எங்கப்பன் குதிருக்குள் இல்ல! - தயாநிதி மாறன்
நன்றி : தமிழ்முரசு.
தலைப்புக்கும், கீழே படத்தில் உள்ள செய்திக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா?. குறிப்பாக "டாடா நிறுவனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தால்" என்ற அவரின் கூற்றைப்படிக்கவும்.
அலசுங்கள்.
அடுத்த பழமொழி
"தவளை தன் வாயால் கெடும் "
கலைஞரின் மொழிகள்
"இந்த நாட்டில் சிறுத்தைகள் நடமாடலாம், சிங்கங்கள் நடமாடக்கூடாதா"
-- தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது
"மிருக சாதிக்குள், சண்டை வந்தால் , அதற்கு நான் என்ன பண்ணமுடியும்"
-- நிருபர்கள் கூட்டத்தில், தன் கூற்றை நியாயப்படுத்திக் கூறியது.
நான் மேல குறிப்பிட்ட பழமொழிக்கும், கலைஞரின் மொழிகளுக்கும் ,ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?. அல்லது இதே பழமொழிக்கும் தயாநிதிமாறனின் கூற்றுக்குமாவது ஏதாவது பொருத்தம் உண்டா?
8 Comments:
ஒப்புதல் வாக்குமூலம்!
ஊரு ரெண்டுபட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டம்
என்ன சொல்லுதீக செயக்குமாரு......
மக்களத்தாம்ப்புளா சொல்லுதேன்
நீங்க கூத்தாடின்னு யாரை குறிப்பிடுகிறீகள்.
மக்களை, மாக்களாக நினைப்பவரையா?
புதுசா கூத்துகட்ட ஒருத்தரு வந்திருக்காகல்ல..
அவுககளாத்தான் சொல்லுதேன்
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக டாடா ஏதும் கூறாதபோது டாடாவின் ஏஜென்டுகளாக கருதிக் கொண்டு அனைவரும் பேசிவருவது சரியாகத்தோன்றவில்லை. தயாநிதி மாறன் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. திரு வைகோ உண்மைக்கு அப்பார்பட்டவரல்ல என்பது அடிக்கடி நிருபிக்கப் பட்ட உண்மை. இந்தியன் எக்ஸ்பிரஸின் மற்ற மாநில வெளியீடுகளில் குறிப்பாக புதுதில்லி வெளியீட்டில் இந்த செய்தி இல்லாதது வேறு குழப்புகிறது.(மேலும் அமிர்தாஞ்சன் மாளிகை அபகரிக்க சதி என்கிற பழைய செய்திகளும் சந்தர்ப்பம் தெரியாமல் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன) இந்த மாநில செய்திகள் வெளிநாட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு தெளிவாக தெரியாதுதான்.
தயாநிதி மாறன் மேல் குற்றமில்லையென்றால், வைகோ டாடா-வை ஆதரிப்பதற்காக இந்த குற்றச்சாட்டை கூறுகிறார் என்று ஏன் கூறவேண்டும்.
அதெல்லாம் சரி தான். இருந்தாலும் நீங்கள் ஜெயலலிதாவின் கைக்கூலி. தினமலரின் ஏஜண்ட். நீங்க ஒழுங்கா இருக்கீங்களா? வைகோ சின்ன வயசிலே கமர்கட் திருடி தின்னு மாட்டினப்ப, பக்கத்து ஊரிலே மாடு திருடி தப்பி ஓடி வந்த ஒருத்தரு தான் காப்பாத்திருக்காரு. அந்த நன்றி உணர்ச்சி கூட வைகோவுக்கு இல்லையே. தயாநிதி மாறன் பில்கேட்ஸுக்கு போட்டியா வந்திடுவாரோன்னு பயத்திலே ஜெ., தினமலர் கும்பல் புஷ்-ஷோட சேர்ந்து உங்களை பகடைக்காயா பயன்படுத்துது எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா ஜெயக்குமார்?
மாயவரத்தான்,
நீங்கள் மேலே சொன்ன கதையைவைத்து
"கோலிவுட் to ஹாலிவுட்" அப்படின்னு படமே எடுக்கலாம் போல இருக்கு!
Post a Comment
<< Home