெரியார் அணை தொடர்பான கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற முடியுமா?

//3. Why vaiko did not talk any thing about this when he is with dmk aliance? does this issue happened last week.//

கூட்டணியில் இருந்துகொண்டு அவர்களை விமர்சிக்கக்கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் உறுதியாக சொல்லமுடியவில்லை.

//2. JJ is asking the PM to dismiss mr.maran!!! So how many time jj should have been dismissed from power.//

எதற்காக என்று குறிப்பிடாமல் மொட்டையாக சொன்னால் எப்படி.

//1. Who gave this information to vaiko? did tata gave this info to vaiko, rather than giving it to Manmohan singh.//

இதை வைகோதான் தெளிவுபடுத்தவேண்டும் அல்லது சம்பத்தப்பட்ட பத்திரிக்கைகள் தெரியப்படுத்தவேண்டும். அவர்கூட மத்திய அமைச்சர் ராஜா-வின் மீதான குற்றச்சாட்டை மும்பையிலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கிலப்பபத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் கேட்டார். அதுபோல இதுவும் இருக்கலாம். இல்லாவிட்டால் டாடாதான் தெளிவுபடுத்தவேண்டும். இல்லையெனில் டாடா-வின் மீது நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் கேட்டு தயாநிதிமாறன் வழக்கு தொடர்ந்தாலும் தொடர்வார்.

 
At 2:42 AM, Anonymous Anonymous said...

Note: Sorry for not posting in tamil. I am not well versed in tamil typing so in english.

1. I am not living in Chennai(Not in tamilnadu also). I am able to see all those channels and i never saw such informations in any of those channesls.

//எதற்காக என்று குறிப்பிடாமல் மொட்டையாக சொன்னால் எப்படி.//

How many case is against her. And even she was not able to contest in the last election for the first time.

//கூட்டணியில் இருந்துகொண்டு அவர்களை விமர்சிக்கக்கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் உறுதியாக சொல்லமுடியவில்லை.//

If he is 100% geninue he should have done it. Communist parties which is in dmk aliance are not agreeing 100% with the free tv thing of DMK

Maram has opened an issue on vaiko for asking help to him regarding to vaiko's relative in abroad. Still as far as i know vaiko has not given any response.

-----------
If NTDV is not telecasted still Aaj tak, is going to publish most serious matter in there print media (INDIA TODAY) which is available in the Patti shops, sun tv network cant stop selling of those magizines right.
------------

I can tell one thing but the truth. Non of the tamil media is giving a Proper news(Correct news). Atleast raj news is some what ok. when compare to other ever print media.

 
At 2:51 AM, Anonymous Anonymous said...

//நான் இதற்கு முந்தைய பிண்ணூட்டத்தில் குறிப்பிட்ட காவேரி , பெரியார் அணை தொடர்பான கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற முடியுமா?//

You should understand one thing first, காவேரி issue is a sensitive one. Do you know how many tamilian suffered when dr. rajkumar die(just asking a question, dont thing that i am fighting).

See the காவேரி issue cant be solved by any central govt nor any other commity. It should be solved by the people of karnataka and tamilnadu. To be frank, both the state politicians are making chances with this காவேரி issue.

Kerala, that to it has to dealled with both the state people or state govt. nothing to do with the central cong. Central govt. has to take steps according to both the states stand, just with MK asking water, central wont do the favour.

As far as i see y the problem is started against maran brothers was happening after the sun network released IPO worth 800 crores

 
At 2:53 AM, Anonymous Anonymous said...

To be frank and Open,

TN People should give chances to any other party then old all the correct information will come out.

 
At 3:40 AM, Blogger மா சிவகுமார் said...

ஒரு பெயரிலியும், பிரதீப்பும் சொல்வது போல, மாறன் டாடாவை மிரட்டியதாக வந்த செய்தி(?) க்கும் இந்த கடிதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கோ வர்த்தகப் பக்கங்களில் பிரசுரிக்க வேண்டிய செய்தியை தினமலர் முதல் பக்கத்தில் போட்டு, அதை பேனர்களிலும் போட்டது, அதன் மலிவான இதழியலையேக் காட்டுகிறது.

நீங்கள் இன்னொரு பதிவில் சொன்னது போல, அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு என்று தினமலரின் செய்திகளை கொஞ்சம் ஆராய்ந்தே உங்கள் பதிவில் போடுங்கள்.

பத்திரிகை உலகில் மிகக் கீழ்த்தரமான திரிப்புகளில் ஈடுபட்டுள்ள தினமலரை படித்தால் மெய்ப்பொருள் காண்பது மிக அரிது என்பது என்னுடைய கருத்து.

 
At 4:42 AM, Blogger Radha N said...

சிவக்குமரே.... நான் இதனைச்சொல்வதனால் தினமலரை சப்போர்ட் செய்வதாக என்னவேண்டாம்.

உங்களுக்கு, தமிழ்மாலையின் (அதாங்க சன் டீவி!) செய்திகளைக் கேட்டதில்லை. அவர்களிடம் எங்கே இருக்கிறது செய்திளில் நடுநிலைமை. ஒன்றுமில்லா விசயங்களை ஊதிப்பெரிதாக்கி, அதற்கேற்றவாறு ஒரு அடித்தொண்டை குரலில் வெளி யிடப்படுவதில்லையா? கேட்டுப்பாருங்கள்....

இன்றைய நிலையில் பெரும்பான்மையான செய்திஊ டங்கள் இத்தகைய நிலையைத் கையாள்கின்றன (சி லவற்றைத் தவிர).

 
At 5:03 AM, Blogger மா சிவகுமார் said...

நாகு,

சன் டிவி, தினகரன், குங்குமம், தினமலர், துக்ளக் எல்லாமே ஒரு தலைப் பட்சமாக செய்தி வெளியிடுகின்றனர் என்று எல்லோருக்கும் தெரியும். அதை அப்படியே வெளியிடும் முன் கொஞ்சம் அலசி ஆராய்ந்த்து பதிவிடுமாறுதான் ஜெயகுமாரை கேட்டுக் கொள்கிறேன்.

 
At 5:23 AM, Anonymous Anonymous said...

//இன்றைய நிலையில் பெரும்பான்மையான செய்திஊ டங்கள்
இத்தகைய நிலையைத் கையாள்கின்றன (சி லவற்றைத் தவிர).//

சிலவற்றைன்னா ஜெயா டி வி யா

 
At 5:37 AM, Blogger ஜெயக்குமார் said...

//உமது நோக்கம் முக வரக்கூடாது என்ற துவேஷம்தானோ என எம்மை நினைக்கவைத்து விடாதீர். //

முக வந்தா என்ன , JJ வந்தா என்ன என்று நான் என்னுடைய வேலையைப்பார்த்திட்டு கைநிறைய சம்பாத்திதுவிட்டு எனக்கு என்ன என்று செல்லாமல், இப்படியெல்லாம் எழுதி சில மூடர்களிடம் திட்டுவேறு வாங்கவேண்டும் என்பது மட்டும் எனக்கு ஆசையா!? எல்லாம் ஒரு சமூக அக்கறைதான். எதுவுமே நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் உள்ளது. இங்கு நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

 
At 10:19 AM, Anonymous Anonymous said...

So if you have some interest in public, y do u want to highlight the dinamalar publications, ever body knows that none of the tamil media is proper(Support to any one party).

Y not we try to get some good news.

 

Post a Comment

<< Home