$user_name="Jeyakumar";

Friday, January 19, 2007

ஷில்பாவை அவமதித்தவருக்கு இந்தியாவின் அன்பான அழைப்பு!



"இன்னா செய்தாரே ஒருத்தர் அவர்நாண
நன்னயம் செயது விடல்"


என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப இந்திய நடிகை ஒருவரை இனவெறிகொண்டு அவமானப்படுத்திய இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இந்திய சுற்றுலா அமைச்சகம் பகிங்கரமான அதே சமயம் அன்பான ஒரு அழைப்பை விடுத்துள்ளது.


லண்டனில் இருந்து வெளியாகும் பெரும்பாலான பத்திரிக்கைகளில் இந்த கடிதம் முழுப்பக்க விளம்பரமாகவே வந்துள்ளது. இது அகிம்சை மற்றும் சகிப்புத்தன்மையின் மொத்த உருவமாகிய காந்தி பிறந்த மண்ணான நம் தாயகத்தின் பெருமையை மேலும் உயர்த்திக்காட்டியுள்ளது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.



open letter to Jade Goody and friend: from the India Tourism Office.
Incredible India


Dear Jade Goody,

Once your current commitments are over may we invite you to experience the healing nature of India.
Being one of the world's oldest civilisations, our land is one where the ancient and the modern co-exist and a multitude of religions live in harmony. We have a modern thriving culture and offer an amazing wealth of sights and sounds, tastes and textures making our country a place like no other.


With everything from bustling cosmopolitan cities to the quiet countryside, we have destinations that offer a backdrop of unmatched beauty. Our country is blessed with everything from snow-clad mountains and crystal glaciers to thick forests rich in wildlife and long sandy coastlines, offering something for everyone.
As a beauty therapist, you may be especially interested in visiting one of the many spas where you can cleanse your stresses away, enjoy yoga in the land that invented it and experience Ayurvedic healing which promotes positive health and natural beauty.
The best way to understand Incredible India is to visit and we look forward to welcoming you soon.

Yours sincerely,


India Tourism Office




கடைசியாக உதவியது "கட்டிப்புடி வைத்தியம்" தான்

Wednesday, January 03, 2007

இந்தியர்களின் அறியாமைக்குப் பலியான ஒரு ஆங்கிலேயர்!

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் முடியப்போகும் தருவாயிலும், நம் மக்கள் அறியாமை எனும் மாயப் பேயிலிருந்து வெளிவராமல் இருப்பதற்கு இது ஒரு உதாரணம்.

சென்ற ஆண்டின் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஒரு ப்ரிட்டிஷ்காரர் நம் மக்களின் அறியாமைக்கு பலியாகியுள்ளார். இங்கிலாந்தில் ஷெல்ட்காம் பகுதியில் வசிக்கும் ஸ்டீபன் என்கிற 40 வயதுக்காரர் கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் சுற்றுபயணம் செய்த அவர் மும்பைக்கு தென்கிழக்கு பகுதியில் உள்ள ரொகா என்னும் கிராமப்பகுதியில் செல்லும் போது, இரவு நேரம் வழி தெரியாமல் அங்கிருக்கும் ஒரு வீட்டின் கதவை தட்டியிருக்கிறார். கதவைத்திறந்த பெண்மணி வெளிநாட்டவரைக்கண்டதும் கூச்சல் போட ,அவர் எவ்வளவோ சொல்லியும் புரியாத அந்த கிராம மக்கள் அவரை பிரம்பால் அடித்து அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் போட்டுவிட்டனர். எந்த பாவமும் அறியாத அந்த மனிதர் பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.

இதுபற்றி அவரின் தந்தை திரு கரோல் பெண்ணட் "தவறான நேரத்தில், தவறான இடத்திற்கு சென்றது என் மகனின் உயிர்போக காரணமாகி விட்டது" என்று கூறியுள்ளார்.

உலகமயமாக்கம், தகவல் தொடர்பு புரட்சி என்று பல நிகழ்வுகள் வந்து கொண்டிருக்கும் நம் நாட்டில் இது போன்ற அறியாமை நிறைந்த மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?!.