அன்புமணியை வம்புக்கு இழுக்கும் வாசகர்!
கோ.விஜயராஜன், கோவையிலிருந்து எழுதுகிறார்:
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார் விஜயகாந்த். ஒரு கட்சியின் மாநில தலைவராக இருப்பவர், அந்த மாநிலத்தின் எந்த தொகுதியில் நன்றாலும் ஜெயித்து வர வேண்டும் என்பது விஜயகாந்த் எதிர்பார்ப்பு; இது நியாயமானது தான்.
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி. இவர் தேர்தலில் நின்று ஜெயித்து எம்.பி.,யாகி, அமைச்சர் ஆகவில்லை. பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மகன் என்ற காரணத்துக்காக ராஜ்யசபா எம்.பி., ஆக்கப்பட்டார். வாக்காளர்களை எந்தத் தொகுதியிலும் சந்தித்து அவர் ஓட்டு சேகரிக்கவில்லை. கருணாநதி பாஷையில் சொன்னால், "கொல்லைப்புற வழியில்' அமைச்சர் ஆனவர் தான் அன்புமணி.
"மதுரையில் இருந்து ஒரு நடிகர் விருத்தாசலம் தொகுதியில் நிற்கிறார். அவருக்கும் இந்தத் தொகுதிக்கும் என்ன சம்பந்தம்? அவர் பெண்களை மதிக்கத் தெரியாதவர். சினிமா பெயரில் எத்தனை காலம் அவர் மக்களை ஏமாற்ற முடியும். விஜயகாந்த் ஜெயித்தால், சென்னை சென்றால் தான் அவரைப் பார்க்க முடியும்' என்று அன்புமணி பேசியுள்ளார்.
விருதுநகர்வாசியாக இருந்த காமராஜர், குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டார். நாகர்கோவில் எம்.பி., ஆனார். சென்னையில் வசித்த எம்.ஜி.ஆர்., மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்; அருப்புக்கோட்டையிலும் ஜெயித்தார். அன்புமணியால் கோபிசெட்டி பாளையம் அல்லது சிவகாசி எம்.பி., ஆக முடியுமா? பா.ம.க., வேட்பாளர்களால் சாத்தான்குளம், அரவக்குறிச்சி, உசிலம்பட்டியில் நின்று ஜெயிக்க முடியுமா? மாநல முதல்வராக வர முன் வரும் அரசியல் தலைவர் எங்கு நன்றாலும் ஜெயிக்க வேண்டும் என்ற விஜயகாந்த் பாலிசி கரெக்ட்! விஜயகாந்த் ஜெயிப்பார்; ஜாதி கட்சிகளுக்கு கடுக்காய் கொடுப்பார்.
நன்றி : தினமலர்
6 Comments:
இது உங்க கருத்தா இல்ல அந்த வாசகரோட கருத்தா?
அன்புமணிய சிவகாசியில நிக்கச்சொல்ரவங்க வைகோ வ சென்னையிலும்,
ஜெயலலிதாவை நங்கனல்லூரில் நிற்கச்சொல்வார்களா.
தினமலர் செய்திகளைப் போட்டு ஏன் இப்படி வலையில் திட்டு வாங்குறீர்களோ.
//குறைஞ்சது 10 பேராச்சும் திட்டுறதுக்கு வருவாங்க பாருங்க//
பரணி,
இந்த வாசகர் விஜயகாந்தின் தைரியத்தையும், அவருடைய பாலிசியையும் தான் குறிப்பிட்டுள்ளாரே தவிர, வைகோவையும், ஜெயலலிதாவையும் இங்கு சொல்லவில்லை. அதுவும் அன்புமணிக்கு விஜயகாந்தை பற்றி இப்படிப்பட்ட பிரச்சாரம் செய்ய தகுதியில்லை என்றுதான் குறிப்பிடுள்ளார்.
சூப்பரப்பு...
All politicians (including Vijaykanth) are act like a heros, but in thier mind, they know that they are all villains.
இந்த வாசகர் கடிதத்தை நானும் இன்றைய தினமலரில் படித்தேன்.
வி.காந்த் ஏதாவது ஒரு தொகுதியில் வென்று மக்கள் மன்றத்தில் நுழைய நினைக்கிறார். ஆனால் அ.மணி புறவாசல் வழியே நுழைந்திருக்கிறார்.
வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு 'முரசே' !!
"பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்" என்னும் பழமொழிக்கேற்ப,
"யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும்" என்னும் முதுமொழிக்கேற்ப,
"உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்" என்று, பொறாமையில் வளர்ந்தவர்கள் கடைசியில் அழுவது போல,
இரு கழகங்களும், 'இந்தமுறை எப்போதும் போல நமக்கு நாம்தான் போட்டி; நம் பங்கீட்டுக்குள் அடுத்தவனுக்கு கொஞ்சம் காட்டி விட்டு, நாமே சுருட்டிக்கொள்வோம்', என நினைத்த கணக்கெல்லாம் பொய்யாக,
நினைத்தபடி 'அலை' ஒன்றும் வீசாத நிலை கண்டு,
மனம் புழுங்கி,
உளம் வெதும்பி,
என்ன செய்வது என அறியாமல்,
ஏனிப்படி ஆயிற்று?
யார் காரணம்?என
தலையைச் சொறிந்து கொண்டும்,
விடை ஒன்றும் கிடைக்காமல்,
திகைத்து நிற்கின்ற நேரத்தில்,
தேர்தலுக்குப் பத்து நாட்கள் மட்டுமே உள்ள இந்த நேரத்தில்,
என்ன செய்யலாம்,
யாரைத் திட்டலாம் என்று புரியாது,
அரண்டு போயிருக்கும் நிலையில்,
இவனைத் திட்டுவதாக நினைத்து,
யாரையோ உசுப்பி விட்டோமே!
தேர்தல் நெருங்கும் போது தென்னாட்டில்
"சிங்கத்தையும், சிறுத்தையையும்" தூண்டி விட்டுவிட்டோமே என்று,
இல்லாத முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கும்
கலைஞர் ஒரு புறம்,
பெண்ணென்பதை மறந்து பேயாட்டம் போட்டோமே,
நல்லோரையும், எளியோரையும் உள்ளே வைத்தோமே,
வல்லாரையும், எல்லாரையும் காலில் விழ வைத்தோமே,
அந்தப் பாவங்கள் எல்லாம் இப்போது வந்து சூழ்ந்து ,
"சிலம்பில்" சொன்ன படி,
'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்'என்னும்
உன்னத வாக்கியம் உண்மையாக
உரு முன்னே தோன்றுவதைப் பார்த்து,
தலைவியும், தோழியும் மயங்க,
கறுப்புச்சிங்கம் 'விஜய'நடை போட்டு வர,
தென்னகத்தில் 'தேவர்மகன்' துள்ளி எழுந்து வர,
தென்கோடியில் சத்தமின்றி,
முல்லைப்பெரியார் மக்களெல்லாம்
மனமுவந்து கூடிவர,
தமிழகத்தில்,
தலைவிரித்து,
முப்பதாண்டுக் காலம் மோசடி செய்த
கழகங்களின் ஆட்சிக்காலம்
முடிவுக்கு வருகுதென,
'விஜய'மெனக் 'காந்தம்'ஒன்று வேகமாகப் பரவுகின்ற
'முரசு'க்கே ஓட்டென்று கொட்டு முரசே!
வீணர் ஆட்டம் ஓய்ந்ததென்று கொட்டு முரசே!
வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு 'முரசே' !!
""வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரியனாகச் செயல்." [குறள் 518]
[ஒருவன் ஒரு செயலுக்குத் தகுதியுடையவனாதலை ஆராய்ந்து துணிந்த பின்னர், அவனை அச்செயல் செய்தற்கு உரியவனாக அச்செயலில் அமர்த்துதல் வேண்டும்.]
www.aaththigam.blogspot.com
Post a Comment
<< Home