$user_name="Jeyakumar";

Friday, May 05, 2006

இந்திய பொருளாதாரத்தின் பொக்கிஷம், நம்ம சிதம்பரம்

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தால், அந்த ஆட்சியால் சிறப்பாக செயல்படமுடியும் என்று திருவாய் மலர்ந்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் சினாதானா. அப்படியானால் காங்கிரஸ் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு மாற்றான் தாய் கண்ணோட்டத்துடன் பார்க்கிறதா?

தமிழகத்தில் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அணியில் எந்த ஒரு பெரிய தேசிய கட்சியும் இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் ,மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிச கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இவர்களால் நமக்கு என்ன நன்மை. இந்த தேசிய கட்சிகள் எதற்குமே நாடுதழுவிய கொள்கைகள் இல்லை. மாநிலத்திற்கு, மாநிலம் இவர்க்ளின் கொள்கைகள் மாறுபடுகின்றன.

இன்று தமிழகத்தை வளப்படுத்துவோம் என்று கூறுகிற சினாதானா, வைகோ மற்றும் தயாநிதி மாறன் பாணியில் சொல்லவேண்டுமெனில் ஒரு உண்மையான ஆண்மகனாக இருந்தால், காங்கிரஸ் கட்சியின் தேசியதலைவர்களுல் ஒருவராக இருக்கும் இவர், ஆந்திர காங்கிரஸ் முதல்வரிடம் பாலாற்றில் அணைகட்டவேண்டாம் என்று சொல்லமுடியுமா?
அந்த தைரியமும் துணிச்சலும் அவரிடன் இருக்கா?

இதே போல நாளை கேரளத்தில் கம்யூனிசக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், இந்த கம்யூனிஸ்டுகள், நம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரியார் அணையை உயர்த்த அனுமதியளிக்கச் சொல்லி கேரள அரசிடம் கேட்கமுடியுமா?

இதே போலத்தான் நம் மக்களின் உயிராதாரப்பிரச்சனையான காவரிப்பிரச்சனையும். கர்நாடாகவில் ஒரு கொள்கை, தமிழ்நாட்டில் ஒரு கொள்கை என இந்த தேசியக்கட்சிகளின் கொள்கைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுகொண்டே இருக்கிறன.

தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமரிடம், அவரை நம்பித்தான் தேர்தல் அறிக்கை வேளியிட்டுள்ளேன் என்று கருனாநிதி கூறியுள்ளார். அப்படியானால் பிரதமர், தமிழகத்திற்கு மட்டும் தனியாக விஷேச மாணியம் வழங்கப்போகிறாரா?. இந்த 2 ரூபாய் அரிசி, இலவச அரிசி திட்டங்கள் எல்லாம், கடத்தல், ஊழல், போலி ரேசன் கார்டுகள் போன்ற பலபிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார மேதைகளான, சீனாதானாவுக்கும், பிரதமருக்கும் தெரியாதா என்ன?.

இதேபொல தமிழகத்தில் பொறம்போக்கு தரிசு நிலங்கள் எல்ல இடங்களிலுமா உள்ளன. இவற்றை எப்படி பகர்ந்தளிப்பார்கள். இந்த திட்டங்கள் பல பினாமிகளை உருவாக்க வழிவகுக்கும் என்பதும் இந்த பொருளாதார மேதைகளுக்கு தெரியாத என்ன?.

உண்மையிலேயே இவர்களுக்கு நம் மக்கள் மீதும் நாட்டின் மீதும் அக்கரை இருந்தால், விவசாயத்திற்கு பயன்படும் பொறம்போக்கு நிலங்களை நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடலாம். அவர்களுக்கு கடன்வழங்கி விவசாயமும் செய்ய வழிவகை செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு நிரந்தர வருவாயும், அரசுக்கு ஆதாயமும் கிடைக்கும். ஏழைவிவசாயிகளும் தனக்கு தெரிந்த தொழிலை மறக்காமல், மற்றவர்களின் கைகளை எதிர்பார்க்காமல் சிறப்பாக வாழவும் முடியும். விவசாயத்திற்கு உதவாத நிலங்களை விவசாயிகளுக்கு இலவசமாய் கொடுத்து என்ன செய்ய?. இலவசமாய் கிடைக்கும் எதிலுமே ஒரு ஈடுபாடு இருக்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. மாணவப்பருவத்தில் பெற்றோரின் பணத்தை செலவு செய்து ஜாலியாக ஊர் சுற்றும்போது அந்த பணத்தின் அருமை தெரிவதில்லை. அதை நாமே சம்பாதிக்கும் போதுதான் அதனுடைய அருமை தெரியும். அதேபொலத்தான் இதுவும்.


நகரத்தில் இருக்கும் குடும்பபெண்களை காலை 11 மணியில் இருந்து இரவு பதினோரு மணிவரை தொடர்களை ஒளிபரப்பி சோம்பேறியாக்கி வைத்தது போதாதென்று இப்போது உழைக்கும் வர்க்கத்தினரையும் அதேபோல மாற்ற முயலும் இந்த இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தை இந்த பொருளாதார மேதைகள் ஆதரிக்கிறார்களா?

இதற்கு பதிலாக ஒவ்வொரு கிராமத்திலும் , அந்த கிராமத்தில் அவர்கள் பெருவாரியாக செய்யும் தொழில்களுக்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுக்கலாமே!?.
உதாரணமாக விவசாயம் அதிமாக உள்ள கிராமங்களில் கதிரருக்கும் இயந்திரங்கள், களங்கள், 10 கிராமங்களுக்கு ஒரு நவீன அரிசி ஆலை என பல வசதிகளை செய்துகொடுக்கலாம். இதனைக்கூட இலவசமாக கொடுக்காமல் குறைந்தபட்ச வாடகையுடன் கொடுக்கலாம். ஏனென்றால் இலவசமாக் கொடுத்தால் இதற்கு முன்னர் அரசு கட்டிக்கொடுத்த இலவச கழிப்பறை போன்று இதையும் யாருக்கும் பயனில்லாமல் ஆக்கிவிடுவார்கள். இதுபோன்ற நலத்திட்டங்கள்தான் நம் கிராமங்களையும் அதன் மூலம் நம் நாட்டையும் மேம்படுத்தும்.

சீனர்கள் தங்களிடம் உள்ள மனித சக்தியை எப்படியெல்லாம் பயன்படுத்தி மேலைநாடுகளுக்கு நிகராக வளர்ந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் தொகையிலும் , இயற்கை வளங்களிலும் நாம் சீனர்களுக்கு கொஞ்சம் கூட குறைந்தவர்கள் இல்லை. நம் மக்கள் அவர்களை விட புத்திசாலிகளே!. ஆனால் நம்மால் மட்டும் ஏன் அவ்வாறு முன்னேற முடியவில்லை. நம்மவர்கள் சீனர்களை விட உழைப்பாளிகலே, ஆனால் ஒருகூட்டம் நம்மை இது போன்ற இலவசங்களை கொடுத்து , நம் கவனத்தை திசைதிருப்பி நம்மை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தி, நாம் துயிலும் போது நம் சொத்துகளை நாம் அறியாமலேயே சுரண்டிகொண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் பொருளாதாரம் படித்த இந்த இருமேதைகளில் ஒருவர் பொம்மையாகிவிட்டார், மற்றொருவர் தன் பொருளாதாரத்தை உயர்த்த முயன்று கொண்டிருக்கிறார். ராஜீவின் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட கிராஃபைட் தொழிற்சாலையை இன்னும் ப.சி யால் சிவகெங்கையில் கொண்டுவரமுடியவில்லை. இந்திய பொருளாதாரமே இவர் கையில், ஆனால் தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியமாவட்டம் இவருடைய மாவட்டம் தான். கிராஃபைட கனிம வளம் நிறைந்த இப்பகுதியை நெய்வேலி போல ஒரு தொழில் நகராக்க முடியும், ஆனால் இந்த பொருளாதார மேதையால் இந்த ஊரை குறைந்தபட்ச வசதிகள் கொண்ட ஒரு நகரமாக கூட ஆக்க முடியவில்லை என்பது இங்கு சென்றுவந்தவர்களுக்கு தெரியும். ஏற்கனவே மானாமதுரை சிப்காட்-டில் இயங்கிய ஒரு கிராஃபைட் தொழிற்சாலை இந்த புண்ணியவான் தயவால் பூட்டப்பட்டு கிடக்கிறது.

13 Comments:

At 6:37 PM, Blogger மாயவரத்தான் said...

கூட்டாட்சி தத்துவம் என்பது இது தான் ஜெயக்குமார். தெரியாதா உங்களுக்கு?!

 
At 7:18 PM, Anonymous Anonymous said...

அட என்ன ஜெயக்குமார்
நெல்லை கண்ணன் சொன்னது தான் கடைசில
நடக்கப்போகுது பாருங்க.
எலக்சன் முடிஞ்சதும் ஒரு பினாமி விட்டு
பொதுநலவழக்கு போடப் போறாறு
கருணாநி பரச்சனை அத்தோட முடிஞ்சிரப்போது.

 
At 1:31 AM, Blogger ஜெயக்குமார் said...

//இதற்கு பதிலாக ஒவ்வொரு கிராமத்திலும் , அந்த கிராமத்தில் அவர்கள் பெருவாரியாக செய்யும் தொழில்களுக்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுக்கலாமே!?.
உதாரணமாக விவசாயம் அதிமாக உள்ள கிராமங்களில் கதிரருக்கும் இயந்திரங்கள், களங்கள், 10 கிராமங்களுக்கு ஒரு நவீன அரிசி ஆலை என பல வசதிகளை செய்துகொடுக்கலாம். இதனைக்கூட இலவசமாக கொடுக்காமல் குறைந்தபட்ச வாடகையுடன் கொடுக்கலாம். ஏனென்றால் இலவசமாக் கொடுத்தால் இதற்கு முன்னர் அரசு கட்டிக்கொடுத்த இலவச கழிப்பறை போன்று இதையும் யாருக்கும் பயனில்லாமல் ஆக்கிவிடுவார்கள். இதுபோன்ற நலத்திட்டங்கள்தான் நம் கிராமங்களையும் அதன் மூலம் நம் நாட்டையும் மேம்படுத்தும்.//

நாட்டுக்கு இதுபோல நல்ல திட்டங்களை சொன்னா, மக்களுக்கு நல்ல திட்டங்கள் எது, தமது வருவாய்க்கு நல்ல திட்டங்கள் எது என பகுத்தாராய்ந்து கொண்டிருக்கும் இன்றைய பகுத்தறவு பகலவன்களுக்கு அது எட்டிக்காய் போலத்தான் இருக்கும்.

இவர்களுக்கு சங்கு ஊதவேண்டியது மக்களின் பொறுப்பு.

 
At 2:05 AM, Blogger Amar said...

சொன்ன சொல்ல காபாத்த முடியாம போனா பிரதமரை நம்பி தான் வாக்குறுதி கொடுத்தேன் அவர் கைவிட்டுவிட்டார்ன்னு சொல்லிடுவாரோ?

அப்புறம் மத்திய ஆட்சி கவுந்தா இத காரனமா வச்சு அடுத்த அணிக்கு தாவிடலாம்!

கருனாநிதி இப்பவே காரனத்தை ரெடி பன்னியாச்சு!

 
At 3:54 AM, Blogger Radha N said...

கருணாநிதி ஒரு மண்குதிரை!

 
At 1:36 PM, Anonymous Anonymous said...

Dear Mr Jeyakumar,

I enjoy reading your blog. It is both unique and stimulating.

SInce, my computer is not enabled for tamil fonts, I am writing in English. I was wondering, if at sometime, could you please write about the hypocrisy and double standards with DMK and PMK when it comes to cauvery issue.

I always wondered how these guys, go after Rajini and Vijaykanth for Cauvery issue. But they never gave us any explanations for, why they never wanted their men in the parliament to take over the ministry for water distribution.

With PMK, it is even worse, they have their son, with a useless portfolio. Why can't they dedicate their son's efforts to bring Cauvery?

Sometimes I wonder, does India need Pakistan and China to destroy us. I think DMK and PMK will be enough to do that.

Vignesh

 
At 2:16 PM, Anonymous Anonymous said...

ஜெயக்குமார் நீங்கள் ஒரு இந்தியனாக தமிழனாக இருந்து
சிந்திக்கிறீர்கள். ஒரு மக்கள் கட்டமைப்பு எப்படி அரசியலால்
(அல்லது அரசியல் வாதிகளால்) கையாளப்படவேண்டும்
என்று!
ஆனால் மக்களை இவ்வளவு பொருளாதார சிந்தனையோடு
கட்டியெளுப்பினால் அதன் விளைவு? இலவசங்களால்
அரசியல் நடத்தும் அரசியலுக்கு (அரசியல் வாதிகளுக்கு)
சாவு மணிதான். மக்கள் எப்போதுமே இந்த அற்ப இலவசங்களால்
மகிழ்ச்சிடைய வேண்டும். அதுதான் எப்போதும் வேண்டும்!

M.G.R

 
At 3:31 PM, Blogger ஜெயக்குமார் said...

//ஆனால் மக்களை இவ்வளவு பொருளாதார சிந்தனையோடு
கட்டியெளுப்பினால் அதன் விளைவு? இலவசங்களால்
அரசியல் நடத்தும் அரசியலுக்கு (அரசியல் வாதிகளுக்கு)
சாவு மணிதான். //

அந்த மணிக்காகத்தான் அடுத்த தலைமுறை காத்துகொண்டிருக்கிறது. ஆனால் அது சன் டிவி பார்த்து வளர்ந்த தலைமுறையாக இருக்கக்கூடாது.

"வீட்டுல ஆயிரெத்தெட்டு பிரச்சனைகளை வைச்சுக்கிட்டு ஊர்ப்பிரச்சனையை பார்க்கப்போறாராம்" என்று நம்மூர்பக்கம் வழக்கில் கூறுவார்கள். அதேபோலத்தான் சொந்த தொகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத சிதம்பரம் நம் நாட்டுப்பொருளாதாரத்தை தூக்கிநிறுத்தப்போறாராம்.

கிராமங்களின் வளர்ச்சியில் தான் நம் இந்தியாவின் வளர்ச்சியே உள்ளது. பரப்பளவில் பெரும்பகுதியை விவசாயப்பகுதியாக வைத்திருக்கும் நம் நாடு இன்னும் தேவைக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்கும் நிலையில் தான் இவர்களில் பொருளாதார சிந்தனைகள் உள்ளன.

பணக்காரனை மேலும் பணக்காரனாக்குவது , நகரத்தில் உள்ள சில பணக்காரப்பள்ளிகளில் நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களை வடிகட்டி எடுத்து அவர்களை பெரியாளாக்குவது போலத்தான். அதற்கு பெரிதாக திறமை தேவைப்படுவதில்லை.
பல தலைமுறைகளாக வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களிம் நிலையை உயர்த்தும் பொருளாதாரக்கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துபவர்களே, சிறந்த பொருளாதார மேதைகள்.

இதில் சிதம்பரம் எந்த ரகம் என்பது இங்கு அணைவருக்கும் தெரியும்.

இதற்கு ஜால்ரா அடிக்கும் கம்யூனிஸ்டுகளை என்ன சொல்லிதிட்டுவது என்றே தெரியவில்லை.

 
At 11:41 PM, Blogger ஜெயக்குமார் said...

//Sometimes I wonder, does India need Pakistan and China to destroy us. I think DMK and PMK will be enough to do that.//

கடவுளே!, உள்ளூர் துரோகிகளிடம் (DMK, PMK) இருந்து எங்களை காப்பாற்று, வெளிநாட்டு விரோதிகளை(பாகிஸ்தான், சைனா) நாங்கள் பார்த்துக்கொள்கிரோம்.

நம்ம "சூப்பு ஸ்டாரு" இப்படி ஒரு வாய்ஸ் கொடுத்தா எப்படி இருக்கும்.

இதற்கு கலைஞர் எசைபாட்டு (வசைப்பாட்டு) பாடினா எப்படி இருக்கும்.

"தமிழக மக்களே!, வெளிமாநில இந்த கர்நாடகத்தான் சுரண்டலில் இருந்து உங்களை காப்பற்றிக்கொள்ளுங்கல். உள்ளூர் சுரண்டலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்"

 
At 3:26 AM, Anonymous Anonymous said...

சூப்பரின் வாய்ஸைவிட கலைஞரின் வாய்ஸ் சூப்பர்!

 
At 5:06 PM, Anonymous Anonymous said...

"தமிழக மக்களே!, வெளிமாநில இந்த கர்நாடகத்தான் சுரண்டலில் இருந்து உங்களை காப்பற்றிக்கொள்ளுங்கல். உள்ளூர் சுரண்டலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்"


Thats an unwarranted take on someones three decades of hardwork and sweat. Earning crores legitimately is always admirable than, people who start their political life with rupees forty and now have 25 crores! Someone in their blog said, Kalaiganr has made on an average rs 500 per hour in the past fifty years to make 25 crores.

So, please do not confuse earned money with stolen money.

Vignesh

 
At 3:28 AM, Anonymous Anonymous said...

// Mr.Vignesh //

Y not AIADMK will kill us.

Did you peoples forgot about the Dharamupuri Issue when jj arrested.

Nothing happened like this when MK arrested. Sun TV was telecasting this for so many times, its their problem.

If we dont like Sun TV we should stop viewing it.

Note: No has a right to critizise a Movie which they have never seen. Same logic goes to Sun also. If its bad stop watching

Ah! jaya Anna, will you atleast approve this comment. Hehehe!!!

 
At 5:28 AM, Blogger ஜெயக்குமார் said...

//If we dont like Sun TV we should stop viewing it.

Note: No has a right to critizise a Movie which they have never seen. Same logic goes to Sun also. If its bad stop watching//

நான் ஏற்கனவே ஒரு பதிவுக்கு இட்ட பிண்ணூட்டதையும் இங்கே வெளியிட விரும்புகிறேன்.

ஒரு ஊரில் பெருவாரியான மக்கள் சாரயம் விரும்பி குடிக்கிறார்கள் என்பதற்காக , சாரயக்கடை நடத்துபவர்களை பாராட்டுவது நல்லவிசயமல்ல. அதற்காக அவர்கள் தொடர்ந்து அதையே செய்ய அனுமதிப்பதும் நல்லதல்ல.

சன் டிவி யும் சாரயக்கடை போன்றதுதான். அதுவும் டாஸ்மார்க் சரக்கைவிட மோசமானது. நம் சமூகத்தை ஒருவிதமான போதை மயக்கதிற்கு இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. எனவேதான் அதை மேலும் வளரவிடுவது தவறு என்று நான் கூறுகிறேன்.

 

Post a Comment

<< Home