எப்படியிருந்த நான்!, இப்படி ஆயிட்டேன்!. - கருணாநிதி
வைகோ கூட்டணி மாறியதை பச்சோந்தித்தனம் என்றும், அவரை துரோகி என்றும் பல கருத்துகள் இங்கே வலைப்பதிவாளர்களால் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கருணாநிதி செய்யாத ஒன்றையோ அல்லது அவர் கூட்டணியில் உள்ள ராமதாஸ் செய்யாத ஒன்றையோ வைகோ செய்யவில்லை. இதே ராமதாஸுக்கு, இந்த தேர்தலில் 30 தொகுதிக்கு குறைவாக கலைஞர் கொடுத்திருந்தால், அவர் நிச்சயமாக ஜெயலலிதா-வின் பின்னால் அணிவகுத்து "தமிழின துரோகி கருணாநிதி" என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்திருப்பார். ஒரு தேர்தலுக்கு "அன்புச் சகோதரிக்கும்", அடுத்த தேர்தலுக்கு "தமிழினத் தலைவருக்கும்" காவடி தூக்கும் ராமதாஸ் செய்வதுக்கு பெயர் என்ன?.
மிசா காலத்தில் கருணாநிதியையும் அவரது மகனையும் நோண்டி நொங்கு எடுத்தவர் இந்திராகாந்தி, அந்த காலகட்டத்தில் அவரை கடுமையாக விமர்சித்த கருணாநிதி, சில ஆண்டுகளிலேயே "நேருவின் மகளே வருக!, நிலையான ஆட்சி தறுக!" என்று அவரை வரவேற்றார். மத்தியில் பா.ஜ.கா-வுடன் இருந்த அதிமுக விலகிய அடுத்த நிமிடமே தன் இனிய "பண்டாரங்களுடன்" கூட்டணி சேர்ந்து தன் மருமகனுக்கு மந்திரி பதவி வாங்கினார் கருனாநிதி. தன்னை சிறையில் தள்ளிய ஜெயலலிதாவை கண்டிக்காத காரணத்தால் ஆட்சி முடியும் வரை பதவிசுகம் அனுபவித்துவிட்டு "அன்னை சோனியா வாழ்க!" என்றார் கருணாநிதி. வைகோ செய்ததிற்கும், இவர் செய்ததிற்கும் என்ன பெரிய வித்தியாசம் கண்டுவிட்டீர்கள்?. மாநில அளவில் செய்தால் அது துரோகம், மத்திய அளவில் செய்தால் அதற்கு பெயர் என்ன?
நேற்றுவரை ஜெயலலிதாவுடன் இருந்து கொண்டு கருனாநிதியின் குடும்ப அரசியலை விமர்சித்துக்கொண்டிருந்த "கரடி" , அங்கு சீட்டு கிடைக்கவில்லை என்றவுடன், திமுக வுடன் சேர்ந்துகொண்டு, வைகோ -வை துரோகி என்கிறது. இதில் காமடி என்னவென்றால், இவர் திமுகவுடன் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடுகிறார். ஆதாவது அவரது தொகுதியில் எதிர்ப்பு, மற்ற தொகுதியில் ஆதரவாம். இந்த லட்சனத்தில் தமிழ்மணத்தில் பல "நக்கல்கள்" களுக்கு தினமும் வைகோ-வை பற்றி "நா"காக்காவிட்டால் தூக்கமும் வரமாட்டேன்கிறது.
இவர்களெல்லாம், பயிற்சியும் , வேலையும் கொடுத்த கம்பனியிலேயே ஆணி அடிச்சமாதிரி சாகுரவரைக்கும் உக்காந்திருக்க மாதிரி பேசுரானுங்க!. 1000 ரூபாய் அதிகம் குடுத்தா, 500 கிலோமீட்டருக்கு அப்பால இருந்தாலும் அடுத்த நிமிஷமே ரயில் ஏறும் நன்றி மறவா! கூட்டமல்லவா இவர்கள்.
எப்படியிருந்த நான்.......
இப்படியாகி.......
இப்ப , இப்படியாயிட்டேன்......!
எப்படியிருந்த நான்.......
இப்படியாயிட்டேன்......!
33 Comments:
புரிந்து கொள்ளவே மாட்டோன்னு அடம் பிடிக்கிற ஆட்டு மந்தை கூட்டம் இனியாவது திருந்தட்டும்.
இத படிச்சுட்டு.... நக்கல்கள் எல்லாம் நாக்கு புடுங்கிட்டு செத்துபோயிரும்னு மட்டும் நினைக்காதீங்க.... அதுக எல்லாம்...... வேண்டாம்... நானும் அதுக லெவலுக்கு இறங்க வேண்டாம்னு பாக்குறேன்.
இக்கரைக்கு அக்கரை 'பச்சை',
அதே சூட்டோடு, இரண்டு நாட்களுக்குமுன் இடப்பட்ட இந்த பதிவையும் பார்க்கவும்.
http://govikannan.blogspot.com/2006/05/blog-post.html
//மிசா காலத்தில் கருணாநிதியையும் அவரது மகனையும் நோண்டி நொங்கு எடுத்தவர் இந்திராகாந்தி, அந்த காலகட்டத்தில் அவரை கடுமையாக விமர்சித்த கருணாநிதி, சில ஆண்டுகளிலேயே "நேருவின் மகளே வருக!, நிலையான ஆட்சி தறுக!" என்று அவரை வரவேற்றார்
//
Well said Jeyakumar.
The problem is that many people seem to forget the long time history and fail to understand that the DMK has always followed only double standards in politics. In fact, this is the case with every political party. They will go any extent without self-dignity to gain power. Shame on our politicians!!!
இவர்கள் எல்லம் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியும் கூட்டங்கள்.
முதலில் நம்மை சுத்தமாக வைத்துக்கொண்டு அடுத்தவர்களை அழுக்கு என்று சொல்லவேண்டும். இவர்கள் பொழப்பே இங்கு நாறிப்போய் கிடக்கு, இதில் அடுத்தவர்களை குறை சொல்வதற்கு ஓடோடி வருகிறார்கள்.
வைகோ இப்படி ஆனதுக்கு தமிழக மக்களும் ஒரு காரணம் தான். பச்சோந்தி மாலடிமை (எ) இராமதாசுக்கு வாக்களித்ததும் வைகோவை யோசிக்க வைத்திருக்கும்.
well said jayakumar.
I wonder why still kuzhali not replied. When some thing wrong about ramadoss is said, he will be there to support ramadoss. Kuzhali is interested in replying to posts which involve rajini and ramadoss. Former is to loath and latter is to support.
என்ன குழலி,
மான, ரோசமுள்ள தமிழ்குடிதாங்கியாக நீங்கள் இன்னும் பொங்கவில்லை என்று பலர் கவலைப்படுகின்றனர். சிங்கை-யில் இன்னும் விடியவில்லையா? அல்லது சிங்கை-யில் சங்கத்தமிழனின் உறக்கம் களையவில்லையா?
தன்னிடத்தில் குறை உள்ளவன் தான் அதை மறைக்க அடுத்தவரை குறைகூறுவான். திமுக கூட்டணி தலைவர்களிடம் இது அதிகம் காணப்படுகிறது. திருந்தாத ஜென்மங்கள்
நன்பர் ஜெயகுமார் அவர்களே,
இவர்களிடம் மானம் ரோஷமெல்லாம் எதிர்பார்க்கிறீர்களா? தலைவருக்கு மானம் இருந்தாத்தானே?
நீங்கள் கொஞ்சம் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னும் ஜெயின் கமிஷன் விவஹாரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டையும் தொட்டிருக்கலாம். காங்கிரஸ் காரனின் குட்டும் வெளுத்துப்போயிருக்கும். ஆமாம். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் காரனுக்கு மானம் ரோஷமெல்லாம் எங்கே?
அன்பு ஜெயக்குமார்.
சபாஷ் சரியான விளாசல்.
கட்டுரை விளக்கமே தேவையில்லை. படங்களும் தலைப்புகளுமே போதும்!
இவையெல்லாம் நாடோடிக்கூட்டங்கள். அப்படித்தான் இருக்கும்.
இத்தகைய கேலிக்கூத்தான கூட்டணிமாற்றங்களை போக்கவேண்டுமானால், தேர்தல் கமிஷனால் மட்டுமே முடியும். இனிமேல் கூட்டணி மாறி மாறி போ ட்டியிட்டால், தேர்தலில் போட்டியிடும் தகுதியினை அக்கட்சி இழந்து விட்டதாக அறிவிக்கக்கூடிய வழி முறைகளை வகுக்கமுடியும்.
எச்சில் இலைக்கூட்டங்கள்.....சோறுஇருக்குடம்....அதன் தடம் மாறும்.
// நாகு said...
அன்பு ஜெயக்குமார்.
சபாஷ் சரியான விளாசல்.
கட்டுரை விளக்கமே தேவையில்லை. படங்களும் தலைப்புகளுமே போதும்!
இவையெல்லாம் நாடோடிக்கூட்டங்கள். அப்படித்தான் இருக்கும்.
இத்தகைய கேலிக்கூத்தான கூட்டணிமாற்றங்களை போக்கவேண்டுமானால், தேர்தல் கமிஷனால் மட்டுமே முடியும். இனிமேல் கூட்டணி மாறி மாறி போ ட்டியிட்டால், தேர்தலில் போட்டியிடும் தகுதியினை அக்கட்சி இழந்து விட்டதாக அறிவிக்கக்கூடிய வழி முறைகளை வகுக்கமுடியும். //
அப்படி ஒரு சட்டம் வந்தால், இந்தியாவில் ஒரு கட்சியும் தேர்தலில் போட்டியிட முடியாது.
//மான, ரோசமுள்ள தமிழ்குடிதாங்கியாக நீங்கள் இன்னும் பொங்கவில்லை என்று பலர் கவலைப்படுகின்றனர். சிங்கை-யில் இன்னும் விடியவில்லையா? அல்லது சிங்கை-யில் சங்கத்தமிழனின் உறக்கம் களையவில்லையா?//
is this way to beg command for ur post ????
100 comments peruvatharku en vazthukkal
-poli dondu rasigar mandram
colombo srilanka
HI Jeya Kumar ,
congratulations...
U r the real tamilan...
When i read the news from ur site i felt so happy. How dare some people are speaking like anything? Hereafter they should stop their nonsense speak. Karunanidhi, Ramadass, and TR should realize their mistakes.
TR is not a man...His speech is too bad.
By,
BackiaSenthil, SankaranKovil
ஐயோடா.... எனக்கு தாவு தீந்து போச்சி.... நம்ம தலைவர் செஞ்சா குத்த்மில்லை எண்றால் கேக்கமாட்டம் எண்ணு அடம்பிடிக்கிறீங்களே...!
//இவர்கள் எல்லம் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியும் கூட்டங்கள்.
முதலில் நம்மை சுத்தமாக வைத்துக்கொண்டு அடுத்தவர்களை அழுக்கு என்று சொல்லவேண்டும். இவர்கள் பொழப்பே இங்கு நாறிப்போய் கிடக்கு, இதில் அடுத்தவர்களை குறை சொல்வதற்கு ஓடோடி வருகிறார்கள்.//
இதற்கு பொருத்தமாக
இன்னொன்றையும் சொல்லலாம்.
"மல்லாக்க படுத்துக்கொண்டு, எச்சில் துப்புவது".
//சிங்கை-யில் இன்னும் விடியவில்லையா? அல்லது சிங்கை-யில் சங்கத்தமிழனின் உறக்கம் களையவில்லையா?
//
சிங்கை விடிந்து தான் உள்ளது, சிங்கை-யில் உள்ள சங்கத்தமிழனி உறக்கம் கலைந்து தான் உள்ளது, ஆதாரம் வேண்டுமெனில் கீழ் கண்ட சுட்டிகளில் பாருங்கள் தமிழன் விழித்திருப்பதை,
அராஜக அதிமுக அரசும் அசைவ சாமிகளும்
அராஜக அதிமுக ஆட்சியும் அரசு ஊழியர்களும்
ஆனால் லண்டனில் தான் இன்னும் விடியவில்லை, சங்கத்தமிழன் ஓ.பி.எஸ் உடன் போட்டி போடுகிறார் ஆதாரம் வேண்டுமெனில் படியுங்கள் இங்கே
மேலும் நான் தினமலரை www.dinamalar.com லேயே படித்துவிடுவதால் இங்கெல்லாம் பெரும்பாலும் வருவதில்லை, வலைப்பதிவு நண்பர் ஒருவர் கூறினார் என்னை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக, சரி அதான் உங்கள் எதிர்பார்ப்பை ஏன் கெடுப்பானே என்று வந்துள்ளேன்
தூக்கம் கலைந்தது!,
சிங்கை(சிங்கம்) விழித்தது!
என்ன குழலி சிங்கப்பூர் போனாலும் உங்கள் ஊர்ப்பாசத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. உங்கள் ஊர்தான் உங்களுக்கு உலகமா? எதற்கெடுத்தாலும் உங்கள் ஊரையும்,உங்கள் மக்களையுமே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறீர்களே.
உங்கள் ஊர் தாண்டியும் உலகம் உள்ளது என்பதை சற்று புரிந்துகொள்ளுங்கள்.
உங்களின் அரசு ஊழியர் போராட்டம் பற்றிய பதிவுக்கு நான் ஏற்கனவே பிண்ணூட்டம் இட்டுள்ளேன். அரசு ஊழியர் மற்றும் அவர்களின் குடும்பம் தவிர வேறு யாரும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அந்த போராட்டம் பொதுமக்களுக்கும், அரசுக்கு கேடு விளைவிப்பதாகவே இருந்தது.
இப்போது நீங்கள் குறிப்பிட்டுள்ள "அசைவ சாமிகள்" பற்றிய பதிவைப்படித்தால் சிரிப்புதான் வருகிறாது. "வேப்பிலைக்காரி" போன்ற தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பி மக்களை கற்காலத்திற்கு அனுப்ப முயலும் சன் டிவிக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
உங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கள் ஊர்பக்கம் பல கிராமங்களில், இந்த பலிகொடுத்தல் பல்லாண்டுகளாக நடந்து கொண்டுதான் வருகிறது. கிடா பலி கொடுக்கும் நம் குடிமகன்கள் எல்லோரும் தண்ணி வண்டிகளாக மாறிவிடுவார்கள். வெட்டிய கிடாயை யாரும் முறைப்படி சமைக்க மாட்டார்கள். அது காட்டு சமையல் மாதிரிதான் இருக்கும். அதில் ருசி பார்த்து குத்தம் சொன்னால் அது சாமி குத்தம் ஆகிவிடும். இந்த தண்ணி வண்டிகள் "மப்புல" இந்த படையல ஒரு கட்டு கட்டும். அப்புறம் என்ன சண்டை வெட்டு குத்துன்னு கற்காலத்திற்கு அருகிலேயே போய்த்திரும்பும். கிடா வெட்டி பொங்கல் வைக்கும் ஒரு கோவில் திருவிழாவாவது சண்டையில்லாமல்
நடக்கிறதா.
இது போன்ற கன்றாவிகளிடம் இருந்து தப்பிக்கத்தான். இப்போதெல்லாம் திருமணம் போன்ற எந்த வீட்டு விஷேசங்களுக்கு கூட இப்போது எங்கள் ஊர்பக்கம் அசைவம் செய்வதில்லை. இல்லாவிடால், எந்த வீட்டு விஷேசம் என்றாலும் புடிடா நாலு ஆட்டை என்றுதான் கூறுவார்கள். ஆனால் விஷாசத்திற்கு வருபவர்கள் அசைவம் என்றவுடன், கையோட ரெண்டு புட்டியையும் புடிச்சிட்டு வந்திடுவாங்களே!. அப்புறம் என்ன வெட்டு குத்துதான்!. "காதல்" படத்தில் ஒரு பாடல் காட்சியில் இதுபோன்ற ஒரு காட்சியை அழகாக படம்பிடித்துள்ளார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
நாளொரு புதுமையாக வந்து கொண்டிருக்கும், இக்காலகட்டதில் சாமிக்கு ஆடு , கோழி பலியிடுவது என்று நம் மக்கள் இன்னும் கற்காலத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டவர்களும் வரவேற்கும் நாகரீகங்களாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் திருமண உறவுகளும், ஆன்மீக சிந்தனைகளும் இருக்கும் நம் கலாசாரத்தில் அவர்களுக்கு அறிமுகம் கூட செய்யமுடியாத கலாச்சாரம்தான் இந்த பலியிடுவது.
இது ஒரு பாரம்பரிய நிகழ்சிகள் என்றாலும், மக்கள் அதை கொஞ்சம், கொஞ்சமாக மறந்து நெறிப்படவேண்டும். பழமையின் நல்ல குணங்களுடன் கூடிய புதுமைகளை வரவேற்க அவர்கள் முன்வரவேண்டும். பழைய காலத்தில் உடுத்திக்கொண்டிருந்த ஆடைகளையா நாம் இப்போது உடுத்திக்கொண்டிருக்கிறோம். பழைய காலத்தில் இருந்தது போலவா நாம் வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறோம்.
காலத்திற்கேற்ப, வேகமாக மாறிவரும் உலகத்திற்கேற்ப நாமும் அதனுடன் ஒரு நதியைப்போல பயனிக்கவேண்டும் இல்லாவிட்டால் "துர்நாற்றமடிக்கும் குட்டை" போல நம் மக்கள் வாழ்விலும் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுவிடும்.
// வெளிநாட்டவர்களும் வரவேற்கும் நாகரீகங்களாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் திருமண உறவுகளும்...
//
உண்மையா சொல்லுங்க .... யாரையோ கிண்டல் பண்றீங்கதானே !!!
//மேலும் நான் தினமலரை www.dinamalar.com லேயே படித்துவிடுவதால் இங்கெல்லாம் பெரும்பாலும் வருவதில்லை,//
profile-லில் உள்ள உங்கள் படத்தைப்பொல உங்கள் கண்களும் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். சரியாகப்பாருங்கள் இந்த பதிவு தினமலரில் வந்தது இல்லை.
//I wonder why still kuzhali not replied. When some thing wrong about ramadoss is said, he will be there to support ramadoss. Kuzhali is interested in replying to posts which involve rajini and ramadoss. Former is to loath and latter is to support.//
இந்த வாசகரின் கருத்திற்கு பிண்ணூட்டம் இடத்தான், நான் இங்கே உங்களைப்ப்ற்றி குறிப்பிட வேண்டியதாகிவிட்டது.
//உண்மையா சொல்லுங்க .... யாரையோ கிண்டல் பண்றீங்கதானே !!!//
நம் கலாச்சாரத்தை கட்டிக்காப்பாத்திக்கொண்டிருக்கும் நம் "தமிழினத் தலைவரை" பற்றி நான் சொன்னதாக நீங்கள் கருதிக்கொண்டால், அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது.
\\என்ன குழலி,
மான, ரோசமுள்ள தமிழ்குடிதாங்கியாக நீங்கள் இன்னும் பொங்கவில்லை என்று பலர் கவலைப்படுகின்றனர். சிங்கை-யில் இன்னும் விடியவில்லையா? அல்லது சிங்கை-யில் சங்கத்தமிழனின் உறக்கம் களையவில்லையா?\\
குழலி பொங்குவது இருக்கட்டும். இராமதாஸ் மட்டும்தான் பச்சோந்தி போலவும், அவர்தான் காவடி தூக்குவதை ஆரம்பித்ததுபோலவும் இஙகே பெரும்பாலோர் பேசுவது புரியவில்லை. இந்திய அரசியலில் அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். உங்களின் கருணாநிதி எதிர்ப்பும் இராமதாஸ் எதிர்ப்பும் எப்படி சரியானதோ, அதேபோல குழலியின் இராமதாஸ் ஆதரவும் சரியானதுதான். குழலியிடம் நீங்கள்தான் வீணாக பொங்குகிறீர்கள் என்றே தோன்றுகிறது.
//குழலி பொங்குவது இருக்கட்டும். இராமதாஸ் மட்டும்தான் பச்சோந்தி போலவும், அவர்தான் காவடி தூக்குவதை ஆரம்பித்ததுபோலவும் இஙகே பெரும்பாலோர் பேசுவது புரியவில்லை. இந்திய அரசியலில் அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். உங்களின் கருணாநிதி எதிர்ப்பும் இராமதாஸ் எதிர்ப்பும் எப்படி சரியானதோ, அதேபோல குழலியின் இராமதாஸ் ஆதரவும் சரியானதுதான்.//
அய்யா!, கூட்டணி மாறியதற்காக இங்கு வலைப்பதிவுகளில் அதிகமாக திட்டுவாங்குபவர், விமர்சிக்கப்படுபவர் வைகோ தான். அப்படிவிமர்சிப்பவர்கள் போனதேர்தலின் போது நடந்தவைகளை மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு ஞாபகப்படுத்தத்தான் இந்த பதிவு.
எல்லாம் ஒரே குட்டையில் ஊரின மட்டைதான். இதுல எது அதிக நாள் ஊரிய மட்டைனுதான் பாக்கனும்.
ராமதாஸ் போயஸ்தோட்டத்தில் விட்டத்தைப்பார்த்துக்கொண்டு காவல்காத்த காலமெல்லாம் பலருக்கு மறந்து போய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
கூட்டணி மாறியதற்காக இங்கு வலைப்பதிவுகளில் அதிகமாக திட்டுவாங்குபவர், விமர்சிக்கப்படுபவர் வைகோ//
வைகோ 'வாங்கினதைவிட' அதிகமாக (வசை) வாங்கி (பின்னூட்டமாக ) கட்டிக் கொண்டவர் ஜெயகுமார் என்று நினைக்கிறேன்
//வைகோ 'வாங்கினதைவிட' அதிகமாக (வசை) வாங்கி (பின்னூட்டமாக ) கட்டிக் கொண்டவர் ஜெயகுமார் என்று நினைக்கிறேன்//
வசைபாடியவர்களுக்கு கோயிந்தா! கோயிந்தாதாதா.....!
உங்க பதிவு : அடேங்கப்பா !!
நம்ம தலைவர் :அடங்கொய்யா !!
// தமிழ்நாட்டுக் காங்கிரஸ் காரனுக்கு மானம் ரோஷமெல்லாம் எங்கே?//
இவர்கள், மக்களுக்கு என்ன செய்யலாம்? , கட்சியை வளர்க்க என்ன செய்யலாம்? என்று யோசிக்கும் நேரத்தைவிட கட்சியில் தனக்கு பிடிக்காதவர்களைப்பற்றி தலைமையிடம் என்ன என்ன போட்டுக்கொடுக்கலாம் என்று யோசிக்கவே நேரம் போதவில்லை. அடுத்தவனை காட்டிக்கொடுக்கும் பொழப்பை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை. இப்படிப்பட்டவர்களிடன் மானம், ரோசம் எல்லாம் எதிர்பார்ப்பது , கலைஞரிடம் பகுத்தறிவையும், தமிழ்மக்கள் நலத்தையும் எதிர்பார்ப்பது போன்றதாகும்.
Jeyakumar, Your thoughts are right for Viako, However, he don't have the Media support, So that, He facing the problem.
>>பழைய காலத்தில் உடுத்திக்கொண்டிருந்த ஆடைகளையா நாம் இப்போது உடுத்திக்கொண்டிருக்கிறோம். பழைய காலத்தில் இருந்தது போலவா நாம் வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறோம்.
காலத்திற்கேற்ப, வேகமாக மாறிவரும் உலகத்திற்கேற்ப நாமும் அதனுடன் ஒரு நதியைப்போல பயனிக்கவேண்டும்>>>
yennapa ithu utta marina beachku londonla irrukura mathiri two p**ce la vara solluva pola?
NOTE:
Dalith pengal ravikkai aniyakudathu endra vethi indru maari irrikirathu
லண்டன்ல beach கிடையாது. இங்கெ அது முக்கியமில்லை. சேலையை விட சுடிதார் பெண்களுக்கு உடுத்துவதற்கு முக எளிதாகவும், வசதியாகவும் இருக்கும் பட்சத்தில் அதற்கு மாறுவதில் எந்த தவறும் இல்லை. வெள்ளைக்காரனின் எல்லா செயல்களையும் நாம் ஆதரிக்கத்தேவையில்லை. எல்லோரிடமும் சில நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளன அதில் நமக்கு உடன்பாடு இருந்தால் ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை. உதாரணமாக இவர்களின் நேரம் தவறாமை, தொழிலில் நேர்மை,சுத்தம் அதோடு சுற்றுப்புர சுத்தம் என நல்ல விசயங்களை எடுத்துக்கொள்ளலாம். இங்கு டோனி(பிரதமர்) , அவருக்கு தேனீர் அருந்தவேண்டும் போல இருந்தால் அவரே கிச்சனுக்கு சென்று தயார் செய்துகொள்கிறார். ஆனால் நம்ம ஊரில் கிளார்க் டீ வாங்கிவரச்சொல்லி பியூனை ஏவுவார்.
நமது கிராமத்தில் உள்ள கோவில்களில் இப்போது மின்விளக்கு எரிகிறது. 50 வருடங்களுக்கு முன் தீப்பந்தம்தானே எரிந்தது. உடல் தகனம் கூட சில நாட்களுக்குப்பிறகு மின்சாரமயமாகும் போது ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். பழனி மலை முருகன் படியேறிப்போரவர்களுக்கு மட்டும்தான் அருள்புரிவாரா? விஞ்ச் மூலம் போய் வேண்டிக்கொள்பவர்களுக்கு பாராமுகமாய் இருப்பாரா?
எந்த கடவுளும் அன்பை மட்டுமே விருப்புவார்கள். அன்பை போதிக்கும் கடவுள்களுக்கு உயிர்பலி தேவையில்லை. ஒரு காலத்தில் இப்போது உள்ள போலிச்சாமியார்கள் போல இருந்த சிலர் ஏற்படுத்திவிட்டு போன வழக்கங்களை இன்னும் தொடரவேண்டுமா. அன்று அறியாமல் செய்தோம், ஆனால் இந்த பரந்துபட்ட சிந்தனைகள் உள்ள காலகட்டதிலும் இதையே செய்யனுமா?
மேதாவி ஒருவர் இலை, கொடிகளேல்லாம் உயிரில்லையா என்று கேட்கிறார். உணவுக்காக மட்டும் எடுத்துகொள்வது வேறு. அவசியமில்லாமல் பலியிடுவது வேறு. மரம்வெட்டி ராமதாஸ் அவசியமில்லாமல் எவ்வளவு மரங்களை வெட்டி சாய்த்தார். அதுதான் பாவம்.
TMC was started since P.V.Narashimmarao allied with JJ on 1996 and the same TMC allied with JJ on 2001. Inku Vaiko-vai kurai koora yaarukkum arugathai illai.
//நேற்று எவனோ எதையோ தின்றான் அதனால் இன்று இவன் அதனை தின்பது நியாயம்தான் என்று பேசுவது ஆரோக்க்யமில்லை... அருவெறுப்பு//
இதற்கு முன்னர் தின்றவர்கள் உனக்கு பங்கு தந்தார்களா என்ன? அவர்கள் கொடுக்கும் போது உனக்கு இனித்ததா?
நான் இங்கு என்ன சொல்லவந்தேனென்று கூடதெரியாமல் பேசக்கூடாது.
இதற்கு முன்னர் தின்றவர்களைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டு, இப்போது மட்டும் குறைகூறுவது என்ன நியாயம். அப்போது தின்றது மட்டும் இனித்ததா? இப்போது மட்டும் கசக்கிறதா, இல்லை தான் மட்டும்தான் திங்க வேண்டும் என்ற எண்ணமா?
ஒவ்வொரு தேர்தலுக்கும் எல்லா பெரிய கட்சிகளும் தங்கள் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, கூட்டணி சேர்ந்துகொள்ளும் போது மட்டும் உங்களுக்கு இனிக்கிறதா?.
சிறுபான்மை இனத்தவரின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டு இங்குள்ள எல்ல திராவிட கட்சிகளும் பாஜக வுடன் கூட்டு சேரவில்லையா?.
//1000 ரூபாய்க்காக 500 கி.மீட்டர் போகும் உங்கள் அன்புச் சகோதரர்களைப் பற்றி உயர்வாய் பேசும் நீங்கள் எங்கேயோ எதற்காக போய் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.//
அடுத்தவனுடையது அழுக்காக இருக்கு என்று சொல்வதற்கு முன் உன்னுடையது சுத்தமா இருக்கான்னு பாரு.
அவனவன் வெளிநாட்டில் பல தியாகங்களை செய்து தன் தாய்நாட்டிற்கு பெருமை தேடிக்கொண்டிருக்கிறான். பலர் தன் குடும்பத்திற்காகவும், சொந்த பந்தங்களுக்காகவும் தன்
இளமை, திறமை, சுகம், துக்கம் என பலவற்றை தியாகம் செய்துகொண்டிருக்கின்றார்.
அவனுடைய உடல் எங்கிருந்தாலும் அவன் மனதால், உணர்வால் எப்போது தாய்நாட்டில்தான் இருக்கிறான். உன்னைப்போன்று உள்ளுரில் ஊர்மேயும் காலிகளுக்கு அவர்கள் கொண்டுவரும் சென்ட் பாட்டில்களும், CD பிளேயர்களும் மட்டுமே கண்ணுக்கு தெரியும். வெளிநாட்டில் உழைக்கும் இந்தியர்களால், இந்தியாவுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா?
அவர்களால் இந்தியாவுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்று உனக்கு தெரியுமா?
இப்போது கிடைக்கும் அந்நிய முதலீடுகளுக்கும் நம்மீது உள்ள நம்பகத்தன்மைக்கும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் மீது அந்நாட்டில் உள்ளவர்களின் மரியாதையும்
நம்பிக்கையும்தான்.
சந்தர்ப்பவாதத்துக்கும் சாதுர்யத்துக்கும் நூலிழை வித்தியாசம்தான்.
Post a Comment
<< Home