$user_name="Jeyakumar";

Saturday, April 29, 2006

தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!

நான் பார்த்த பல வலைப்பதிவுகளில் பார்ப்பனர்க்ளுக்கு எதிரான தாக்குதல்களே அதிகம் இடம் பெறுகிறது. அதாவது தலித் மக்களின் முன்னேற்றதிற்கு தடையாகவும், அவர்களைக்கொடுமைப்படுத்துவதாகவும் இருக்கும் ஒரே இனம், பார்ப்பண இனம் என்று சித்தரிக்கப்படுகிறது.

ஆனால் இப்பொது நடக்கும் பாப்பாபட்டி,கீர்ப்பட்டி, கண்டதேவி போன்ற பிரச்சனைகளுக்கும், நேற்று நடந்த மெலவளவு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சாதிக்கலவரங்களுக்கும், முத்துராமலிங்கத்தேவர்காலத்தில் நடந்த தீவைப்பு சம்பவங்கள் (அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று) மற்றும் கீழ்வென்மனி சம்பவங்களுக்கும் இவர்களா காரணம்?.

தலித் மக்கள் எல்லா சாதிக்காரகளாலும் தான் பாதிக்கப்படுகின்றனர். ஏன் அவர்களுக்குள்ளேயே அவர்கள் பாகுபாடு பார்த்துக்கொண்டுதான் இன்னும் இருக்கின்றனர். சில சாதியினர் மறைமுகமாக இவர்களை தாக்குகிறார்கள் என்றால் மற்ற சில சமூகத்தினர் நேரடியாக தாக்குகின்றனர். எப்படி தாக்கினாலும் "அடி அடி தான்!, வலி வலி தான்!"

இதிலிருந்து விடுபட என்னதான் வழி?. சுதந்திரம் வாங்கி , அம்பேத்காரின் போராட்டத்தால் இடஒதுக்கீடு வாங்கி, 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், பல தலித் தலைவர்கள் பல்வேறு கால கட்டங்களில் வந்தும் போயிம், இன்னும் மற்ற சமூகத்தினரின் பார்வையில் தலித் மக்கள் தீண்டத்தகாதவர்களாக இருக்கக் காரணம் என்ன? அதைப் போக்கும் வழிதான் என்ன? என்பதை அலசும் ஒரு விவாத மேடையாகக்கூட இந்த பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

நான் சிறுவனாக இருக்கும் போது என்னுடைய தாத்தா மிக வருத்தத்துடன் கூறுவார் "சக்கிலியனைத் தொட்டால்தான் தீட்டு!, ஆனால் சாணானை (நாடார்) கண்டாலே தீட்டு! என்று எங்கள் காலத்தில் கூறுவர், ஆனால் இன்று அவர்களின் நிலை மாறிக்கொண்டிருக்கிறது ஆனால் தலித் சமூகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது, உங்கள் காலத்திலேயாவது இந்த நிலை மாறவேண்டும்" என்று.

நாடார் சமூகம் எப்படி முன்னேறியது?.

எனக்கு தெரிந்து, அவர்கள் இடஒதுக்கீடு கேட்டு பெரிய அளவில் போராட்டம் எதுவும் செய்யவில்லை, அரசு எங்களுக்கு என்ன செய்தது என்று அரசிடம் சலுகைகளை கேட்டு பெரிய அளவில் போராட்டம் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்புறம் எப்படி அவர்களின் முன்னேற்றம்?.

எனக்கு தெரிந்த சிலரிடன் விசாரித்த போது தெரிந்து கொண்ட சில விசயங்களில் இருந்து, நான் அறிந்து கொண்டது என்னவென்றால். அவர்களில் முன்னேற்றத்திற்கு காரணம், அவர்களிடையே உள்ள ஒற்றுமைதான். அந்த ஒற்றுமையைக்கொண்டு பொருளாதாரத்தில் தங்கள் நிலையை உயர்த்த முற்பட்டனர். பல நாடார் சங்கங்கள் அரசியல் ரீதியாக இல்லாமல் தங்கள் மக்களை ஒருங்கினைத்து பொருளாதார ரீதியாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயன்றது. அதன் பலன் தான் இன்று தென் மாவட்டங்கள் நீங்கள் எங்கு சென்றாலும் பார்க்ககூடிய "நாடார் பள்ளிகள், நாடார் கல்லூரிகள், நாடார் திருமண மண்டபங்கள் , நாடார் தொழிற்சாலைகள்' ஏன் தங்களுக்கு என வங்கிகளே வைக்ககூடிய அளவிற்கு அவர்களின் வளர்ச்சியை நீங்கள் காணலாம். இன்று அவர்களின் வளர்ச்சி தென்மாவட்டங்களில் அரசியல் கட்சிகளை வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவிற்கு வந்துள்ளது.

தலித் சமூகம் ஏன் அப்படிப்பட்ட வளர்ச்சியை அடையவில்லை?. தலித் சமுகத்தில் அது போன்ற சங்கங்கள் வந்ததில்லையா? அல்லது தலைவர்களுக்கு தான் பஞ்சம் இருந்ததா?.

அம்பேத்கார் இடஒதுக்கீடு சில வருடங்கள் தான் கேட்டார். ஆனால் இன்று ஆண்டுகள் பல உருண்டோடிவிட்ட நிலையிலும் இடஒதுக்கீடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் தேவையும் அவசியமும் சிலருக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இட ஒதுக்கீடை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த பலரும் இன்னும் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பலர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியடைந்த பின்னர் சாதியைக்குறிப்பிடுவதையே அவமானமா கருதுகின்றனர். ஆனால் சலுகைக்களை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். இதன் தலைவர்களும் எதற்கெடுத்தாலும் அரசாங்கதை குறைசொல்லியும், மற்ற சமூகத்தினரை குறைசொல்லியுமே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். சிலர் தங்களுக்கு, தங்கள் சமூகத்தினரிடையே உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஒருதலைவர் கூட அரசின் உதவியை எதிர்பாராமல், பொருளாதாரத்தில் வளமுடன் இருக்கும் தங்கள் சமூகத்தினரின் உதவியோடு ஒரு சங்கத்தை ஏற்படுத்தி இன்னமும் கிராமத்தில் அடிமை வேலை செய்துகொண்டிருக்கும் தங்கள் மக்களின் வாழ்க்கத்தரதை உயர்த்த சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. கட்சிக்காகவும், போராட்டங்களுக்காகவும், மாநாடுகளுக்காகவும் தம்மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தை வைத்து தன் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை இவர்கள் செய்திருக்கலாம். இதுவரை தங்களுக்கு என ஒரு தரமான பள்ளியைகூட இவர்களால் நிர்மாணிக்க முடியவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறியது. தன் மக்கள் இன்னும் பல இடங்களில் அடிமைகளாக, சாப்பட்டிற்கே வழியில்லாமல் இருக்கும் போது, இவர்களின் பணத்தை வைத்து தமிழ் பாதுகாப்பு போராட்டங்களும், விடுதலை புலி ஆதரவு போராட்டங்களும் நடத்திக்கொண்டிருக்கிறார் ஒரு தலைவர். பல சங்கங்களும், அமைப்புகளும் ஆரம்பிக்கும்போது இருந்த நோக்கம் கடைசிவரைக்கும் இருந்ததில்லை.

ஒரு சிலர் கூறுகிறார்கள் "நான் பொருளாதாரத்தில் மிக உயர்வாகத்தானே இருக்கிறேன், ஆனால் இன்னும் என்னை இந்த சமூகம் ஒரு தீண்டத்தகாதவனாகவே பார்க்கிறது" என்று. உண்மைதான்!, ஆனால் இன்னும் உன் சகோதரன் பல கிராமங்களில் அடிமைகளாக தானே இருக்கிறான். உன் சகோதரர்கள் துப்புரவுத்தொழிலாளியாக்கவும், உயர்சாதிக்காரகள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களிடன் அடிமைகளாகவும் தானே இருக்கிறான். இன்னும் நீ எதற்கெடுத்தாலும் அரசிடமும், மற்ற சமூகத்தினரிடமும் உதவியும், அனுமதியும் கேட்டு போரடிக்கொண்டேதானே இருக்கிறாய். (உதாரணமாக அரசு வேலைக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்டம் தோறும் ஒரு சம்பிராதயமாகவே நடத்தப்படுகின்றன, ஆனால் பல நல்ல அரசு பதவிகளில் உள்ள படித்த தலித் மக்கள் தங்கள் மக்களுக்கா ஒரு தரமான பயிற்சி வகுப்பைக்கூட நடத்தமுடியவில்லையே). எப்போது மற்றவர்களின் உதவியே, அனுமதியோ தேவைப்படாமல் தங்களால் வாழமுடியும் என்ற சூழ்நிலை உருவாகிறதோ!, தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் மற்றவர்களின் அனுமதியின்றி ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என்ற நிலை வருகிறதோ!, அப்போதுதான் இந்த சமூக பேதம் ஒழியும். இன்றைக்கு சாக்கடையாகிவிட்ட அரசியல் ரீதியாக கிடைக்கும் வெற்றிகளும் , சமூக மோதல்களால் கிடைக்கும் வெற்றிகளும். சமூகத்தில் பிரிவினையை அதிகரிக்குமே தவிர, பேத வேறுபாடுகள் குறைக்காது. ஆனால் பொருளாதார அடிப்படையில் கிடைக்கும் தீர்வு , இந்த பேதங்களை ஓரளவுக்கு ஒழிக்கும் என்பது , வரலாற்று நிகழ்வுகளில் இருந்தே நாம் அறியலாம்.

தயவு செய்து எந்த சமூகத்தினரின் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோட நான் எழுதவில்லை. அப்படி ஏதும் இருந்தால் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயம், அதற்கு தூக்கமாத்திரை கொடுத்து உறங்கவத்துக் கொண்டிருக்கும் தலைவர்களிடம் இருந்து விடுபட்டு எழவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இங்கு நான் எழுதியுள்ளேன்.

Friday, April 28, 2006

அன்புமணியை வம்புக்கு இழுக்கும் வாசகர்!

கோ.விஜயராஜன், கோவையிலிருந்து எழுதுகிறார்:

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார் விஜயகாந்த். ஒரு கட்சியின் மாநில தலைவராக இருப்பவர், அந்த மாநிலத்தின் எந்த தொகுதியில் நன்றாலும் ஜெயித்து வர வேண்டும் என்பது விஜயகாந்த் எதிர்பார்ப்பு; இது நியாயமானது தான்.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி. இவர் தேர்தலில் நின்று ஜெயித்து எம்.பி.,யாகி, அமைச்சர் ஆகவில்லை. பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மகன் என்ற காரணத்துக்காக ராஜ்யசபா எம்.பி., ஆக்கப்பட்டார். வாக்காளர்களை எந்தத் தொகுதியிலும் சந்தித்து அவர் ஓட்டு சேகரிக்கவில்லை. கருணாநதி பாஷையில் சொன்னால், "கொல்லைப்புற வழியில்' அமைச்சர் ஆனவர் தான் அன்புமணி.

"மதுரையில் இருந்து ஒரு நடிகர் விருத்தாசலம் தொகுதியில் நிற்கிறார். அவருக்கும் இந்தத் தொகுதிக்கும் என்ன சம்பந்தம்? அவர் பெண்களை மதிக்கத் தெரியாதவர். சினிமா பெயரில் எத்தனை காலம் அவர் மக்களை ஏமாற்ற முடியும். விஜயகாந்த் ஜெயித்தால், சென்னை சென்றால் தான் அவரைப் பார்க்க முடியும்' என்று அன்புமணி பேசியுள்ளார்.

விருதுநகர்வாசியாக இருந்த காமராஜர், குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டார். நாகர்கோவில் எம்.பி., ஆனார். சென்னையில் வசித்த எம்.ஜி.ஆர்., மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்; அருப்புக்கோட்டையிலும் ஜெயித்தார். அன்புமணியால் கோபிசெட்டி பாளையம் அல்லது சிவகாசி எம்.பி., ஆக முடியுமா? பா.ம.க., வேட்பாளர்களால் சாத்தான்குளம், அரவக்குறிச்சி, உசிலம்பட்டியில் நின்று ஜெயிக்க முடியுமா? மாநல முதல்வராக வர முன் வரும் அரசியல் தலைவர் எங்கு நன்றாலும் ஜெயிக்க வேண்டும் என்ற விஜயகாந்த் பாலிசி கரெக்ட்! விஜயகாந்த் ஜெயிப்பார்; ஜாதி கட்சிகளுக்கு கடுக்காய் கொடுப்பார்.

நன்றி : தினமலர்

Thursday, April 27, 2006

பிரதமர் தலையிட ரத்தன் டாடா பகிரங்க கடிதம் !


புதுடில்லி : "தொலைத் தொடர்பு துறை நடந்து கொள்ளும் முறையானது எதிர்கால நாட்டு வளர்ச்சிக்கே குந்தகமாகும்' என்று டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஏற்கனவே கடந்த 3ம் தேதி தான் எழுதிய கடிதத்திற்கு "டாட்' என்னும் தொலைத் தொடர்பு அமைச்சகம் பதிலளிக்காததால், இப்பிரச்னையில் தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

டாடா குழுமம் சார்பில் டாடா டெலி சர்வீசஸ் தொலைத் தொடர்பு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்பு சேவை அளிப்பதில் ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., என்ற இரண்டு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் டாடா டெலி சர்வீசஸ் சி.டி.எம்.ஏ., என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. பி.எஸ்.என்.எல்., தவிர பாரதி, ஹட்ச், ரிலையன்ஸ் என்று பல தனியார் அமைப்புகளும் போட்டி போட்டு பலவசதிகள் நிறைந்த மொபைல் போன் சர்வீஸ்களை தருகின்றன. இதில் "டிராய்' என்னும் ஒழுங்குமுறை அமைப்பு இந்த சர்வீஸ் வளர்ச்சிக்காக "தேசிய அலைவரிசைக் கொள்கையை' (ஸ்பெக்ட்ரம் பாலிசி) அறிவித்தது. இதில் இருந்தே குழப்பம் அதிகரித்தது. இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க "அமைச்சர்கள் குழு ஆலோசனை' பரிசீலனைக்கு விடப்பட்டிருக்கிறது. ஆனால், " தகவல் தொடர்பு துறை செயல்பாடு சரியல்ல' என்று ரத்தன் டாடா புகார் கூறியிருக்கிறார்.

தனது சேவையில் கூடுதல் வசதிகளை அளிக்க டாடா இண்டிகாம் முடிவு செய்துள்ளது. இதற்காக கூடுதல் அலைவரிசை கேட்டு தொலைத் தொடர்பு துறைக்கு இந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், இந்த அனுமதி வழங்குவதில் தொலைத் தொடர்பு துறை தயக்கம் காட்டி வருகிறது. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தொலைத் தொடர்பு துறை வருகிறது. இதற்கு அமைச்சராக இருப்பவர் தயாநிதி மாறன். இப்பிரச்னை தொடர்பாக 2005ம் ஆண்டு மே மாதம் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு டாடா குழும சேர்மன் ரத்தன் டாடா ஒரு கடிதம் எழுதினார். இதற்கு பதில் இல்லை. இதையடுத்து தொலைத் தொடர்பு துறை செயலர் ஜெ.எஸ்.சர்மாவுக்கு கடந்த 3ம் தேதி ஒரு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து டாடா குழும சேர்மன் ரத்தன் டாடா நேரிடையாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே தொலைத் தொடர்பு துறை செயலர் ஜெ.எஸ்.சர்மாவுக்கு அனுப்பிய கடிதம் மற்றும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அனுப்பிய கடிதம் ஆகியவற்றையும் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்துடன் அவர் இணைத்து அனுப்பியுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ரத்தன் டாடா கூறியிருப்பதாவது:

தொலைத் தொடர்பு சேவைக்கான கூடுதல் அலைவரிசை அரிதான வளமாக கருதப்படுகிறது. இதற்கு விலையை தான் குறிப்பிட வேண்டுமே தவிர ஏலத்துக்கு விடக் கூடாது. கூடுதல் அலைவரிசையை உரிமத்தில் சலுகை தர அத்துறை முன்வரும் போது, நாங்கள் ஆயிரத்து 500 கோடி ரூபாய் தர முன் வந்துள்ளோம்.

இந்த அலைவரிசை பிரச்னை குறித்து ஆராய மத்திய அமைச்சர்கள் குழுவை அரசு அமைத்துள்ளது. மேலும், இது தொடர்பாக" டிராய்' அமைப்பு தெரிவித்த ஆலோசனைகள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன. ஆனால், இதை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் மார்ச் 29ம் தேதி தொலைத் தொடர்பு துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிய தொழில்நுட்பத்தை புறக்கணிக்கும் அளவுக்கு அக்கறை காட்டப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தொலைத் தொடர்பு துறை அவசரம் காட்டியது ஏன்?

தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் அழைத்து பேசி அதன்பிறகே தொலைத் தொடர்பு துறை ஒரு முடிவுக்கு வந்து இருக்க வேண்டும். கூடுதல் அலைவரிசை ஒதுக்கும் விஷயத்தில் இந்த நடைமுறையை அது பின்பற்றி இருக்க வேண்டும். மேலும், கட்டண உயர்வு வாடிக்கையாளர்கள் தலையில் தான் போய் விடியும். வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணம், செலவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதை விட , சந்தையில் நிலவும் போட்டியின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறது. அலைவரிசை கட்டணத்தால் டெலிபோன் மற்றும் மொபைல் போன் கட்டணங்கள் தான் உயரும்.

கூடுதல் அலைவரிசை ஒதுக்கும் விஷயத்தில் தொலை தொடர்புத் துறையின் அணுகுமுறை ஜி.எஸ்.எம்., பிரதமர் தலையிட ரத்தன் டாடா பகிரங்க கடிதம்

தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஒரு விதமாகவும், சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு வேறு விதமாகவும் உள்ளது. இதை உதாரணமாகக் கூறினால், சாதாரண வேகத்தில் செல்லும் விமானம் மாதிரி அதிவேக ஜெட் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டால், அதனால் எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்று யோசியுங்கள். அதிவேக விமானங்களை குறைந்த உயரத்தில், குறைந்த வேகத்தில் கூடுதல் எரிபொருள் செலவாகும் நடைமுறையில் தான் இயக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? இது போல தான் தொலைத் தொடர்பு துறையின் உத்தரவும் உள்ளது.

நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வரும் நிறுவனங்களின் கோரிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் ஊக்கப்படுத்த வேண்டும். நான் ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பங்களுக்கு எதிரானவன் அல்ல. எனது கவலை எல்லாம் புதிய தொழில்நுட்பத்துக்கு இந்தியா தடை விதிக்கக் கூடாது என்பது தான். ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்தை காப்பாற்றுவதற்காக புதிய தொழில்நுட்பத்தை அடியோடு புறக்கணித்து விடக்கூடாது என்பதே எனது கருத்து.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுக்கு நேரடி ஒளிபரப்பு திட்டத்தில் ( டி.டி.எச்., நடைமுறை) டாடா நிறுவனத்தை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டினார் என்ற கருத்து பரவலாகப் பேசப்படும் விஷயம். டாடா நிறுவனம் என்பது பிரிட்டிஷார் காலம் முதல் நேர்மைக்கும் தொழில் தர்மத்திற்கும் பெருமை பெற்றவர்கள். பழைய கம்ப்யூட்டர் போதும், புதிய தொழில் நுட்பக் கம்ப்யூட்டர் இல்லாமல் புரட்சி செய்வதாக அறிவிப்பு செய்வது போல தகவல் தொடர்புத் துறையின் உத்தரவு இருக்கிறது என்பதும் டாடா கருத்தாகும். இந்த நிலையில் தயாநிதி மாறன் தலைமையேற்றுள்ள அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட துறை குறித்து டாடா எழுப்பிய கேள்விகள் எளிதில் ஓயாது.

அமைச்சகங்கள் மீதான குறைகள், தவறுகள் ஆகியவற்றை களைய வேண்டியது பிரதமரின் பொறுப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சம். இதில் பிரதமரே நேரடியாகத் தலையிட டாடா வற்புறுத்தியிருப்பது டில்லியில் முக்கியமாக பேசப்படும் செய்தியாகும்.

நன்றி : தினமலர்.


Wednesday, April 26, 2006

பேராயரின் பேராசை!



ஒரு கிறிஸ்த்தவப் பேராயர், எதோ ஒரு வட்டச்செயலாளர் மாதிரி இப்படி ஒரு விளம்பரம் கொடுக்கலாமா? . அதுவும் சமூக நீதி இயக்கம் என்ற பெயரில்.

ஏழை எளிய மக்களை ஆசை காட்டி மதம்மாறச்செய்து , அந்த கணக்கை காட்டி வெளிநாடுகளில் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடித்துவிட்டு பிறகு அவர்களை நட்டாத்தில் விட்டுவிட்டு செல்லும் உங்களுடைய செய்கைகளை தடை செய்ய ஜெ. சட்டம் கொண்டுவந்தார் என்பதற்காக இப்படியா?


தேர்தல் விதிகளை மீறி , தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கருணாநிதி டிவி வழங்கினார், அரிசி வழங்கினார், நிலங்களை வாக்களர்களுக்கு லஞ்சமாக கொடுத்தார் என்று வழக்குப்போட விருப்புவோர் , போட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு இதோ புகைப்பட ஆதாரத்தை பேராயர் பெருந்தகை "எஸ்றா" உங்களுக்கு இலவசமாக வளங்கியுள்ளார்.

Tuesday, April 25, 2006

டாட்டாவை மிரட்டிய தயாநிதி மாறன்?!

டாட்டாவை மிரட்டினாரா தயாநிதி மாறன்?: பரபரப்பு தகவல்கள்

செட்டாப் பாக்ஸ் மூலம் வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வகைசெய்யும் டி.டி.எச். திட்டத்தை டாட்டா குழுமத்திடமிருந்து அபகரிக்க மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நிர்பந்தம் செய்து, மிரட்டல் விடுத்தது உண்மையா என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

டி.டி.எச். டி.வி. திட்டத்தை தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கக் கோரி டாட்டா குழுமத்தை நிர்பந்தம் செய்து, மிரட்டியதாக தயாநிதி மாறன் மீது மதிமுக பொதுச்செயலர் வைகோ தேர்தல் பிரசாரத்தின்போது புகார் கூறியிருந்தார். இப்புகார் உண்மைதானா என்பதை அறிந்துகொள்வதற்காக டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கு நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கேள்விப் பட்டியலை அனுப்பியிருந்தது. இதற்கு உடனடியாக டாட்டா குழுமத்திடமிருந்து பதில் வந்தது. "நீங்கள் அனுப்பியுள்ள கேள்விகளில் கடுமையான புகார்கள் இடம்பெற்றுள்ளன. இப்புகாரை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இப்புகார் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை.' என்று அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது. இப்புகாரை டாட்டா குழுமத்தினர் மறுக்காத காரணத்தால், புகார்களை அவர்கள் உறுதி செய்ததாகவே முடிவுசெய்ய வேண்டியுள்ளது.

இப்புகார்கள் குறித்து கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனிடம், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தொடர்புகொண்டு கருத்து கோரப்பட்டது.

டாட்டா டி.டி.எச். டிவி. திட்டத்தை, டாட்டா குழுமத்திடமிருந்து அபகரிக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து நேரடியாக பதில் அளிப்பதை தயாநிதி மாறன் தவிர்த்தார். மாறாக புகார் கூறிய வைகோவை இகழ்ந்து பேசினார்.

நேர்மையுடனும் நெறிமுறைகளுடனும் செயல்பட்டுவரும் டாட்டா குழும விவகாரத்தில் தயாநிதி மாறன் சிக்கிவிட்டதாக கருதப்படுவதால் இது பெரும் பிரச்சினையாக உருவாகும் என்பது நிச்சயமாகிவிட்டது.

தயாநிதி மாறனுக்கு எதிராக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பான விவரம்:

சர்வதேச டி.வி. ஜாம்பவான் ரூபர்ட் முர்தோச்சின் ஸ்டார் டி.வி.யுடன் இணைந்து, டாட்டா குழுமம் டி.டி.எச். டி.வி. திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டம் பல கோடிக்கணக்கான மதிப்புடையது. இத்திட்டத்தில் டாட்டா குழுமத்தின் பங்கு 80 சதவீதம். ரூபர்ட் மர்தோவின் பங்கு 20 சதவீதமாகும்.

இது ஒருபுறம் இருக்க, தயாநிதி மாறன் குடும்பம் டி.டி.எச். உரிமத்தை அண்மையில் பெற்றது. ஆனால் இதை நடத்துவதற்கேற்ற வல்லமை படைத்த பங்குதாரர் நிறுவனத்தை அது தேடிவந்தது. ஸ்டார் டி.வி.யைப் போன்று சன் டி.வி. நிறுவனமும் (தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் குடும்பத்துக்கு சொந்தமானது) 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்க இயலும்.

எனவே 80 சதவீதம் வல்லமை படைத்த பங்குதாரரையும் அதற்கேற்ற பணபலம் படைத்த நிறுவனத்தையும் சன்.டி.வி. நிறுவனம் தேடவேண்டிய அவசியம் நேரிட்டது.

எனவே டாட்டா குழுமம் மற்றும் ரூபர்ட் முர்தோச் இணைந்து நடத்திவந்த டி.டி.எச். டி.வி. திட்டத்தை கைக்கொள்ள தயாநிதி மாறனும் சகோதரர் கலாநிதி மாறனும் ஆர்வம் காட்டினர்.
இதுவிஷயமாக டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரடியாக விவாதிக்க அனுமதி கோரினார் கலாநிதி மாறன்.

டாட்டாஸ்டார் டி,டி,எச். திட்டத்தில் 33 சதவீத பங்கை அளிக்குமாறு ரத்தன் டாட்டாவிடம் கலாநிதி மாறன் கோரினார். அத்துடன் நிர்வாக உரிமைகளையும் அளிக்குமாறு வலியுறுத்தினார். சுருக்கமாக கூற வேண்டுமெனில் பங்குதாரராக மட்டுமின்றி ஏராளமான சலுகைகளையும் கோரினார்.

இக்கோரிக்கைகளைக் கேட்டு ரத்தன் டாட்டா அதிர்ச்சி அடைந்தார். டாட்டா குழும திட்டத்தில் பங்குதாரர் என்ற கோரிக்கைக்கே இடமில்லை என அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் அமைச்சர் தயாநிதி மாறன் தலையிடத் தொடங்கினார். 33 சதவீத பங்குதாரராக அனுமதிக்கக் கோரி ரத்தன் டாட்டாவை நிர்பந்தம் செய்யத் தொடங்கினார் தயாநிதி மாறன்.

இதேவேளையில், ரூபர்ட் முர்தோச்சையும், தயாநிதி மாறன் தொடர்புகொண்டு 33 சதவீத பங்குதாரராக அனுமதி கோரினார். ஆனால் இக்கோரிக்கையை ரூபர்ட் முர்தோச் நிராகரித்துவிட்டார்.

டாட்டா நிறுவனமும் முர்தோச்சின் ஸ்டார் நிறுவனமும் 33 சதவீத பங்குகளை சன் டி.வி.க்கு அளிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாக தயாநிதி மாறன் கூறிவந்தார். ஆனால் அவர் கூறியது பொய்யானது என்பது பின்னர் உறுதியானது.

இதற்கிடையில், தனது நிர்பந்தத்துக்குப் பணியாத டாட்டா குழுமத்தை மிரட்டத் தொடங்கினார் தயாநிதி மாறன். டாட்டா டெலிகாம் திட்டத்தை சீர்குலைத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் டாட்டா டெலிகாம் நிறுவனத்துக்கு பல அனுமதிகளை நிறுத்திவைத்ததாகவும் தெரிகிறது.

இப்புகார்கள் குறித்து சன் டி.வி.க்கு தலைமை வகிக்கும் கலாநிதி மாறனிடம் பதில் கோரி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் சார்பில் கேள்விகள் அனுப்பிவைக்கப்பட்டன.
"எங்களிடம் ஏற்கெனவே டி.டி.எச். உரிமம் உள்ளதால், நாங்கள் எதற்காக டாட்டா குழுமத்தை நிர்பந்திக்க வேண்டும்' என கலாநிதி மாறன் பதில் அனுப்பியுள்ளார். டாட்டா குழுமத்துக்கு

தயாநிதி மாறன் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் புகார்களை. டாட்டா குழுமம் மறுக்கவில்லை. எனவே இப்புகார்கள் தொடர்பாக இனி பதில் அளிக்க வேண்டியது தயாநிதி மாறன்தான்

செய்தியை தினமணி-யில் படிக்க கீழுள்ள இணையதள முகவரியை Click செய்யுங்கள்

தினமணி

நன்றி தினமணி



இது போன்ற கூற்றுகள் தயாநிதி மாறனைப்பற்றி, சரத்குமார் கூறிய குற்றச்சாட்டுகளும் உண்மை என்று நம்பவைக்கின்றன.

"நடிகர் விஜயை வைத்து தபால் தலை வெளியீட்டு விழா நடத்தியதை சரத்குமார் கட்சியில் இருந்து கொண்டே விமர்சித்தார். உலகப்புகழ் பெற்ற தமிழ் நடிகர்கள் இருக்கும் போது விஜயை வைத்து தபால்தலை வெளியிட்டது முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கமுடையது( ஸ்டாலினின் மகன் விஜயை வைத்து படம் எடுக்க முயன்று கொண்டிருப்பது அணைவருக்கும் தெரிந்தது) என்று விமர்சித்தார் (அதை சன் டிவியிலும் ஒளிபரப்பி காசு பார்த்தனர்). அப்போதே அவர் மிரட்டப்பட்டார். திமுக-விற்கும் தயாநிதிமாறனுக்கு எதிராக செயல்பட்டால் ராதிகாவின் ராடான் டிவி முடக்கப்படும் என்று மிரட்டல் விடப்பட்டதாக தெரிகிறது. குமுதமும் இத்தகைய கருத்தையே வெளியிட்டு இருந்தது"

ஏற்கனவே மாறன் காலத்தில் இருந்து தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் துவங்கப்பட்ட பல வெளிநாட்டுத்தொழிற்சாலைகளில் மாறன் குடும்பத்திற்கும் பங்கு உண்டு என்று சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் (சிலர் அத்தொழிற்சாலைகள் மாறனின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன என்றுகூட சொல்லுகிறார்கள். அதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை) இது போன்ற மிரட்டல் செய்திகள் மேலும் இந்திய தொழில்துறையில் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

என்ன செய்தார் கருணாநிதி?!

கலைஞர் அதைச்செய்தார், இதைச்செய்தார் என உழவர் சந்தைத்திட்டத்தையும், இலவச மின்சாரத்திட்டம், சமத்துவபுரத்திட்டத்தையும் ஒரு வாசகர் இங்கே கூறியிருந்தார்.

உண்மையிலேயே உழவர் சந்தைத் திட்டத்தால் பயனடைந்தது திமுக-வினர்தான். "காசு கொடுத்தால் கடை இல்லாவிட்டல் தடை" என்ற வகையில்தான் அவர்களின் இந்த திட்டம் அமைந்திருந்தது. அவர்களுக்கு உண்மையிலேயே உழவர்கள் மேல் அக்கரை இருந்திருந்தால் அவர்களின் உழைப்பால் விளைந்தவற்றை அரசே நியாய விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு வினியோகம் செய்திருக்கவேண்டும். அதைவிட்டு அவர்களை இங்கும் அங்கும் அலையவிட்டிருக்கக்கூடாது. அதோடுமட்டுமல்லாமல் விவசாயத்திற்கும், விளைச்சலுக்கும் வழிகாட்டிவிட்டு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கவேண்டும். விவசாயமே இல்லை, சந்தை மட்டும் இருந்து என்ன பன்ன.

அடுத்தது இலவச மின்சாரத்திட்டம்.

இதனால் யார் பயனடைந்தார்கள் என்றால், பல பண்ணையார்களும், நிலசுவான்தார்களும் தான். ஏழை விவசாயிக்கு பம்ப்பு-செட்டு வைக்க எங்கையா காசு இருக்கு?. அதை வைச்சிருக்கவங்கக்கிட்ட மணிக்கு இவ்வளவுன்னு காசு கொடுத்து தண்ணி பாய்ச்சும் நிலையில்தான் அவன் இருக்கான்.


அடுத்தது சமத்துவபுறத்திட்டம்

சமத்துவபுரம் என்பது திமுக காரன் கமிஷன் வாங்கிக்கொண்டு, இந்த சாதிக்காரனுக்கு நாலு வீடு, அந்த சாதிக்காரனுக்கு நாலு வீடுன்னு பிரிச்சு வைச்சு வீடு குடுப்பதில்லை. ஏற்கனவே உயர்ந்த சாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு தாழத்தப்பட்டவன்
குடியேறினால், மற்றசாதிக்காரர்களின் மனதில் ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லாமல் இருந்தால் அதுதானையா சமத்துவம். அதைவிட்டு நாங்கள் தாழ்த்தப்பட்டமக்களை கோவிலுக்குள் அனுமதித்தோம், சமபந்தி விருந்து நடத்தினோம், அந்த சலுகை செய்தோம், இந்த சலுகை செய்தோம் என்பதேல்லாம் "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல" என்பது போல இவர்கள் இந்த சாதிக்காரர்கள், அவர்கள் அந்த சாதிக்காரர்கள் என்று அடையாளம் காட்டுவதாகும்.

உரிமைகளை நீங்கள் கொடுத்து அவர்கள் வாங்கக்கூடாது, அவர்கள் தானாக எடுத்துக்கொள்ளும் போது உங்கள் மனதில் ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லாமல் இருந்தால் அதுதானைய்யா நீங்கள் காட்டும் சமத்துவம்.

தயவு செய்து அந்த கட்சிகாரர்கள் செய்தார்களா? இந்த கட்சிக்காரர்கள் செய்தார்களா? என்று கேட்கவேண்டும். இங்கே நான் சமத்துவம் பற்றி குறிப்பிட்டது அனைத்து கட்சிக்காரர்களுக்கும்தான்.


என்னுடைய அடுத்த பதிப்பில் சம்த்துவம் பற்றி விரிவாக எழுதுகிறேன். அது கட்சிகளோ, அல்லது வேறு எந்த அரசியல் காரணிகளோ சம்பந்தப்படாததாக இருக்கும்.

Sunday, April 23, 2006

கமல் - 100 கோடி - கேடி நக்கீரனின் செய்தி

நக்கீரன் செய்தி

"100 கோடி வியாபாரத்தை கொஞ்சமும் எதிர்பார்க்காத கமலஹாசன், தனது விருமாண்டித்தோழரான நெப்போலியனுடன் தொடர்புகொண்டு நடந்ததை விவரித்திருக்கிறார், அரசியலில் தொடர்பில்லாத என்னை விலைபேச ஆளும்கட்சி வந்திருக்காங்கன்னா, கலைஞர்தான் வெற்றிபெறப்போறார்ங்கிறதை அவங்க தெரிஞ்சிருக்காங்கன்னு தானே அர்த்தம், என் வாழ்த்துக்களை கலைஞரிடம் சொல்லிவிடுங்கள் நான் யு.ஸ் போறேன். தேர்தல் முடிந்தபின் தான் திரும்புவேன் என நெப்போலியனிடம் கூறிவிட்டு , அமெரிக்கா பறந்துவிட்டார் கமல். இந்த சம்பவத்தை அப்படியே கலைஞரிடம் விவரித்திருக்கிறார் நெப்போலியன்."

என்னவோ பக்கத்தில உட்கார்ந்து ஒட்டுகேட்டமாதிரி எழுதியிருக்காங்கப்பா.

"சிவபெருமானே உன் நெற்றிக்கண்ணை கொஞ்சம் திறக்க மாட்டியா?, உன் பக்தனின் பெயரில் பத்திரிக்கை நடத்திக்கொண்டு , இப்படியெல்லாம் புழுகுகிறார்களே, இது நியாயமா?"

பல்லவி

"மீசைக்கார நண்பா!, உனக்கு மேட்டர் இல்லடா?
மேட்டர் இல்லடா, உன்கிட்ட உண்மையில்லடா

சரணம்

"நீ புழுகிறத விடவில்லையே!, உன் பத்திரிக்கைதான் விற்கவில்லையே!
வீரப்பனும்தான் இங்கு இல்லையே! , உன் பொழப்புக்குத்தான் வழியில்லையே! "


மீண்டும் பல்லவி

"மீசைக்கார நண்பா!, உனக்கு ரோசம் இல்லடா?
ரோசம் இல்லடா, உன்கிட்ட உண்மையில்லடா"



" கோடி கோடியாக என் முன்னே கொட்டினார்கள்" - கார்த்திக்

குமுதம் - கார்த்திக் பேட்டி.

பேட்டியைப்படிக்கும் முன் நேரம் இருந்தால் இந்த பதிவையும் படியுங்கள்

கார்த்திக் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசா?

எனக்கு தினமும் போனில் கொலை மிரட்டல் வருகிறது. "எலெக்ஷனிலிருந்து ஒதுங்கிக்கொள்' என்று மிரட்டுகிறார்கள். நான் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவனல்ல. எனக்கு என் மக்களின் ஆதரவு இருக்கும்வரை எதையும் தைரியமாகச் சந்திப்பேன்.'' _ தில்லாக விரல் சொடுக்குகிறார் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கார்த்திக்.

"என் இயக்கத் தொண்டர்கள் இரண்டு பேரை சில நாட்கள் முன்பு, வேண்டுமென்றே வண்டியால் இடித்து விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருவர், ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இன்னொருவர், காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும், எலெக்ஷன் மூலம் தண்டனை கொடுப்பார்கள். இதற்கெல்லாம் மேலாக கடவுளும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.'' என்று கூறி விட்டு மேலே கைகாட்டியவரிடம், "ஏன் இப்படி?'' என்று கேட்டோம்.

"கார்த்திக்குக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் கொடுத்தால், எரிச்சலை ஏற்படுத்திவிடலாம். இந்தப் பதவியை சுமையாக நினைக்கச் செய்யலாம் என்று
பகல் கனவு காண்கிறார்கள். அதெல்லாம் பலிக்கப் போவதில்லை. மக்கள் கொடுத்த பதவி இது. அதைத் தக்க வைத்துக் கொள்வேன். அதற்கான பொறுமை, நிதானம் எல்லாம் எனக்கு நிறைய இருக்கிறது."

அ.தி.மு.க.வில் உங்கள் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படாதது ஏன்?"

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸுடன் முதல்வர் இல்லத்திற்குக் கூட்டணி விஷயமாகப் பேசப் போனபோது, எங்களுக்கு பயங்கர ஷாக், காரணம் எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானம், அங்குள்ள ஒரு அறையிலிருந்து வந்தார்.

உடனே, பிஸ்வாஸ் முதல்வரிடம், நாங்கள் பக்கத்து அறையிலிருக்கிறோம், நீங்கள் சந்தானத்திடம் பேசி, அவரை அனுப்பிய பிறகு நாம் கூட்டணி பற்றிப் பேசுவோம் என்றார். அதற்கு முதல்வர், "சந்தானத்தை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் என் விருந்தாளி, இங்குதான் இருப்பார்" என்றார். உடனே பிஸ்வாஸ், "அவர் எங்கள் கட்சியில் இல்லை. அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோ ம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதோடு அல்லாமல் என்னை ரொம்பவும் இழிவாகப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவரை வைத்துக்கொண்டு எப்படிக் கூட்டணி பேசமுடியும். இது எங்கள் கட்சியின் உள்விவகாரம். இதற்கும்,
கூட்டணி பேசுவதற்கும் என்ன சம்பந்தம். இது, வேறு அது வேறு" என்றார்.
ஆனால், முதல்வர் இவை எதையுமே ஏற்றுக்கொள்ளவில்லை.

முதல்வரை சந்திப்பதற்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்தீர்களே...

"தேசிய ஜனநாயக கூட்டணியில் ஃபார்வர்டு பிளாக் அங்கம் வகிப்பதால், மரியாதை நிமித்தமாக பிஸ்வாஸ், கலைஞரைச் சந்திக்க வேண்டுமென்றார்.
நானும் அவரும் போயிருந்தோம். போனோமே தவிர, கூட்டணி பற்றியெல்லாம் எதுவுமே பேசவில்லை. இதுதான் உண்மை. ஆனால், யாரோ முதல்வரிடம் நாங்க தி.மு.க.வுடன் கூட்டணி பற்றிப் பேசி முடித்துவிட்டோ ம் என்று தவறான தகவல் சொல்லி பாலிடிக்ஸ் செய்ய அவரும் அதை நம்பி விட்டார்.

எனக்குள்ள வருத்தம் முதல்வர் என்னை அழைத்து உண்மையில் என்ன நடந்தது என்று கேட்டிருந்தால், எல்லாவற்றையும் சொல்லியிருப்பேன். கூட்டணியும் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தைக்கூட எனக்கு அவர் கொடுக்கவில்லை. அதனால்தான் தனித்துப் போட்டியிடுவதென்று நாங்கள் முடிவு செய்தோம்."

உங்களிடம் பேரம் பேச முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறதே...

"ஆம்... எங்கள் கட்சியின் நேர்காணல் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய கட்சியைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்தார்கள். கூட்டணி பற்றிப் பேசினார்கள். நான் அவர்களிடம் "நாங்கள் தனித்துப் போட்டியிடுவதென்று முடிவு செய்துவிட்டோம்" என்று சொன்னதற்கு அவர்கள் "ஐந்து தொகுதிகள் தருகிறோம்" என்றார்கள். நான் உடனே, "அப்படியென்றால் ஒரு நிபந்தனை. நாங்கள் எந்தத் தொகுதியைக் கேட்கிறோமோ அந்தத் தொகுதியைக் கொடுக்க வேண்டும்" என்றேன். உடனே ஒருவர், "ஃபார்வர்டு பிளாக் எங்களுக்கு வேண்டாம், தனிப்பட்ட கார்த்திக் போதும்" என்றார். அப்புறம் "ராஜ்யசபா சீட் தருகிறோம். இந்தத் தேர்தலில் நீங்களோ அல்லது உங்கள் இயக்கமோ போட்டி போடக்கூடாது" என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"இது என்ன நியாயம்?" என்றேன். "நீங்கள் ஒதுங்கிக்கொள்ள எத்தனைக் கோடி பணம் வேண்டும்?" என்றார் ஒருவர். இன்னொருத்தர் வந்து என் கண் முன்னே பணத்தை அடுக்கி வைத்தார். "மூன்றரைக் கோடி பணம் வாங்கித் தருகிறேன். உங்களுக்கு ஏதோ கடன் பிரச்னை இருக்கிறதாமே!" என்றார். எனக்கு இன்னும் ஷாக். எனக்கு இருக்கும் பிரச்னையை எப்போதோ முடித்துவிட்டேன் என்பது அவருக்குத் தெரியாது பாவம். அப்படியே என்னுடைய பிரச்னை முடியாவிட்டாலும் "நான் பணம் வாங்க மாட்டேன்" என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.

ஆண்டிப்பட்டியில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா?

"அப்படி என் கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்ல, அவர்களும் நீங்கள் ஏன் நிற்கக் கூடாது? தொண்டர்கள் விருப்பத்தைப் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். என் கட்சிக்காரர்களின் வெற்றிக்காகத் தீவிரப்
பிரசாரத்தில் ஈடுபடப் போகிறேன்..." என்றார் கார்த்திக்.

Saturday, April 22, 2006

மக்கள் ஏமாறத் தயார் இல்லை! - கோவை வாசகர்

ஏமாறத் தயார் இல்லை!

ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவையிலிருந்து எழுதுகிறார்:

"முடியாது என்பது தி.மு.க., அகராதியிலேயே கிடையாது' என கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படியானால், இதுவரை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றியுள்ளாரா?

கடந்த 1961ம் ஆண்டு கோவையில் நிடந்த சிறப்பு தி.மு.க., மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன்.

இன்றைக்கு 45 ஆண்டுகள் உருண்டோ டி விட்டன. இடைப்பட்ட காலங்களில், கருணாநிதி 15 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். அவர் அடிக்கடி ஒன்றை குறிப்பிடுவார்: "சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்' என்று.கடந்த 1961 முதல் 2006 வரை சொன்னதை செய்யவே இல்லை. டிச., 22, 1961ல், தி.மு.க., சார்பு வார ஏடாகிய, "அறப்போர்' (ஆசிரியர் அரங்கண்ணல்) என்ற இதழில், வெளிவந்த தேர்தல் அறிக்கை:

* கவர்னர் ஒழிப்பு: மக்கள் வரிப்பணத்தில் ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் பாழாக்கி வரும் கவர்னர் பதவி தேவை இல்லை என தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதுடன், அதன் காரணமாக, கவர்னர் சம்பந்தப்பட்ட சிறப்பு நகழ்ச்சிகளில் இருந்து, ஒதுங்கியே செயல்பட்டு வந்திருக்கிறது தி.மு.க., ஆனால், மாநிலம் மற்றும் மத்தியில் பல ஆண்டுகள் அமைச்சர் பதவி வகித்திருந்தும், இது சம்பந்தமாக எள்ளளவும் கவர்னர் ஒழிப்புக்கு, தி.மு.க., முயற்சி எடுக்கவில்லை.

* தமிழகத்தில் வசதியான ஏதேனும் ஒரு துறைமுகத்தை தேர்வு செய்து, அதை சுங்க தீர்வையற்ற துறைமுகமாக்க ஏற்பாடு செய்வோம்! ஆனால், இன்று வரை தி.மு.க., எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

* நெய்வேலி சுரங்க திட்டத்தை விரிவுபடுத்தி, அதை மாநில அரசின் உடமையாக்குவோம்! இதையும் இன்று வரை செய்யவில்லை.

* கடல் நீரை குடிநீராக்குவோம்! அந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

* பக்கிங்காம் கால்வாயை, வேதாரண்யம் கால்வாயுடன் இணைத்து, படகு பாதை அமைப்போம்! இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

* குதிரைப் பந்தயத்தை நிறுத்த வழி காணோம். குதிரை பந்தயம் ஒழித்து விட்டதாக நினைத்து குதிரை சிலை வைத்தனர். அது விக்ரமாதித்தன் குதிரை போல உயிர் பெற்று, இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது, கம்பீரமாக!

* தனியார் துறையில் உள்ள பெருத்த வருவாய் தரும் தொழில்களை நியாயமான நஷ்ட ஈடு பத்திரங்கள் கொடுத்து அவற்றை அரசுடமை ஆக்குவோம்!

அதை தான் முதல்வர் ஜெ., செய்தார். கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வரும் தனியார் கேபிள் "டிவி'யை அரசு ஏற்க சட்டம் கொண்டு வந்தார். அதை, "தேவையில்லை' என கூறி, அவரை அகற்ற தீர்மானம் போட்டனரே, அவரிடமே சென்று, "அதில் கையொப்பம் இட வேண்டாம்' என தி.மு.க., தடுத்து நறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

* கூட்டுறவுத் துறையில் 100க்கு 25 பங்கு ஆதி திராவிட மக்களும், 25 பங்கு பின்தங்கிய வகுப்பினரும் உறுப்பினர் ஆக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை செயல்படுத்துவோம்! இதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

கடைசியில் மிக மிக முக்கியமான தீர்மானம் வருமாறு:

* தரிசு நலம் என்ற தலைப்பில் உள்ள விளை நிலமாகக் கூடியவைகளை உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆதி திராவிடர்களுக்கும், நிலமற்ற மற்றையோருக்கும் நஞ்சையாக இருந்தால் மூன்று ஏக்கர், புஞ்சையாக இருந்தால் ஐந்து ஏக்கரும் பகிர்ந்தளிக்கும் திட்டம் மேற்கொள்வோம்!

அந்த காலகட்டத்தில், ஈ.வெ.ரா., காமராஜருக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தார். மேற்படி திட்டத்தை பற்றி அவர் கூறியதை அப்படியே தருகிறேன்:

"மூன்று ஏக்கர் நிலமாம்... எங்கே இருக்கு நிலம்? கடலில் தான் அளந்து கொடுக்க வேண்டும்!'

மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்... இதை கூறியது நான் அல்ல... "நாங்கள் தி.க.,வை விட்டு பிரிந்தாலும், எங்கள் நிரந்தர தலைவர்' என அண்ணாதுரையால் கூறப்பட்ட, ஈ.வெ.ரா., தான் உண்மையில் மிகப்பெரிய தீர்க்கதரிசி. ஏனெனில், இந்த தீர்மானம் போட்டு 45 ஆண்டுகள் ஆகியும், 15 ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்தும், மத்தியிலும், பல்வேறு பிரதமர்களின் கீழ் முக்கியமான அமைச்சர்களைப் பெற்று இருந்தும் கூட, இந்த தீர்மானங்களை அவர்கள் நிறைவேற்றவில்லை! இப்படி ஏற்கனவே கூறிய பல்வேறு உறுதிமொழிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு, இன்று 2006ல் வந்து, "வீட்டுக்கு ஒரு கலர் "டிவி' ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நலம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அ஛சி' எனக் கூறினால், மக்கள் நச்சயமாக ஏமாற மாட்டார்கள்.

நன்றி தினமலர்.

வந்தாச்சு! சம்மர் வந்தாச்சு!



நான் பணியாற்றும் அலுவலகம் அமைந்துள்ள லண்டனில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள oxford street-க்கு இன்று ஒரு சிறிய வேலை நிமித்தமாக செல்லவேண்டியிருந்தது. பொதுவாக வார விடுமுறை நாட்களில் அதிகம் அந்தப்பக்கம் போவதில்லை. குளிர்காலத்திலேயே அதிக கூட்டம் காணப்படும் இந்த தெருவில்(நம்ம ரங்கநாதன் தெரு மாதிரித்தான்) இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளே அவர்கள் சம்மரை வரவேற்கத்தயாரகிவிட்டது தெரிந்தது.

பொதுவாக நம்ம ஊரில் சம்மர் யாருக்கும் அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இங்கு வெயில் இருக்கும் ஆறு மாத்திற்காக(அதுதான் அவர்களின் வசந்த காலம்) அவர்கள் ஆறுமாதம் காக்கவேண்டியுள்ளது. இந்த காலத்தில் தான் தொழில் தொடங்குதல், திட்டமிடுதல் என பல வேலைகளை செய்ய அவர்கள் விரும்புகின்றனர். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு இங்கு கோடைக்காலங்களில் பகல் நேரம் காலை 5.30 மணியில் இருந்து இரவு 9 to 10 மணிவரை இருக்கும் (ஆதாவது நல்ல வெளிச்சம் இருக்கும்). இன்று வெளியில் செல்லும் போது பல வீடுகளில் தோட்டவேலையை ஆரம்பித்திருப்பது தெரிந்தது. மரங்களில் இலைகளும், பூக்களும் தலைகாட்டத்தொடங்கியுள்ளது. உடற்பயிற்சி நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது (குளிர்காலத்தில் ஏறிய கொழுப்பையெல்லாம் கோடைகாலத்தில் தான் குறைப்பார்கள்).

பொதுவாக நம்ம ஊர் வெயிலுக்கும் இந்த ஊர் வெயிலுக்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால், நமது ஊரில் காற்றில் தண்ணீரின் அளவு அதிகம் இருக்கும் (குறிப்பாக சென்னையில் கடற்கரை அருகில் உள்ளதால்.) எனவே அதிகமாக வியர்வை இருக்கும் (கச கச என்று இருக்கும்) . ஆனால் இங்குள்ள வெயில் ஒரு மாதிரியான எரிச்சலைத்தரும். வெயில் காலங்களில் சட்டையில்லாமல் வெளியில் அதிக நேரம் சுற்றினால் தோல் உரிந்துவிடும். இருந்தாலும் மக்கள் இதை அதிகம் விரும்புகின்றனர். மக்கள் புற ஊதாக்கதிர்களால் தோல் பாதிக்காமல் இருக்க சில லோசன்களை பயன்படுத்துகிறார்கள்.

இன்று என்னுடைய mobile phone மூலமாக சில புகைப்படங்களை எடுத்தேன், அதை இங்கே உங்களுக்கு காணத்தருகிறேன்.




ஹரே ராம!, ஹரே ராம!! ராம! ராம! ஹரே! ஹரே!

இந்த கூட்டத்தில் நான் ஒரே ஒரு இந்தியரைத்தான் பார்த்தேன் மற்றவர்கள் ஜரோப்பியர்கள் மற்றும் ஒரு ஆப்பிரிக்கர்.

இவர்களை இங்கு நான் பலமுறை பார்த்ததுண்டு. ஓவ்வொரு முறையும் சில புது ஆட்களைப்பார்ப்பதுண்டு. இவர்களின் பிரசுரங்களை ஒரு முறைகூட வாங்கிப்படிக்க தோன்றவில்லை. அடுத்த முறை அதில் என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்



புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு வெளிப்புறத்தோற்றம் பேருந்தில் பயணம் செய்தபோது எடுத்தது.











பல நாடுகளில் இருந்து பலதரப்பட்ட கலாச்சாரத்தில் இருந்து வந்த மக்களை இங்கு நாம் காணலாம்.

Friday, April 21, 2006

காட்டுமிராண்டிகள் பற்றிப்பேச கலைஞருக்கு ஒரு வாய்ப்பு!



செய்தி
சென்னையில் பிரச்சாரதிற்காக சென்ற ஸ்டாலினுக்கு
வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து பரிவட்டம் கட்டி
பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

-- இது எப்படி இருக்கு
மீசை கொஞ்சம் பெரிசா வைச்சா, விருமாண்டி மாதிரி இருப்பாரில்ல?

ராமதாஸ், கருணாநிதியை மிரட்டும் காலம் வருமா?

என்ன செய்யும் தி.மு.க.,

கே.கருணாகர், திருவல்லிக்கேணி, சென்னையிலிருந்து எழுதுகிறார்:

தி.மு.க., கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று விட்டதாக வைத்துக் கொள்வோம்...

தி.மு.க., போட்டியிட்ட மொத்த தொகுதிகள் 129; தனித்து ஆட்சி அமைக்க தேவை 118. மொத்த 129ல், 118 கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அப்படியெனில், கூட்டணிக் கட்சிகள் தூக்கி உட்கார வைத்தால் தான் ஆட்சி. ஒன்று கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்; இல்லை, கூட்டணிகளின் தயவால் அவர்கள் வெளியிலிருந்து ஆதரவு தர, தி.மு.க., ஆட்சியில் அமர வேண்டும். இந்த இரண்டில் எது நிடந்தாலும் தி.மு.க.,வுக்கு இடைஞ்சல் தான்.

ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும், "இரண்டு ரூபாய்க்கு ரேஷனில் அரிசி போடு' என்பர். மக்கள் மறந்தாலும், காங்கிரஸ், பா.ம.க., இரு கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் இவற்றின் தலைவர்கள் மறக்க மாட்டார்கள். பேனாவைக் கையில் கொடுத்து, ஆணை பிறப்பித்து, "கையெழுத்து போடு' என்று வற்புறுத்துவர். அவர்கள்
தயவின்றி, ஆட்சி இல்லை என்றான பின் மறுக்க முடியாது.

இந்த அரிசி சலுகைக்காக மத்தியிலிருந்து மானியம் எதிர்பார்க்க முடியாது. தமிழகத்திற்கு மட்டும் மத்திய அரசு சலுகை காட்ட முடியாது. இப்போது சலுகை விலை அரிசிக்காக ஆகும் கூடுதல் செலவை எந்த வகையில் ஈடுகட்டுவது? தி.மு.க., அரசுக்கு விழி பிதுங்காதா?

அடுத்து: இலவச கலர் "டிவி' வழங்க உத்தரவு பிறப்பித்தாக வேண்டும். தி.மு.க.,வை நாற்காலியில் உட்கார வைத்த கூட்டணித் தலைவர்கள் ஆட்டம்
காட்டி விடுவர். "டிவி' பெட்டி வழங்க பணத்தை எங்கிருந்து பெறுவது? கூடுதல் வரி விதிக்குமா? வரி போட்டால் பா.ம.க.,வும், கம்யூனிஸ்ட்டுகளும் வரிந்து கட்டிக் கொண்டு குஸ்திக்கு வருவர். "கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை' என்று தி.மு.க., திண்டாடுமே!

இனி, "ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தா...' என்பர். ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தங்கள் கட்சிக்கு "கோட்டா' வேண்டும் என்று நச்சரிப்பர். அத்தனை நிலத்துக்கு தி.மு.க., எங்கே போகும்? வழங்க நிலம் இருக்காது; வழங்காவிட்டால், கூட்டணிகள், "தையா தக்கா' என்று குதிக்கும். தி.மு.க.,வால் சமாளிக்க முடியுமா? மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டி வருமே! அடுத்தாற் போல, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வாரி வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட சலுகைகளை வழங்கிய பின், புதுச் சலுகைகள் தொடங்க வேண்டும்.

ஏது வருமானம்? "கொடு... கொடு' என்பர் கூட்டணிகள். கொடுக்கா விட்டால் அவர்கள் தி.மு.க., ஆட்சிக்கு கெடு வைத்து விடுவர். ஆட்சியில் இருக்கும் தி.மு.க., கையைப் பிசைந்தும் பயனில்லை; கண்ணை உருட்டியும் பயனில்லை. கூட்டணித் தலைவர்கள் வாத்தியார் மாதிரி நின்று ஆணையிடுவர்; ஆட்டி வைப்பர். தி.மு.க., கதி என்னாகும்? நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பது போல், தி.மு.க.,வின் நிலை வந்து விடுமே! கூட்டணிக் கட்சிகள் தி.மு.க.,வின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இந்த அவதி ஏன் வந்தது? அள்ளித் தெளித்த இலவச வாக்குறுதிகளால் அல்லவா?

--- நன்றி தினமலர்
(இத சொல்லாட்டி சில முகவரியற்றவர்களின் தொல்லை தாங்கமுடியலப்பா)

--என்னுடைய கருத்து

கூட்டணி ஆட்சி என்றால் அதுவும் பா,மா.க தயவில் என்றால் ராமதாஸின் அட்டகாசம் தாங்கமுடியாது. கருணாநிதி நிம்மதியாக தூங்கவும்முடியாது.
ஏற்கனவே தமிழ்நாட்டை சென்னையையும், மதுரையையும் தலைநகர்களாக வைத்து இரண்டாக பிரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

எனென்றால் வடக்கே அவரின் கட்சிக்கு அமோக ஆதரவு உள்ளதாகவும் அதைவைத்து வடதமிழ்நாட்டில் ஆட்சியைப்பிடித்துவிடலாம் என்கிற
கணக்கில் தான் (புதுவை மக்கள் பாடம் புகட்டியும் கூட புத்தி வரவில்லை). இந்நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்கள் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கட்டாயம் கேட்பார் ராமதாஸ். இப்போது கருணாநிதி மத்திய அரசை மிரட்டுவது போல தமிழ்நாட்டில் ராமதாஸ் கருணாநிதியை மிரட்டலாம். இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

Thursday, April 20, 2006

"கேப்டன்" விஜயகாந்த்தின் பேட்டி - குமுதம்

"கேப்டன்" விஜயகாந்த்தின் பேட்டி - கோடை வெயிலுக்குச் சற்றும் சளைக்காத சூட்டுடன்....

உங்கள் வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீங்க?

"என்னோட கட்சி வேட்பாளர்கள் எளிமையானவர்கள். திறமையானவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். இவங்க உங்க கூடவே இருந்து, உங்களில் ஒருத்தராக இருப்பாங்கன்னு மக்கள்கிட்டே பகிரங்கமாகச் சொல்லிட்டு வர்றேன். உண்மை, உழைப்பு, நேர்மை, கல்வித்தகுதி எல்லாத்தையும் கவனத்தில் வச்சேன். டாக்டர்கள், என்ஜினீயர்கள், பட்டம் பெற்றவர்கள் இப்படி பலவிதமாக களத்தில் இருக்காங்க. பெண்களுக்குப் பெரிய பங்கு இருக்கு."

மிகவும் ஆரம்ப நிலையில் இருக்கிற ஒரு கட்சி. அதோடு தேர்தல் களத்துக்கும் வந்தாச்சு. 234 தொகுதிக்கும், வேட்பாளர், பயணம், பிரசாரம், மேடைகள், கூட்டங்கள் மலைப்பாக இருக்கு. செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீங்க?

"நான் சினிமாவில் நடிச்சு வந்ததெல்லாம், மக்கள் என்மேல் வைச்ச அன்பினால் வந்த பணம். அதையும் கட்சி நடத்த செலவழிக்கிறேன். அதுவும் பெரிய பணம் அல்ல. கட்சிக்காரர்கள் முடிந்த அளவுக்குத் தங்களுடைய பணத்தைக் கட்சிக்கும், தேர்தலுக்கும் செலவழிக்கிறாங்க. பூந்தோட்டத்திற்கு எதுக்கு சார் விளம்பரம்? நல்லது செய்கிறவங்களுக்கு ஓட்டா? நாட்டை ஏமாத்தறவங்களுக்கு ஓட்டான்னு கேக்குறேன். இதுக்கு எதுக்குப் பணம்?"

திடீர் தலைவர்னு உங்களைப் பற்றிய கிண்டல் இப்பவும் இருக்கிறதே?

"இப்படிப் பேசுறவங்களுக்கு நான் சொல்கிற அறிவுரை ஒன்றே ஒன்றுதான். உங்கள் மூளையைக் கொஞ்சம் பயன்படுத்தி, நடந்த விஷயங்களை யோசிச்சுப் பாருங்க. அறிஞர்அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் முதல்வர் ஆனது திடீர் என்றுதானே?

சோனியாகாந்திதான் பிரதமர்னு நினைச்சுதானே மக்கள் ஓட்டுப்போட்டாங்க. மன்மோகன்சிங் எப்படி வந்தார்? சோனியா காந்தியே திடீர் தலைவர்தானே? அ.தி.மு.க. ஜெயிச்சு பிரச்னை வந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வந்தாரே? அவர் திடீர் தலைவர் இல்லையா? இப்படி ஒவ்வொரு கட்சியும் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்திட்டு எங்கிட்ட வாங்க. யார் தலைவன்னு நம்மளை நாமளே
சொல்லிக்கிறதில்லைங்க.. மக்கள்தான் முடிவு பண்றாங்க."

வைகோ அ.தி.மு.க. கூட்டணிக்குப் போயிடுவார்னு, நீங்கள் முன்பே பேட்டியில் தெளிவாகச் சொல்லியிருக்கீங்க. எப்படி இந்த அனுமானம்?

"ஒரு சின்ன கணக்குதான். வைகோவோட ம.தி.மு.க. என்பதே வாரிசு அரசியலை எதிர்க்கிறதுதான். இதைத் தாவல்னு சொல்றாங்க. அவமானப்படுத்தி விட்டார்கள் என்கிறார்கள். அவருக்கு என்ன அவமானப்படுத்தப்படுவது புதுசா? ஏற்கெனவே தன்னை அவமானப்படுத்திட்டாங்க என்றுதானே தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறினார். நான் மக்கள்கிட்டே சொல்றது இதுதான். பாருங்க, யாராவது உங்களோட பிரச்னைக்குச் சண்டை போட்டுட்டு கூட்டணியை மாத்தி இருக்கிறார்களா? எவ்வளவு கேட்டும் என் தொகுதிக்குத் தண்ணி வரலைன்னு சொல்லிட்டு, எந்த எம்.எல்.ஏ. யாவது கட்சி மாறியிருக்காங்களா? இப்படி மாறி மாறி ஓட்டுப்போட்டு, இந்த இரண்டு துருப்பிடிச்ச கட்சிகளை ஆதரிக்கப் போறீங்களா?

வாரிசு அரசியலை நீங்க ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? உங்க குடும்பத்து ஆட்களும் உங்க கட்சியில் பங்கெடுக்கறாங்களே?

"அமெரிக்க அதிபர் புஷ்ஷோட அப்பா யாரு? இந்திரா அம்மையார் யாரு? ராஜிவ் காந்தி யாரு? சோனியா காந்தி யாரு? ஜி.கே. வாசன் யாரு? ஒரு கட்சித்தலைவருக்கு மகனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக யாரையும் ஒதுக்கிவிட முடியாது. அவரோட அர்ப்பணிப்பும், கட்சிக்கான உழைப்பும்தான் முக்கியமானது. ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக ஏன் வரக்கூடாது? அவர் தொடர்ந்து அந்தக் கட்சிக்காக வருஷக் கணக்காக உழைக்கிறாரே! காலங்காலமாக கட்சிக்கு உழைச்ச தி.மு.க.காரன் வயித்துல துண்டை
போட்டுட்டு, திடீர்னு புதுசாக எங்கேயிருந்தோ கொண்டு வந்து திணிக்கிறாங்க இல்லையா? அதை எதிர்க்கிறேன். மத்தபடி, எங்க வீட்டில் எனக்குச் செய்வது உதவி. பையன் பரீட்சைக்கு படிச்சா, அம்மா நாலு மணிக்கே எழுந்து டீ போட்டுக் கொடுத்து பக்கத்துல உட்கார்ந்து பார்த்துக்கிறதில்லையா? அப்படித்தான் என் வீடு."

தி.மு.க., அ.தி.மு.க. பேச்சாளர்கள் உங்களைத் தாக்கிப் பேசுகிறார்கள். ஆனால், தி.மு.க. தலைவரோ, அ.தி.மு.க. தலைவரோ அப்படி நேரடியாகத் தாக்குகிற மாதிரி தெரியவில்லையே?

"இரண்டு கழகத்தின் தலைவர்களுக்கும் என் பலம் புரிந்திருக்கிறது போல."

கடைசி வரைக்கும் அ.தி.மு.க. விற்குப் போய்விடுவீர்கள் என்று ஒரு செய்தி இருந்ததே?

"ஆரம்பத்திலிருந்து நான் மட்டும்தான் தனியாக நிற்கிறேன் என்று ஒரே வார்த்தையில் நின்னேன். அப்படியேதான் இப்பவும் இருக்கேன். இடையில் எல்லாக் கட்சியும் பேசிப்பார்த்தாங்க. நாங்க எங்க வேலையைப் பார்த்தோம். உளவுத்துறையும் நிறைய வேலை செய்தது."

இந்தக் கல்யாண மண்டபம் எந்த அளவில், எப்படி இருக்கு?

"விஜயகாந்த் எதிரின்னு நினைச்ச உடனே தி.மு.க. மண்டபத்தை இடிச்சு சந்தோஷப்பட பாத்தாங்க. காலம் மாறின உடனே, ஒரு புது ப்ளான் போட்டுக் கொடுத்தால் இடிக்காமல் விடுவதைப் பற்றிப் பார்க்கலாம்னு டி.ஆர்.பாலு சொன்னார். ஆனால், நான் ஒரு புது ப்ளானை இன்ஜினீயர்களை வச்சுப்போட்டு டி.ஆர். பாலுவிற்கு அனுப்பியிருக்கேன். இதுவரைக்கும் பதில் இல்லை. அனுப்பலைன்னா நீங்கதான் அனுப்பலைன்னு சொல்லிவிடுவாங்க. இதோ அனுப்பியாச்சு... பாலம் மண்டபத்துக்கு மேல போகுதா? இல்லை மண்டபத்து
மேலேயே போகுதான்னு பார்ப்போம்."

நீங்கள் எம்.ஜி.ஆரின் விசுவாசி. அ.தி.மு.க.வில் கூட அந்த மாதிரி விசுவாசிகள் இருக்காங்களே?

"ராமாபுரம் பக்கம் போனால் தோட்டத்தைப் பாருங்க. எப்பேர்ப்பட்ட வள்ளல்! எப்படி வாழ்ந்தது அந்த மனித மாணிக்கம்! வீடும் தோட்டமும் கவனிக்க ஆள் இல்லாமல் சிதைஞ்சு கிடக்கு. பாக்க நெஞ்சு அடைக்குது சார்... இன்னிக்கு அவர் போட்ட சாப்பாடு, வேலை, உடை, கட்சி, கௌரவம்னு வாழறவங்க நிறையப்பேர் இருக்காங்க. அவங்க உருவாக்கின கட்சி, கோடிகளில் கொண்டாட்டமாக இருக்கு. ஆனால், அவர் நடந்து வாழ்ந்த மண்? எம்.ஜி.ஆர். ஆத்மா இவர்களை மன்னிக்காது. ஜானகி அம்மா பள்ளிக்கு அப்ப 25,000 ரூபாய் கொடுத்தேன். இப்ப அவங்க கூட இல்லை. ஆனால் 50,000 ரூபாய் வருஷத்திற்குக் கொடுக்கிறேன்.
எம்.ஜி.ஆர். பெயரைச்சொல்லி வாழறவங்க எங்கே? அந்த விசுவாசிகள் எங்கே? மறந்த அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? கடவுள் கவனிச்சுக்கிட்டே இருக்கார்."

கட்சி ஆரம்பிச்சீங்க. கூட்டம் கூட்டமாக மக்கள் வர்றாங்க. தொடர் பயணம் எல்லாம் சரி. இன்னும் உங்க சின்னம் தெரியலை. தெரிய வைக்க என்ன செய்யப்போறீங்க?

"நாம நல்லது பண்ணுவோம்னு தெரிஞ்சால் மக்கள் நம்ம சின்னத்தையே தேடி வருவாங்க. மக்களுக்கு விஜயகாந்தைத் தெரியும். அவங்களுக்கு விஜயகாந்தின் சின்னத்தைத் தெரிஞ்சுக்கிறது சுலபம். ஓட்டு நல்ல ஆட்சிக்குத்தானே தவிர, பழகின சின்னத்திற்கு அல்ல. எம்.ஜி.ஆருக்கு திடீரென்று இரட்டை இலை கிடைச்சு ஜெயிக்கலையா? சின்னம் ரீச் ஆயிட்டால் ஜெயிக்கலாம்னா, போன
பார்லிமெண்ட் தேர்தலில் அ.தி.மு.க. ஏன் படுதோல்வி அடைந்தது? இலை ரீச் ஆகலையா? சார், மக்களுக்கு நல்லது பண்ணினால் கொண்டாடுவாங்க நிச்சயமாக."

ஒரே வார்த்தையில் சொல்லுங்க. என்ன சொல்லி இந்த இரண்டு கட்சியையும் எதிர்க்கப்போறீங்க?

"ஊழல்தான்... இவங்க இரண்டுபேரும் பெரிசு பெரிசா ஊழல் பண்ணி, எக்கச்சக்கமாகச் சொத்து சேர்த்து வைச்சிருக்காங்க. கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க. அந்தப் பணத்தை எல்லாம் எண்ணி முடிக்கவே, அடுத்த ஐந்து வருஷம் ஆகும். அதுவரைக்கும் ஆட்சியை விஜயகாந்த் கையில் கொடுங்க. நீங்க திரும்ப இறக்கிவிட முடியாத அளவுக்கு வேண்டியது எல்லாம் செய்கிறேன்."

நன்றி - குமுதம்

25 லட்சம் லாட்டரி வியாபாரிகள் திமுக-விற்கு ஆதரவு

தினகரன் செய்தி



லாட்டரி விற்கும் 25 லட்சம் குடும்பங்களில் அடுப்பு எறியும்.
அதை வாங்கும் 50 லட்சம் கும்பங்களில் என்ன எறியும்?
வயிறா?. இதுக்கு மக்கள்தான் பதில் சொல்லனும்.


Wednesday, April 19, 2006

கருணாநிதியின் சூப்பரோ, சூப்பர் பிளான்!

சூப்பரோ, சூப்பர் பிளானுங்கோ!

அ.கணேசன், தேனியிலிருந்து எழுதுகிறார்:

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கலர் "டிவி' இல்லாத வீடுகள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு கலர் "டிவி' வழங்குவோம்' என்று தன் தேர்தல் அறிக்கையில் தி.மு.க., அறிவித்திருக்கிறது.இந்த கலர் "டிவி' விவகாரம் குறித்து விமர்சித்தாலே கருணாநதிக்கும், அவரது கழக உடன்பிறப்புகளுக்கும் கோபம் கொந்தளித்துக் கொண்டு வருகிறது.

அரசாங்கம் என்பது நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தும் போது, அதன் பயன் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதில் ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு. அதை ஒரு அலசு அலசிவிட்டு, இந்த கலர் "டிவி' விவகாரத்திற்குள் நுழைவோம்.

விவசாயிகள் என்பவர்கள் எப்பொழுதுமே வறுமையிலும், துன்பத்திலும் உழன்று கொண்டிருப்பவர்கள்; நெசவாளர்களும் அப்படியே! விவசாயிகளுக்கும், நெசவாளி களுக்கும் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, இலவச மின்சாரம் போன்ற சலுகைகளை ஒரு அரசாங்கம் வழங்கும் போது, யாரும் வயிறெரியவோ, பொறாமைப்படவோ போவதில்லை. காரணம்: அது, அவர்களது "வாழ்க்கை' பிரச்னை.

அதேபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தீவிபத்து, சுனாமி, பூகம்பம், பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கும் அரசாங்கம் உதவிக்கரம் நீட்டி, நவாரணத் தொகை வழங்கும் போது, யாரும் குறையோ, குற்றமோ கூற மாட்டார்கள்; ஏனெனில், அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

ஆனால், கலர் "டிவி' விஷயம், வாழ்க்கைப் பிரச்னை அல்ல; முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சமாச்சாரம்(இப்போது உள்ள டிவி-களில் வேரென்ன நல்ல விசயங்களை சொல்லப்போகிறார்கள்). இந்தப் பொழுதுபோக்கு சமாச்சாரத்தில், ஒரு வீட்டுக்குக் கொடுத்து, ஒரு வீட்டுக்கு மறுத்து, ஏற்றத்தாழ்வு பார்த்தால், இதை ஏற்றுக் கொள்ள முடியுமா? இது ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு
கண்ணில் சுண்ணாம்பும் தடவும் விஷ(ய)ம் அல்லவா?

"ஓட்டுப் போட்டாலும், நமக்குக் கலர் "டிவி' கிடைக்கப் போவதில்லை' என்று தெரிந்தால், யாராவது கழக வேட்பாளர்களுக்கும், அதன் தோழமைக் கட்சி கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்க முன் வருவரா?பகுத்தறிவு பற்றி பேசும் கழகத் தலைமை, இந்த விஷயத்தைப் பகுத்தறிந்து பார்க்க மறந்தது ஏன்?

தமிழகத்தின் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் தொகையில், 30 லட்சம் வீடுகளில் மட்டும் தான் கலர் "டிவி' இல்லையாம். அதையும் துல்லியமாகக் கணக்குப் போட்டு காட்டி விட்டனர்.வீட்டுக்கு நாலு ஓட்டு என்று
எடுத்துக் கொண்டாலும், 30 லட்சம் வீடுகளில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் ஓட்டுக்கள் தானே தி.மு.க., கூட்டணிக்குக் கிடைக்கும். மீதியுள்ள ஓட்டுகள் எதிரணி (அ.தி.மு.க., அல்லது தே.க.தி.க., அல்லது பா.ஜ.,)க்குத் தானே போகும்.

அடுத்து இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கலர் "டிவி'யை இலவசமாக வாங்கினால், அந்தக் குடும்பம் அடுத்த ஐந்தாண்டுகளில் கேபிள்
கனெக்ஷனுக்காக ஆறாயிரம் ரூபாய் (மாதம் 100 ரூபாய் வீதம்) கட்ட வேண்டி வருமே! இது சுண்டைக்காய் கால் பணம் (ஆனால், கலர் "டிவி' ப்ட) சுமை கூலி (கேபிள் கனெக்ஷன்) முக்கால் பணம் என்பது மாதிரி அல்லவா உள்ளது.
மொத்தம் 30 லட்சம் கலர் "டிவி' இலவசமாக வழங்க அரசுக்கு அதிகம் செலவாகாதாம்; 600 கோடி தான் ஆகுமாம்.

அதாவது, அரசு 600 கோடி செலவழித்து, 30 லட்சம் வீடுகளுக்கு கலர் "டிவி' வழங்குமாம்... அதிலிருந்து ஒரு தனியார் கேபிள் கனெக்ஷன் ஐந்தாண்டுகளில் 1800 கோடி ரூபாய் சம்பாதிக்குமாம். தற்போதைய வசூல் தனி! சூப்பர் பிளானுங்கோ; சூப்பரோ சூப்பர் பிளான்!

வைகோ -வின் மிகப்பெரிய தவறு! (புதுப்பிக்கப்பட்டது)

வைகோ கூட்டணி மாறியது பற்றி, பல ஊடகங்கள் பலவாறு விமர்சித்துக்கொண்டிருக்கின்றன. சிலர் அவரை துரோகி என்றும், சிலர்
அவர் பணத்துக்காக ஜெயலலிதாவிடம் சரணடைந்து விட்டார் என்றும் மேலும் சிலர் தன் கட்சியின் இரண்டாம் கட்டதலைவர்களின் வற்புறுத்தலின் பேரில்தான் இத்தகைய முடிவு எடுத்துவிட்டார் என்றும் பலவாறு பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

திமுக-வினர் இன்று வைகோவை துரோகி என்றும், "பெட்டி வாங்கிகொண்டு உன்னை சிறையில் தள்ளிய ஜெயலலிதாவை ஆதரிக்கிறாயே!, நாயே!" என்றும் ஏசுகின்றார்கள். ஒன்றை நடுநிலையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதே கலைஞர் தான் வைகோ என்னைக் "கொலை செய்ய முயன்றார்" என்று பழி சுமத்தி , கட்சியை விட்டே நீக்கி ஆயுள் தண்டனை கொடுத்தவர். அதன் பிறகு 5
பேரின் உயிர்தியாகத்தின் மேல்தான் மதிமுக பிறந்தது. ஆனால் அத்தகைய தியாகத்தை மறந்து மீண்டும் திமுக-வுடன் கூட்டனி வைத்ததுதான் "வைகோ செய்த மிகப்பெரிய தவறாகும்".

சிலர் சொல்லுகிறார்கள் வைகோவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர கலைஞரும் திமுக-வினரும் தான் உதவினர் என்று. ஆனால் அது எதற்காக என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டும். அப்போது மத்திய அரசுக்கான தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. மாநிலத்தில் ஆட்சியில் இல்லாத திமுக-விற்கு ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் நடத்தவும், தன்
சொத்துகளையும் , குடும்ப தொழில்களையும் காப்பாற்ற மத்திய அரசில் முக்கியப்ப்ங்கு வகிப்பது மிக அவசியமாகிவிட்டது. அப்போது பெரிய தவறு எதுவும் செய்யாமல் ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்டதால் வைகோ மீதான அனுதாப அலையை கருணாநிதி பயன்படுத்திக்கொள்ளத்தான் வைகோ-வின் மீது மிகுந்த அக்கரையுள்ளது போல நடித்தார் கருணாநிதி. அந்த தேர்தலில் திமுக தன்னுடைய சொந்த செல்வாக்காலோ, அல்லது மக்களுக்கு அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையினாலோ வெற்றிபெறவில்லை. வைகோ-வின் மேல் இருந்த அனுதாப அலையும், அவரின் தமிழகம் முழுவதுமான தேர்தல் பிரச்சாரமும், அப்போது ஜெயலலிதா எடுத்த சில அதிரடி நடவெடிக்கைகள் மக்களுக்கு பிடிக்காமல் போனதாலும் மேலும் மிகப்பெரிய மெகா கூட்டணியினால் மட்டுமே அவர்களால் வெற்றிபெற முடிந்த்து. வெற்றிபெற்றவுடன் அதற்காக பாடுபட்டவர்களை மறந்துவிடுவது கருணாநிதியுன் குடும்பவழக்கம்.

இன்று வைகோ-வை "நாயே!" என்று விளிக்கும் தயாநிதி மாறனுக்காவும் தான் அன்று வைகோ பிரச்சாரம் செய்தார். வெற்றிபெற்ற பிறகு மத்தியில் தங்களுக்கு வருமானம் ஈட்டித்தறும் அமைசசர் பதிவிகளை அதுவும் தன் பேரனுக்கு வாங்கி கொடுப்பதில் கருணாநிதி காட்டிய அதே மும்முரத்தைதான் வெற்றிக்காக பாடுபட்ட வைகோ-வை கூட்டணியில் இருந்து புறக்கணிக்கவும் காட்டினார்.

வைகோ-வையும் மதிமுக-வையும் அழிக்க திமுக (முக்கியமாக ஸ்டாலின்) மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் கூட்டணி மாறத்தூண்டின என்றால மிகையாகாது. ஜெயலலிதா எதிரி என்றால் கருணாநிதி இங்கு துரோகியாகிட்டார். துரோகிக்கு எதிரி எவ்வளவோ மேல் என்றுதான் வைகோ ஜெ வுடன் கூட்டனி சேர்ந்தது. வைகோ-வால் தனியாக தேர்தலை சந்தித்திருக்க முடியும், ஆனால் அப்படி சந்திப்பதால் லாப நஷ்டங்களைப்பார்த்தால், மதிமுக இப்போது இருக்கும்
சூழ்நிலையில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வரமுடியாது. வேண்டுமானால் அதிமுக அல்லது திமுக-வின் ஓட்டுகளை வேண்டுமானால் பிரிக்கலாம், ஆனால் அப்படிப்பிரிப்பதானல் என்ன லாபம். ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றால் அதனால் பெரிய அளவில் மதிமுக-விற்கு பாதகம் இருக்காது( வேண்டுமானால் ஜெ சிறையில் தள்ளுவார், அதனால் மதிமுக பலம் பெறுமே தவிர அழிந்து விடாது) ஆனால் துரோகி திமுக வென்றால் மதிமுக-வின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அதனால்தான் திமுக-வை தோற்கடிக்க
ஜெ-வுடன் கைகோர்க்க வேண்டிய நிலைக்கு வைகோ தள்ளப்பட்டார். கூட்டனி தர்மத்திற்காக அதிமுக-வை புகழ்ந்து கொண்டிருக்கிறார். மற்றபடி தொகுதிப்பங்கீட்டுப் பிரச்சனை என்பதெல்லாம் வெறும் நாடகம்தான். இந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் அதன்பிறகு ஸ்டாலின் தலைமையில் திமுக -வும் ஜெ தலைமயில் அதிமுக-வுமே தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக
இருக்கும் . ஏனென்றால் ஆட்சியில் இருக்கும் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. ஆனால் இந்த தேர்தலில் திமுக தோற்கும் பட்சத்தில் , அதன் தலைவர் கருணாநிதி காலத்திற்கு பிறகு கட்சியில் பல பிளவுகள் ஏற்பட நிறையவே வாய்ப்பு உள்ளது(அதுவும் ஆட்சியில் இல்லாதபோது மிக அதிகமாகவே உள்ளது). இப்போதே பலர் மனதுக்குள் கொதித்துக்கொண்டுதான்
உள்ளார்கள், பலர் கருணாநிதிக்காக மெளனம் காத்துக்கொண்டிருக்கின்றனர். என்வே அதிமுக-வின் வெற்றியை விட திமுக-வின் தோல்விதான் வைகோ-விற்கும் மதிமுக-விற்கும் இப்போது ஒரே நோக்கமாக உள்ளது.

கருணாநிதி தன்னுடையகாலத்தில் தனக்கு நெருக்கமாக திறமையான நல்ல பேச்சாற்றலும் விசுவாசமும் கொண்ட சில தலைவர்களை (அன்பழகன், துறைமுருகன், ஆற்காடு வீராச்சாமி, கோ.சி மணி, மறைந்த நாஞ்சில் மனோகரன் மற்றும் பிடிஆர்) வைத்திருந்தார். ஆனால் பல வருடங்களாக கட்சியில் இருக்கும் அதுவும் தலைவருக்கு மிக அருகாமையில் இருக்கும், அடுத்த தலைவர் என்று எதிர்பார்க்கப்படும் ஸடாலின் அப்படி ஒரு வட்டத்தை தன்னைச்சுற்றி உருவாக்கிக்கொள்ளவில்லை. இப்போது அவரைச்சுற்றி
இருப்பவர்கள் எல்லாம் அவரது அடிவருடிகளாகவும், காக்கைகளாகவும், ஜால்ராக்களாகவும் தான் இருக்கின்றனர். இது வரை தன்னை ஒரு தலைமை பண்புகளுடன் கூடிய ஆற்றல் மிக்க ஒருவனாக மாற்ற முயலவில்லை அதோடு மட்டமல்லாமல் திமுக-விலும் அப்படி யாரையும் அடுத்த தலைமுறையில் உருவாக்கவிடவும் இல்லை. அதற்கு அவரின் இயலாமையும், சுயநலமுமே காரணமாக இருக்கிறது. இதனால் கலைஞர் காலத்திற்கு பிறகு திமுக-வில் உள்ள திராவிட கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்கள் நிச்சயாமாக வைகோ-வின் பின்னால் அணிவகுப்பார்கள். அப்போது அதிமுக மற்றும் மதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக
திகழும் என்று எதிர்பார்க்கிறேன்.

Monday, April 17, 2006

தி.மு.க - வின் குடும்ப அரசியல் - சரத்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க., குடும்ப அரசியலால் கட்சியில் பலர் பாதிப்பு: சரத்குமார் குற்றச்சாட்டு

தேனி: தி.மு.க.,வில் நிடக்கும் குடும்ப அரசியலால் கட்சியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் அ.தி.மு.க.,வில் சேர்ந்தேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். அ.தி.மு.க.,வில் சேர்ந்த பிறகு நடிகர் சரத்குமார்

தேனியில் நிருபர்களிடம் கூறியதாவது:


தேனியில் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் நான் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் நல்லாட்சி நடக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் நான் இணைந்துள்ளேன். தி.மு.க.,வில்
குடும்பத்தினரின் சிபாரிசு, தலையீடு அதிகரித்துள்ளது. அங்கு மூத்த தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னோடிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு மதிப்பில்லை. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. தி.மு.க.,வில் குடும்ப அரசியல் நிடக்கிறது. இதனால், கட்சியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களும் நல்ல முடிவு எடுப்பர்.
என்னைப்போல் பலரும் தி.மு.க.,வில் மனக்குறையுடன் உள்ளனர். நான் வெளியே சொல்லிவிட்டேன். விரைவில் அவர்களும் சொல்வார்கள். நான் இப்போது எடுத்துள்ள இந்த நல்ல முடிவு என் வாழ்வின் புதிய முடிவு. நிரந்தரமான முடிவும் இது தான். நிதானமாக சிந்தித்து, நண்பர்களுடன் ஆலோசித்த பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
என் ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் 80 சதவீதம் பேரிடம் இது பற்றி கருத்து கேட்டு ஆய்வு செய்தேன். அவர்கள் அனைவருமே நான் இருக்க வேண்டிய இடம் அ.தி.மு.க., தான் என்று தெரிவித்தனர். இப்போது தான் சரியான இடத்திற்கு வந்துள்ளேன். ராடான் டிவி என்பது கார்ப்பரேட் நறுவனம். சன் டிவி கார்ப்பரேட் நிறுவனம். செல்வி உள்ளிட்ட தொடர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாவது பற்றி சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநதி மாறன் தான் முடிவு எடுக்க வேண்டும்.

திருச்சியில் சென்ற மாதம் நிடந்த மாநாட்டில் நான் தி.மு.க.,வில் கடைசிவரை இருப்பேன் என பேசியது உண்மைதான். அப்போது எனக்கு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதன் பின்னரும் எனக்கு மிரட்டல்கள் தொடர்ந்தன. எவ்வளவு காலம் தான் மிரட்டல்களை தொடர்ந்து தாங்கிக்கொண்டு இருக்க கடியும்? நான் எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன். உள்மனம், வெளிமனம் மற்றும் இறைவனுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்.
இன்று காலை 11.30 மணிக்கே என் எம்.பி., பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி விட்டேன். எந்த பதவிக்காகவும் அ.தி.மு.க.,வில் நான் சேரவில்லை. சின்ன வயதில் இருந்தே நான் எம்.ஜி.ஆர்., ரசிகன். அதன்படிவிசுவாசமுள்ள போர் வீரனாக இருப்பேன். இதனால் தான் தற்போது அக்கட்சியில் சேர்ந்துள்ளேன். அன்று எனது நடிப்பிற்காக எம்.ஜி.ஆர்., விருது கொடுத்தனர். அப்போது, இந்த விருது பெறுவது உனக்கு சந்தோஷம் தானே? என கிண்டல் செய்தனர். இப்போது எம்.ஜி.ஆ ரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் முதல்வர் ஜெயலலிதா
பின்பற்றி வருகிறார்.
தி.மு.க., தலைவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் தடுக்க பலர் தயாராக உள்ளனர்.அதை நிறைவேற்றும் போது பார்த்துக் கொள்ளலாம். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற
நோக்கத்துடன் வரும் ஏப்., 20 முதல் பிரசாரம் செய்வேன். நான் பிரசாரம் செய்யப்போகும் இடங்களை முதல்வர் தேர்ந்தெடுப்பார். பிரசாரத்தின் போது திரைமறைவில் நடந்த உண்மைகளை வெளியே சொல்வேன். அப்போது அவர்களும் பதில் சொல்லட்டும். ராதிகாவிற்கு தற்போது கம்பெனி வேலை அதிகமாக இருப்பதால் அவர் பிரசாரம் செய்வது குறித்து முடிவெடுக்கவில்லை. இனிமேல் நிரந்தரமாக அ.தி.மு.க.,வில் தான் இருப்பேன். நான் சேரும் கடைசி கட்சி இது தான். இவ்வாறு சரத்குமார் கூறினார். பேட்டியின் போது இடையே வந்த ராதிகா கூறியதாவது: நான் சில காலமாக எந்த கட்சியிலும் சேரவில்லை. தற்போது என் கணவருடன் வந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்துள்ளேன். செல்வி தொடர் ஒளிபரப்பாவது பற்றி சன் டிவி முடிவு எடுக்க வேண்டும் என ராதிகா கூறினார்.

தேர்தல் காமெடிகள்

செய்தி : சினிமாவை வாழவைத்த ஜெ!.

சினிமாவை வாழவைத்தார அல்லது உங்களைப்போன்ற மார்கட் இழந்த நடிகர், நடிகைகளை வாழவைத்தாரா?!





வாசன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம்.

ஹிஹி... செயல் வயோதிகர்கள் கூட்டம் போல இருக்கே!





களம் இறங்குகிறார் கராத்தே!. எத்தனை ரவுண்ட் வருவார்? ஹிஹி...








மன்னிக்கவும் சிறு பிழை நேர்ந்துவிட்டது.

இது ராமதாஸின் கோபம் அல்ல, ராமதாஸின் சாபம்!





பார்த்துப்பா இது அருவா இல்லை, குழந்தை!.



ராமதாஸின் கனவு Vs ஒரு இளைஞனின் கனவு


தினமலரில் வெளிவந்த இது உங்கள் இடம் பகுதியில் இருந்து.

டாக்டர் க.சற்குணம், சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பிய இ-மெயில் கடிதம்:
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் சாராம்சத்தை பார்க்கும் போது, அ.தி.மு.க., தவிர, வேறு எந்தக் கூட்டணியிலும் தமிழகத்தின் முன்னேற்றத் திற்கான திட்டங்கள் இல்லை. மற்ற எல்லா கட்சிகளும் இலவசம், ஜாதி அல்லது மதம் இவைகளையே முன்னிறுத்துகின்றன.

நீங்களே உங்கள் மனச்சாட்சியை தொட்டு, ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்... கடந்த ஐந்தாண்டுகளில் நிடந்த சில விபத்துக்களுக்கும், சில தகாத சம்பவங்களுக்கும் யார் காரணம்? நாம் தான் காரணம்... நம் பேராசை தான் காரணம்! நாம் விலங்குகள் அல்ல... இலவசமாகக் கொடுக்கின்றனர் என்பதற்காக நம் உடல் பலத்தால் நம் சகோதர, சகோதரிகளை, முதியோர்களை மிதித்து விட்டு சென்று நிவாரணங்களை வாங்க முயற்சித்தது யார் தவறு? இதே வலிமையை வைத்து உழைத்துப் பிழைக்கலாமே... கேவலம் இலவசத்திற்காக அத்தனை உயிர்களை இழந்தோமே.

நான் ஒரு இளைஞன். எனக்கு கருணாநதி கொடுக்கும் 300 ரூபாய் மாதாந்திர இலவசத் தொகை (பிச்சை) தேவையில்லை. என்னைப் போன்ற இளைஞர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் தான் வேண்டும். இவர்கள் கொடுக்கும் பிச்சை வேண்டாம். நாங்களும் முன்னேற வேண்டும்... நாடும் முன்னேற வேண்டும்.

உங்களிடம் ஒரு நாட்டுப் பற்றுள்ள ஒரு இளைஞனாக வேண்டிக் கொள் கிறேன்: தயவுசெய்து இலவசம் வேண் டாம்... அதற்கு அடிமையாக வேண் டாம். அதனால் நாம் இழந்தது போதும்!

கலர் "டிவி'க்காகவும்; இரண்டு ஏக்கர் நலத்திற்காகவும்; 300 ரூபாய்காகவும் நாம் தி.மு.க., கூட்டணி தலைவரிடம் பிச்சை எடுக்க வேண்டுமா? அதுவும் அவரது சொந்த பணத்தில் இல்லை; நம் வரிப் பணத்தை தான் செலவிடப் போகின்றனர்.

இலவச கல்வி, இலவச சுகாதாரம் போன்றவை நாட்டிற்குத் தேவையானவை. இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைப்பவை. ஆனால், கலர் "டிவி'யும், 300 ரூபாயும் எந்த சமூக ஏற்றத்தாழ்வுகளையும் குறைக்காது.

கடந்த 1991- 96ல் இருந்த ஜெயலலிதாவின் ஆட்சி போன்றல்ல இப்போது இருப்பது. அவர்கள் நிறையவே மாறி விட்டனர்; தவறை விட்டுத் திருந்தியுள்ளனர்.

ஆனால், தவறுகளையே வாழ்க்கையாகக் கொண்டவர்களை எவ்வாறு ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும்? அதிலும் மக்களை முட்டாள்கள் என நினைப்பவர்களை... நாம் அறிவுள்ள, உணர்வுள்ள, வலிமையுள்ள தமிழர்கள் தானே! நம்மை பிச்சை எடுக்க வைக்காமல், சுய கவுரவத்துடன் வாழ வைக்கிற அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தி, இந்தியாவின் மற்றைய மாநலங்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்வோம்!

மருத்துவர் அய்யா கனவு!

கே.சபாபதி, கோவையிலிருந்து எழுதுகிறார்: ஒருவர் காரை ஊர் எல்லைக்குள் ஓட்டி வருகிறார். பின்னாடியே சைரனுடன் ஒரு போலீஸ் கார் துரத்தி அவரைக் குறுக்கிடுகிறது. "நீ அதிவேகமாக கார் ஓட்டினாய்' என்று போலீஸ்காரர் கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போகிறார்.

அங்கிருந்த மேலதிகாரியிடம், "மாமா இவன் காரை அதிவேகமாக ஓட்டி வந்தான்' என்று குற்றம் சாட்டுகிறார். "நான் எப்.ஐ.ஆர்., பைல் பண்ணிக்கிறேன். இவனை நம்ம ஜெயிலர் பெரியப்பாவிடம் கொண்டு போய் அடை. நாளை காலையில் மாஜிஸ்திரேட் சித்தப்பா முன் ஆஜர்படுத்து மாப்பிள்ளை' என்று அந்த அதிகாரி அனுப்பி வைக்கிறார்.

வழியில் ஒரு ஓட்டல், "இது என் மச்சினன் நடத்துற ஓட்டல். நல்லா இருக்கும். வா சாப்பிடலாம். நீ தான் துட்டு குடுக்கணும்' என்று போலீஸ்காரர் அங்கு அழைத்துப் போகிறார். சாப்பிட்டு எழுந்ததும்,

"பயப்படாதே. பிராசிகியூட்டர் என் ஒண்ணுவிட்ட சித்தப்பா தான். நான் சொன்னா கேட்பார். இல்லாட்டி போனாலும், என் அத்தை மகன் தான் பிரபல வக்கீல். அவரை ஏற்பாடு செய்கிறேன்' என்பார்.

காரோட்டி தன்னிடமிருந்து பணம், காசு, நிகை, நிட்டு அத்தனையையும் அந்த போலீஸ்கார஛டம் கொடுத்துவிட்டு, தப்பித்தேன்... பிழைத்தேன் என்று காரை மெதுவாக, மிக மெதுவாக ஓட்டியபடி ஊர் எல்லையைப் கடப்பார்.

இது ஒரு ஆல்பிரட் ஹிட்ச்காக் கதை. ஒரு அமெரிக்க கிராமத்தில் நிடக்கும் அநியாயங்களை விளக்கும் கதை. அதாவது, அந்த ஊ஛ல் ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லா உறவினர்களுமே எல்லா பதவிகளையும் வகித்தால் எப்படி இருக்கும் என்று விவரிக்கிற கதை இது.

கிட்டத்தட்ட இது தான் மருத்துவர் ராமதாசின் கனவு. விழுப்புரம் மாவட்டத்தில் எல்லா பதவிகளிலும், அவருடைய ஜாதிக்காரர்களே இருந்தால், அது தான் சமூக நீதி என்று அவர் கருதுகிறார் போலும். ஆனால், மாட்டிக் கொண்டு கப்பம் கட்டுகிறவன் மட்டும் வேறு ஜாதியாக இருக்க வேண்டுமாம்! இதெல்லாம் நிடக்கிற கதையா!

இந்தியாவில் மொத்தம் நான்காயிரம் ஜாதிகள் இருப்பதாக ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்காரனும், இப்படி நினைக்க ஆரம்பித்தால் நாடு என்ன ஆவது? இப்படியெல்லாம் கனவு காண்பதை மருத்துவர் நிறுத்தினால் நில்லது.

Sunday, April 16, 2006

கேப்டன் Vs காவல்துறை (ஓரவஞ்சகம்)

தினமலர் செய்தி

தேர்தல் கமிஷன் உத்தரவை காட்டி கெடுபிடி போலீசாருடன் விஜயகாந்த் வாக்குவாதம்

மதுரை : மதுரையில் தேர்தல் கமிஷன் உத்தரவை காட்டி உன்று வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது என கெடுபிடி விதித்த போலீசாருடன் தே.க.தி.க., தலைவர் விஜயகாந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் பராபட்சம் காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மதுரையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 24 இடங்களில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார்.

இதற்காக அவர் மேல ஆவணி மூல வீதியில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட தயாரானார்.

அனுமதி மறுப்பு: ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, நரிமேடு, குரு தியேட்டர் சந்திப்பு உட்பட அவர் பேசயிருந்த இடங்களில் கட்சியினர் கொடி, தோரணங்களை கட்டினர். ஸ்பீக்கர்கள் வைக்கவும் கயற்சி செய்தனர். இவற்றுக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. விஜயகாந்த் பேசும் போது மட்டும் ஒரு மணிநேரம் கொடி, தோரணங்கள் கட்டி கொள்ள அனுமதித்த போலீசார் ஸ்பீக்கர் வைக்கக்கூடாது என தெ஛வித்து விட்டனர்.

இதுகுறித்து விஜயகாந்துக்கு ஆங்காங்கே இருந்த கட்சியினர் தகவல் கொடுத்தனர். மேலும், பிரசாரத்தின் போது மூன்று வாகனங்களில்

மட்டுமே செல்ல வேண்டும் எனவும் போலீசார் கட்சி நர்வாகிகளிடம் தெ஛வித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தே.மு.தி.க.,வினர்

போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கூடுதல் வாகனங்களை செல்ல அனுமதிக்கும்படி கேட்டு கொண்டனர்.

உயரதிகாரிகள் மறுத்ததால் விஜயகாந்த் பிரசாரத்திற்கு புறப்படுவது தாமதமானது.

வாக்குவாதத்தால் பரபரப்பு: இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் சென்று கட்சி பொருளாளர் சுந்தர்ராஜன், நிகர்

தலைவர் ரவீந்திரன் மற்றும் நர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கட்சி அலுவலத்தில் இருந்த விஜயகாந்த், இந்த கெடுபிடிகளை மற்ற கட்சியினரிடம் காட்டாதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மூன்று வாகனங்களுக்கு மேல் செல்ல அனுமதியில்லை என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டனர்.

விஜயகாந்த் ஆவேசம்: இதுகுறித்து விஜயகாந்த் நருபர்களிடம் கூறியதாவது: போலீசார் எதற்காக இப்படி நிடந்து கொள்கிறார்கள் என தெரியவில்லை. நேற்று முன்தினம் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை வந்த என்னை போலீசார் தி.மு.க., துணை பொதுச் செயலர் ஸ்டாலின் வருவதாக கூறி விருதுநிகர் வழியாக செல்லும்படி திருப்பி விட்டனர். அவரது காருக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள் சென்றன. பல மணி நேரம் கொடி, தோரணங்களை கட்டியிருந்தனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க., தி.மு.க., தலைவர்களுக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள் செல்வதை எப்படி போலீசார் அனுமதிக்கின்றனர். அந்த தலைவர்களுக்கு கட் அவுட், கொடி, தோரணங்கள் வைக்கப்படுகின்றன. ஆளுங்கட்சி தரப்பில் போலீசாருக்கு தொந்தரவு இருக்குமோ என தெரியவில்லை.

தனித்து போட்டியிடும் எனக்கு சின்னம் இன்னும் முடிவாகவில்லை.இதுகுறித்து மக்களிடம் எடுத்து சொல்ல ஸ்பீக்கர் வைக்கக்கூட போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். என் கட்சி வளரக்கூடாது என தடுக்கின்றனர். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.பின்னர் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து பிரசார கூட்டங்களிலும் விஜயகாந்த் குறிப்பிட்டார்.

சசி-யின் சன் - டிவி மோகம்

திரு சசி அவர்கள், தன்னுடைய சமீபத்திய பதிவில் சன் டிவி பற்றியும் அவர்களின் வியாபார யுக்தியைப்பற்றியும் மற்றும் அவர்கள் நடத்தும் பத்திரிக்கைகள் பற்றியும் பெருமையாக எழுதி இருந்தார்.
ஆனால் அந்த சன் டிவி -யால் நம் சமூகத்துக்கு விளையும் நன்மை என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி.


இன்று சன் டிவி -யில் என்ன நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன?. சினிமா, சினிமா விட்டால் அழுது வடியும் பிற்போக்கு தொலைக்காட்சித்தொடர்கள். என்ன செய்தி சொல்கிறார்கள்?. "செய்திகளில் அடுத்து வருவது ஜெயேந்திரர். சிவகாசி ஜெயலட்சுமி, ஜ்டியல் சுப்பரமணியம், செக்ஸ் சாமியார் சதுர்வேதி, கஞ்சா செரினா மற்றும் கருத்து கருணாநிதி" என்ற அளவில்தான் நமக்கு செய்திகள் சொல்லப்படுகின்றன. உலக செய்திகள் என்று இவர்கள் கூறுவது ஆப்பிரிக்காவில் சிங்கம் இரண்டு குட்டி போட்டது, இங்கிலாந்தில் ஒரு ஜோடி 24 மணி நேரம் முத்தம் கொடுத்தது, அமெரிக்காவில் நிர்வாணப்போரட்டம் என்கிற அளவில்தான் உள்ளது. நாட்டில் வேறு நல்ல விசயங்களே நடக்கவில்லையா. மக்களுக்கு தேவையான, பயனுள்ள, சிந்திக்க தூண்டுகிற நல்ல விசயங்கள் தினம்இ தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் நடந்த சில அசம்பாவிதங்களைப்பற்றி சொல்லும் போது உண்மை நிலை என்ன என்பதை அந்த நாடுகளின் தொலைக்காட்சி செய்திகளைப்பார்த்தாவது சொல்லலாம், அப்படி இல்லாமல் ஒரு குண்டு வெடிப்பில் 10 பேர் இறந்தால் 100 பேர் இறந்ததாக கூறுவது, ஒரு ரயில்வே ஸ்டேசன் மூடினால் லண்டனில் அனைத்து ரயில்வே ஸ்டேசன்களும் மூடப்ப்ட்டன என்று கூறி தாயகத்தில் உள்ள உறவினர்களின் மனநிலை எப்படி பாதிப்பு அடையும் என்று கூட கவலைப்படாமல் செய்திகளை வெளியிடுவது போன்ற முட்டாள் தனமான காரியங்களையும் செய்கின்றனர். நல்ல செய்திகள், கருத்துக்கள் சொன்னால் மக்கள் சிந்திக்க ஆரம்ப்பித்துவிடுவார்கள்! இவர்களின் போலியான கவர்ச்சி எடுபடாமல் போய்விடுமே என்ற எண்ணம் தான் இன்று இவர்களிடம் மேலோங்கி உள்ளது. கெட்டவிசயங்கள் மிக எளிதாக மக்களை சென்றடையும். ஆனால் நல்ல விசயங்கள் மருந்து போன்று கசப்பாக இருந்தாலும், அது அவர்களுக்கு எளிய முறையில் சொல்லப்படுமானால், அது ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்க உதவும்.


இன்று சுதந்திர தின மற்றும் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்தால் அதில் சில நடிகர், நடிகைகளின்

நேர்காணல், குத்து நடனங்கள் மற்றும் "இந்திய தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக" என்று மூளையை

மழுங்கடிக்கச்செய்யும் ஒரு படம். இதுதான் இன்றைய தலைமுறைக்கும், நாளைய தலைமுறைக்கும் சுதந்திர போராட்ட

வரலாற்றை சொல்லும் நிகழ்ச்சிகளா?. கொஞ்சம் ஏமாந்தால் விக்ரமும், விஜய்யும் தான் காந்தியோடு உப்பு சத்யாக்கிரகத்துக்கு போனார்கள் என்று கூட சொன்னாலும் சொல்வார்கள். இதேபோல் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தால், நாளைய சமுதாயம் சுதந்திர தினத்திற்கு விடுமுறை விடுவதே இவர்களின் நிகழ்ச்சியை பார்க்கத்தான் என்று புரிந்துகொள்ளும் நிலை

ஏற்படலாம். இப்படி சமூகப்பொறுப்பற்ற ஊடகங்களால் நாளைய தலைமுறைக்கு சத்யாக்கிரகம் என்றால் அந்த கிரகம் பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கேட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. நம் தாய் தந்தையரின் அன்பையும், தியாகங்களையும் நேரில் பார்த்து உணர்கிறோம். ஆனால் தேசத்திற்காக பாடுபட்டு நம் முன்னோர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு சிறப்பாக சொல்லுவதன் மூலம்தான் நம்முடைய சுதந்திரத்தின் அருமையை நம் இளைய தலைமுறைக்கு உனர்த்தமுடியும். நாம் ரத்தம் சிந்தி பாடுபட்டு வாங்கிய இந்த சுதந்திரத்தை பாதுகாக்க முடியும். ஏன் நம் நாட்டில் ஒரு தியாகி கூட இல்லையா? அவர்களிடம் நேர்காணல் கண்டால் இவர்களின் வியாபாரம் போகிவிடுமா?. மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன! என்ற எண்ணம்தான் இவர்களிடம் மேலோங்கி உள்ளது. இதே போல்தான் அனைத்து தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளும் உள்ளன. நம் மண்ணைப்பற்றிய, நம் மக்களைப்பற்றிய, உலகில் சிறந்த நம் கலாச்சாரத்தைப்பற்றிய எந்த நிகழ்ச்சிகளும் இவர்களின் தொலைக்காட்சிகளில் இடம்பெறாது. மாறாக போலியான கவர்ச்சிகளே மக்கள்முன் நிறுத்தப்படுகின்றன.


இப்போது சும்மா "நச்"-னு ஒரு ஆபாச "விஷம்" சில இலவசங்களுடன் நம் தமிழகத்தை தினம், தினம் தாக்கி நமது தேசத்தை அதன் இயல்பிலிருந்து பிரிக்க முயன்று கொண்டிருக்கிறது. அதில் சொல்லப்படும் செய்திகள் என்னவென்றால் ஆண் விபச்சாரம், பெண்களுக்கு காபி குடித்தால் "மூட்" வருமா? ஆதிவாசிகளின் நிர்வாண பூஜை, ஆதிவாசிகளின் ஆபாச

குருந்தகடு பரபரப்பு விற்பனை, குஷ்பு ஆபாச பட வௌதயீடு, பண்ணை வீடுகளில் ஆபாச நடனம், 5 நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனம், செக்ஸ் சாமியார்கள் பற்றிய செய்திகள் மற்றும் தங்களுக்கு பிடிக்காதவர்கள் பற்றிய தவறான கருத்துகள் போன்ற அருவெறுக்கத்தக்க ஆபாச செய்திகள் தான். இதில் அசிங்கம் என்னவென்றால் இவற்றையெல்லாம் படங்களுடன் தலைப்புச் செய்திகளாக முதல் பக்கதிலேயே வௌதயிடுவதுதான். இவைகளை வௌதயிடுவதால் நம் தமிழகத்திற்கு என்ன பயன்?. செய்தித்தாள்களின் தரம் என்பது அன்றாட நாட்டு நடப்புக்களை உலகுக்கு சொல்வதோடு மட்டுமல்லாமல் நல்ல பயனுள்ள, சிந்திக்கவைக்கக்கூடிய கட்டுரைகளையும், கருத்தாய்வு களையும் வௌதயுட்டு மக்களிடம் உலகளாவிய சிந்தனைகளை வளர்ப்பதாக இருக்கவேண்டும். அதுவே பத்திரிக்கை தர்மமும் நீதியும் ஆகும். சமூகப்பொறுப்புள்ள எந்த செய்தித்தாளும் இதைதான் செய்யும். ஆனால் நான் மேற்கூறிய "விஷம்" இலவசங்களுடன் பரவி மக்களின் செய்தித்தாள் அறிவை மட்டமாக்கி அவர்களிடம் எந்த உலகளாவிய சிந்தனைகளும் தோன்றாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் அச்செய்திதாளுக்கும் அது சார்ந்த கட்சிக்கும் தான் லாபமே தவிர நம் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை, மாறாக நம் மக்கள் வெறும் பணம் சம்பாதிக்கும் எந்திரங்களாக, சுயநலவாதிகளாக மட்டுமே இருப்பார்களே தவிர சிந்திக்கின்ற உண்ர்ச்சியுள்ள, போராடும் குணமுள்ள,பொதுநலனில் அக்கரை உள்ள, மனித நேயமிக்க,சமூகப்பொறுப்புள்ள மற்றும் உலகளாவிய சிந்தனைகளை உள்ளடக்கிய சிறந்த கலாச்சாரத்தில் இருந்து வந்த நல்ல குடிமக்களாக இருக்க மாட்டார்கள்.உதாரணமாக குடியரசுதினத்தன்று வெளிவந்த செய்தித்தாள்கள் அணைத்தும் குடியரசுதின நிகழ்ச்சிகளையும் நம் ஜனாதிபதி மற்றும் ஆளுனர் அவர்கள் நாட்டுமக்களுக்கு சொன்ன செய்தியையும் தான் தலைப்பு செய்திகளாக வௌதயிடுவாரகள். ஆனால் "தமிழ் முரசு" என்ற தரமற்ற முரசில் "பள்ளி மாணவிகளை மயக்கி செல்போனில் ஆபாச வீடியோ, பிடிபட்டது ஆபாசக்கும்பல்" என்ற செய்திதான் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. இவர்களுக்கு இதற்கு முன்னர் இத்துறையில் அணுபவம் உள்ளதா? அல்லது "நீலப்படம்" எடுக்கும் கும்பலில் இருந்து பிரிந்து வந்து இந்த பத்திரிக்கையை ஆரம்பித்தார்களா? என்றே புரியவில்லை.


நாளைய சமுதாயம் எல்லா நல்ல வளங்களும் பெற்று சிறப்பாக வாழ வேண்டுமெனில் வெறும் வியாபார நோக்கோடு செயல்படும் மேற்கூறிய நச்சு விதைகள் தமிழகத்தில் வேரூன்ற விடாமல் பாதுகாப்பது சுரணையுள்ள ஓவ்வொரு தமிழனின் கடமை ஆகும். இவர்களை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல ஊடகங்களை ஊக்குவிப்பதுமே நம் தமிழகத்தை தீயசக்திகளிடம் இருந்து காக்க உதவும்.

Friday, April 14, 2006

சி.என்.என்., - ஐ.பி.என்., - "தி இந்து' - தேர்தல் கணிப்பு














சி.என்.என்., - ஐ.பி.என்., - "தி இந்து' ஆங்கில நாளிதழ் இணைந்து நிடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. அரசு நர்வாகம், ஏழைகள் மீதான அக்முறை, மாநலத்தின் வளர்ச்சி, ஊழலை கட்டுப்படுத்துதல் ஆகிய விஷயங்களில் கருணாநதியை விட ஜெயலலிதாவே சிறந்தவர் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சி.என்.என்., தொலைக்காட்சியின் இந்திய தொலைக்காட்சியான ஐ.பி.என்., நிறுவனகம் பிரபல ஆங்கில நாளிதழான "தி இந்து' நாளிதழும் இணைந்து தேர்தல் நிடைபெறவுள்ள ஐந்து மாநலங்களில் கருத்துக் கணிப்பை நடத்தின. இதில் தமிழகத்தில் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் உள்ள செல்வாக்கு குறித்த கருத்துக் கணிப்பின் கடிவுகளை இந்து நாளிதழ் நேற்று வெளியிட்டது. அறிவியல் முறைப்படி 58 சட்டசபை தொகுதிகளில் உள்ள 232 இடங்களில் 4 ஆயிரத்து 781 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2ம் தேதி கதல் 8ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்ட நிபர்களில் 46 சதவீதம் பெண்கள், 66 சதவீதம் கிராமப்புற மக்கள், 88 சதவீதம் இந்துக்கள், 5 சதவீத முஸ்லிம்கள், 7 சதவீத கிறிஸ்தவர்கள், 26 சதவீத தாழ்த்தப்பட்ட மக்கள் என அவரவர் மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் பிரதிநதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில் வெளிவந்துள்ள கடிவுகள் வருமாறு:
கடந்த 2004ம் ஆண்டு நிடந்த லோக்சபா தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தோல்வியடைந்த அ.தி.மு.க., இந்த முறை கணிசமான வளர்ச்சியைப் பெற்றிருப்பது அனைத்து தரப்புக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கும் தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கும் இடையே சிறிய அளவிலான மாற்றம் மட்டுமே நிடந்துள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ஜ., தற்போது தனித்து போட்டியிடுகிறது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க., அங்கிருந்து விலகி அ.தி.மு.க.,வுடன் சேர்ந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் அ.தி.மு.க.,வில் சேர்ந்துள்ளது. இந்த மாற்றங்கள் தவிர தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஓட்டுக்கள் தற்போது அ.தி.மு.க., பக்கமாக கணிசமாக திரும்பியுள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஓட்டுக்கள் அதிக அளவில் அ.தி.மு.க., பக்கம் திரும்பியுள்ளன.
* அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., சேர்ந்திருப்பதால் அ.தி.மு.க.,வுக்கு பெரிய அளவில் ஓட்டுக்கள் சேரவில்லை.
* ம.தி.மு.க.,வின் ஓட்டுக்களில் 48 சதவீதம் ஓட்டுக்கள் தி.மு.க., பக்கமே இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. எனவே ம.தி.மு.க.,வை சேர்த்திருப்பதால் அ.தி.மு.க.,வுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
நடிகர் விஜயகாந்த் கட்சியான தே.மு.தி.க., கணிசமான ஓட்டுக்களை பிரிக்கவிருக்கிறது. அவர் பிரிக்கவிருக்கும் ஓட்டுக்களில் 49 சதவீதம் தி.மு.க.,விலிருந்தும், 25 சதவீதம் அ.தி.மு.க.,வில் இருந்தும், 26 சதவீதம் இதர கட்சிகள் மற்றும் புதிய ஓட்டுக்களாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. விஜயகாந்துக்கு கிடைக்கவுள்ள ஐந்து சதவீத ஓட்டுக்களால் அதிக பாதிப்பை சந்திக்கப் போவது தி.மு.க., கூட்டணிதான்.
* கருத்துக் கணிப்பில் இடம்பெற்றவர்களில் 34 சதவீதம் பேர் வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்தே ஓட்டுப் போடுவேன் என்றும், 55 பேர் கட்சிக்கே ஓட்டுப் போடுவேன் என்றும், 6 சதவீதம் பேர் மற்ற காரணங்களை கன்வைத்து ஓட்டுப் போடுவேன் என்றும் தெரிவித்தனர்.
* தற்போதைய எம்.எல்.ஏ., மீண்டும் தேர்வு பெற வேண்டுமா? என்ற கேள்விக்கு 40 சதவீதம் பேர் "வேண்டாம்' என்றும் 31 சதவீதம் பேர் "ஆம்' என்றும் பதிலளித்துள்ளனர்.
* தமிழக அரசின் நிடவடிக்கை 2004ம் ஆண்டில் திருப்தியளிக்கவில்லை என்று 52 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். 2006ம் ஆண்டில் இதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. திருப்தியளிக்கவில்லை என்று 24 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். 2004ம் ஆண்டில் திருப்தியாக இருந்ததாக 47 சதவீதம் பேரும் 2006ம் ஆண்டில் திருப்தியாக இருப்பதாக 67 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
* அ.தி.மு.க., ஆட்சி, முந்தைய தி.மு.க., ஆட்சி ஆகிய இரண்டில் எது சிறந்தது? என்ற கேள்விக்கு அ.தி.மு.க., அரசு சிறப்பாக உள்ளது என்று 42 சதவீதம் பேரும், தி.மு.க., அரசு சிறப்பாக இருந்தது என்று 38 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர். இரண்டு அரசுகளும் ஒரே மாதிரியாக உள்ளதாக 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவையும் தி.மு.க., தலைவர் கருணாநதியையும் ஒப்பிட்டு பார்க்கையில் பல்வேறு விஷயங்களில் ஜெயலலிதாவே சிறந்தவர் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பார்லிமென்ட் தேர்தலின்போது மிகவும் பின்தங்கி இருந்த ஜெயலலிதா அதிலிருந்து முன்னேறி கருணாநதியை முந்தும் வகையில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ளது கருத்துக் கணிப்பில் வெளிப்படுகிறது. வைகோ அணி மாறியதை 46 சதவீதம் அ.தி.மு.க.,வினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். 34 சதவீதம் பேர் ஏற்கவில்லை. தி.மு.க.,வினர் 18 சதவீதம் பேர் மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர். 64 சதவீதம் பேர் அவரது செயலை ஏற்கவில்லை. கட்சி சாராதவர்கள் 20 சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர். 45 சதவீதம் பேர் ஏற்கவில்லை. ஆனால், ஸ்டாலினுக்கு எதிராக அவர் அரசியல் நிடத்துவதை 52 சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர். 27 சதவீதம் பேர் ஏற்கவில்லை. பொடாவுக்கு எதிரான அவரது பிரசாரத்தை 38 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்கின்றனர். 22 சதவீதம் பேர் ஏற்கவில்லை.
வாரிசு அரசியல் உள்ள விஷயங்களில் மக்களின் கருத்து கருணாநதிக்கு எதிராகவே உள்ளது.
ஜாதி ஓட்டுக்கள் எந்தெந்த கட்சிக்கு ஆதரவாக பிரிகின்றன என்ற விவரகம் தெரியவந்துள்ளது.
ஆண்களிடம் தி.மு.க.,வுக்கும் பெண்களிடம் அ.தி.மு.க.,வுக்கும் செல்வாக்கு இருந்து வருகிறது. ஆண்களில் 44 சதவீதம் பேர் அ.தி.மு.க.,வுக்கும், 47 சதவீதம் பேர் தி.மு.க.,வுக்கும், ஐந்து சதவீதம் பேர் தே.மு.தி.க.,விற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெண்களில் 51 சதவீதம் பேர் அ.தி.மு.க.,விற்கும், 41 சதவீதம் பேர் தி.மு.க.,விற்கும், ஐந்து சதவீதம் பேர் தே.மு.தி.க.,விற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினர் எப்போதும் பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளிப்பது வழக்கம். இந்த முறை அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே பா.ஜ.,வுடன் கூட்டணியில் இல்லை. இருந்தாலும் சிறுபான்மையினர் அ.தி.மு.க.,வை விட தி.மு.க.,வுக்கே அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டமே அதற்கு காரணம் என்று தெரிகிறது. மதமாற்ற தடைச் சட்டத்தை 2004ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க., அரசு வாபஸ் பெற்றுவிட்டாலும் சிறுபான்மையினர் மத்தியில் இன்னும் அதிருப்தி மாறவில்லை என்பது கருத்துக் கணிப்பில் வெளியாகி உள்ளது.
மொத்தத்தில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது தி.மு.க.,வை விட அ.தி.மு.க., தற்போது முந்தும் நிலையே காணப்படுகிறது.

"தமிழ் பாதுகாப்புக்குழு" ஒரு கண்ணோட்டம்

தமிழகத்தில் இப்போது ஒரு கூட்டம் "தமிழ் பாதுகாப்புக்குழு" என்ற பெயரில் தமிழை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு சில

போராட்டங்களை நடத்திக்கொண்டு வருகிறது. அவை என்ன போராட்டங்கள் என்று பார்த்தால் தமிழ் சினிமாவிற்கு ஆங்கிலப்பெயர் எதிர்ப்பு,இந்தி எழுத்துக்களை தார்கொண்டு அழிப்பது, மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள எதிர்ப்பு, கற்பு பற்றி குஷ்பு கூறியதற்கு எதிர்ப்பு மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த சுகாஸினிக்கு எதிர்ப்பு போன்றவைதான்.இப்படிப்பட்ட போராட்டங்களால் தமிழ் வளர்ந்து விடுமா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் நான் சொல்வேன்.


உங்கள் வெற்றி என்பது மற்றவர்களின் தோல்வி மட்டும் அல்ல. ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக ஓடி வெற்றிபெறவேண்டிமேயன்றி முன்னால் ஓடுபவர்களின் கால்களுக்கு இடையில் கம்பை விட்டு அவர்களை கீழெ விழச்செய்து நீங்கள் வெற்றிபெறக்கூடது. நம் அழகு தமிழை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு விஞ்ஞானப்பூர்வமாக சிந்தித்து திட்டங்களை வகுத்து செயல்படவேண்டுமே தவிர மற்றவர்களை குறைகூறிக்கொண்டும் மற்ற மொழிகளை குறைகூறிக்கொண்டும் இருக்கக்கூடாது.


தமிழ் இவர்கள் அறியாத இணையதளங்கள் வாயிலாக நன்றாக வளர்ந்துகொண்டு தான் இருக்கிறது. மேலும் தமிழக அரசு நினைத்தால் எளிதாக தமிழை வளர்க்க முடியும். அப்படி அவர்கள் வளர்க்க தவறினால் சில போராட்டங்களை நடத்தி அரசிடம் கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைக்கலாம்.


1. பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு மொழியாக படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று ஒரு அரசுஆணை பிறப்பிக்கச்சொல்லி போராட்டம் நடத்தலாம்.

2. 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தமிழில் 90 சதவிகிததிற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்களின் கல்விச்செலவுகளை அரசே ஏற்கச்சொல்லி வலியுறுத்தலாம். அல்லது அவர்களுக்கு கல்வி உதவிதொகை மற்றும எதிர்காலத்தில் அரசு பணி கொடுத்து கெளரவப்படுத்தலாம்.

3. பொறியியல் மற்றும் மருத்துவ பட்ட படிப்புகளுக்கு இப்பொது எடுத்துக்கொள்ளும் கனிதம்,இயற்பியல்,வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் தமிழையும் சேர்த்துக்கொள்ள அரசை வலியுறுத்தலாம். இதனால் மாணவர்கள் தமிழிலும் அதிக ம்திப்பெண்கள் எடுக்க முயற்சி செய்வார்கள். அப்படி படிக்கும் போது தமிழின் சுவை அறிந்து அதில் அவர்களுக்கு ஆர்வமும் ஏற்படும்.


காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் ஆடு,மாடு மற்றும் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்த சிறுவர்கள் ஒரு வேளை உணவுக்காகவாவது ப்ள்ளிக்கு வந்து பாடம் கற்க மாட்டார்களா என்ற் எண்ணத்தில் தான் மதிய உணவு திட்டத்தை துவங்கினார். அதேபோல் அரசு வேலை வாய்ப்பு, பொறியியல் மற்றும் மருத்துவ பட்ட படிப்புகளுக்காகவாவது நம் இளைய தலைமுறை தமிழ் படிக்கட்டும் அதன் சுவை அறியட்டும்.


மேற்கூறிய யோசனைகள் தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் உயிர் மற்றும் தான் ஒரு தமிழினத்தலைவர் என்று கூறிக்கொள்ளும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தெரியவில்லையா, அல்லது அப்படி செய்தால் ஆங்கில மொழி வழி கல்வி பயிலும் தன் பேரன்,பேத்திகளுக்கு மருத்தவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற சுயநலத்தில் செய்யாமல் விட்டிருப்பாரா?. இவருடைய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள்தான் இன்று தமிழ் பாதுகாப்புக்குழுவின் தூண்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள். இதே தலைவர்கள் கூட நாளை நம் நாட்டின் முதல்வராக வந்தாலும் தங்களின் வாரிசுகள் நலம் கருதி இதை செய்யமாட்டார்கள்.


4. ஊட்டி, கொடைக்கானல் ஏன் சென்னையில் கூட சில பள்ளிகளில் தமிழ் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்துக்குள் தமிழில் பேசினால் அபராதமும் விதிக்கப்படுகிறது (தமிழக இளைஞர்கள் தங்கள் தலைவராக எண்ணிக்கொண்டிருக்கும் ரஜினியின் மனைவி நடத்தும் பள்ளியிலும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்). இப்பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய சொல்லி போராட்டம் நடத்தலாம்.


5. தினம், தினம் நம் அழகு தமிழை கொலை செய்து கொண்டிருப்பது இங்கே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு தொலைக்காட்சிகள்தான். இலங்கைத்தமிழர்களால் ஜ்ரோப்பாவிலிருந்து ஔதபரப்பாகும் சில தொலைக்காட்சிகள் அணைத்து நிகழ்ச்சிக஬ளையும் அழகு தமிழில் தொகுத்து வழங்குகின்றன. அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் நமக்கு அவர்களுக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாதா என்ற சந்தேகம் கூட எழும்.அந்த அளவுக்கு சிறப்பாக வழங்கிகொண்டிருக்கின்றனர்.

ஆனால் இங்கு தொடர்ச்சியாக 4 வார்த்தைகள் தமிழ் பேசத்தெரியாதவர்கள்தான் நிகழ்ச்சித்தொகுப்பாளர்களாக உள்ளனர்.பகுத்தறிவு பேசும் கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சியில்கூட முழுக்க முழுக்க மூடநம்பிக்கைகளை வளர்க்கும் தொடர்கள்தான் வலம் வருகின்றன. நம் மொழியை அழிக்க நினைக்கும் இவர்களுக்கு எதிராக போரிடுங்கள்.


தமிழ் பாதுகாப்பு போராட்டம் என்பது நம் மொழியை கற்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அதை அழிக்கும் சக்திகளிடம் இருந்து

காப்பாற்றுவதாக மட்டுமே அமையவேண்டும்.

Thursday, April 13, 2006

கருணாநிதி அஸ்திரத்தின் அர்த்தம் தெரியும்! - வைகோ

இன்றைய தினமலரில் வந்த ஒரு செய்தி.

கருணாநிதி அஸ்திரத்தின் அர்த்தம் தெரியும்! மயிலாடுதுறையில் வைகோ ஆவேசம்

மயிலாடுதுறை : தமிழகத்தில் ஏழெட்டு தொகுதிகளையாவது கைப்பற்றும் நிப்பாசையில் தி.மு.க., மலிவான சலுகைகளை அறிவித்துள்ளது என்று வைகோ பேசினார்.மயிலாடுதுறை நிகர பூங்காவில் ஜனநாயக மக்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ நேற்று முன்தினம் இரவு உரையாற்றினார். அ.தி.க.க வேட்பாளர் பூம்புகார் பவுன்ராஜ், குத்தாலம் ராஜேந்திரன் மயிலாடுதுறை ம.தி.மு.க. வேட்பாளர் மகாலிங்கம் ஆகியோரை அறிககப்படுத்தி வைகோ பேசியதாவது:

தமிழகத்தில் மக்கள் ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆனால் எதிரணியில் குத்து வெட்டு இன்னும் ஓயவில்லை. தொகுதியிலுள்ள விவகாரங்களும் முடியவில்லை. தி.மு.க., அரசு தமிழக கஜானாவை காலி செய்து வைத்திருந்த நேரத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு இயற்கை இடர்பாடுகளான வறட்சி, சுனாமி, வெள்ளம் ஆகியவற்றை சந்தித்து நிதி நெருக்கடியை சீர் செய்து மின்னல் வேகத்தில் திட்டங்களை நறைவேற்றியுள்ளது. சுனாமி பாதிப்பிலிருந்து தமிழகம் மீள

ரூ. ஒன்பதாயிரத்து 860 கோடியை மத்திய அரசிடம் மாநல அரசு கோரியது. அதில் ரூ.860 கோடியை மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசு ஒருபோதும் மாநல அரசுகளை வஞ்சிக்கக் கூடாது. இது அ.தி.மு.க., அரசை வஞ்சித்ததல்ல. தமிழகத்தில் வாழ்கிற ஆறு கோடி மக்களையும் வஞ்சித்தமைக்கு சமம். மத்திய அரசு போதுமான நிதியைக் கொடுக்காத போதும் தமிழக அரசு அனைவரும் பாராட்டும் விதத்தில் நவாரணப் பணிகளை மேற்கொண்டது.

சுனாமியின்போது சேதப்பகுதிகளை பார்வையிட பிரதமர் வருவதாக இருந்தது. அப்படி வந்தால் பிரதமருடன் தமிழக முதல்வரும் சேர்ந்து போவார் என்பதால் காங்கிரஸ்காரர்கள் கட்சித் தலைவியை வரவழைத்தனர். காங்கிரஸ்காரர்கள் பிரதமரையும் மதிக்க வேண்டும். 2004-ம் ஆண்டு ஆகஸ்டில் கல்பாக்கத்தில் நிடந்த பொது விழாவுக்கு பிரதமர் வருவதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் அது ரத்தானது. அக்டோ பர் 23 ஆம் தேதி பிரதமர் தமிழகத்துக்கு வருவதாகவும் அன்று மாலை 4 மணிக்கு கோபாலபுரம் சென்று தி.க.க. தலைவரை சந்திப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. அப்போது மதுரையிலிருந்த கருணாநதி, "பிரதமர் வருவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் முக்கிய வேலையாக கொடைக்கானல் செல்கிறேன்' என்று கூறி ஓடாத படத்துக்கு கதை எழுதப் போய்விட்டார். வீட்டுக்கு வரும் பகைவரைக்கூட வரவேற்பது தான் தமிழ்ப் பண்பாடு. கருணாநதியின் இந்த மதியாத போக்கை தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கையில் எம்.பி.,க்கள் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்ற இறுமாப்புடன் தி.மு.க., செயல்படுகிறது.

மத்திய அரசு அரிசி விலையை உயர்த்த முயற்சித்த போது தி.மு.க., எம்.பி.,க்கள் ஒத்துக் கொண்டு வந்தனர். உடனடியாக தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க ம.தி.மு.க.,வும் கண்டித்தது. தேர்தலைக் கருத்தில் கொண்டு தானும் மத்திய அரசின் கடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் ஏழெட்டு தொகுதிகளையாவது கைப்பற்றும் நப்பாசையில் தி.மு.க., மலிவான சலுகைகளை அறிவித்துள்ளது. நான் எந்த வழக்குகளையும் சந்திக்கத் தயார். வழக்குகளை பார்த்து தயங்கியதில்லை. எதற்காக என்மீது அஸ்திரத்தை ஏவுகிறார் என்பது எனக்குத் தெரியும். எதையும் நான் அப்படியே விட்டு விடமாட்டேன். எதையும் சந்திக்கத் தயார். தமிழகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் பொற்கால ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைந்திட ஜனநாயக மக்கள் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ பேசினார்

ஆதீனத்தின் அரசியல் - குமுதம்

ஆதீனங்கள் ஆன்மிகப் பணியை மட்டுமே பார்க்கும்போது வணக்கத்திற்குரியவர்களாகப் போற்றப்படுகின்றனர். அதுவே அரசியலில் மூக்கை நுழைப்பதால், அவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. இது மதுரை ஆதீனத்துக்கும் பொருந்தும் என்பதை உணர்வாரா?ஒஒ என்று, கடந்த நமது குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் சேத்தியாத்தோப்பு வாசகி ராஜகுமாரி தெரிவித்திருந்தார்.

கும்பகோணம் வந்திருந்த மதுரை ஆதீனத்திடம் அந்த வாசகியின் கருத்தை முன் வைத்துப் பேசினோம்...

தமிழகத்திலுள்ள மற்ற ஆதீனங்கள் யாவும் ஆன்மிகப் பணியை மட்டுமே செய்து வரும் வேளையில், தாங்கள் அரசியல்வாதியைப் போலவே செயல்படுவது ஏன்?

஑஑தமிழகத்தில் உள்ள முக்கிய நான்கு மடங்களில் மதுரை ஆதீனம் மிகவும் பழைமையானது. ஆதீனம் என்றால் சன்னியாசியாய் இருப்பது, விபூதி கொடுப்பது, ஆசீர்வாதம் செய்வது மட்டுமே பணி அல்ல. ஏற்கெனவே இருந்தவர்கள் சமஸ்தானத்தில் அமைச்சர்களாக, ராஜகுருக்களாக எல்லாம் இருந்திருக்கிறார்கள். அரசுக்கு உறுதுணையாக, நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்களாக, மத நல்லிணக்கத்திற்கு உதவியாக, மக்கள் நலனுக்காக, அரசுடன் இணைந்து ஆதீனங்கள் செயல்படுவது தவறல்ல.ஒஒ

அதற்காக அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் போல் செயல்படுவதும், கூட்டணிக்காக நடிகர் கார்த்திக்கிடம் தூதுவராகச் சென்று பேசுவதும் சரியா?

(சிரித்துக்கொண்டே) ஑஑எம்மை அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் என்றா சொல்கிறார்கள்? புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் அவர்களின் வேண்டுகோளின்படி கார்த்திக்கிடம் தூதுவர் போலப் பேசினோம். உண்மை!ஒஒ

கார்த்திக் அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருப்பார் என்று கூறினீர்கள். ஆனால் தற்போது எதிர்த்து நிற்பதோடு, ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் பொது வேட்பாளராகவும் நிறுத்தப்படுவார் என்ற பேச்சும் இருக்கிறதே!

஑஑அந்த நேரத்தில் உள்ள நிலை அது. தற்போது அவர் கருத்தை மாற்றிக்கொண்டாலும், ஒருபோதும் புரட்சித் தலைவியை எதிர்த்துப் போட்டியிடமாட்டார் என்று நம்புகிறோம். அந்த வாக்குறுதியை என்னிடம் தந்திருக்கிறார்.ஒஒ

இப்படி ஒரு கட்சி ஆதரவாளராக இருப்பது ஆதீனத்திற்கு அழகா?

஑஑மற்ற கட்சியினர் யாரும் எம் உதவி கேட்கவில்லையே... யாரிடமாவது பேசச் சொல்லி தி.மு.க. தரப்பில் கேட்டாலும் செய்யத் தயாராகத்தான் இருக்கிறோம்.ஒஒ

நடராஜன் சொன்னதால் கார்த்திக்கிடம் பேசியதாகச் சொல்கிறீர்கள். நடராஜனிடம் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்புகொள்ளக்கூடாது என்று அ.தி.மு.க. தலைமையால் அவர் ஒதுக்கப்பட்டவர்தானே?

஑஑நடராஜன் ஒதுக்கப்பட்டவரல்ல... அன்று முதல் இன்றுவரை அ.தி.மு.க.வின் பாதுகாவலராக, வளர்க்கக்கூடியவராக இருக்கிறார் என்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். அவரைத் தொடர்பு கொள்ளும் யாரும் இனி பாதிக்கப்படமாட்டார்கள்.ஒஒ

கலைத்துறையில் தங்களுக்கு அதிகத் தொடர்பு உண்டு. கோவை சரளா முதல் நடிகை சிம்ரன் வரை பலரையும் அ.தி.மு.க.வில் இணைத்ததிலும் தங்கள் பங்களிப்பு உண்டா?

஑஑கலைத்துறையில் உள்ள பலரிடமும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நடிகைகள் அ.தி.மு.க. பக்கம் வருவதில் ஆச்சரியம் இல்லை. ஜெயலலிதாவும் கலைத்துறையில் நடிகையாக இருந்தவர்தானே... அதனால் ஆதரவு தெரிவித்திருக்கலாம்.ஒஒ

உங்களைப்போலவே ஒரு நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரும் ஜெ.ஒவுக்கு நெருக்கமாக இருந்தவர்தான். கடைசியில் எந்த சங்கடத்திற்கு ஆளானார் என்பது தங்களுக்கே தெரியும்!

஑஑அப்படிப்பட்ட சங்கடம் எமக்கு ஒருபோதும் வராதுஒஒ

ஒருவேளை தி.மு.க. வென்று ஆட்சி அமைத்தால்?

஑஑எம் எண்ணம் என்ன? செயல்பாடு என்ன? தமிழ் உணர்வு என்ன? சேவை என்ன? என்பதெல்லாம் தி.மு.க. தொண்டர் முதல், தலைவர் வரை தெரியும். அதனால் எமக்கு எந்தத் தொந்தரவும் வராது.ஒஒ

சரி... வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த அணி வெற்றி பெறும்?

஑஑நாம் ஜோதிடர் அல்ல, ஆருடம் கூறுவதற்கு!ஒஒ

வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

஑஑அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். புரட்சித்தலைவி அவர்கள் மீண்டும் முதலமைச்சராவார் என்று தெரிகிறது.ஒஒ

சற்று முன்புதான் ஑ஜோதிடர் அல்லஒ என்றீர்கள். தற்போது ஑புரட்சித்தலைவிஒ என்று அ.தி.மு.க.வினர் போல் பேசுகிறீர்கள். ஆதீனம் பேசுவது குழப்பமாக இருக்கிறதே...

஑஑மக்கள் கருத்தைச் சொல்கிறோம். புரட்சித்தலைவி என்றால் உண்மையான புரட்சித்தலைவி. அதனால் நாமும் சொல்கிறோம். ஆனால், இன்றுவரை புரட்சித்தலைவியை நாம் நேரில் சந்தித்ததில்லை. தொலைபேசியில்கூட பேசியதில்லை.ஒஒ

இறுதியாக ஒரு கேள்வி... எல்லா கட்சிக்கும் பொதுவானவர் என்று பேச்சளவில் நீங்கள் கூறினாலும் ஜெயலலிதாவை மட்டும் ஆதரிப்பதற்கு ஒரு காரணம் இருக்கும் அல்லவா?

஑஑ஏன் ஆதரிக்கிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்கிறோம். திருநீறு பூசி, குங்குமம் இட்டு, யாக சாலை, ஹோமகுண்டம் வளர்த்து, அங்கப்பிரதட்சணம் செய்யவும், கோயில் தோறும் கும்பாபிஷேகம் நடத்தவும், அன்னதானம் செய்யவும், ஆன்மிகம் வளர்க்கவும், திராவிடக் கட்சிகளிலேயே அ.தி.மு.க. தவிர வேறு எதுவும் இல்லை. அந்த ஆன்மிக ஈடுபாட்டின் காரணமாகவே நாம் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறோம்.ஒஒ

Wednesday, April 12, 2006

வைகோ-வின் கூட்டணிக்கணக்கு

சென்ற வாரம் திண்ணையில் வெளிவந்த திரு அக்னிபுத்திரனின் கோபால்சாமியா? கோயபல்ஸ்சாமியா? என்ற ஆராய்ச்சிக்கட்டுரை அவர் ஒரு திமுக அனுதாபி என்பதைத்தான் காட்டுகிறதே தவிர உண்மையான ஆராய்ச்சிக்கட்டுரையாக இல்லை என்பது என்னைப்போன்ற நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த தேர்தலில் வைகோ அவர்கள் திமுக வுடன் கூட்டணிிவைத்து அதனால் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அது வைகோவுக்கும் மதிமுக-விற்கும் அவர்களே அடித்துக்கொண்ட சாவுமணியாகத்தான் இருக்கும்.

இப்போது இருக்கும் தமிழகத்தலைவர்களுல் ஓரளவுக்கு நல்லவராகவும், திறமையுள்ளவராகவும், கொள்கைப்பிடிப்பு உள்ளவராகவும் இருக்கக்கூடியவர் திரு வைகோ அவர்கள்தான். அவர் இந்த முறை இல்லாவிட்டாலும் அடுத்த முறையாவது நிச்சயமாக ஆட்சிக்கு வரக்கூடிய சூழல் உருவாவதற்கு அவர் இப்பொது எடுத்த முடிவே சரியானதாகும்.

ஏனெனில் மதிமுக போல் தென்மாவட்டங்களில் ஒரு வலுவான கட்சியுடனும், பாமக போல் வட மாவட்டங்களில் ஒரு வலுவான கட்சியுடனும் கூட்டணிி வைப்பதன் மூலம் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற் திமுக கனவு கண்டுகொண்டிருக்கிறது. அவர்கள் கனவு நிஜமானால் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராக வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அப்படி ஸ்டாலின் முதல்வராக வரும்பட்சத்தில் அது எந்த விதத்தில் வைகோவுக்கும் மதிமுக-விற்கும் நன்மை பயப்பதாக அமையும்?. தன் ஆட்சி மற்றும் அதிகார பலத்தால் தனக்கு பிடிக்காத வைகோவையும், மதிமுக-வையும் அழிக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்வார். அது வைகோவிற்கு ஜெயலலிதா செய்த கொடுமையை விட அதிகமாகத்தான் இருக்கும்.அதோடு திமுக-வில் பிழவு ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகும். ஸ்டாலின் தலைமையில் திமுக-வும், ஜெயலலிதா தலைமையில் அதிமுக-வும் தான் தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக இருக்கும். தமிழக அரசியலில் வைகோ-விற்கு இப்பொது இருக்கும் நிலைகூட வரும்காலங்களில் இல்லாமல் போகலாம்.

ஆனால் ஒருவேளை இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் நிச்சயமாக ஜெயலலிதா தன் தோழமைக்கட்சிகளை வெகு விரைவிலேயே கழட்டி விட்டுவிடுவார். அது எல்லோரும், ஏன் வைகோவும் எதிர்பார்க்கும் ஒரு விசயம்தான். ஆனால் ஒருவேளை அடுத்த 5 ஆண்டுகளில் எதிர்பாராதவிதமாக திமுக தலைவர் திரு கருணாநிதி அவ்ரகளின் காலம் நிறைவடையும்பட்சத்தில் அவரின் வாரிசுகளால் திமுக-வில் மிகப்பெரிய பிழவு ஏற்படும். அது திமுக-வை வலுவிலக்கச்செய்யும். உண்மையான திமுக தொண்டர்களும், திரவிடக்கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களும் வைகோவின் தலைமையில் மதி,முக-வில் ஜ்க்கியமாவார்கள். தமிழகத்தில் அதிமுக-விற்கு சரியான போட்டியாக மதி,முக வளரும். அடுத்து வரும் தேர்தலில் நம் மக்களின் எகோபித்தா ஆதரவுடன் மதி,முக ஆட்சியில் அமரும். வைகோ தமிழகத்தின் சிறந்தா முதல்வர்களுல் ஒருவராக நிச்சயம் இருப்பார். வைகோவும் அவருடைய கட்சியும் எடுத்த இந்த கூட்டனி முடிவு மேற்கூறிய கருத்துக்களை ஒத்தே எடுக்கப்பட்ட முடிவாக நான் கருதுகிறேன். தொகுதிப்பங்கீட்டுப்ப்ரச்சனையெல்லாம் கூட்டணிியை விட்டு வெளியேற ஒரு காரணமே தவிர அது முக்கிய பிரச்சனையாக இங்கு நான் கருதவில்லை. வரும் தேர்தலில் திமுக வெற்றிபெறக்கூடது என்பதுதான் இப்பொது முக்கியமாக மதிமுக கருதுகிறது.

தொலைநோக்குப்பார்வையுடன் எடுக்கப்பட்ட இந்த முடிவால் அடுத்த சில ஆண்டுகள் தமிழகம் கஷ்டப்பட்டாலும் வரும் காலங்களில் வைகோ-வின் தலைமையில் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

Tuesday, April 11, 2006

கார்த்திக் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசா?

திரைப்பட நடிகர் கார்த்திக் சில நாட்களுக்கு முன்னர் அவர் மீதான பண மோசடி வழக்குகளுக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அது போன்ற வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க, வழக்கு போட்டவர்களை மிரட்ட அவருக்கு ஒரு அரசியல் கட்சியுன் தயவு தேவைப்பட்ட நேரத்தில் அவர் முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்து அதிமுக- வில் சேர முயன்றார். அது சீக்கிரம் நடக்காமல் போகவே, ஒரு அறிமுகமான நடிகர் மற்றும் ஒரு சாதியை சார்ந்தவர் என்கிற ஒரு அடையாளத்துடன் "சரணாலயம்" என்ற ஒரு சாதீய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அரசியல் கட்சிகளின் பார்வை தன் மீது படர முயற்சி செய்தார். அவர் எதிர்பார்த்தது போலவே தமிழக அரசியலில் அவருக்கு ஒரு இடம் கிடைத்தது. இன்று அவர் பாரம்பரியம் மிக்க "பாரவர்டு பிளாக்" கட்சியின் மாநில தலைவர்.

கார்த்திக்கைப்ப்ற்றி திரையுலகிற்கு மட்டும் அல்ல தமிழகத்ததிற்கே நன்றாக தெரியும் அவர் ஒழுங்கீனத்தின் மொத்த உருவம் என்று. பல நடிகைகளுடன் தவறான உறவு வைத்திருந்தவர். "நடிகையின் கதை"-யின் நாயகனாகவே அவர் இருந்தார். ஏமாற்றிவிட்டு கைவிட்டுவிடலாம் என்றிருந்த ஒருவரை அவர் சார்ந்த மலைவாழ் மக்களின் மிரட்டலுக்காக திருமணம் செய்து கொண்டவர். தன் மனைவியின் தங்கையைகூட விட்டுவைக்காத அவரை தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவரும், நேதாஜி அவர்களுடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவரும், சிறந்த சொற்பொழிவாளருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருடன் ஒப்பிடுப்பேசுவதும், அவர் பாதுகாத்த கட்சியை இனிமேல் இவர்தான் காக்கப்போகிரார் என்கிற ரீதியில் பேசுவதும் அந்த மாகனை இழிவுபடுதும் செயலாகும்.

அம்பேத்கார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் மற்றும் சிதம்பரனார் போன்றவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன் நாட்டிற்கும், தன் மக்களுக்கும் சாதி மதம் பாராது உழைத்தவர்கள். அத்தகைய மகான்களை ஏதோ ஒரு சாதிச்சங்கத்தலைவர் போல ஒரு குறுகிய வட்டதில் அடைத்து அதன் மூலம் அரசியல் லாபமடையப்பார்க்கும் ஒரு சில சமூக விரோத சக்திகளை நம் மக்கள் அடையாளம் கண்டு அப்புறப்படுத்தவேண்டும். அதற்கு இந்த தேர்தல்தான் சரியான தருணம்.

இந்த தேர்தலில் மக்கள் வெரும் குறுகியகால சந்தோசங்களுக்காக தங்கள் விலைமதிப்பில்லாத வாக்குகளை விற்றுவிடாமல் நாட்டின் எதிர்காலத்தையும், நம் மக்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு திறமையுள்ள, தொலைநோக்கு பார்வையுள்ள குறிப்பாக பொது நலனில் அக்கறையுள்ள வேட்பாளர்களை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கவேண்டும்.