$user_name="Jeyakumar";

Monday, September 14, 2009

ராகுல், விஜயகாந்த், தா. பாண்டியன் மற்றும் நதி நீர் இணைப்பு

மனிதன் இயற்கையோடு இயைந்து வாழும் வரைதான் அவனுக்கு இயற்கையின் இயல்பான நன்மை கிடைக்கும். இயற்கையை மாற்ற அல்லது கட்டுப்படுத்த நினைத்தால் அதனால் அழிவுதான் நேரும் என்பது பல வல்லுனர்கள் பல ஆய்வுக்கு பின் கண்ட உண்மை.

இதற்கு இன்று வறண்டு கிடக்கும் தமிழக நதிகளே சாட்சி. ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டியதால் இன்று பல ஆறுகள் செத்துவிட்டன என்பதை நாம் கண்கூடாக காணலாம். ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளால் பல ஆறுகள் நீர்வரத்து இன்றி இன்று சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளாகவும், மணல் திருட்டால் அதன் தன்மையை இழந்து சாக்கடைகளாகவும், புல் பூண்டுடன் புதர்களாகவும் காட்சியளிக்கின்றன. நம் அடுத்த தலைமுறைகளில் இந்த ஆறுகள் இருக்குமா எனப்து சந்தேகமே. ஒவ்வொரு பெரிய ஊர்களிலும் தண்ணீரைத்தேக்கி வைக்க கண்மாய்கள் இருக்கும் போது தடுப்பணைகள் எதற்கு. இப்போது உள்ள நீர்வரத்து, அதற்குரிய தேவைகளாலும் தண்ணீர் கடலுக்குள் சென்று வீணாக வாய்ப்பே இல்லை. இன்று நீர்வரத்து இல்லாததால் பல கண்மாய்கள் மேடுகளாகவும், கருவேலங்காடுகளாகவும் இருக்கின்றன. அதனால் அதிகப்படியான வெள்ளம் வரும் போது அது உடைந்து ஊருக்குள் வந்து அழிவை ஏற்படுத்துகின்றன.

நதிகளை இனைப்பாதால் இப்போது உருப்படியாக ஓடிக்கொண்டிருக்கும் நதிகளும் செத்துவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவ்வாரு இணைக்கும் போது அது பல மாநிலங்களின் வழியேதான் அது சாத்தியமாகும் . அவ்வாரு வரும்போது ஒவ்வொரு மாநிலமும் அதற்கு உரிமைகோரும், தேவையற்ற சண்டைகள் வந்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விழைவிக்கும் என்பதையும் நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.