$user_name="Jeyakumar";

Saturday, May 06, 2006

வைகோ சிறப்புப் பேட்டி - தினமலர்

என்னென்னவோ சொல்லி மக்கள் மனதை கலைக்க தி.மு.க., கடும் முயற்சி செய்கிறது. ஆனால், அவர்களது முயற்சி வெற்றி பெறாது. எங்களது அணி தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்று ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசார பயணத்திற்கு நடுவே ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ அளித்த சிறப்புப் பேட்டி:

* தேர்தல் களத்தில் உங்களை எதிர்த்து நிற்கும் தி.மு.க., அணியில் எல்லோரும் உங்களையே குறி வைத்து ஏன் தாக்குகிறார்கள்?


எனக்கு எந்தவிதமான செல்வாக்கும் இல்லை என்று கருணாநிதியின் குடும்ப வட்டாரம் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கின்றன. கருணாநிதியின் பரிவாரங்கள் என்மீது அவதுறுகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவிர, மற்ற கட்சிகள் எனது பிரசாரத்தின் வேகம் காரணமாக எங்கே தி.மு.க., தோற்றுவிடுமோ என்ற பதட்டத்தில் என்மீது தங்கள் கோபத்தை காட்டுகிறார்கள். கீழ்த்தரமாக என்னை விமர்சிப்பதற்கு சில நடிகர்களும் களம் இறங்கியிருக்கிறார்கள். ஏககாலத்தில் இவர்கள் அனைவரும் என் மீது பாய்வதிலிருந்தே இந்தக்கூட்டணியை எனது பிரசாரம் எந்தளவு பாதித்திருக்கிறது என்றும், பயமுறுத்தியிருக்கிறது என்றும் தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள். என் மீது இவர்கள் அனைவரும் கடுமையாக விமர்சனம் செய்வதிலிருந்தே கருணாநிதியின் குடும்ப அரசியல் ஆதிக்கத்தின் மீது நான் சுமத்தும் குற்றச்சாட்டுகள் ஆணித்தரமான உண்மைகள் என்பது புலனாகிறது. ஒரே ஒருநாள் "முரசொலியில்' வைகோவை விமர்சிக்கவேண்டாமென்று சொல்லிவிட்டு, தினமும் "முரசொலியின்' பக்கங்கள் என்னை திட்டுகின்றன. இதைப்பார்த்ததும் கூட்டணியினர் அனைவரும் அதே பாதையை பின்பற்றுகிறார்கள்.

* இந்தத்தேர்தலில் நீங்கள் எடுத்த முடிவு சர்ந்தர்ப்பவாத முடிவு என்று எதிரணியினர் அனைவரும் உங்களை விமர்சிக்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அசைவற்ற நிலையில் இருந்த முரசொலி மாறனை மந்திரியாக வைத்துக்கொண்டே காங்கிரசோடு திரைமறைவில் கூட்டணி குறித்து யார் பேசியது? அது பச்சை துரோகமல்லவா? கேரள எல்லையில் காங்கிரசை கடுமையாக விமர்சித்துவிட்டு 10 கிலோ மீட்டர் தாண்டி தமிழகத்தின் எல்லைக்குள் வந்தவுடன் காங்கிரசுடன் ஒரே மேடையில் அமர்ந்து கொண்டு என்னை வசைபாடும் மார்க்சிஸ்ட்களின் செயலுக்கு பெயர் என்ன? செயல் தந்திரமா? சர்ந்தர்ப்பவாதமா? யார் முடிவு செய்வது? நம்ப வைத்து நயவஞ்சகமாக கழுத்தறுக்கும் கருணாநிதியின் சதிவலையில் இருந்து விடுபடவேண்டுமென்று மறுமலர்ச்சி தி.மு.க., தொண்டர்கள் நுறு சதவீதம் விரும்பினார்கள். என்னிடம் வற்புறுத்தினார்கள். தமிழக நலன்களின் மீது அக்கறை கொண்ட நடுநிலையான பொதுமக்கள், அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ளுமாறு என்னிடம் கருத்து தெரிவித்தார்கள். இவ்வளவுக்குப்பிறகே கட்சியின் முக்கிய குழுக்களிடம் கலந்தாலோசித்து இந்த கூட்டணி முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம்.


* எல்லோரும் இதுபோன்று கடந்த காலத்தில் அணிமாறியிருந்தாலும் உங்களை மட்டும் ஏன் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்று தி.மு.க.,வும், மார்க்சிஸ்ட்களும் குற்றம் சாட்டுகிறார்கள்?

(சிரிக்கிறார்) எது சந்தர்ப்பவாதம் என்று யாரிடம் யார் சான்றிதழ் பெறவேண்டும்? அறிவாலயத்திலும், டில்லியில் உள்ள ஏ.கே.ஜி., பவனிலும் தரச்சான்றிதழ் பெற்றுவிட்டுத்தான் ஒரு முடிவு எடுக்கவேண்டுமென்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் போலும். மத்தியில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு ஆண்டு நீங்கலாக மற்ற மூன்று அமைச்சரவையிலும் தி.மு.க., பங்கேற்றிருக்கிறது. 1996 முதல் 1998வரை இருந்த அமைச்சரவைக்கு ஐக்கிய முன்னணி அரசு என்று பெயர். 1999 முதல் 2004 வரை இருந்த அரசுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயர் . 2004 முதல் இன்றுவரை உள்ள அரசுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று பெயர். மூன்றிலும் மாறாமல் இடம் பெற்றிருப்பது தி.மு.க., அமைச்சர்கள் தான். புராணங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் "இந்திரன் மாறுவான் இந்திராணி மாறமாட்டாள்' என்று கூறுவார்கள். அதைப்போல ஜனதாதளம் ஆட்சிக்கு வந்தாலும் சரி, பா.ஜ., ஆட்சிக்கு வந்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சரி தனது நிலையை மாற்றிக்கொண்டு மத்திய அமைச்சரவையில் ஒட்டுண்ணி போல ஒட்டிக்கொண்டிருப்பது தி.மு.க.,தானே. இதைவிட கடைந்தெடுத்த சர்ந்தர்ப்பவாத சுயநல அரசியல் வேறு என்ன இருக்க முடியும்.


* மத்திய அரசுக்கு இயைந்து போகும் மாநில அரசு உருவாக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்கிறதே? இதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் நண்பர் சிதம்பரமும் இதுபோன்று தமிழகத்தில் பேசியிருப்பது துரதிஷ்டவசமானது. இந்த பேச்சு இந்தியாவின் கூட்டாச்சி தத்துவத்திற்திற்கு விரோதமானது. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஒரு எதேச்சதிராக அரசாங்கத்தை நடத்திக் கொண்டு வந்ததின் மிச்ச சொச்சமே இந்த கருத்து. மாநிலங்கள் சுதந்திரமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் மூலமே செயல்படவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்புத் தரவேண்டும். இதற்கு எதிராக காங்கிரஸ் பேசுவது அதன் எதேச்சதிராக போக்கையே காட்டுகிறது.


*ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீங்கள் இன்னும் இருக்கிறீர்களா?

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரிப்பதாக நான் அறிவித்ததற்கு அடுத்தநாள் என்னை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்கவிட மாட்டோம் என்று ஆத்திரத்தில் வார்த்தைகளை கெட்டித்தீர்த்தது கருணாநிதிதான். தலைகீழாக நின்று அதற்காக டில்லியில் சோனியாவிடமும், மன்மோகன்சிங்கிடமும் முயற்சி செய்தார்கள். ஆனால் கருணாநிதியின் முயற்சி வெற்றிபெறவில்லை. எங்களது நான்கு எம்.பி.,க்களை காட்டி கூடுதலாக அமைச்சர்களை தி.மு.க., பெற்றது என்று நான் குற்றம் சாட்டினேன். பிரசாரத்திற்காக தமிழகம் வரும்போது பிரதமரும், சோனியாவும் இதற்கு தக்கபதிலடி தருவார்கள் என தி.மு.க., தரப்பில் சொல்லப்பட்டது. இப்போது அவர்கள் தமிழகத்தில் பிரசாரத்தை முடித்து விட்டார்கள். ஆனால் எந்த பதிலும் அவர்களால் கூறமுடியவில்லை. எப்படி கூறமுடியும்? என்னிடம் அந்த தகவலை சொன்னதே அவர்கள் இருவரும்தானே. எனவே அவர்கள், எப்படி அவர்கள் சொன்ன தகவலையே மறுக்க முடியும்? எனவே எங்களது எம்.பி.,க்களைக் காட்டி கூடுதலாக பதவி பெற்ற தி.மு.க., மத்திய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.


* தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலில் ஹீரோ என்று நடக்கும் பிரசாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

இது ஒரு அப்பட்டமான மோசடி பிரசாரம். மத்திய அமைச்சரவையில் உணவு மானியத்தை குறைத்து அரிசி, கோதுமையின் விலையை உயர்த்துவதற்கு துணையாக இருந்தவர்கள் தி.மு.க., அமைச்சர்கள். இங்குவந்து இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி போடுவோம் என்றால், மக்கள் நம்புவார்களா? இந்த விலை உயர்வு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்பின் நிச்சயமாக அரிசியின் விலையை மத்திய அரசு உயர்த்தப்போகிறது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலையை தேர்தல் முடிந்தபிறகு உயர்த்தப்போகிறது. இந்த விலை உயர்வையெல்லாம் கைகட்டி வாய்பொத்தி மவுனமாக மத்திய அரசில் அனுமதித்துவிட்டு தமிழகத்திற்கு வந்து சலுகைகளைப் பற்றி பேசும் போலி தலைவர்களை மக்கள் நிச்சயம் இனம் கண்டுகொள்வார்கள். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது.


* விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்வதாக தி.மு.க.,வும் அறிவித்திருக்கிறதே?

இந்தப்பிரசாரம் ஒரு தில்லுமுல்லு பிரசாரம். தி.மு.க., தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஒருவிவசாயி இயற்கையாக மரணம் அடைந்தால் அவரது கூட்டுறவு கடன்கள் ரத்து செய்யப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் 300 குடும்பங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 5 ஆண்டுகளில் ஒன்றிரண்டு விவசாயிகள் இயற்கையாக மரணமடையலாம். அவர்களது கடன்களை மட்டுமே ரத்து செய்வோம் என்று தி.மு.க., கூறியிருக்கிறது. இதற்கு முன்பு தி.மு.க., ஆட்சியிலிருந்தபோது கூட்டுறவு கடன் தள்ளுபடி என்ற கோரிக்கையை கம்யூனிஸ்ட் நண்பர்கள் எழுப்பியபோது நபார்டு வங்கி அதை அனுமதிக்காது என்று சாக்குபோக்கு சொன்னவர் கருணாநிதி. ஆனால் மத்திய அரசு உதவினாலும் சரி, உதவாவிட்டாலும் சரி, நபார்டு வங்கி அனுமதிக்காவிட்டாலும் சரி, மாநில அரசின் வருவாயைக்கொண்டு அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை ரத்து செய்வேன் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். மக்கள் ஜெயலலிதாவின் அறிவிப்பையே பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள்.


* தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் பேசியதற்கு உங்கள் மீது வழக்குகள் பாய்ந்திருக்கிறதே?

வழக்குகளுக்கெல்லாம் அஞ்சுபவன் நானல்ல. டாடா நிறுவனத்திடம் பங்குகேட்டு மத்திய அமைச்சர் தயாநிதி மிரட்டியதாக நான் குற்றம் சாட்டினேன். ஆனால், என்மீது வழக்குப்போடாமல் எனது புகாரின் மேல் விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது வழக்குப்போட்டிருக்கிறார்கள். வைகோவின் புகாரில் உண்மையில்லை என மறுப்பு செய்தி கொடுக்குமாறு டாடா நிறுவனத்தையே நிர்ப்பந்திக்குமாறு பிரதமரிடமும், சோனியாவிடமும் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த அரசியல் சித்துவிளையாட்டில் பங்குபெற அவர்கள் விரும்பவில்லை. அடுத்தடுத்து எனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லமுடியாத தி.மு.க., தலைமை மக்களை பிரித்தாள முயற்சி செய்கிறது.


* பிரித்தாளும் முயற்சி என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்?

உசிலம்பட்டி தொகுதியில் சென்று "சிறுத்தைகள் உலவலாம். சிங்கம் நடமாட கூடாதா' என்று கருணாநிதி கூறியது பிரித்தாளும் முயற்சிதான். இதற்கு விளக்கம் கேட்ட பத்திரிகையாளர்களிடமும் "மிருக ஜாதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டால் நான் என்ன செய்ய முடியும்' என்று மேலும் தென்மாவட்டங்களிலுள்ள அனைத்து பிரிவினரையும் மிருகஜாதி என்று இழிவுபடுத்தி பேசுகிறார். அவரது இந்தப்பிரசாரம் அப்பட்டமாக இருஜாதிகளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு சாரார் வாக்குகளை பெறுவதற்கு எடுத்த முயற்சியே. ஆனால், இன்று எல்லா தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டு பரிதாபமாக கருணாநிதி இருக்கிறார்.


* இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான தேர்தல் என்று தி.மு.க., அணி பிரசாரம் செய்கிறது. அப்படி பார்த்தால் நீங்கள் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறீர்களா?

(சிரிப்பு) ஜனநாயகத்தின் அடிப்படைகளையே புரியாதவர்கள் முன்வைக்கும் வாதம் இது. ஜனநாயகத்துக்கு அடிப்படை என்ன? கருத்து சுதந்திரம், தொழில் நடத்தும் சுதந்திரம் போன்றவை இல்லா ஜனநாயகம் என்ன ஜனநாயகம்?அவை இரண்டும் இங்கு தடைபடுவது யாரால்? கருத்து சுதந்திரமே இல்லாத அளவுக்கு தொலைக்காட்சிகள் அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கேபிள் இணைப்புகள் மூலம் தெரியவிடாமல் செய்பவர் யார்? இரண்டு ஆண்டுகாலமாக டெலிபோர்ட் லைசென்ஸ் வழங்காமல் ஜெயா டிவியை அலைக்கழிப்பது யார்? சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாமலும், தொழில் நடந்த முடியாமலும் செய்பவர்கள் ஜனநாயகவாதிகளா? எனவே இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தேர்தல் அல்ல. மாறாக, ஒரு குடும்பத்தின் ஏகபோக அரசியல், பொருளாதார ஆதிக்கமா? அல்லது ஆறுகோடி தமிழ் மக்களின் நல்வாழ்வா? என்பது தான் இத்தேர்தலில் மக்கள் முன் உள்ள கேள்வி. இந்தக் கேள்வி மக்கள் மத்தியில் கவனம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே ஜனநாயகமா, சர்வாதிகாரமா என்ற கேள்வியை தி.மு.க., அணி முன் வைக்கிறது.


* உங்கள் பிரசாரத்தில் தனிமனித தாக்குதல்கள் அதிகமாகி இருப்பதாக எழும் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?

அரசியல் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில் குவிகிறது என்பது மட்டுமே எனது குற்றச்சாட்டு. அது தனிமனித தாக்குதல் அல்ல. திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் சிந்திய வியர்வையும், ரத்தமும், தியாகமும்தான் தி.மு.க.,வின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம். ஆனால், களியாட்ட நடன விடுதி நடத்திக் கொண்டிருந்த ஒருவரை திடீரென்று மத்திய அமைச்சராக்கினால் அந்த குடும்ப அரசியலை தி.மு.க., தொண்டர்களுக்கு புரிய வைக்க வேண்டாமா? எனவே தனிமனித தாக்குதல் என்ற வாதத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.


* "தாலிக்கு தங்கம்' என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா?

மக்கள் மத்தியில் அந்த அறிவிப்புக்கு பெரியவரவேற்பு இருக்கிறது. இந்த விஷயத்திலும் கருணாநிதி மதக்கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் கேள்விகளை எழுப்பினார். "" தாலி அணியும் பழக்கம் இந்துக்களுக்குத்தானே அப்படியென்றால் கிறிஸ்தவ பெண்களுக்கும், முஸ்லிம் பெண்களுக்கும் 4 கிராம் தங்கம் கிடையாதா?'' என்று குதர்க்கமாக கேள்வியெழுப்பினார். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்த பெண்களின் திருமணத்தின்போது 4 கிராம் தங்கம் வழங்கப்படுமென்று முதல்வர் அறிவித்துவிட்டார். இப்போது தி.மு.க., என்னென்னவோ சொல்லி மக்கள் மனதை கலைக்க முயற்சி செய்துவருகிறது. ஆனால், அவர்களது முயற்சி இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றிபெறப்போவதில்லை.


* தேர்தலில் வெற்றிவாய்ப்பு உங்களுக்கு எப்படி இருக்கிறது?

37 நாட்கள் தமிழகத்தில் அனைத்து நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். மக்கள் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை வைத்தே எங்கள் வெற்றியை உணர முடிகிறது. எங்கள் கூட்டணி 180 இடங்களுக்கு குறையாமல் வெற்றிபெறும். இந்த நிலைமை எங்களுக்கு மட்டுமல்ல, தி.மு.க.,வுக்கும் நன்றாக தெரியும். அதனால் தான் தங்கள் கைவசம் உள்ள "டிவி'க்கள், பத்திரிகைகள் மூலம் மக்கள் மக்கள் சிந்தனையை திசை திருப்ப தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

அவர்களை சார்ந்து தொழில் நடத்தும் பத்திரிகைகளையும், வியாபார லாபம் கருதி இணைந்து போகும் பத்திரிகைகளையும் மிரட்டி அச்சுறுத்தி தி.மு.க., அணி வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகளை கடைசி நேரத்தில் வெளியிடச் செய்கிறார்கள். இவர்களது அனைத்து முயற்சிகளும் மக்கள் சக்தி முன் தவிடுபொடியாகி போகும். அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் அறுதிப்பெரும்பான்மை பெற்று தமிழகத்தின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்பார்.

11 Comments:

At 7:23 PM, Anonymous Anonymous said...

May 11th will tell us whether the predictions of Vaiko is right or wrong. Let us wait till then.

 
At 3:22 AM, Blogger ஜெயக்குமார் said...

களியாட்ட விடுதி நடத்தியவன் , அரசிலுக்குள் நுழைந்தவுடன் மத்திய அமைச்சர் ஆகின்றான். கட்சிக்காக பலகாலம் உழைத்தவன் இன்னும் கழி மட்டுமே தின்றுகொண்டிருக்கின்றான்.

இதுதாண்டா கலைஞரின் தலைமை!.

 
At 3:27 AM, Blogger Radha N said...

// களியாட்ட விடுதி நடத்தியவன் , அரசிலுக்குள் நுழைந்தவுடன் மத்திய அமைச்சர் ஆகின்றான். கட்சிக்காக பலகாலம் உழைத்தவன் இன்னும் கழி மட்டுமே தின்றுகொண்டிருக்கின்றான்.//

100%

 
At 3:40 AM, Blogger enRenRum-anbudan.BALA said...

Jeyakumar,

Good posting ! Vaiko is very much required to keep SUN TV gang in check ;-)

 
At 3:46 AM, Anonymous Anonymous said...

கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வைகோ தனித்து நின்றபோதெல்லாம் மதிமுகவை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பியிருந்தால் வைகோ சந்தர்ப்பவாதி, சுயநலவாதி அப்படியென்றெல்லாம்
இப்ப திட்டுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் இதே வைகோ கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து நின்றபோது எல்லாம் அவரைத் தோற்கடித்துவிட்டு இப்பொழுது கூக்குரலிடுவோர் எல்லாம் வைகோவும் மதிமுகவும் அழிந்து போகவேண்டும் என்று நினைப்பவர்களே.

 
At 11:31 PM, Anonymous Anonymous said...

Thaliva,

Yanga Ungali Blogel Exit Poll pathi oru news ellai.

Or atleast put up Jaya TV exit Vamarsam Pa.

I give you a sum up of what Jaya TV told about Exit Poll.

CNN-IBN, HINDU, STAR NEWS, TIMES NOW, TIMES OF INDIA are supporting DMK and have lied in the Exit Poll stuff.

My Comment : Maram have truttened All these channels :)

Some one will tell about this Also.

 
At 2:09 AM, Blogger ஜெயக்குமார் said...

Exit Poll என்பது ஒருவகையான கருத்துக்கணிப்பு தானே?!. கருத்துக்கணிப்புகள் பற்றி நான் இதுவரை என்னுடைய பதிவுகளிலும் , பிண்ணூட்டங்களிலும் எந்த கருத்தையும் வெளியிட்டதில்லை. தமிழ மக்களைப்பொருத்தவரை அவர்கள் வாக்குகள் கடைசி நேரமாறுதலுக்குட்பட்டவை. எனவே 11 தேதிவரை பொறுமை காக்கவேண்டியது அவசியம். ஓட்டுபோட்ட மக்கள் அதற்கான பலனை அடைந்துதான் தீரவேண்டும்.

 
At 9:49 PM, Anonymous Anonymous said...

Vaiko Special Interview for Jaya TV.

//My Comment : Maram have truttened All these channels :)//


Due this reason only we lost the election

 
At 5:30 AM, Anonymous Anonymous said...

Election pathi unga Dinamalar yana Solluthu

 
At 10:43 AM, Anonymous Anonymous said...

VIKO did not speak. That is his Mistress Voice. He want to satisfy
her.

 
At 3:35 AM, Blogger வரவனையான் said...

விடுங்க ஜெயா! உங்க குதிரைதான் தோத்துருச்சுல, வழக்கமான தமிழ்சினிமா வில்லன் மாதிரி அத சுட்டு கொன்னுட்டு அடுத்த டெர்பிக்கு ரெடியாவிங்களா. அத விட்டுபுட்டு ரேஸ் முடிஞ்சப்புறமும் கமான் ,கமான்'ன்னு சவண்ட கொடுத்துகிட்டு:))

 

Post a Comment

<< Home