$user_name="Jeyakumar";

Friday, June 02, 2006

போலிக்கு சில கேள்விகள்!..

நான் நேற்று முன் தினம் தான், என்னுடைய பதிவுகளில் இருந்து அதர் ஆப்சனை நீக்கினேன். இதற்கு முன்னர் அணானிமஸாக வந்து என்னை திட்டிக்கொண்டிருந்தவருக்கு, தொடர்ந்து என்னைத்திட்ட வேறு வழியில்லாமல் போலி தளம் உருவாக்கவேண்டி அவசியம் ஏற்பட்டுவிட்டது.

தமிழ் மணத்தில், ஆங்கிலப்பெயர்களுடன், தமிழர்களின் பாதுகாவலர்கள் போல வேசமிட்டு திரியும் இரு நயவஞசகர்களின் வேலையாக இது இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.

நான் என்னுடைய பதிவுகளில் , கருணாநிதியையும், அவரது குடும்ப அரசியல் மற்றும் குடும்ப ஊடங்களை பற்றியும் அதிகமாக விமர்சிக்கிறேன். அதற்கு என்னிடம் சில காரணங்கள் உள்ளன. நான் ஒட்டு மொத்த திமுக-வையும் விமர்சித்ததில்லை. திமுக விலும் பி.டி.ஆர் போல சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அவர்கள் யாரையும் விமர்சிப்பதில்லை. போலியான கவர்ச்சி காட்டி மக்களை ஏமாற்றுபவர்களைத்தான் விமர்சித்துள்ளேன். ஜெயலலிதாவின் தவறான அனுகுமுறையையும் விமர்சித்துள்ளேன்.

தமது சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்தாமல் மற்ற சமூகத்தினரை திட்டுவதிலேயே தன்னுடைய காலத்தை வீணாக்கிக்கொண்டிருப்பவர்களைப் பற்றியும் விமர்சித்துள்ளேன்.

போலி குறிப்பிடுவது போல நான் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் இல்லை, கண்மூடித்தனமாக எதிர்க்கவும் இல்லை.

போலிக்கு நான் கூறுவது என்னவென்றால். இந்த உலகில் ஒவ்வொன்றும் Unique. ஒன்றைபோல ஒன்று இல்லை. உதாரணமாக ஒரு மரத்தில் இருக்கும் இலைகள் கூட ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. மனிதர்கள் மட்டும் ஏன் அவ்வாறு இருக்க முயலவேண்டும்?. இதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?. அதனால் நீங்கள் அடையபோகும் லாபம்தான் என்ன?. இதுபோன்ற வீணான செயல்களில் ஈடுபட்டு உங்களுடைய காலத்தையும் திறமையையும் ஏன் வீணாக்குகிறீர்கள்.

Thursday, June 01, 2006

Nominations for Best Snap Award























போலிகளும் , பறிபோகும் நம்பகத்தன்மையும்!..

என் பெயரில் ஆயிரம் பேர் எழுதினாலும், அதனால் நான் என்னுடைய அடையாளத்தை இழந்திவிடப்போவதில்லை. ஆனால் என் பெயரில் உள்ள போலி அவர்கள், நான் ஏற்கனவே பயன்படுத்திய என்னுடைய புகைப்படத்தை தன் பதிவில் வெளியிட்டு, மிகவும் தரக்குறைவான வகையில் பதிவுகளை எழுதியுள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகள், தமிழ் மணத்தில் மீதுள்ள வலைப்பதிவாளர்களின் நம்பிக்கையை இழக்கச்செய்யும். நாளை யாரும் தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட விரும்பமாட்டர். இன்று எனக்கு நிகழ்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். இது போன்ற நிகழ்வு ஏற்கனவே நடந்துள்ளதை எனக்கு அறிவுறுத்தி என் நண்பர் ஒருவர் தான் என்னுடைய புகைப்படத்தை நீக்கச்சொன்னார். நான் சில நாட்களுக்கு முன் தான் என்னுடைய புகைப்படத்தை என்னுடைய blog-ல் இருந்து நீக்கினேன்.

ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். அவற்றை பரிமாரிக்கொள்வதற்கும், விவாதிப்பதற்கு மட்டுமே இது போன்ற வலைத்தளங்கள் உதவுகின்றன. ஆனால் இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் தொடருமானால். யாரும் தங்களின் கருத்தை சுதந்திரமாக வெளியிடும் நிலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

வந்துவிட்டார் போலி!

போலி தன்னுடைய விளையாட்டை என்னிடமும் காட்ட ஆரம்பித்துவிட்டதால் என்னுடைய சரியான தளத்தை தமிழ்மணம் வாசகர்கள் அனைவருக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.
என்னுடைய தளத்திற்கும், போலியுடனுடைய தளத்திற்கும் ஒரே ஒரு சிறிய வித்தியாசம் தான் என்னுடைய தளம் "je"-வுடன் ஆரம்பிக்கும், போலியுடைய தளம் "ja" வுடன் ஆரம்பிக்கும்.

என்னுடையது
http://jeyakumar777.blogspot.com
profile
http://www.blogger.com/profile/20967563

போலியுடைது.

http://jayakumar777.blogspot.com/
போலியுடைய profile
http://www.blogger.com/profile/25330994

என்னுடைய பெயரில் சில போலி பிண்ணூட்டங்கள்!..

தமிழ் மணத்தில் சில போலிகள் என் பெயரில் சில பிண்ணூட்டங்களை இட்டு வருகின்றன. என்னுடைய blog போலவே ஒரு blog-ஜ் உருவாக்கி இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பதிலுக்கு என்னாலும் இதுபோன்று செய்யமுடியும். ஆனால் அது போன்ற மட்டமான செயல்களில் ஈடுபட மனமில்லை.

இதில் குறிப்பிடவேண்டிய விசயம் என்னவென்றால், அவர்கள் அணைவரும் திமுக அனுதாபிகள், கருணாநிதியின் அடிவருடிகள். இது அவர்களின் புத்தி, மாற்ற முடியாது.

இதிலிருந்து என்னுடைய பதிவுகளும், பிண்ணூட்டங்களும் அவர்களை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. விவாதங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

என்னுடைய பெயரில் உங்கள் பதிவுகளில் பிண்ணூட்டங்கள் வந்தால், தயவு செய்து என்னுடைய இமெயில் முகவரிக்கு (jeyakumar777@yahoo.co.uk) தொடர்புகொண்டு உறுதிசெய்துகொண்டு பின்பு வெளியிட வேண்டுகிறேன்.
இதே பொல போலியான பதிவுகளும் வர வாய்ப்புள்ளதால், என்னுடைய பதிவுகளைப் படிக்குமுன் இந்த http://jeyakumar777.blogspot.com முகவரியில் இருந்து வெளிவந்துள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். அதே போல பிண்ணூட்டங்கள் என்னுடையதா என்பதை சரிபார்க்க, வெளியிட்டவரின் profile (http://www.blogger.com/profile/20967563) இதுதானா என்று சரிபார்க்கவும்.

மிக்க நன்றி!.