$user_name="Jeyakumar";

Wednesday, May 10, 2006

இணையதளம் மூலம் வாக்களிக்கும் முறை வருமா?!

இந்த தேர்தலில் 70 சதவீதத்திற்குமேல் வாக்கு பதிவு நடந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. நம் மக்கள் ஜனநாயகத்தின் மேலுள்ள நம்பிக்கையில் இந்த மே மாத கத்திரிவெயிலையும் பொருட்படுத்தாது தங்களில் ஜனநாயக கடைமையை நிறைவேற்றியதைப் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

அரசும் , தேர்தல் ஆணையமும் இந்த 70 சதவீதத்தை மேலும் அதிகரிக்கச்செய்யலாம். நான் இங்கோ சொல்லப்போவது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை இருந்தாலும் வரும்காலங்களில் இது சாத்தியமாகலாம் என்று நம்பிக்கையுள்ளது. அதுதான் இணையதளங்கள் மூலம் ஓட்டளிக்கும் முறை.

ஓட்டுரிமை உள்ள வெளிநாட்டவர், வெளியூரில் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் கலவரங்களுக்கு பயந்து வாக்குச்சாவடிக்கு வராமல் இருப்போர் இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றலாம். இதன் மூலம் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்துவதோடு, பலருக்கு ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மனநிறைவும் கிடைக்கப்பெறும்.

இது எப்படி சாத்தியம்?

வாக்காளர் சேர்க்கையின் போது, வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பவர்கள் வாக்காளர்க்களிடம் வாக்களிக்க அவர்களுக்கு வசதியான முறை எது என்ற options ஆக கீழ்வரும் கேள்விகளை கேட்களாம்.
1. நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பது.
2. இணையதளம் மூலம் வாக்களிப்பது.

இணையதளம் மூலம் வாக்களிக்க விரும்புவோரிடம், அவர்களின் personal email address -சையும் வாக்காளர் படிவத்தில் சேர்த்துக்கொள்ளலாம் ( வாக்காளர்களை கணக்கெடுப்பவர்கள், இதை சரியாக செய்யவேண்டும், இப்போது பெயர்கள் மற்றும் இனிசியல்-களை தவறாக எழுதுவது போல இ-மெயில் முகவரியையும் தவறாக எழுதிவிடக்கூடாது). இணையதளம் மூலம் வாக்களிக்க விரும்புவோருக்கு அவர்களின் இமெயில் மூலமாக கடவுச்சொற்களை (password) தேர்தல்ஆணையம் அனுப்பலாம்.

இமெயில் முகவரியை username-ஆக பயன்படுத்தி password-ஜ் கொடுத்து அவர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று தங்களைப்பற்றிய தகவல்களை சரிபார்த்துக்கொள்ளலாம். வாக்களிக்கும் நாளன்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் log-in ஆகும் வாக்காளர்களுக்கு , அவர்களுடைய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுடைய தேர்தல் சின்னங்களுடன் வாக்காளிக்கும் பக்கத்தை காட்டி தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்பளிக்கலாம். இந்த பக்கம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே (வாக்களிக்கும் நேரம்) வாக்காளர்களுக்கு தெரியும்படி செய்யலாம். ஒருமுறை வாக்களித்த பின்னர், தானாக log-out ஆகும்படி செய்யவேண்டும். மீண்டும் வாக்களர் இந்த பக்கத்திற்கு போக முடியாதபடி இந்த பக்கம் அமைக்கப்படவேண்டும். இணையதளம் மூலம் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களின் பெயர்கள், வாக்குசாவடிக்கு செல்லும் வாக்களர் பட்டியலில் இருக்கக்கூடாது.

இதற்கான இணையதளம் அமைக்கும் பணியை , ஒரு சிறந்த உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம். இதன் முழுகட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே இருக்கவேண்டும்.

இதை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது ஒருபுறம் இருந்தாலும். இதன் மூலம், வாக்களிக்க முடியாத சூழ்நிலையில் உள்ள பலர் தங்களின் ஜனநாயகக் கடைமையை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.

செய்யுமா தேர்தல் ஆணையம்?!

10 Comments:

At 4:14 PM, Blogger கிவியன் said...

இணையத்தின் மூலம் வாக்களிக்கும் உத்தியை எனது நண்பர் பாலா ஏற்கனவே செயல் படுத்தும் நோக்கத்தோடு களமிறங்கியுள்ளார். தகுந்த முதலீடு இல்லாததால் இந்த தேர்தலின் போதே அதை அமலுக்கு கொண்டுவர முடியாது போனது. அதற்கான் சுட்டி இங்கு. ஆரூடம் http://www.aarudam.com/

பிகு:கொசுறு செய்தி: பாலா என்னும் இந்த பாலகிருஷ்ணன், கிங்மேக்கர-காமாராஜ் திரைபடம் தயாரித்து, இயக்கியவர்.

சுரேஷ்

 
At 5:42 PM, Blogger Unknown said...

very good idea jayakumar.even though I am skeptical about the method you suggested,I think that this plan can be implemented with some modifications.

 
At 7:08 PM, Anonymous Anonymous said...

Hi Jeya,
Nice idea. But as you said, the concerned officials need to work out the feasibility of the this proposal.

 
At 1:22 AM, Blogger ஜெயக்குமார் said...

சுரேஷ், செலவன், ஸ்ரீராம் உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி.

செல்வன், உங்களுடைய விவதங்களையும் இதில் எடுத்துவைக்கலாமே?.

 
At 7:33 AM, Blogger ஓகை said...

Jeyakumar,
I am posting from a bro cen., so sorry for typing in English. Please read my scifi in my blog, where I have touched this subject.

Natarajan.

 
At 10:57 AM, Blogger பிரதீப் said...

சோம்பேறித் தனத்தினால் மட்டும் வாக்களிக்கப் போகாதவர்களையும் தனது தொகுதியை விட்டுப் பணி நிமித்தம் வெளியே இருப்பவர்களையும் குறிவைத்து இணைய வாக்கு முறை அமைவது நன்றே!

பாராட்டுகள் ஜெயக்குமார்.

 
At 11:52 AM, Blogger Unknown said...

அன்பின் ஜெயகுமார்

இன்டெர்னெட்டில் ஓட்டு போட அனைவருக்கும் சோஷியல் செக்யூரிடி எண் போல் ஒன்று தரப்பட வேண்டும்.அனைவருக்கும் ஓட்டு அட்டை தரும்போது இது கடினமான காரியமல்ல.ஓட்டு போடும்போது அந்த சோஷியல் எண்ணோடு வாக்காளரின் கடன் அட்டையை பயன்படுத்தி ஒரு ரூபாய் செலுத்த வேண்டும் என சொன்னால் ஓட்டளிப்பது அந்த பெயரில் உள்ள வாக்காளரா என தெரிந்துகொள்ளலாம்.இன்டெர்னெட்டில் ஓட்டளிப்பவர் நிச்சயம் கடன் அட்டை வைத்திருப்பார்.

வெளிநாட்டில் வசிக்கும் அனைவரும் நிச்சயம் கடன் அட்டை வைத்திருப்பர்.வெளியூரில் வசிப்போரும் கடன் அட்டை வைத்திருக்க வாய்புண்டு.

முதலில் கடன் அட்டை உள்ளோருக்கு இத்திட்டத்தை சோதனை முறையில் அறிமுகப்படுத்தலாம்.

 
At 4:12 PM, Blogger ஜெயக்குமார் said...

//சோம்பேறித் தனத்தினால் மட்டும் வாக்களிக்கப் போகாதவர்களையும் தனது தொகுதியை விட்டுப் பணி நிமித்தம் வெளியே இருப்பவர்களையும் குறிவைத்து இணைய வாக்கு முறை அமைவது நன்றே!//

கிரைன்டர் வந்தபிறகு, மாவாட்டுபவர்கள் சோம்பேரியாகிவிடுவார்கள் என்று சொல்வது போல இருக்கு இது.

விஞ்ஞான வளர்ச்சி வரும்போது சில குறைகள் இருந்தாலும் நாளடைவில் அது சரி செய்யப்படும்போது அதனால் விளையும் பயன்களை சற்று தொலைநோக்குப்பார்வையுடன் சிந்தித்துப்பார்க்கவேண்டும். அதை விடுத்து குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு சந்திரனை காட்டி சோறு மட்டும்தான் ஊட்டிக்கொண்டிருக்க முடியும்.

 
At 4:44 PM, Blogger Muthu said...

ஜெயகுமார்,
இணையத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்கள் வாக்குகளிக்கும் முறையில் எனக்கு ஏற்பில்லை. நான் இந்தியாவில் இல்லாத நிலையில் அங்கு நடக்கும் தேர்தலில் பங்கு பெறுவதும் வாக்களித்து உறுப்பினரை தேர்வு செய்வதற்கும் தார்மீக உரிமையில்லை என்று கருதுகிறேன். அங்கிருந்து அந்த இடத்தின் சூழ்நிலையை முழுதுமாக தெரியாதவரை வெறுமனே பக்க சார்பான ஊடகங்களில் மட்டும் படித்து விட்டோ அல்லது வீட்டாருடன் வேறு சங்கதிகளை பேசும் சமயத்தில் ஓரிரு வார்த்தைகளில் அவர்கள் விருப்பை கேட்டு அதன் வழி முடிவு செய்வதும் சரியல்ல என்றும் நினைக்கிறேன்.
///
சோம்பேறித் தனத்தினால் மட்டும் வாக்களிக்கப் போகாதவர்களையும் தனது தொகுதியை விட்டுப் பணி நிமித்தம் வெளியே இருப்பவர்களையும் குறிவைத்து இணைய வாக்கு முறை அமைவது நன்றே!
/////
இதில் சோம்பேரித்தனத்தால் வாக்களிக்காதவர்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் இப்படி வைத்தாலும் ஏதாவது சாக்கு போக்குதான் சொல்வார்கள். உரிமையை எடுத்துக்கொள்ள வழிகாட்டலாம், வாயில் வைத்து ஊட்டவெல்லாம் முடியாது...

பணி நிமித்தம் வெளியில் இருப்பவர்களுக்கும் நான் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு சொன்னது போலத்தான். நீங்கள் அடிக்கடி சொந்த ஊர்போகின்ரீர்கள் என்றால் தேர்தல் சமயத்திலும் உங்களால் செல்ல முடியும். (ஒரு சில விதிவிலக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை) இன்னும் சொல்லப்போனால் நான் சென்னையில் இருந்த போது வந்த இரு தேர்தல்களிலும் அவ்வாறு தான் செய்தேன். அதேபோல் என் பக்கத்து வீட்டு அண்ணன் இடம் மாறிக்கொண்டே இருப்பவராதலால் 4-5 தேர்தல்களில் அப்படித்தான் செய்தார். வடநாட்டில் Installation வேலைக்காக 3 மாதம் சென்றபோது கூட ஓட்டு போடுவதற்காக 5 நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்தார். அப்படி நீங்கள் அடிக்கடி செல்லாதவராயின் வேலைக்காக வேறு ஊரில் தங்கிவிட்டால் நீங்கள் தங்கிய இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கியிருக்கும் தொகுதியில்தான் ஓட்டுபோடவேண்டும்.

ஆனால் இணையம் முழுவீச்சில் பரவிய பின்பு மக்கள் வசதிக்காக இந்த வசதி வந்தால் அதை நான் வரவேற்பேன். அதைவிட்டு மேற்சொன்ன மூன்று காரணங்களுக்காகவென்றால் இது தேர்தல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் போன்றவற்றின் அடிப்படையிலிருந்து முற்றும் விலகும் யோசனையாகத்தான் தெரிகிறது.

 
At 5:03 PM, Blogger ஜெயக்குமார் said...

//இணையத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்கள் வாக்குகளிக்கும் முறையில் எனக்கு ஏற்பில்லை. நான் இந்தியாவில் இல்லாத நிலையில் அங்கு நடக்கும் தேர்தலில் பங்கு பெறுவதும் வாக்களித்து உறுப்பினரை தேர்வு செய்வதற்கும் தார்மீக உரிமையில்லை என்று கருதுகிறேன். அங்கிருந்து அந்த இடத்தின் சூழ்நிலையை முழுதுமாக தெரியாதவரை வெறுமனே பக்க சார்பான ஊடகங்களில் மட்டும் படித்து விட்டோ அல்லது வீட்டாருடன் வேறு சங்கதிகளை பேசும் சமயத்தில் ஓரிரு வார்த்தைகளில் அவர்கள் விருப்பை கேட்டு அதன் வழி முடிவு செய்வதும் சரியல்ல என்றும் நினைக்கிறேன்.//

உள்ளூரில் வாக்களிப்பவர்களெல்லாம் அந்த ஊரின் சூழ்நிலைகளை கருத்தில்கொண்டுதான் வாக்களிக்கிறார்களா?. என்னைகேட்டால் உள்ளூரில் இருப்பவர்களை விட வெளியூரில் இருப்பவர்களுக்குத்தான் தங்கள் சொந்த ஊரில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். அது இயல்பானதும் கூட.
உங்கள் ஊரில் இருக்கும் கோவிலைப்பற்றி உங்களைவிட வெளியூரில் இருப்பவனுக்கு அதிகமாக தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா?.

மன்மோகன் சிங் தன்னுடைய ஆட்சிகால்த்தில் இரட்டை குடியுரிமைத்திட்டத்தையும் முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த திட்டம், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை தங்கள் தாய்நாட்டில் அதிகமாக முதலீடு செய்ய வகை செய்யும் என்ற எண்ணத்தில்தான். ஒரு இடத்தில் முதலீடு செய்யும்போது அது பாதுகாப்பானதா என்று பார்த்துதானே செய்வோம்.

 

Post a Comment

<< Home