போலிக்கு சில கேள்விகள்!..
நான் நேற்று முன் தினம் தான், என்னுடைய பதிவுகளில் இருந்து அதர் ஆப்சனை நீக்கினேன். இதற்கு முன்னர் அணானிமஸாக வந்து என்னை திட்டிக்கொண்டிருந்தவருக்கு, தொடர்ந்து என்னைத்திட்ட வேறு வழியில்லாமல் போலி தளம் உருவாக்கவேண்டி அவசியம் ஏற்பட்டுவிட்டது.
தமிழ் மணத்தில், ஆங்கிலப்பெயர்களுடன், தமிழர்களின் பாதுகாவலர்கள் போல வேசமிட்டு திரியும் இரு நயவஞசகர்களின் வேலையாக இது இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.
நான் என்னுடைய பதிவுகளில் , கருணாநிதியையும், அவரது குடும்ப அரசியல் மற்றும் குடும்ப ஊடங்களை பற்றியும் அதிகமாக விமர்சிக்கிறேன். அதற்கு என்னிடம் சில காரணங்கள் உள்ளன. நான் ஒட்டு மொத்த திமுக-வையும் விமர்சித்ததில்லை. திமுக விலும் பி.டி.ஆர் போல சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அவர்கள் யாரையும் விமர்சிப்பதில்லை. போலியான கவர்ச்சி காட்டி மக்களை ஏமாற்றுபவர்களைத்தான் விமர்சித்துள்ளேன். ஜெயலலிதாவின் தவறான அனுகுமுறையையும் விமர்சித்துள்ளேன்.
தமது சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்தாமல் மற்ற சமூகத்தினரை திட்டுவதிலேயே தன்னுடைய காலத்தை வீணாக்கிக்கொண்டிருப்பவர்களைப் பற்றியும் விமர்சித்துள்ளேன்.
போலி குறிப்பிடுவது போல நான் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் இல்லை, கண்மூடித்தனமாக எதிர்க்கவும் இல்லை.
போலிக்கு நான் கூறுவது என்னவென்றால். இந்த உலகில் ஒவ்வொன்றும் Unique. ஒன்றைபோல ஒன்று இல்லை. உதாரணமாக ஒரு மரத்தில் இருக்கும் இலைகள் கூட ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. மனிதர்கள் மட்டும் ஏன் அவ்வாறு இருக்க முயலவேண்டும்?. இதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?. அதனால் நீங்கள் அடையபோகும் லாபம்தான் என்ன?. இதுபோன்ற வீணான செயல்களில் ஈடுபட்டு உங்களுடைய காலத்தையும் திறமையையும் ஏன் வீணாக்குகிறீர்கள்.